Wednesday, February 10, 2010

நாயின் மீது நாய் வண்டி ஏற்றிய கதை

சாலைப் போக்குவரத்து பற்றிய தொடருக்கு சுசி அழைத்துள்ளார். நமக்கு இது பத்தி ஒன்னும் தெரியாது என்றாலும் தங்கை சொன்னா செய்து தான ஆகவேண்டும். ஆதலால் இந்தப் பதிவு. இது உங்களில் பலருக்கும் அனுபவம் இருக்கும்,ஆனாலும் எனது கருத்துக்களைச் சொல்கின்றேன். நம்ம கிட்ட காரு,பைக் எல்லாம் கிடையாது. இந்தியாவில் அதிகம் வசிக்கும் நடுத்தர வர்க்கத்து ஏழைகளில் நானும் ஒருவன். மாதச்சம்பளம் வாங்கி கணக்குப் பார்த்து செலவு செய்யும் வர்க்கம். சுருக்கமாக சொன்னால் அன்றாடம் காய்ச்சி. மாதத்தின் முதல் பதினைந்து நாள் நான் ஜதிராபாத் நிஜாம், மீதீ நாள் பரதேசி(பிச்சைக்காரனுங்க,சுசி ஒரு நூறு ரூபாய் இருக்குமா ஒன்னாம் தேதி தருகின்றேன் என்ற கட்சி). இதுதான் நம்ம லைப் ஸ்டைல். ஆனாலும் இந்தியாவில் இருக்கும் போது, என் அண்ணாவின் 1991 மாடல் பழைய கேபி 100 தான் நம்ம ஏரோப்பிளைன்ங்க. ரொம்ப அதிர்ஷ்டமான வண்டி என்னும் செண்டிமெண்ட் காரணமாக இன்னும் மாத்தாம வைச்சிருக்கோம். நான் முதலில் ஓட்டிப் பழகியதும் இந்த வண்டியில் தான். ஒரு முறை தவிர எப்போதும் இந்த வண்டி கீழ விழுந்தது இல்லை. பிரேக் அடிச்சா,அடித்த இடத்தில் அப்படியே நிற்க்கும். ஆனா பாருங்க நமக்கு எப்போதும் பிடித்தது,இப்போதும் போவது நடராஜா சர்வீஸ்தான்,அதுதாங்க கால் நடை.

எனக்கு நடப்பது ரொம்ப பிடிக்கும்,விட்டா இரண்டு, மூன்று கிலோமீட்டர் கூட நிற்காம நடப்பேன். அதுவும் எதாவது கற்பனை பண்ணிக் கொண்டு நடப்பதில் ஒரு சுகம்தான்.மத்த எல்லாரையும் வீட நடராஜ சர்வீஸ்ல போறவங்களுக்கு கொஞ்சம் சொளரியங்கள் அதிகம். சாலையில் பராக்குப் பார்த்துக் கொண்டு,கடை மற்றும் போற,வர்றவங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஜாலியா போலாம்.எங்க வேணாலும் நின்னு,பானிபூரி,பேல்பூரி,மசால் கடலை,வேர்க்கடலை,உப்புக்கடலை,மாங்காய்,காரப்பொரி,சுண்டல்ன்னு எதுவேணா கொறித்துக் கொண்டு நிற்கலாம்,நடக்கலாம்.நான் சிறுவயதில் இருந்து தெருசுத்தி நல்ல அனுபவம் இருக்குங்க.அதுனால தான் எனக்கு மார்க்கெட்டிங் துறையில் வேலை கிடைத்த ஆரம்ப காலங்களில் கால்நடையாக (எருமை இல்லிங்க) சென்னை முழுதும் சுத்தி இருக்கங்க.மவுண்ட் ரோடு ஆரம்பம் சிம்சன் முதல் தேனாம்பேட்டை வரைக்கும் நடந்தே கஸ்டமர் கவர் பண்ணிய காலமும் உண்டு. தேனாம்பேட்டை,ஆழ்வார்பேட்டை,மயிலை,அடையார்,பெசண்ட நகர்.பாரிஸ் என சென்னையில் என் கால் படாத இடம் இல்லை. அண்ணா நகர்,அம்பத்துர் தொழில்பேட்டை,ஆவடி எல்லாம் சுத்தி இருக்கின்றேன்.ஆந்திராவில் ஜெடிமெட்லா,விஜயவாடா,பாண்டி, பெங்களுர்,கேரளாவில் பாலக்காடு,திருச்சூர்,எர்ணாகுளம், கொச்சின் என அனைத்து தொழிற்பேட்டைகளும் நான் நடந்த இடங்கள்.தமிழ் நாட்டில் திருச்சி,கோவை, மதுரை,தஞ்சை,திருநெல்வேலி,நாகர்கோவில் ஊட்டி என சுத்தாத ஊர்கள் இல்லை. எல்லாம் தொழில்முறைப் பயணத்துடன் இணைந்த கோவில்கள் பயணமும் ஆகும்.


