Friday, February 5, 2010

கடவுளும் கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 4

மனிதன் ஆதியில் இருந்து கொஞ்சம்,கொஞ்சமாக குழுவாக வாழத் தலைப்பட்டவுடன் அவன் பாதுகாப்பும்,தேவைகளும் ஓரளவு உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவனின் குழுக்கள் இணைந்து கூட்டம்,கூட்டமாய் வாழ்ந்தான். இந்தக் காலக் கட்டத்தில் தான் அவன் விவசாயமும் செய்யத் தொடங்கினான். குழுவாய் வாழ்ந்த போது,உணவு,நீர் மற்றும் சீதோசணம் ஆகிய காரணங்களுக்காக அடிக்கடி இடம் பெயர்ந்தான்.பின்னர் நீர் நிறைந்த ஆற்றுப் படுகைகளிலும், சமவெளிகளிலும் நிரந்தரமாய்க் கூட்டமாகத் தங்க ஆரம்பித்தான். இந்த மாற்றத்தின் பரிணாம வளர்ச்சிதான் நாகரீகம் தோன்றக் காரணமாய் அமைந்தது. பல நதிகளின் கரைகளில் பல நாகரீங்கள் வளர்ந்தன.இப்போது வாழும் முறைகள்,தர்ம சாத்திரங்கள்,சுய ஒழுக்கங்கள்,கட்டுப்பாடுகள் கொணரப் பட்டன. என்னதான் சட்டங்கள் இருந்தாலும் மனிதன் தன்னை வீட ஒரு சக்தி இருக்கு,அது நாம் தப்பு செய்தால் தண்டிக்கும் என்று நம்பினார்கள்.இதுதான் கடவுளின் தோற்றத்திற்க்கு முதல் காரணம். அசுரர்கள் வலிமையானவர்கள்.ஆனால் அவர்கள் தப்பு செய்தால் தண்டிக்கப்பட்டார்கள் என்று கதைகள் புனையக் காரணம் இதுதான்.

கடவுள் எனபது ஒரு புனைவுதானா? உண்மையில் இல்லையா? என்றால், நம்மையும் மீறி ஒரு சக்தியுள்ளது எனபதை பகுத்தறிவு வாதிகள் கூட ஒப்புக்கொள்வார்கள். நானும் ஒப்புக் கொள்கின்றேன். காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப இந்த சக்தியை பல வடிவங்களில் போற்றி வழிபட்டார்கள். இந்த வடிவங்களை அவதாரங்கள் என அவர்களும்,உருவாக்கம் என நான் சொன்னாலும் சக்தி என்ற ஒன்று எல்லாக் காலங்களிலும் இருந்து வருகின்றது.இந்த சக்திதான் பல இடங்களில், பலவேறாக உருவானது. இந்தக் கடவுள் உருவாக்கம் பற்றி நான் இறுதியில் சொல்கின்றேன். இப்போது நாகரீகம் அடைந்த மனிதன் தன் தோற்றம்,வளர்ச்சி மற்றும் பிறப்பு இறப்பு பற்றி சிந்திக்க ஆரம்பித்தான்.( இந்த இறப்பு என்னும் பயம்தான் மனிதனைக் கடவுளுக்கு அருகாமையில் கொண்டு சென்றது என்பதும் உண்மை. இரத்தம் சூடாக இருக்கும் போது வசனம் பேசும் பலரும், இரத்தம் சுண்டியதும்,கடவுள் என்றும், இயற்கை என்றும் கதை பேச ஆரம்பித்து விடுவார்கள். ) இப்படி அவன் சிந்திக்க ஆரம்பித்ததும், அவனுக்கு பாதுகாப்பு உணர்வு மேலோங்கியது. அதன் படி அவனையும், அவன் சார்ந்த நிலம், பொருள்கள்,கால் நடைகளை இயற்கை அழிவிலிருந்து காப்பாற்ற ஒரு துணை அல்லது வழிகாட்டி தேவைப்பட்டது. இதுக்கு அவர்களை வீட ஒரு வல்லமையான கடவுள் அல்லது ஒரு சக்தி தேவைப்பட்டது.இதன் காரணமாய் அவர்கள் சூப்பர் பவர் அல்லது நம்ப முடியாத,கற்பனைக்கு எட்டாத பாத்திரங்களை கடவுளாகப் படைத்தார்கள். இவர்கள் முன்னர் கடவுள்களான பஞ்ச பூதங்களை வீடச் சக்தி வாய்ந்தவர்கள் என்று நம்பினார்கள்.

