Tuesday, February 2, 2010

கடவுளும், கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 3

முதலில் மனிதன் தனது அடிப்படை தேவைகளைத் தேடி ஓடும்வரை அவனுக்கு கடவுள் நம்பிக்கை அல்லது ஆன்மீகம் போன்றவற்றில் நாட்டம் இல்லை. பின்னர் அவன் குழு அடிப்படையில் வாழ ஆரம்பித்த போது தன்னை துன்புறுத்தும் காரணிகளைக் கடவுளாகவும் அவை தங்களைத் தண்டிப்பதாகவும் நினைத்தான். அதனால் நிலம், நீர், காற்று, நெருப்பு பின்னர் ஆகாயமும் கடவுளாகச் சேர்ந்து கொண்டது. இப்படி மனிதன் குழுவாக வாழத் தலைப்பட்டவுடன் நாகரீகங்கள் தோன்றலாயிற்று. மனிதன் கொஞ்ச கொஞ்சமாக பஞ்ச பூதங்களிடம் இருந்து தன்னைக் காக்க, கத்துக் கொண்டான். அப்படி கத்துக் கொண்ட சில நாட்களில் தனது பாதுகாப்பு மற்றும் தேவைகளை ஓரளவு உறுதி செய்தததும்,மனிதன் புறக்காரணிகள், பிரபஞ்சம் போன்றவற்றில் நாட்டம் கொள்ளத் தொடங்கினான். இந்நாகரிக காலத்தில் தான் முதலில் அக்கினி,வருணன், வாயு,நிலமகள் போன்றேர் உருவங்களுடன் படைக்கப் பட்டனர். இதில் ஆச்சரியம் என்ன என்றால் எல்லா நாகரிங்களிலும் ஒரே மாதியான படைப்புகள் இருப்பதுதான். பின்னர் ஆகாயம் மனிதனுக்கு எந்த பிரச்சனையும் செய்யாதால் ஒதுக்கப் பட்டது. நிலமும் முக்கியத்துவம் இழந்தது. குடிக்கவும்,விவசாய ஆதரமாய் நீர் இருந்ததால் நீருக்கும், வருணன் என்ற பெயரிலும். அழிக்கும் நெருப்பு, சமையல் மற்றும் யாகங்களில்,வேள்விகளில் பயன்படுத்தப் பட்டதால் நெருப்புக்கும் அக்னி என்ற பெயரில் வழிபாடு அதிகம் காணப் பட்டது. இன்றளவும் இது காணப்படுகின்றது.

சில அக்னிக் கடவுள் உருவங்கள்.












பின்னர் இந்த நாகரீகம் வளர வளர ஒரு கடவுளுக்குப் பெரிய இன்னோரு கடவுள், இவர், அவரை வீட சக்தி வாய்ந்தவர் என்று எல்லாம் ஒவ்வெறு கூட்டத்தினால், ஒரு கடவுள் உருவாக்கப்பட்டது. புராணங்களை நல்லா கவனித்தால் இந்த கடவுளின் மேன்மை விளக்கங்கள் புரியும். பின்னர் நான் உதாரனத்துடன் விளக்குகின்றேன்.
பின்னர் இந்த பஞ்ச பூதங்களுக்கு கடவுள் வடிவம் கொடுத்து, அவற்றைக் கடவுள் ஆக்கி வழிபாடு நடத்தினார்கள். பின்னர் மனிதன் இயற்கை இடர்களை சமாளிக்கும் விதத்தை அறிந்தவுடன், கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் மவுசு குறைய ஆரம்பித்தது. பின்னர் இவர்களுக்கு ஒரு தலைவன் நியமிக்கப் பட்டான். இந்திரனின் படைப்பும் நடந்தது. கவனிக்கவும் இந்திரன் எனபது கடவுள் அல்ல, இந்திரன் என்பதும்,இந்திர பதவி என்பது ஒரு பட்டம். தலைவர்களில் சிறந்தவர்களுக்கு இந்திரன் என்னும் பட்டம் கொடுக்கப் பட்டது. இந்த தேவர்களுக்கு அதிபதியாக தேவேந்திரன் வந்தான். இடியும் மின்னலும் அவன் வஜ்ஜிராயுதத்தில் இருந்து கிளம்புதாக கதையும் சொல்லப்பட்டது. இது போல ஒரு கிரேக்கக் கடவுளும் அதிபதியாக உள்ளார். என்ன ஒரு வித்தியாசம் என்றால் இடியும், மின்னலும் அவரின் விரலில் இருந்து கிளம்பும். ஒரு காலத்தில் தேவேந்திரனும்,இந்த தேவர்கள் தான் பூமியின் இரட்சகர்கள்.பின்னர் ஒப்புமைக் கடவுள்கள் வந்தவுடன் இந்திரனை வர்றவன் போறவன் எல்லாம் மட்டம் தட்டும் கதைகளைப் பார்க்கலாம். இந்திரனை வென்றதால் இந்திரஜித்து, இந்திரனை சபித்த முனிவர்கள் என பல கதைகள் உள்ளன. இதில் இருந்து என்ன தெரிகின்றது. இந்திரன் என்பது ஒரு காலத்தில் உயர்வாய் இருந்து பின்னர் அவனை வெல்பவர்கள் பராக்கிரம சாலிகள் என்று உயர்வு படுத்தப் பட்டுள்ளது.