அப்புறம் சில காலம் நான் என் நண்பன் டி.பி.நாயகம்(டூ வீலருக்கு டிரைவர் வச்ச ஆளு நான்) உடன் இணைந்து ஸ்பெண்டர் பிளஸ்ஸில் சென்னை முழுதும் சுத்திய அனுவம் உண்டு.அவனும் நல்லா பொறுமையா ஓட்டுவான்.என்ன ஒன்னு பக்கத்தில ஒரு பிகர் ஸ்கூட்டியில் போனா வண்டி தான வேகமா போக ஆரம்பிச்சுடும்.நானும் அவனைத் திட்டி நிதானத்துக்கு கொண்டு வருவேன்."அவன் நான் ஓட்டவில்லை,வண்டி அப்படி பழகிவிட்டது" எனக் கிண்டல் அடிப்பான்.இப்படி எத்திராஜ்,ஸ்டெல்லாமேரிஸ்,குயின்மேரிஸ் பெண்ணுக எல்லாருக்கும் எஸ்கார்டு டூட்டீ கூட பார்த்துருக்கேம். (எல்லாம் பழைய கதைடா பேராண்டி).

எனக்கு வேகமாக நடப்பது என்பது இயல்பான விஷயம்.பெரும்பாலும் நான் நடக்கும் போது செய்வது எல்லாம் அனிச்சை செயல்தான்.மனம் ஒரு இடத்திலும்,கால்கள் ஒரு இடத்திலும் இருக்கும். பல சமயங்களில் பழகிய முகங்கள் வந்தாலும், என்னைப் பார்த்துச் சிரித்தால் கூட,நானும் அவர்களின் முகத்தைப் பார்த்து இருப்பேன். ஆனால் சிந்தனை வேறு இடத்தில் இருப்பதால்,கவனத்தில் இல்லாது போய்விடுவேன்.வணக்கம் சொன்னாக் கூட கண்டுக்காம போகின்றாய் என்று நண்பர்களின் குறைபாட்டுக் ஆளானதும்,பின் என் நிலையைக் கூறியதும் சமாதானம் ஆனதும் உண்டு.என்னுடன் நடக்கும் நண்பர்கள் பலரும் என்னை அப்போதுக்கு அப்போ "ஓடாதட நில்லு" என்று கையைப் பிடித்து நிறுத்துவது உண்டு.தங்கமணி வந்தா பாவம், எப்படி நடப்பான்னு தெரியலை.பலர் உன் துணைவி பாவம் என்று கிண்டலடித்தும் உண்டு.பேசாம தங்கமணி கையைப் பிடித்துக் கொண்டு நடந்தா கொஞ்சம் மெதுவா நடப்பேன் என்று நினைக்கின்றேன்.சரிங்க விஷயத்துக்கு வருவேம்.


நடக்கும் போது என்னை மாதிரி இல்லாம,சாலையில் கவனம் தேவை.எதிரில் வருவர்களைப் பார்த்தும்,ஒதுங்கியும் கவனமாக நடக்க வேண்டும்.வேகமாக இல்லாமலும்,மெதுவாக இல்லாமலும்,மிதமான வேகத்தில் நடப்பது,இதயத்திற்க்கு நல்லது.சாலையைக் கடக்கும் போது குறிப்பாக சிக்னலில் கடப்பது மிகவும் நல்லது.இருபுறமும் கவனித்து வாகனங்கள் வந்தால் கடந்து செல்லும் வரை,அல்லது அதன் வேகத்தை அனுசரித்துக் கடப்பது மிகவும் நல்லது.பெரும்பாலும் வாகனங்களை முதலில் செல்லவிட்டுக் கடப்பது நன்மை பயக்கும். ரோட்டில் நடக்கும் போது இடதுபுறம் செல்வது நண்மை பயக்கும். செல்லும் இடம்,பாதை மற்றும் பயணிக்கும் இலக்கு ஆகியனவற்றில் கவனத்தில் கொள்வது நலம்.நடக்கும் போது எதாவது பிடித்த பாட்டை மனதுக்குள் ஹம் செய்து நடப்பது,நம் களைப்பைப் போக்கும். அதுக்காக சத்தமா பாடி தர்ம அடி வாங்கக் கூடாது.எனக்கு மெலோடியான சோகப் பாடல்களை ஹம் செய்து தனிமையான இரவு ரோட்டில் நடக்கப் பிடிக்கும். ஈராமான ரோஜவே,ஓராயிரம் பார்வையிலே,நான் பாடும் மொளன ராகம்,மன்றம் வந்த தென்றலுக்கு,நான் ஒரு இராசியில்லா ராஜா,வசந்த ஊஞ்சலில்லே(இரயில் பயணங்களில்) போன்ற மொலோடிப் பாடல்கள் தான் என் ஹம்மிங்கில் இடம் பெறும்.


