Wednesday, February 24, 2010

சிந்து சமவெளியில் ஒருவன்

கதை நடக்கும் காலம்- சிந்து சமவெளி நாகரீக காலம்.
இடம்: லோதல்.
கதைக்கான கரு: கற்பனை.
கதைக்கான மூலம்: துளசி டீச்சரின் குஜராத் பயணத் தொடரில் வந்த ஒரு படம்.

அதிகாலைக் குளிரில் சூரிய உதயத்திற்க்காக காத்து இருந்தான் மோரிஸ், இருபத்தி இரண்டு வயது இளைஞன்,திடகாத்திரமான ஆறரை அடி உயர வாலிபன் அவன். செம்பொன் கலரில் கட்டுமஸ்தான தேகமும், வசீகரமான முகமும்,கூரிய நாசியும்,அடர்த்தியான தலைமுடியும் கொண்டவன். கடலில் அடிக்கடி பிராயாணம் செய்யும் தனிமை அவனுக்கு கூர்மையான பார்வையைக் கொடுத்தது. சிறிது சிரித்த, வீரம் கலர்ந்த முகம். ஹராப்பா,மொகஞ்சதாரோ மற்றும் லோதலின் இளம் பெண்களின் தூக்கத்தைக் கெடுத்தது என்றால் அது மிகையாகது. அவன் லோதல் நகரின் வணிகரின் மகன். நாலு கப்பல்களுக்குச் சொந்தக்காரன அவரின் ஒரே மகன். இயல்பாக சுதந்திர வேட்கையுள்ளவன் ஆதலால் கப்பல் பிரயாணத்தில் பல இடங்களையும்,பல்வேறு மக்களையும் சந்திக்கும் ஆவலில் அடிக்கடி அவர்கள் இன மக்களின் இடங்களுக்கு எல்லாம் சென்று வருவான். கிரேக்கத்திற்க்கும், சுமேரியாவிற்க்கும் செல்ல அவனது மனம் துடித்துக் கொண்டு இருந்தது. அதை வீட அதிகமாக அவன் மனம் இன்னேரு விஷயத்திற்க்காவும் அமைதி இழந்து இருந்தது.

ஆறு மாதங்கள் கடலிலும்,நதியிலும் கப்பல் பிரயாணம் செய்து, வணிகத்தை நல்லபடியாக முடித்து விட்டு, அணிகளும்,மணிகளும், முத்துக்கள், பவளங்கள், வெல்லம் மற்றும் தானியங்களாக வாங்கிக் குவித்து இருந்தான். யவனர்களின் குதிரைகள் மற்றும் யவண அடிமைகளும் அவன் கப்பலில் இருந்தன. யவண அடிமைப் பெண்கள் வாங்கும் எண்ணம் அவனுக்கு இல்லையாதலால், பணிக்கு மட்டும் பணிப் பெண்கள் அவனது கப்பலில் இருந்தனர். மாலைவேளைகளில் அந்தப் பெண்களின் பாட்டும், நடனமும் உற்சாகத்தைத் தருவதுக்குப் பதிலாக அவனது வேதனையை அதிகப் படுத்தியது.















மெல்ல உறக்கத்தைத் தொலைத்து கப்பலின் மேல் தளத்தில் இருந்து நட்சத்திரங்களைக் கொண்டு, திசையும், தூரத்தையும் அளக்கத் தொடங்கினான். இன்னமும் இரண்டு நாளில் கப்பல் நதியின் முகத்துவாரத்தை அடைந்து விடும். பின்னர் ஒரு பகல் பொழுதில் துறைமுகத்தை அடைந்து விடலாம். அது மட்டுமா எண்ணற்ற பெண்களின் கனவுக் கண்ணன் ஆன அவனின் கனவுக் கன்னியைக் கூடக் காணலாம். இந்த நினைப்பே அவனது சோகமான முகத்தில் ஒரு மந்தகாசமான புன்னகையைத் தோற்றுவித்தது. மெல்ல அலைகளையும் வானத்தையும் பார்த்தவனுக்கு நிலவு அவனின் காதலியின் முகம் போல தெரிந்தது. கண்களை மூடி ஒரு நிமிடம் அவளின் முகத்தைக் கற்பனை செய்தான். அவனையும் அறியாமல் மோரிஸின் அவன் வாய் முனுமுனுத்தது. " மொளனிகா" என்று. தொடரும்.

டிஸ்கி : இந்தக் கதை துளசி டீச்சரின் கட்டுரையில் வந்த ஒரு படத்தைக் கொண்டு எழுதப் பட்டது. இதற்க்காக டீச்சருக்கு எனது நன்றிகள்.

6 comments:

  1. அண்ணாச்சி சார்பாக நானும், துளசி டீச்சருக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
    தொடரட்டும் உங்கள் "ஆயிரத்தில் - சாரி - சிந்து சமவெளியில் ஒருவன்" கதை............!

    ReplyDelete
  2. சாண்டில்யன் கதையப் படிப்பது போல இருக்கு சார்..

    நல்லாயிருக்கு..தொடருங்கள்..

    ReplyDelete
  3. //இன்னோரு மோகினித்தீவா ? வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  4. சார் கப்பல் தன் பயனத்த நல்லபடியா ஆரம்பிச்சிருக்கு, தொடரட்டும் ....

    ReplyDelete
  5. ரிப்பீட் பட்டாபட்டி.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.