இவர்களுக்கு யாகங்களும், வேள்விகளும் செய்து குளிர்வித்து மழை,நல்ல விளைச்சல் மற்றும் நெருப்பு,சூறாவளி கொள்ளை நேய்களை தடுக்கலாம் என்றும் நம்பினார்கள். இதில் மழைக்காத்தான் அதிக யாகங்கள் செய்தனர். அந்தக் கால மக்களின் வாழ்க்கை பெரும்பாலும் விவசாயம்,கால் நடை வளர்ப்பு என்று இருந்ததால் அவர்களுக்கு நீரின் ஆதாயம் மிகவும் இருந்தது.ஆதலால் யாகங்கள், வேள்விகள் மூலம் மழை வரவைக்கும் பணியை முனிவர்கள் ஏற்றனர். அவர்கள் காடுகள் மற்றும் ஊரின் வெளியில் அமைதியான இடத்தில் பர்ணசாலை அமைத்து யாகங்கள்,வேள்விகள் மற்றும் தவம்,ஜெபங்களில் ஈடுபட்டனர்.

யாகங்கங்கள் செய்து மழை வரவைப்பது, தேவர்களுக்கு பூஜை நடத்துவது போன்றவற்றை நாம் புராணங்களில் அறியலாம். அக்னிக்கு ஒரு தனி மரியாதையும், அதனை காக்கும் ஹேமங்கள்,யாகங்கள் செய்யும் அக்னியை அனையாமல் காக்கும் விதம் கூட மந்திரகோசஉபனிசத்தில் தெளிவாக கூறியிருக்கின்றார்கள். அது போல மக்கள் மலை, நிலம், ஆகாயம்,போன்றவற்றை வணங்க அவற்றின் தலைவனான இந்திரனுக்கு விழா எடுக்கும் கோவர்த்தன பூஜையைப் பாகவத்தில் இருந்து அறியலாம். இதில் தேவேந்திரனின் ஆனவத்தை அடக்கியதின் மூலமாக கண்ணன் அல்லது விஷ்னு பெரியவர் என்ற பாத்திரப் படைப்பு புரியும். பல புராணங்களில் தேவேந்திரன் ஒரு பெரிய தலைவனாகவும், தவறு செய்யும் போது அவனை சபிக்கும் முனிவர்கள் அவனை வீட தவசீலர்களாகவும், சக்தி மிக்கவர்களாகவும் காட்டிக் கொண்டனர். இப்படி முனிவர்களைக் கொண்ட பரம்பரை,சந்ததியினர் வழி வழியாக வந்தனர். இவர்கள் காட்டில்,வாழ்விலும் தவசீலர்களாக வாழ்ந்தனர். இவர்கள் மக்களின் நன்மைக்காக வாழ்ந்தனர்(இப்ப இருக்கிற சாமியாருங்க இல்லைங்கோ). இவர்கள் யாகங்கள் நடத்தி மழை பொழியவும், விளை நிலங்கள் சிறக்கவும், தர்மம் தழைக்கவும் பாடுபட்டனர். இதிலும் நம் முன்னேர்களின் ஒரு ஆற்றல் உள்ளது. யாகங்கள் அக்னி,வருணன் போன்றவர்களுக்கு இவர்களால் யாகங்கள் நடத்தப் பெற்றன. மன்னர்கள் தங்களின் வீரம் வெற்றியைக் காட்ட இராஜசூய யாகம்,தனுர் யாகம் போன்றவற்றை நடத்தினர். இந்த முனிவர்கள் யாங்கங்கள் நடத்தி மழை பொழிவிக்க முடியுமா?. சும்மா உக்காந்து கொண்டு தீயில் கட்டையும், நெய்யும் விட்டால் அதுக்கும் மழைக்கும் என்ன சம்பந்தம் என்று கேக்கலாம்.

