Thursday, February 18, 2010

கடவுளும் கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 8

எனது முந்தைய பதிவுகளின் சுருக்கமாக சாராம்சத்தைக் கூறி, நாம் முக்கியமான கட்டத்தில் நுழைவேம். முதலில் நான் கடவுள் என்பது மனிதனின் பயம் மற்றும் தேவைகளின் அடிப்படையில் அமைந்தது என்று கூறினேன். இது ஆதிமனிதனின் சித்தாந்தம். பின்னர் கடவுள் என்பது ஒரு சக்தி என்று கூறினேன்.இது தத்துவ ஞானிகளின் கருத்து.இது தான் நாம் விவாதிக்கும் விஷயம். அதன் பின் கடவுளின் வடிவம் மற்றும் புறத்தோற்றங்களைப் பற்றிக் கூறினேன். இது காலம் மாற, மாறக் கூடிய ஒரு விஷயமாகக் கருதலாம்.
கடவுளின் வழிபடும் வடிவங்கள், காலம்,இடம்,சூழல் மற்றும் மனிதர்களின் குணாதியசங்களுக்கு ஏற்றவாறு வேறுபடுகின்றது என்பது ஒரு கருத்து. இந்த கட்டுரையில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். கடவுள் என்பது வேறு, வழிபடும் கடவுள் என்பது வேறு. கடவுள் என்பது எங்கும் நிறை சக்தி,வழிபடும் கடவுள் என்பது அவரவர் மன நிலைக்கு ஏற்ப மாறுபடும் ஒரு தன்மை, அல்லது பழக்கவழக்கள் காரணமாய் அமைந்த விஷயம். ஆனால் ஒன்றை நாம் கண்டிப்பாய் உணர்தல் வேண்டும். கடவுளும்,வழிபாடுகளும் வேறு வேறாய் இருக்கலாம். ஆனால் பரம்பொருள் என்ற சக்திமூலம் ஒன்றுதான், அது அல்லா,பரமபிதா அல்லது பராசக்தியாகக் கூட இருக்கலாம். சக்தி ஒன்றே எனத் தெரிதல் வேண்டும். சக்தி என்பது அம்சம், வழிபாடு என்பது சாரம், இரண்டும் இணைந்தது நம் நம்பிக்கை என்பதின் சாராம்சம்.








எந்த சக்தியாக இருந்தால் கூட நமது நம்பிக்கை இல்லை என்றால் அது வீணாய்ப் போகும். ஒரு இறை சக்தியை நாம் நம்புகின்றேம் என்றால் அதன் மீது நமது பூரண நம்பிக்கையுடன் இருத்தல் வேண்டும். நம்பிக்கை மட்டும் இல்லாது நமது செயலும் அர்ப்பணிக்க வேண்டும். நாம் நம் கடமையை அவனிடம் பூரண நம்பிக்கையை வைத்து செயல்பட வேண்டும். அப்போதுதான் அதன் பரிபூரண பலன் நமக்கு கிட்டும். எந்த சிலை வடிவம் ஆனாலும் சரி, எந்தக் கடவுள் ஆனாலும் சரி,தேவதைகள் ஆனாலும் சரி, மகான் கள் ஆனாலும் சரி, இறை சக்தி ஒன்றே, அது இங்கும்,எங்கும் ஏன் நமக்குள்ளும் வியாப்பித்து இருக்கின்றது என்பதுதான் உண்மை. ஒரு சக்தியின் அம்சங்கள்தான் இவை எல்லாம். இந்த பிரபஞ்சம் முழுதும் சக்தியால் பின்னப்பட்டுள்ளது. ஒரு சக்தி மறு சக்தியாக மாறுகின்றது. அது அழிவதில்லை. குறைவது இல்லை. செயல், சக்தி இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக பின்னப் பட்டுள்ளது. செயலின் விளைவு சக்தி, சக்தியின் விளைவு செயல். பூமி,சூரியன்,கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்,காலக்ஸிகள், பால்வெளிகள் ஆகியன யாவும் சுழற்ச்சி என்னும் செயலில் ஈடுபடுவதால், ஈர்ப்பு மற்றும் மின் காந்த சக்திகள் தோன்றுகின்றன.இந்த சக்தி மற்றவைகளின் சுழற்ச்சிக்கு ஆதாரமாய் விளங்குகின்றது. ஆகவே செயல்,சக்திக்கும்,சக்தி செயலுக்கும் ஆதாரமாய் விளங்குகின்றது. இதை நாம் நம் பரிமாணத்தில் பார்த்தால், நம் செயல்கள் தான்,நமது வாழ்க்கைச் சுழற்ச்சிக்கு ஆதராமாய் விளங்குகின்றது. நல்ல செயல்கள், நல்ல சக்திக்கும், தீய செயல்கள் தீய சக்திக்கும் துணை போகின்றது. இங்கு தீய சக்தி என்பது சக்திக் குறைபாடு என்று கொள்ளலாம். நமது உடலின் சக்திக் குறைபாடு என்பது நோய் என்று கொள்ளப்படுகின்றது. நல்ல செயலின் மூலம் கிடைக்கும் சக்தி,நல்ல வளர்ச்சி. நல்ல சக்திமேன்மையடையும் போது உடல் ஆரோக்கியமாய் உள்ளது. தீய செயல்களின் காரணமாய் சக்தி விரயமாகி உயிர் சக்தியின் ஆதாரம் குறைந்து சக்திக் குறைபாடு (நோய்கள்) வந்தடைகின்றன. ஆக நல்ல செயல்கள் தான் சக்தி மிக வழியாகும்.இந்த நல்ல செயல்களைக் கூட்ட நமக்கு வழிபாடுகள் துணை புரிகின்றன. ஆக செயல் என்பது வழிபாடு, அதன் விளைவாய் வரும் சக்தி இறைநிலை என்று கொள்ளலாம்.