ஆதலால் தான் முதலில் மனிதனால் படைக்கப் பட்ட கடவுள் எல்லாம் நம்ப முடியாத வண்ணம் மிருக உடல் அல்லது தலையுடன் இருக்கும். பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பு அல்லது நீரை தன் உடம்பில் கட்டுப் படுத்தி வைத்துருக்கும். நெருப்பு வாயில் உமிழும், நீர் கையில் அல்லது தலையில் கொட்டும். இடி மற்றும் மின்னலை ஆயுதமாக வைத்துருக்கும். இதன் மூலம் ஒன்றை அறிந்து கொள்ளலாம். மனிதனுக்கு எது எல்லாம் பிரச்சனையோ அதை எல்லாம் அந்த சக்தியிடம் வைத்து அதனைக் கடவுள் ஆக்கி விடுவார்கள். இதுக்கு உதாரணம் பார்க்கலாம். மாகாவிஷ்னுவின் பத்து அவதாரங்களில் முதல் மூன்று அவதாரங்கள் மச்சம்(நீர்) கூர்மம்(நிலம்,நீர்), வராகம் (நிலம்) போன்றவை மனிதனும்,மிருகமும் கலந்து சூப்பர் பவராக இருக்கும். கிரேக்கர்களும் இதுபோல படைத்தார்கள். ஆட்டுத்தலையுடன் ஒரு கடவுள்,கழுகுத் தலையுடன் ஒரு கடவுள்,பாம்பு மற்றும் பயம் தரும் பாலைவன விலங்குகள் உடல் அல்லது தலையுடன் இருக்கும். ஜரோப்பிய மற்றும் சீனர்களின் பறக்கும் பல்லிகள்,டிராகன் போன்றவை எல்லாம் இப்படி படைக்கப் பட்ட பாத்திரங்கள். இன்னும் ஒரு உதாரனம் பார்க்கலாம். வைணவத்தில் நரசிம்மரைப் படைத்தார்கள். சிம்ம தலையுடன்,மனித உடலுடன் கோரமான சக்தி மிக்க உருவம் என்றார்கள்.இந்த சிம்மக் கடவுள் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க சிங்கங்க்களைப் போல அடர்ந்த தலைமயிர் பிடறியுடன் இருக்கும். இதுபோல கிரேக்கர்களிலும் ஒரு சிங்க கடவுள் இருக்கார். ஆனால் அவர் தலை ஜரோப்பிய மற்றும் எகிப்து மலைகளில் வாழும் பூமா என்று அழைக்கப்படும் சிங்கத்தைப் போன்று பிடறி மயிர் குறைவாக இருக்கும்.பூமாவின் முகவடிவான சிம்மத்தின் தலையுடன் இருக்கும். வைணவர்களின் இந்த சிம்ம உருவத்தை முறியடிக்க சைவர்கள் சரபோஜர் என்னும் மனிதனும் மிருகமும் கலந்த கடவுளைப் படைத்தார்கள். பின்னர் ஜோடிக்குப் பிரத்தியாங்கா தேவி என்னும் கதை சொன்னார்கள். மனிதனைப் போலவே கடவுளும் இருப்பர் என்ற நம்பிக்கையில் கடவுளுக்கும் குடும்பம் குட்டி குழந்தைகள் படைத்தார்கள். கடவுள்கள் எண்ணிக்கை பெருகப் பெருக கதைகளும்,புராணங்களும் பெருகின.














ஒரு கட்டத்தில் மனிதனின் சிந்தனை விரிவைடையத் தொடங்கியதும் இது போல சூப்பர் கட்டுக் கதைகளை மக்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். ஆதலால் கடவுளும் மனிதனைப் போலவே, ஆனால் சக்திமான்களாக உருவானர்கள். முன்னர் வரை மச்சம்,கூர்மம்,வராகம் என்று படைத்து வாமணனன் என்ற குள்ள உருவமும் படைத்து சிம்மத்துடன் இது போல படைத்தலை நிறுத்தி,மக்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் பரசுஇராமன்,இராமன் கிருஷ்னன் ஆகியோர் வந்தனர். இதில் பரசு இராமர் வந்தால் புயலும் சூறாவளியும் வரும். இராமன் மட்டும் முழுக்க மனிதப் பாத்திரப் படைப்பு என்றாலும் அவ்வப்போது கடவுளாக்கப் பட்டார். கிருஷ்னன் பத்தி நான் சொல்ல வேண்டியதில்லை. அவரின் மாகா உருவ தரிசனத்தைப் பார்த்தால் புரியும் ஒரு தலையில் நீர்,இன்னேரு தலையில் நெருப்பு, சக்ரத்தில் இடி மின்னல் போல ஒளி,ஒலி. கூட்டிக் கழிச்சுப் பாருங்க. இல்லை என்றால் ஆழ்ந்து சிந்தியுங்கள். கடவுளின் உருவாக்கம் என்பது மனிதனின் பயம் மற்றும் காத்தலின் நம்பிக்கையில்,தேவைகளின் அடிப்படையில் உருவானது எப்படி என்பது புரியும். அடுத்த பதிவில் முதலில் கடவுள் எப்படி வந்தார். பின்னர் எப்படி பல்கிப் பெருகியது என்பது குறித்துப் பார்ப்போம்.