இரண்டு சக்ர வாகனங்களில் பயணிக்கும் போது அத்தியாவசியமான காரணங்கள் இன்றி 60 கிலோமீட்டர் வேகத்திற்க்கு மேல் போகக் கூடாது.55 கிலோமீட்டர் வேகம் சரியானது.இது மைலேஜ் அளவையும்,வண்டியின் மீதான நமது கட்டுப்பாட்டையும் அதிகரிக்கும்.நான் கல்பாக்கத்தில் இருந்து திருப்பேரூர் சென்று வேலை பார்த்த போது,தினமும் கிழக்கு கடற்கரை சாலையில் முப்பது கிலோமீட்டர் பயணம் செய்வேன்.(போகவர 60) காலையில் அலுவலகம் செல்லும் போது 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும்,மாலையில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிப்பது வழக்கம்.ஒருமுறை எனக்கு இரண்டாம் சுற்று ஏழரை சனிதிசை ஆரம்பித்த போது,ஒரு தெரு நாய் குறுக்கில் வந்து, நாயின் மீது ஏறி கீழே விழுந்தேன்.வண்டியுடன் நானும் சில அடி தூரங்கள் இழுத்துச் செல்லப் பட்டேன்.என் அதிர்ஷ்ட வண்டி,அடி முழுவதையும் தான் வாங்கி என்னைக் காப்பாற்றியது.வண்டியில் பெட்ரோல் டாங்க் கவரில் வைத்து இருந்த ரெயின் கோட்,என் மார்பில் விழுந்த பலமான அடியைத் தாங்கியது.வண்டி சிராய்த்துக் கொண்டு போகும் போது நான் வண்டியின் மேல் படுத்த நிலையில் ஹாண்டில் பாரைக் கெட்டியாக பிடித்த நிலையில் பெரும் பாலும் இருந்தால் எனக்கு சிராய்ப்புக்கள் கம்மி. வண்டி சேப்டி கார்டு முற்றிலுமாக தேய்ந்து வளைந்து போனது.எனது பேண்ட் தேய்ந்து கிழிந்து நூலாகப் போனாலும் என் தொடையில் சிறிய சிராய்ப்புக்கு காயம்தான்.



கண்ணாடி, இண்டிகேட்டர்கள்,முகப்பு விளக்கு என அனைத்தும் நெறுங்கியது.எனது செருப்பு என் காலை விட்டு அகலாமல்,அது முற்றிலும் தேய்ந்து, பிரஷ் மாதிரி ஆனாலும்,என் கால் பாதத்தில் ஒரு அடி கூட படாமல் காப்பாற்றியது.பின்னாலும்,முன்னாலும் வாகனங்கள் வராமல் இருந்தது என் அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும்.எல்லாம் வல்ல கடவுள் செயல் என்பதைக் காட்டிலும் வேறு என்ன சொல்ல முடியும்.நான் வண்டியை சரி செய்து வளைந்த ஹேண்டில் பாரை அதன் போக்கில் ஓட்டி, பக்கத்தில் இருக்கும் டீக்கடைக்குப் போனதும், என் நடுக்கம், மற்றும் வண்டியைப் பார்த்தவர் கேட்டார்,நீங்க அங்கயா விழுந்தீர்கள் என்றார்.நானும் ஆமாம் என்று சொல்ல,அவர் அங்க கடைக்காரர்கள் கோழிக்கழிவுகள் கொட்டுவதால் நாய்கள் தொல்லை என்றும் அந்த மாதத்தில் நான் ஏழாவது அள் என்றும், இரண்டு பேர் ஸ்பாட் அவுட், ஒருத்தன் கால் போயிவிட்டது.இரண்டு பேர் ஹாஸ்பிட்டலில் இருக்கின்றார்கள்.எனக்கு தெரிந்து கீழ விழுந்து,எழுந்து வந்து டீக்குடிப்பவர் நீங்கள் தான்.கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் என்றார்.


