நான் முன்னேர்களின் இந்த ஆழ்ந்த அறிவைப் பற்றிக் கூறினால் அதற்கு ஒரு சில பதிவுகள் பத்தாது. நிறைய எழுத வேண்டும். அதில் பல உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நம்புகின்றேன். ஆதலால் சிலவற்றை மட்டும் கூறி கட்டுரையைத் தொடங்குகின்றேன். அறுபதுகளில் இந்தியாவைக் காலரா,பிளேக் மற்றும் பெரியம்மை பரவிய சமயம்,அப்போதுதான் நம் எல்லைக் காவல் தெய்வங்களான மாரியம்மன்,காளியம்மன் போன்றவைகளின் பூஜை வழிபாடுகள் மிண்டும் பிரபலமடைந்தன. இது ஏன் என்றால் சக்தி என்பது மருத்துவ குணம் மிக்க வேப்பிலை மற்றும் மா இலைகளில் உள்ளது. தொற்று நோய்க் கிருமிகள் அண்டாமல் நம்மைக் காத்தன. இன்றைய தினம் மர்மக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில் மருத்துவர்கள்,சுற்றுப்புற ஆர்வலர்கள் பலரும் கொசுக்கள் மற்றும் கிருமிகள் அண்டாமல் இருக்க வேப்பிலை, மாம்பூ,வசம்பு கலந்த புகையை, மாலைவேளையில் போடச் சொல்கின்றார்கள். மாவிலை மற்றும் வேப்பிலையில் வரும் நுட்பமான வாசனை,கொசுக்களை விரட்டும் என்று சொல்கின்றார்கள். அம்மை,காலரா மற்றும் உஷ்ண சம்பந்தமான நோய்கள் பரவும் கோடைகாலத்தில் தான் இந்த அம்மன் பண்டிகைகள் வருகின்றது என்பதும் கவனிக்கத் தக்கது. நல்ல விஷயங்களை, மருத்துவக் குணங்களைப் பக்தியுடன் கலந்து கொடுத்தார்கள்,அப்போதுதான் மனிதன் பயத்துடன் ஒழுங்காக கடைப்பிடிப்பான் என்பது அவர்கள் எண்ணம்.
கிருமினாசிகள் கலந்த சானியை மொழுகுவது,மணம் பரப்பும் மலர்கள்,வீட்டின் வர்ணம் வெப்பம் இழுக்காத வெள்ளை, கூரையின் ஓடுகள்,பூஜைகள் மற்றும் சமையலில் மஞ்சளின் பயன்பாடு ஆகியன போன்றவை எல்லாம் அவர்கள் அனுவபப் பூர்வாய் கண்டு பிடித்த விடயங்கள் ஆக இருக்கலாம். ஆனால் உடல் உறுப்புகள் மற்றும் புறக்காரணிகள், சக்தி,கோவில்,சிலை வழிபாடு, கோள்களின் இயக்கங்கள் மற்றும் தன்மைகள் எவ்வாறு அறிந்தான் எனபது புதிர்.இது பற்றிப் பின்னர் பார்ப்போம். ஆனால் கடவுள் பற்றிய சில நம்பிக்கைகள்,வழிபாடுகள் யாவும் நமது மனதின் தண்மை மற்றும் பழக்க வழக்கங்கள் மூலம் தான் அமைகின்றன. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அல்லது வழிமுறையில் நாம் பழகும் பழக்கங்கள் தான் நமது கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கைக்கு வழிவகுக்கின்றன. நமது மதம்,கடவுள்,வழிபாடு யாவும் பழக்கத்தால் வருவபை. இந்த உணர்வினை நான் பெறுவதுக்கு காரணமாக ஒரு சம்பவத்தை நான் கூறுகின்றேன். என் அம்மா மிகவும் தெய்வ பக்தி மிக்கவர். பேருந்தில் பயணம் செய்யும் போது கூட ஜன்னல் வழியாக வழியில் வரும் கோயில்கள் எல்லாம் கும்பிட்டுக் கொண்டே வருவார். இந்தப் பழக்கம் கோவில்களைப் பற்றிய உண்மைகள் அறியாத வரை எனக்கும் இருந்தது. பேருந்தில் அமர்ந்தால் மரங்களையும்,வயல்களையும் வேடிக்கை பார்க்கும் நான் வழியில் எந்தக் கோவில்,சர்ச்,பள்ளிவாசல்,தர்க்கா வந்தாலும் கும்பிட்டுக் கன்னத்தில் போட்டுக் கொள்வது வழக்கம்.