டிஸ்கி: இப்படிப்பட்ட சிந்தனை தாங்க,திரைப்படங்களில் நம்ம இரசினி,விசய் எல்லாம் நடந்து வந்தா நெருப்பு பறக்கும், மழை கொட்டும். என்ன ஆயுதத்திற்க்கு பதிலா கையிலயே இமய மலையைக் கூட உடைச்சுருவாங்க. அம்புட்டுத்தான்.

12 comments:

  1. நல்ல கட்டுரை வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
  2. டிஸ்கி: இப்படிப்பட்ட சிந்தனை தாங்க,திரைப்படங்களில் நம்ம இரசினி,விசய் எல்லாம் நடந்து வந்தா நெருப்பு பறக்கும், மழை கொட்டும். என்ன ஆயுதத்திற்க்கு பதிலா கையிலயே இமய மலையைக் கூட உடைச்சுருவாங்க. அம்புட்டுத்தான்.

    ...........பக்தி மணத்தோடு, நக்கல் மணமும் கமழுது. சூப்பர் பதிவு, அண்ணாச்சி.

    ReplyDelete
  3. //கடவுளின் உருவாக்கம் என்பது மனிதனின் பயம் மற்றும் காத்தலின் நம்பிக்கையில்,தேவைகளின் அடிப்படையில் உருவானது எப்படி என்பது புரியும்.//

    உண்மைதான் அண்ணா..

    நல்லா எழுதி இருக்கீங்க..

    டிஸ்கில நெக்கல் நல்லா இருக்கு :)))

    ReplyDelete
  4. நல்ல கட்டுரை நல்லா எழுதி இருக்கீங்க!!

    ReplyDelete
  5. பேயும் நானும் கனவா?
    //மனம் பலவீனம் மற்றும் பேய்கள் குறித்த பயம் உள்ள பதிவர்கள் இதைப் படிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்//

    இப்படி ஒரு build up கொடுத்து என்னை ஏமாத்திட்டீங்களே.. இன்னிக்கு தன ஹரிக்கு நகட் துடி இல்ல.. அதான் தைரியமா படிச்சேன்.. ஹி..ஹி..ஹி.. கமர்கட்டும் கடலை முட்டையும் வாங்கிட்டேன்.. எப்போ பார்க்கிறோமோ அப்போ அத தருவேன்.. ஓகே வா அண்ணா..

    ReplyDelete
  6. சூப்பர் பதிவு பித்தன் .

    ReplyDelete
  7. முன்னோரின் அறிவை ஆராயுமுன்பு இங்கு சென்று படித்துப் பாருங்கள்.

    http://www.kamakoti.org/tamil/Kural121.htm
    http://www.kamakoti.org/tamil/Kural117.htm
    http://www.kamakoti.org/tamil/Kural116.htm

    ReplyDelete
  8. புதிய முயற்சி மற்றும் நல்ல கட்டுரை.