நானும் கடவுள் அன்றி வேறு என்ன என்றும், எல்லாம் நம்மைப் பெற்றவர்கள் செய்த புண்ணியம் என்றும் நினைத்துக் கொண்டேன்.வீடு சென்று குளித்ததும்,பிள்ளையார் கோவில் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டேன். இரவு முழுதும் கொஞ்சம் இலோசான நெஞ்சு வலி மற்றும் தொடையில்,முழங்கையில்,முழங்காலில் இருந்த சிறிய சிராய்ப்புகளின் வலி இருந்தது.எனக்கு நமக்கே இவ்வளவு வலி இருக்கே, வயிற்றின் குறுக்கே ஏறிய அந்த வாயில்லா ஜீவன் என்ன செய்யும் என்று கவலை கொண்டேன். அப்போது அது எழுந்து ஓடினாலும்,உயிருடன் இருக்கோ இல்லையோ என்ற கவலையும் வேறு.கடவுளே நாயிக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டேன். மறுனாள் வண்டி எல்லாம் சரி செய்தவுடன் விழுந்த இடத்தில் போய்ப் பார்த்தேன்.நாயைக் காணவில்லை,ஆக நாய் சாகவில்லை என்ற நிம்மதியில் வீடு வந்தேன். அதற்க்கு மறுனாள் அலுவலகம் செல்லும் போது நாய் கொஞ்சம் விந்தி விந்தி நடப்பது கண்டு வேதனை அடைந்தேன். மறுவாரம் நாய் முழுக்க குணம் அடைந்தவுடன்,அப்பாடா ரெண்டு நாய்க்கும் ஒன்றும் ஆகவில்லை என்று திருப்திப் பட்டேன்.அதிலிருந்து நான் காலை அலுவலகம் செல்லும் போது 55 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும்,மாலை வீடு திரும்பும் போது 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இரசித்து நிதானமாக ஓட்ட ஆரம்பித்தேன்.உங்களுக்கு இப்படிப்பட்ட அனுவபம் எல்லாம் வேண்டாம்.எப்போதும் உங்கள் வண்டியை உங்களின் முழுகட்டுப்பாட்டு வேகம் என்னவே, அதில் சாலை விதிகளை அனுசரித்து ஓட்டுங்கள். நன்றி.


டிஸ்கி : நான் ஊர் சுத்தின அனுபவங்களைப் பற்றி பேச ஆரம்பித்தால் பல பதிவுகள் வரும். அது வேணாங்க. இதற்க்கு அப்புறம் நான் வண்டியை மிதவேகத்தில் ஓட்டிய போது இரண்டு மூன்று முறைகள், நாகப் பாம்பு, சாரைப் பாம்பு,கண்ணாடி விரியன் மற்றும் ஒரு ஆட்டுக் குட்டி வந்த போது வண்டியை நிறுத்தி,அவற்றின் மீது ஏற்றாமல் ஓட்டி வந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.

13 comments:

  1. நல்ல பதிவு, அண்ணாச்சி.

    ..........நான் ஊர் சுத்தின அனுபவங்களைப் பற்றி பேச ஆரம்பித்தால் பல பதிவுகள் வரும். அது வேணாங்க.
    ...........அண்ணாச்சி, அப்படி சொல்லாதீக. அதையெல்லாம் நாங்களும் தெரிஞ்சிக்க வேணாமா?

    ReplyDelete
  2. பாம்பு ஆடு மேல எல்லாம் கூட ஏத்தாமா கவனமா இருந்திருக்கீங்க

    ReplyDelete
  3. எஸ்கார்டு டூட்டீ.... இப்பவும் நடக்குதா... ?

    ReplyDelete
  4. ///நமக்கே இவ்வளவு வலி இருக்கே, வயிற்றின் குறுக்கே ஏறிய அந்த வாயில்லா ஜீவன் என்ன செய்யும் என்று கவலை கொண்டேன்.///

    மனச டச் பண்ணிட்டிங்க உண்மையிலேயெ!!!

    ReplyDelete
  5. //பதிவைப் படித்து கருத்து போடலைனா
    உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்//

    ஐயோ !! ஏற்க்கனவே ஒன்னு கீது , இது வேறயா !! வாணாம் , வாணாம் கண்டிப்பா பதிலு குடுக்கறேன் பா !!

    //அதற்க்கு மறுனாள் அலுவலகம் செல்லும் போது நாய் கொஞ்சம் விந்தி விந்தி நடப்பது கண்டு வேதனை அடைந்தேன்.//

    உண்மை தான் தல !! நல்ல பதிவு .

    ReplyDelete
  6. http://vellinila.blogspot.com/2010/01/blog-post_28.html - pls read this article, u will like it.