எங்கள் ஊர் முருகன் கோவில்,காவல் நிலையத்தின் எதிரில் அமைந்துள்ளது. நான் இந்த இடத்தைக் கடக்கும் போது எல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வது வழக்கம். பின்னர் நான் சென்னை வந்த போது, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தின் அருகில் இருக்கும் அனுமார் கோவிலும், எலிபெண்ட் கேட் ரோட்டில் காவல் நிலையத்தின் அருகில் இருக்கும் கிருஷ்னன் கோவிலில் பேருந்தில் இருந்தவாறே கன்னத்தில் போட்டுக் கொள்வது தொடர்ந்தது. ஒரு முறை ஒரு காவல் நிலையத்தைக் கடக்கும் போது, நான் என்னை அறியாமல் கன்னத்தில் போட்டுக் கொண்டேன். உடனே நான் ஒரு நிமிடம் கூர்ந்து யோசிக்கத் தொடங்கினேன். அங்கு எந்தக் கோவிலும் இல்லை, ஆனால் நான் ஏன் வணக்கம் போட்டேன் என்று. பின்னர்தான் தெரிந்தது நான் செய்தது பழக்கத்தின் காரணமாக வந்த அனிச்சைச் செயல் என்று. (இது பின்னர் கோவில்கள் பற்றி ஆராயத் தொடங்கியது. இதுவும் சக்தி மூலங்களைப் பற்றி எழுதும் போது சொல்கின்றேன்). இந்த நிகழ்வு எனக்குள் ஒரு பெரிய மாற்றம் அல்லது தாக்கத்தை ஏற்படுத்தியது.பின்னர் தான் கடவுள் நம்பிக்கை என்பது வேறு, வழிபாடுகள் என்பது வேறு. நம் ஆழ்மனதில் கொண்ட நம்பிக்கைதான் கடவுள். அதன் மீது கொள்ளும் தொடர்புகள் தான் வழிபாடு. ஆனால் இந்த வழிபாடு என்பது பழக்கத்தால்,ஆழ் மனதுடன் தொடர்பு இல்லாமல் போய்,வெறும் அனிச்சைச் செயல் ஆகின்றது. வெறும் அனிச்சையாக மனதுடன் தொடர்பு இல்லாமல் செய்யும் போது,அது பயனற்ற ஒன்றாக ஆகிவிடுகின்றது. இப்போது நாகரீக உலகில் இந்த வழிபாடுகள் யாவும் கட்டாய முறைகள் ஆகி அது சடங்காக ஆகிவிட்டதால்,அதுவும் அனிச்சையாக செய்யும் பூஜைகள்,வழிபாடுகள்,தொழுகைகள் ஆகி அதில் பலனே அல்லது மன நிறைவே கிட்டுவது இல்லை. எனவே முன்னேர்கள் சொல்லிய மாதிரி முழு மனதுடன் அமைதியாக, வழிபடுவது,தொழுகை செய்வது ஆயிரம் மடங்கு பலனும்,மன அமைதியும் கிட்டும். நீங்கள் எப்போது எல்லாம்,சந்தோசம்,துயரம் போன்ற ஆழ்ந்த மன நிலையினை அடைகின்றீர்களே அப்போது எல்லாம் கடவுளை நினையுங்கள்,வணங்குங்கள் மன அமைதி கூடும். நாம் முன்னர் விட்ட இடத்திற்குச் செல்வேம். இனி கடவுள் என்பவர் பயத்தால்,ஆசையால் மனிதனுக்கு வந்த நம்பிக்கை என்று தொடரின் ஆரம்பத்தில் சொன்னேன் அல்லவா. அது ஆரம்ப கால கட்டத்தில் மனிதனுக்கும் கடவுளுக்கும் ஆன தொடர்புகள். பின்னாளில் இயற்கை,விலங்குகள் போன்ற அபாயங்களில் இருந்து தற்க்காத்துக் கொண்ட மனிதனின் சிந்தனைகள் விரிவடையத் தொடங்கின. பின்னர் அவன் தன்னை சுற்றியுள்ள இயற்கை, படைப்புக்கள் போன்றவற்றிக்கு மூலத்தைத் தேடத் துவங்கினான். இதுதான் கடவுளைத் தேடுதல் ஆரம்பமாகவும் இருந்தது. இந்தக் கடவுளைத் தேடும் போது ஒரு சக்தி மூலத்தைக் கண்டவுடன் அதுதான் கடவுள் என்றான்.பின்னர் அதன் சக்தி மூலம் வேறு ஒன்று என்று அறியும் போது அதுதான் கடவுள் என்றான். இப்படி அவன் சக்தி மூலங்களைத் தேடிக் கொண்டே செல்கையில் பல கடவுள்கள் தோன்றினர். இந்த வரிசையைப் பார்ப்போம். தொடரும். நன்றி.