இந்த யாகங்கள் நடத்தும்போது அக்னியில் அரச மரத்தின் விறகுகள் போடப் படுகின்றன. இவை சமித்து என்று சொல்லப் படுகின்றது. இதில் நம் செயற்கை மழை தத்துவம் செயல் படுகின்றது. ஒரு சில இடங்களில் மழை பொழியாவிட்டால் கொஞ்சம் மேகமூட்டம் அல்லது வானத்தில் ஈரப்பதம் உள்ள இடங்களில் மேலே சென்று சில்வர் அயோடைடு குச்சிகளை வெடிக்கச் செய்தால் மழை பொழியும். இதனை செயற்கை மழை என்பார்கள். இப்போது உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த சமித்து என்னும் அரச மர குச்சியில் இந்த சில்வர் அயோடைடு கலர்ந்துள்ளதாக கூறுகின்றார்கள். ஆதலால் தொடர்ந்து யாங்கள் புரிவதின் மூலம் சிறப்பான ஒரு அமைப்பை சிருஷ்டி செய்துள்ளார்கள். வழக்கம் போல சாரத்தைப் பிடித்துக் கொள்ளும் மக்கள் இந்த யாகங்களை தங்களின் வளமையைக் காட்டுவதற்க்காக செய்வார்கள். இதில் உணவும்,பட்டுத்துணி மற்றும் விலையுயர்ந்த பொருட்களைப் போட்டும்.பெயரளவில் சமித்துப் போட்டு,விறகு சிராய்கள்,சந்தன சிராய்கள் போடுகின்றார்கள். யாகங்கள் என்றால் ஆடம்பரம் என்ற அளவில் மாற்றி விட்டார்கள். இதை செய்வர்களும் உலக நன்மையைக் கருதாமல் தட்சினைக்காக செய்யும் ஒன்றாக ஆக்கிவிட்டனர். நாம் கடவுளின் ஆதித் தோற்றங்களான பஞ்ச பூதங்கள் பற்றிப் பார்த்தோம். இவற்றினால் பாதிப்பு ஏற்ப்படும் வரையில் தான் இவர்கள் கடவுளாக இருந்தார்கள். பின்னர் இவற்றில் இருந்து மனிதன் தன்னைத் தற்காத்துக் கொள்ள ஆரம்பித்ததும் இவர்கள் தேவர்களாக மாறினர்.அதன் பின்னர் பெரிய கடவுள்கள் தோன்றினார்கள். அதன் தோற்றத்தை அடுத்த பதிவில் பார்ப்போம். நன்றி.

10 comments:

  1. அருமையான பத்தி

    ReplyDelete
  2. அருமை..ஓட்டு போட்டாச்சி

    ReplyDelete
  3. ஆராய்ச்சி அருமையாக உள்ளது தொடர் பணிகளுக்கு வாழ்த்துக்கள் .....

    ReplyDelete
  4. சில்வர் அயோடைடு அரச மரம் நல்லதொரு தொடர்பு. எப்படியெல்லாம் கடவுள் வந்திருக்கக்கூடும் என நமது எண்ணத்தில் தோன்றியவைகள், புராணங்கள் எழுதியவரின் எண்ணத்தில் தோன்றியவைகள் என உண்மையானது ஒருவழியாக மறைக்கப்பட்டே இருக்கிறது, அதனால் தான் இறைவன் ஒரு மறைபொருள். இங்கே பொருள் என்பது சரியாகப்படாது. இறை ஒரு மறை என்பதே சரியாக இருக்கும். தொடருங்கள்.

    ReplyDelete
  5. நிறைய ரிசர்ச் பண்றீங்க போல!!:)அதான் பிஸி

    ReplyDelete
  6. இவற்றினால் பாதிப்பு ஏற்ப்படும் வரையில் தான் இவர்கள் கடவுளாக இருந்தார்கள். பின்னர் இவற்றில் இருந்து மனிதன் தன்னைத் தற்காத்துக் கொள்ள ஆரம்பித்ததும் இவர்கள் தேவர்களாக மாறினர்.

