நான் தாராபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது தண்டபாணி என்கின்ற நண்பன்
இருந்தான் அவனுக்கு கொஞ்சம் நாக்கு குளறும். அவன் திணறி திணறி போசும் மழலை தமிழ் எங்களுக்கு வேடிக்கையாக இருக்கும்.
அவன் வாழைப்பழம் என்பதை வாயப்பயம் எனவும் புஷ்பம் என்பதை புய்பம் எனவும் கூறுவான்.
நாங்கள் அவனை பலசமயம் கிண்டல் செய்தாலும் அவன் அதை பொருட்படுத்த மாட்டன்.
நல்ல நண்பன். நான் பலமுறை அவனுக்கு சொல்லித்தர முயன்று முடியாமால் போனது.
அப்போது பெரியசாமி என்று ஒரு ஆசிரியர் இருந்தார், மிகவும் கண்டிப்பானவர்.
அவர் அந்த வழியாக நடந்து வரும்பொது நான் தண்டபாணியிடம் பெரியசாமி என கூறும்படி கூறினேன்.
அவர் வருவதை அறியாத அவனும் பெய்யசாமி பெய்யசமி என கூறினான்.
தன்னை கிண்டல் செய்கிறான் என்று அவர் அவனை நன்றாக அடித்துவிட்டார். மிகவும் அடி வங்கினாலும் எங்களை அவன் காட்டிகொடுக்கவில்லை. விளையாட்டாய் ஆரம்பித்த சம்பவம் மிகுந்த வேதனையில் முடிந்த்தது.
நான் அவனிடம் பலமுறை மன்னிப்பு கேக்க அவனோ சிரித்துகொண்டு சரி விடுடா என்றான். அதுமுதல் அவன் எனக்கு நல்ல நன்பன் ஆனான். நான் அவனுக்கு பாடம் சொல்லித்தர ஆரம்பித்தென்.
இப்போ எப்படி இருக்கார் தண்டபாணி!
ReplyDeleteremove word verification
ReplyDeletetheriyathu no contacts with him after school days
ReplyDelete