    ReplyDelete
  7. ரொம்ப கவனமாதான் வண்டி ஒட்டிருக்கிங்க..நல்ல பதிவு!!

    ReplyDelete
  8. நல்ல அனுபவப் பதிவு.சாலை விதிகள் குறித்துக் கவனமா இருக்கணும்.
    இதனால் எல்லோருக்குமே நல்லதுதானே.

    ReplyDelete
  9. நன்றி சித்ரா,தொழில் விசயமாக மேற்க்கொண்ட பயணங்கள் ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இன்று எழுதினால் அவை அனைத்தும் மாறிப் போயிருக்கும். இருந்தாலும் அப்போது நடந்த வித்தியாசமான நிகழ்கள் எதோனும் இருந்தால் அதை பதிவுகளில் பகிர்ந்து கொள்கின்றேன்.

    நன்றி சின்ன அம்மினி, ஆடு பாம்பு எல்லாம் எஸ் ஆகிடுச்சு,

    மாகா இப்ப எஸ்கார்டு டீட்டி பார்க்கத்தான் நிரந்தரமாக ஒருவரை தேடும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டுக் கொண்டுள்ளார்கள்.விரைவில் ஆரம்பமாகும் என நினைக்கின்றேன். நன்றி மகா.

    நன்றி ஜெய்லானி,உண்மையில் நான் எனக்காகவும்,வண்டிக்காவும் கவலைப் பட்டதை வீட நாயிக்காக கவலைப் பட்டேன்.

    வாங்க டவுசர் பாண்டி, ஏற்கனவே பூதம் இருக்கா, இருங்க மக்கா,ஒரு நாள் தங்கமணி தங்கையைப் பார்த்தால் போட்டுக் கொடுத்து விடுகின்றேன். நன்றி பாண்டி.

    வாங்க வெள்ளி நிலா, வருகைக்கு நன்றி,

    நன்றி மேனகா சத்தியா,

    நன்றி கவிதாயினி ஹேமா,

    பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  10. .எனக்கு மெலோடியான சோகப் பாடல்களை ஹம் செய்து தனிமையான இரவு ரோட்டில் நடக்கப் பிடிக்கும். ஈராமான ரோஜவே,ஓராயிரம் பார்வையிலே,நான் பாடும் மொளன ராகம்,மன்றம் வந்த தென்றலுக்கு,நான் ஒரு இராசியில்லா ராஜா,வசந்த ஊஞ்சலில்லே(இரயில் பயணங்களில்) போன்ற மொலோடிப் பாடல்கள் தான் என் ஹம்மிங்கில் இடம் பெறும்.

    நல்ல ரசிகர்ங்க
    நமக்கே இவ்வளவு வலி இருக்கே, வயிற்றின் குறுக்கே ஏறிய அந்த வாயில்லா ஜீவன் என்ன செய்யும் என்று கவலை கொண்டேன். அப்போது அது எழுந்து ஓடினாலும்,உயிருடன் இருக்கோ இல்லையோ என்ற கவலையும் வேறு.கடவுளே நாயிக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டேன்.

    நல்ல மனுசன் நீங்க...
    .

    ReplyDelete
  11. //தங்கை சொன்னா செய்து தான ஆகவேண்டும். //
    சமத்து அண்ணா..

    //ஒரு நூறு ரூபாய் இருக்குமா ஒன்னாம் தேதி தருகின்றேன் என்ற கட்சி).//
    நல்ல வேளை.. கைல காசு பதிவுல போஸ்ட்டுன்னு சொல்லாம விட்டீங்களே..

    //எதாவது கற்பனை பண்ணிக் கொண்டு நடப்பதில் ஒரு சுகம்தான்.//
    சேம் ப்ள்ட்ணா..

    ReplyDelete
  12. //.எனக்கு தெரிந்து கீழ விழுந்து,எழுந்து வந்து டீக்குடிப்பவர் நீங்கள் தான்.கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் என்றார்.//
    அடி ஆத்தி.. கடவுளுக்கு நன்றி..
    பிள்ளையாருக்கு அத விட..

    //அப்பாடா ரெண்டு நாய்க்கும் ஒன்றும் ஆகவில்லை என்று திருப்திப் பட்டேன்.//
    இது ரெம்ப ஓவரு..

    டிஸ்கில சொல்லி இருக்கிறத்துக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  13. நன்றி கண்ணகி, இனிமையான பாடல்கள் எப்போதும் மன அமைதி தரும்,
    நல்ல மனுசன் நானா????????????.
    நன்றி சுசி,

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.