எனக்கு 5 வய்து வந்ததும் எனனை சர்ச்சு தெருவில் உள்ள தூய வளனார் பள்ளியில் ஸேர்த்தார்கள்.
மூன்று வயதில் சி ஸ் ய் கான்வெண்ட் பள்ளியில் ஸேர்த்து பின் திக்குவாய் வந்து, இந்த மரமண்டைக்கு தமிழ் மீடியம் போதும் என முடிவு செய்து வீட்டின் அருகில் உள்ள இந்த பள்ளியில் ஸேர்த்தார்கள். (அப்பக்கூட எனக்கு இப்பவும் தமிழ் எனக்கு எலுத வராது எனசொல்ல வெக்கப்படுகின்றென்). காக்கி ட்ரவுசரும் வெள்ளச்சொக்காயும் போட்டுக்குட்டு மஞ்ச்ச பையில சிலெட்டு பென்சில், புஸ்த்தகம் தூக்கிட்டு போனன். மொதல் ரெண்டு நாள் அக்கா கொண்டு போய் விட்டாங்க. அப்புறம் நானா ஒடிப்போய்விடுவென். ஓரே தெருவுல இருக்க ஸ்லுக்கு எதுக்கு பாடிகார்ட் எல்லாம். ஒன்னாம் வகுப்பில் வந்த காந்திமதி டீச்சர் தான் எனக்கு எலுத்து அறிவித்த தெய்வம்.
எப்பவும் சிரித்தமுகம் அவர்கள் யாரையும் அடித்து நான் பார்த்தது இல்லை. நல்ல ஆசிரியர்க்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு. அந்த எனது குரு + தெய்வத்திற்கு இந்த பதிவு சமர்ப்பனம்.
சரி குருவணக்கம் முடிந்தது, மேட்டருக்கு போவம். இந்த ஒன்னாம் வகுப்பில் எனது பக்கத்தில் தடியா, கொஞ்சம் கருப்பா, குண்டா வந்து உக்காந்தவன் தான் ஆனந்தக்குமார் என்னும் ஆனந்த். இவன் சமயம் கிடைக்கும் போது எல்லாம் என்னை அடிப்பான், என் தொடையில் நல்லா கிள்ளிவிடுவான். நான் டீச்சரிடம் சொன்னால் அவர்கள் சமாதானம் செய்து வைப்பார். அப்படி சொன்னத்தற்கும் ஸேர்த்து அடிப்பான். ஏன் எதற்க்கு என்று காரணம் கிடையாது, என்னை அடிப்பதில் அவனுக்கு ஒரு குசி. அவ்வளவுதான். நான் இவனை அடிக்க இவனை வீட நல்ல பலசாலி நண்பன் ஒருவனை ஸேர்த்து கொண்டேன் அவன் பெயர் அந்த்தொனி ( இவனுக்கும் தனி பதிவு போடுவம் இல்லை). ஒரு நாள் என் வீட்டில் எனது சிவந்த தொடைகளை குளீக்க வைக்கும் போது பார்த்து காரணம் கேக்க நான் ஆனந்தன் அடிக்கும் விசயத்தை சொன்னேன். என் அக்கா என்னை அவன் வீட்டிற்க்கு அழைத்து சென்று அவன் அம்மாவிடம் சொன்னார்கள். அவன் அம்மா என்னை அழைத்து அவர் மடிமீது அமரவைத்து, எனக்கு ஆறுதல் கூறினார்கள். பின் அவர் ஆனந்தனை திட்டிவிட்டு நீங்கள் இருவரும் இனிமேல் முதல் நண்பர்கள் ஆக பழக வேண்டும் என கூறினார்கள். தானே கொண்டுவந்து வீட்டில் விடுவதாக கூறிய அவர் என் அக்காவை அனுப்பிவிட்டு எனக்கு தின்ன பாலக்காடு சிப்ஸ், மற்றும் அல்வா கொடுத்தார்கள். அவர் கனவருக்கு கேராளாவில் வேலை என்பாதால் தினமும் அவர்கள் வீட்டில் இந்த நொருக்கு தீனீ கிடைக்கும்.
அதன் பின் நானும் ஆனந்த குமாரும் ஒன்னாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை ஒரே வகுப்பு ஒரே பொஞ்சியில் தான் படித்த்தொம். இருவரும் குருப் ஸ்டடி கூட படித்த்தொம். நான் அவனும் மாத்தி மாத்தி 3 அல்லது 4 ராங்க் எடுப்போம். +2 வில் நான் முதல் தனிப்பாடமாக அறிவியல் மற்றும் கணக்கு பாடம் எடுக்க அவன் காமர்ஸ் வகுப்பில் இனைந்தான். அப்போதும் பக்கத்து பக்கத்து வகுப்பு ஆதலால் எங்கள் நட்பு தொடர்ந்தது.
கல்லூரியில் நான் பி.எ. கூட்டுறவு எடுக்க அவன் பி.காம் ஸேர்ந்தான் அந்த மூன்று வருடமும் நாங்கள் பக்கத்து வகுப்பில் படித்தால் எங்கள் நட்பு ஒன்னாம் வகுப்பில் இருந்து கல்லூரி முடியும் வரை தொடர்ந்து இருந்தது. அவன் திருமணம் பாலக்கட்டில் நடந்து நான் போய் இருந்து பின் மழம்புலா டாம் சென்றுவந்தென். இது நல்ல நண்பர்கள் இருவரின் கதை. என்னங்க நல்லா இருக்கா?????
No comments:
Post a Comment
என்னை வளர்க்க, கருத்துரையிடுக...
பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.