    ReplyDelete
  9. நன்றி மகா,
    நன்றி சித்ரா, நாங்க கொங்கு ஆளுங்க இல்லையா, நக்கல் எல்லாம் தானா வரும்.
    நன்றி சுசி, மிக்க நன்றி,
    நன்றி சுவையான சுவை,
    நன்றி திவ்யாஹரி, தங்களை சந்திக்கும் போது பெற்றுக் கொள்கின்றேன்.
    நன்றி அம்மு மது,
    வணக்கம் அனானி, நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியவில்லை, நான் முன்னேர்களை எங்க விமர்சனம் பண்ணுகின்றேன். இது இது இந்தக் காலத்தில் இப்படி தோன்றி இருக்கலாம் என்ற கருத்தைத் தான் சொல்ல வருகின்றேன். அதுக்கு ஆதி சங்கரின் காலத்தில் அவர் சொன்னது சரி. இப்ப அது எடுபடாது. அவரும் முன்னேர்கள் சொன்னதைக் கண்மூடித்தனமாக நம்பி கடைப்பிடித்து இருந்தால் நீங்கள் மேற்கோள் காட்ட அத்வைதம் வந்து இருக்காது. எப்பொருள் யார் யார் வாய் கேப்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. நரசிம்மமே அல்லது ஈசனே ஒரு முடியாத உருவத்தை எடுக்கின்றார் என்றால் அதை உருவகமாக இருக்கும் என்று சொல்வதில் என்ன தவறு. நான் விசிஸ்ட்டாத்வைத்தை பின் பற்றினால் அது இராமானுஜரின் காலத்தில் சரி. இன்னமும் நாம் அதையே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது என்ன நிபந்தனை. காலத்திற்க்கு ஏற்ற வாறு நாம் ஏன் ஒரு புதிய முயற்ச்சியைக் காணக் கூடாது.
    இதுதான் என் கட்டுரையின் நேக்கம். இது கூட இதுதான் உண்மை என்றே, அல்லது நான் சொல்வது சரி என்றே நான் சொல்லவில்லை, நான் எனது கருத்துக்களை சொல்கின்றேன். நீங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் என்றுதான் சொல்ல வருகின்றேன். நன்றி. இதைப் படியுங்கள் அல்லது அதைப் படியுங்கள் என்பதை வீட நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் அல்லது உங்களின் கருத்து என்ன என்று சொன்னால் நன்றாக இருக்கும். வருகைக்கு நன்றி.

    நன்றி சிங்கக்குட்டி.

    அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  10. இப்படித்தான் இருக்கும் எனும் யூகங்கள் உண்மையைத் தொலைத்து விடுகின்றன. இவையெல்லாம் இப்போது நாம் சிந்திப்பதால் எழும் எண்ணங்கள், சிந்தனையே இல்லாதபோது எப்படி அந்த எண்ணங்கள் எழுந்திருக்கக்கூடும் என என்றாவது சிந்தித்தது உண்டா? வெறும் பயத்தினால் மட்டுமே மனிதர்கள் கடவுளர்களைச் சிந்திக்கவில்லை. கடவுளின் தோற்றம் உள்ளுக்குள் அவர்கள் உணர்ந்து கொண்டது. வடிவம் கொடுக்க முயன்றபோது எல்லா உயிரினங்களும் கண்ணுக்குத் தென்பட்டது. பரிணாமக் கொள்கையே ஒரு செல்லிருந்து பல செல் என சொல்கிறது. ஆனால் அதை கேள்வி கேட்பார் எவருமில்லை.

    ReplyDelete
  11. சிந்தனை இல்லாத போது எண்ணங்கள் எப்படி வரும், தன் பாதுகாப்பு மற்றும் இயற்கை குறித்தான சிந்தனை அவனுக்கு ஏற்பட்டதின் காரணமாய்த்தான் வந்துருக்கும். சர்ச்சைகளுக்கு இடம் அளிக்க வேண்டாம் என்ற உணர்வின் காரணமாய்த்தான் இப்படி இருக்கலாம்,செய்துருக்கலாம் என்ற வாசகங்கள். உண்மையில் இப்படித்தான் இருக்கும், வேறு எதுவும் மார்க்கம் இல்லை.
    கடவுள் உருவம் மற்றும் தோற்றம் குறித்து இன்னமும் நான் ஆதிமனிதன் காலத்தைத் தான் விவரித்துக் கொண்டு உள்ளேன். வேதகாலம் அல்லது கோவில்கள் பற்றிய பதிவுகள் வரும் போது உங்களின் இந்த சந்தோகங்களுக்கு விடை கிடைக்கும்.
    ஒரு செல் இருந்து பல செல் வருகின்றது எனபது உண்மை. ஆனால் நல்லா யோசிக்கும் போது அனைத்துக்கும் மனிதன் கடவுள் உருவம் கொடுக்கவில்லை. தனக்கு அருகாமையில் இருக்கும் மற்றும் தனக்கு அச்சம் அல்லது ஆபத்தை விளைவிக்கும் விலங்குகளை மட்டும் கடவுளிடம் விட்டான். அவைகளிடம் இருந்து கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை காரணமாய்த்தான். நன்றி அய்யா.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.