எங்கள் ஊர் தாராபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிதான் அப்போது பெரிய பள்ளி.
ஆறாம் வகுப்பு முதல் +2 வரை இங்குதான் படித்து முடித்தென். என் வகுப்பில் 60 நண்பர்கள் படித்தார்கள்.
நாங்கள் 5 மாணவர்கள் மட்டும் ரொம்ப முக்கியமான ஆளுகள். அது எப்போதும் முதல் மதிப்பொன் எடுக்கும் வெங்கடெசன், ரெண்டாம் மதிப்பென் எடுக்கும் பாலசந்திரகுமார். மூன்றாம் அல்லது நாண்காம் மதிப்பென் எடுக்கும் நான். இதுபோல் எனது உயிர் நண்பன் அனந்தகுமார்( நான் 3 என்றால் இவன் 4, இவன் 3 எனறால் நான் 4 மதிப்பென் எடுப்போன். இவர் நண்பன் ஆனது தனி பதிவு போடனும் தலை)
5 ஆவது மதிப்பென் எடுக்கும் சகுனிபாளையம் குப்புசாமி. இவர்கள் தான் எங்கள் வகுப்பின் எல்லா மனப்பாடம் செய்து ஒப்பித்தல், மற்றும் பாட சம்ப்பந்தமான வேலையும் செய்வொம்.
ஒரு நாள் ஆர்.கெ. நாராயனின் ஒஹ் ஆங்கர் இஸ் ஆன் ஈவில் திங்க், என்ற பொயம் ஒப்பிக்கவேண்டும்.
நான் படித்து ஒப்பித்து பிரம்படியில் இருந்து தப்பித்தும் விட்டான். அப்போது கோவிந்தசாமி எங்கின்ற நண்பன்
கைகளை பின்னால் கட்டிகொண்டு கட கட என முச்சு விடாமல் சத்தமாக ஒப்பித்தான். அவன் ஒப்பித்த விதத்தை பார்க்கும் போது எங்களுக்கு மிக அதிசயமாக பார்த்தொம். அவன் அந்த அளவு புத்திசாலி இல்லை, பின் எப்படி என வியப்புடன் பார்த்து பாரட்டினேன். ஆனால் வாத்தியாருக்கு ஆச்சயர் கலந்த சந்தெகம் எப்படி என அடுத்த நாள் அவனை ஒப்பிக்கும் முறை வரும் பொலுது அதே போல் ஒப்பித்தான். ஆசிரியர் அவனை போர்டில் போயத்தை எலுத சொன்னார். அவன் திரு திரு என விளித்தான். ஏண்டா ஒப்பிக்கர எலுத மாட்டியா என ஆசிரியர் மிரட்ட அவன் உன்மையை சொன்னான். ஆங்கிலத்தில் உள்ள போயத்தை அப்பிடியே தமிழில் எலுதி ஒப்பித்தானம்.
இப்படி ஒரு முறை இருப்பது அப்பொதுதான் எனக்கு தெரியும். நல்ல அடியும் வாங்கினான். இப்படி படிப்பது நல்ல முறை அல்ல நீங்கள் படிக்கவேண்டும் எனத்தான் ஒப்பிக்கசொல்லுகிறம் ஆதலால் படித்து ஒப்பியுங்கள் ஏமாத்தீர்கள் என சொன்னார். கடைசியாக அவன் திறமையை பாரட்டிய ஆசிரியர் அவனை இனிமேல் படித்து ஒப்பிக்கசொன்னார்.
எழுத்துப் பிழைகள் தவிர்க்கலாமே - படிக்கும் சுவாரசியம் குறைகிறதே - அருமையான நகைச்சுவை - இடுகை நன்று நல்வாழ்த்துகள்
ReplyDelete