டிஸ்கி: வேப்பிலை,மாம்பூ,வசம்பு கலந்த தூளை குமுட்டி அடுப்பில் போட்டு எரித்தாலும்(புகைப் போடுவது). அல்லது மாம்பூ,வேப்பிலை,வசம்பூ ஆகியவற்றைக் காயவைத்து பொடி செய்து சாம்பிராணித்தூளுடன் கலந்து,வெள்ளை மண்ணெய் அல்லது நல்ல எண்ணெய்யில் கலந்து, இரண்டு அல்லது மூன்று சொட் நறுமண பசை(செண்ட்)யும் கலந்து, பழைய ஆல் அவுட் அல்லது குட்னைட் ரீபீள் காலி குடுவையில் ஊற்றி வைத்தால், நல்ல உடலைக் கொடுக்காத கொசுவத்தி ரெடீ.(நன்றி ஜூ வீகடன்)
அட! இது பகுதி 7 ஆ? மீதியையும் படிச்சிட்டு வரேன்.
ReplyDeleteஅலசல் தொடரட்டும்.
migavum nandru
ReplyDeleteநல்ல ஆராய்ச்சி
ReplyDeleteஅண்ணாச்சி, ஒரு சீரியஸ் மேட்டர் அய் எவ்வளவு interesting ஆ சொல்லி கிட்டு வரீங்க. அடுத்த பகுதிக்கு எதிர் பார்க்க வச்சிட்டீங்க. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்லாயிருக்கு...
ReplyDeleteநல்ல கருத்துகளை சுவையாக சொல்லுகின்றீர்கள் வளர்க தங்கள் தொண்டு.
ReplyDeleteInteresting! Free a irukingkalo niraiya research panringka!
ReplyDeleteதமிழிஷில் ஏன் இனைக்க வில்லை. இந்த ஆராய்ச்சி ஒரு 30 வரை போகும் என்று நினைக்கிறேன்.தொடருங்கள்........
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றி வடுவூர் குமார்,பொறுமையாக நிறைய நேரம் கிடைக்கும் போது படித்து,அது பற்றிய கருத்துக்களைக் கூறுங்கள். கோவில்களில் நீங்கள் புற விஷயங்களைப் பற்றி நினைத்து இருந்தால்,அது வைபிரேஷனை உணர வைக்காது. நீங்கள் அகசிந்தனையுடன் உள் நுழையும் போதுதான் அந்த அற்புதத்தினை உணர முடியும். திருவரங்கம்,சேட்டானிக்கரை பகவதி,கொடுங்கலூர் பகவதி,மருதமலை போன்ற கோவில்களில் இதை உணரலாம். ஆகம விதிகளின் படி கட்டப்பட்டு,முறையாக பூஜைகள் செய்யும் கோவில்களில் மட்டும் இதை உணரமுடியும். நன்றி.
ReplyDeleteநன்றி அணானி,
நன்றி சாருஸ்ரீராஜ்,
நன்றி சித்ரா, அவ்வளவு சுவையாக சொல்லியிருக்கேனா? மிக்க நன்றி.
நன்றி மேனகா சத்தியா,
நன்றி கைலாஷ்,உங்களின் பல பதிவுகளில் பாலோயர் போட முடியவில்லை. பாலோயர் இணைக்கவும்.
நன்றி சுவையான சுவை,இது இப்போது சிந்தனை அல்ல. எனது பல வருட தேடலகள் இவை.
நன்றி ஜெய்லானி, நான் சீனப் புத்தாண்டு விடுமுறை முடிந்து வந்து பதிவு போட்ட சமயம்,பதிவு முடிக்கும் போது அலுவலகத்தில் எந்த பணியும் இல்லை என்று இரண்டு மணிணேரத்தில் மூடிவிட்டார்கள். ஆதலால் தமிழ்ஷ் மற்றும் தமிழ்மணத்தில் இணைக்க சமயம் கிடைக்கவில்லை.
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.