எங்கள் ஊரில் ஜல்லிகட்டு நடக்கும் விதம் தனி அலாதியானது, மைதானம் ஏதும் கிடையாது ஆதலால் ரோட்டில் தான் மாடு ஓடவிடுவார்கள். மாட்டுக்கு நலலா சரக்கு ஏற்றிவிட்டு மனிதர்களும் சரக்கு சாப்பிட்டு அடக்குவார்கள்.
நான் ஜல்லிகட்டு கிளம்பும்போதே எனக்கு எங்க அம்மா ஆயிரம் கண்டிஸன் போட்டுதான் அனுப்புவார்கள்.
ஆண்கள் ஒரு ட்ரவுசர் போட்டு, முண்டா பணியன் அனிந்து காளையை அடக்குவார்கள். குழந்தைகள் நடை பழகும் வணடியில் ஒரு நீழா மூங்கில் தடியில் கட்டி மாட்டின் முன் ஒடவிட்டு மாட்டை உசுப்பேற்றி ஓடவிடுவார்கள்.
மாடு அந்த வண்டியை முட்டித்தள்ளி நல்ல வெறியில் வரும் அப்போது மாட்டை அடக்கி அதன் களுத்தில் உள்ள துனியை எடுப்பார்கள். நானும் மாடு அடக்க போவன். எங்கள் ஊரில் தெற்க்கு தெரு, வடக்கு தெரு மற்றும் பள்ளர் தெரு( இப்ப சீதா நகர்) ஆகிய இடங்களில் ஜல்லிகட்டு நடக்கும். நானும் ட்ர்வுசர் சட்டை அனிந்து போவென்.
அப்ப அங்கு மாங்க்காய் மற்றும் குச்சி ஜஸ் வாங்கித்தின்று விட்டு நல்ல உயரமான பி டவுல் டி ஆப்பிஸ் காம்பொவுண்ட் சுவரின் மீது ரொம்ப ஸேப்பிடிய உக்காந்து பார்த்து விட்டு வருவென். நம்ம லெவலுக்கு மாடு அடக்கமுடியாது பாஸ். மாடு நம்ம ஃப்ரெண்ட் இல்ல. அதான் அடக்க ரிஸ்க் எடுக்கறது இல்லை.
No comments:
Post a Comment
என்னை வளர்க்க, கருத்துரையிடுக...
பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.