    ....... mmmmm..... interesting!

    ReplyDelete
  7. நான் எழுத நினைத்த தொடர்.. ஆனால் நீங்கள் மிக அதிகமாகப் படித்து எழுதி இருக்கிறீர்கள். நான் 3 பகுதியையும் படித்து விட்டேன். எத்தனை ஓட்டுகள் வேண்டுமானாலும் போடலாம் அனால் ஒன்று தான் அனுமதிக்கப் படுகிறது. என்ன செய்தாலும் மக்களின் மூட நம்பிக்கையை மாற்றுவது இயலாத காரியம்.
    "நட்ட கல்லை நம்பியே" என்ற திருமூலர் பாடல் தான் ஞாபகம் வருகிறது.
    மூட நம்பிக்கையாக இருந்தாலும், நாம் கடை பிடிக்கும் சில விஷயங்களில், நமக்குத் தெரியாமல் சில நன்மைகள் நடக்கின்றன. நமது முன்னோர்கள் அது போல செய்து வைத்திருக்கிறார்கள். அதையும், தொடர்ந்து விரிவாக அலசுங்கள். திருநீர், சந்தனம், பன்னீர், போன்றவற்றில் உள்ள மகிமைகளையும் விளக்குங்கள்.(நீரணியா நெற்றி பாழ் என்பது ஔவையார் மொழி)நான் எழுத எண்ணியதையும் உங்களிடம் சொல்லி விட்டேன். நன்கு அலசுங்கள்.. நாங்கள் இருக்கிறோம்.
    நன்றி..

    ReplyDelete
  8. நன்றி தியாவின் பேனா,
    நன்றி மலிக்கா,வாக்களித்தமைக்கு நன்றி (அய்யா நான் சத்தியமா பிரியானியும் பணமும் தரவில்லை)
    நன்றி மகா,
    // இங்கே பொருள் என்பது சரியாகப்படாது. //
    அப்படி இல்லை அய்யா, நாம் இறைவனை இராமனாகவே அல்லது கிருஷ்னாகவே பார்த்து பழகி வழக்கப் பட்டுவிட்டேம். ஆதலால் கடவுள் ஒரு பொருள் என்று தோன்றுவது கடினம். கடவுள் என்பது ஒரு சக்தி மூலம் என்று பார்த்தால் பிரபஞ்சப் பொருளாகத்தான் இருக்கும். அதாலால் தான் சித்தர்கள் கூட மறைபொருள் என்று சொல்கின்றார்கள். நானே கூட அல்லது நீங்கள் கூட ஒரு மறைபொருள்தான்.ஆன்மா என்னும் உயிர்சக்தி மறைந்து இருக்கும் மறைபொருள். நன்றி அய்யா.
    நன்றி மேனகா சத்தியா,
    அப்படி எல்லாம் இல்லை, இங்கு சிங்கையில் வருடக் கணக்கு ஜனவரியில் தான் அதுதான் பிஸி. நன்றி சுவையான சுவை. இதில் வரும் தகவல் எல்லாம் பல இடங்களில், பல வயதுகளில் படித்தது கோர்வையாக கட்டுரையாக தருகின்றேன்.
    நன்றி சித்ரா,
    வாங்க பிரகாஷ் என்னும் சாமக்கோடாங்கி(பெயர் அருமை). நீங்க ஒரு பதிவை உங்களின் கருத்துதாக எழுதினால் அது உங்களின் கருத்துக்களை மற்றவரிடம் கொண்டு செல்லும், மற்றவரின் கருத்துக்கள் உங்களை அடையும். ஆதலால் நான் எழுதுகின்றேன் என நீங்கள் விட வேண்டாம். நீங்கள் எழுதுங்கள். நாங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பரிமாறிக் கொள்வேம். சமையல் பதிவில் மட்டும்தான் எல்லாரும் ஒரே மாதிரி பதிவு போடுவது வீண்,ஆனால் வித்தியாசமான செய்முறை அல்லது மாறுபட்ட பதிவு என்றால் பதிவு போடலாம் அல்லது பின்னூட்டத்தில் சொல்லாம். நன்றி. எழுதுங்கள்.

    ReplyDelete
  9. அருமையான பதிவு நண்பா.. நன்றி..

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.