இந்த வழிபாட்டில் நிறைய நிறைகள், குறைகள் உள்ளன. அது அவரவர் மனநிலை, வாழிடம்,சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து அமையும். கோடைவெப்பம் நிலவும் இந்தியாவில் பானகமும், நீர்மோரும் தாக சாந்திக்காய், உடல் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்த வழிபாட்டுப் பொருளாய் உள்ளது. குளிர் நாடுகளான மேலை நாடுகளில் உடல் உஷ்ணத்தைக் கூட்ட வைன் வழிபாட்டில் பயன்படு பொருளாய் உள்ளது. இதில் வித்தியாசம் பார்ப்பது பேதமை. அது போலத்தான் கடவுள்களில் வித்தியாசமும், ஏற்றத்தாழ்வும் பார்ப்பது பேதமை. எல்லாக் கடவுளும் ஒரு சக்தி மூலத்தின் வடிவங்கள் என்ற உண்மை புரிந்தால் இந்தப் பேதமை விலகும். இதுதான் இந்தக் கட்டுரையின் சாராம்சம். இதை எப்படி நிறுப்பிப்பது? அல்லது இதை எப்படி புரியவைப்பது? என்ற கேள்விகளைப் புறந்தள்ளி, நாம் இதை எப்படி உணருவது என்று சிந்தியுங்கள். பரமபிதாவும் அல்லாவும் ஒன்றா?. சிவனும் ஏசுவும் ஒன்றா என்று கேட்டு நாம் சிந்திக்கத் தொடங்கினால் நாமும்,கடவுளும் ஒன்றே என்ற உண்மை புரியும். நான் கடவுள், நீங்கள் கடவுள். ஆனால் புரிதலும், செயலும் தான் வித்தியாசம். யேசுவின் செயல் அவரைக் கடவுள் ஆக்கியது,யூதாஸின் செயல் அவனைத் தூரோகியாக்கியது. ஆக நமது செயல் தான் நம்மைக் கடவுள் மற்றும் சக்தி மூலத்திடம் இருந்து தனிமைப் படுத்துகின்றது. இதை நாம் எவ்வாறு உணர முடியும். இதை நான் விளக்குகின்றேன். நீங்கள் கவனமாக உங்களுக்குள், கேள்விகள் கேட்டு உணருங்கள். உணர்ந்தவைகளை உங்களிடமும்,என்னிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் கூறியவற்றில் எதோனும் மாற்றுக் கருத்து இருந்தால் கூறுங்கள், நானும் திருத்திக் கொள்கின்றேன். இப்போது நாம் சக்தி ஒன்றுதான் என்பதுக்கு ஆதராமாய் பல தகவல்களைக் கூறுகின்றேன். இதை நீங்கள் சிந்தித்து, புரிந்து உணருங்கள்.






இந்த பிரபஞ்சம் முழுதும் சக்தி மயமாய் ஆனது. ஒரு சக்தி,பல சக்தியாய் மாறுகின்றது. ஒன்று பலவேறாய் விளங்குகின்றது. பொளதீக அடிப்படையில் பார்த்தால், அனுக்கருவில் உள்ள நியூட்ரான் கள்,எலட்ரான் கள் மற்றும் புரோட்டான் கள் சுழற்ச்சியால்,சக்தி உருவாகி அது பிரபஞ்சத்தில் ஈர்ப்பு சக்தியாய் மாறி, பல பால்வெளிகளைச் சுழல வைக்கின்றது. இந்த பால்வெளிகளின் சுழற்ச்சி,ஈர்ப்பு சக்திக்கு காரணமாய்ப் பல சூரியன் கள் மற்றும் நட்சத்திர சுழற்ச்சிக்கு ஆதாரமாய் உள்ளது. இந்த சூரியனின் சுழற்ச்சி ஈர்ப்பு சக்தி, பல கோள்களின் சுழற்ச்சிக்கு ஆதராமாய் உள்ளது. கோள்களில் பூமியை எடுத்துக் கொண்டால், அதன் சுழற்ச்சி,நமக்கு பருவ காலங்கள், உயிரியல் சூழ்நிலை ஆகியவற்றைக் கொடுக்கின்றது. ஆக எல்லா மட்டத்திலும் சக்தி பூரணமாய் உள்ளது. இவற்றின் ஆக்கமும்,அழிவும் சக்திதான் காரணம் ஆகும். இதன் பெயர்கள் வேறு, வேறாய் கொள்ளப் படுகின்றது. ஈர்ப்பு சக்தி, அயன சக்தி, மின் சக்தி என்றும் இந்த சக்தியால் வெளிப்படும் அலைகள் அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப,ஆல்பா,பீட்டா,காமா என்று அழைக்கப் படுகின்றது. இந்த சக்தி வெளிப்படும் அலைகள் கதிர்வீச்சு எனவும், அதன் தன்மை,நிறம், குணாதியசங்கள் ஆகியனவற்றைப் பொறுத்து அவற்றின் பெயர்கள் வேறு, ஆனால் மூலம், சக்தி ஒன்றுதான். இதன் மூலசக்தி நாம் எலட்க்ரான், நியூட்ரான் மற்றும் புரோட்டான் கள் சுழற்ச்சி என்று பார்த்தோம் அல்லவா, அதன் மூலசக்தி நியூக்கியேலஸ் என்னும் அனுக்கருப்பொருள். இந்த அனுக்கருப்பொருள் அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது. இந்த அமினோ அமிலங்களும் உட்பொருளாக மறுபடியும் இந்த அனுக் கொள்கையைச் சார்ந்துள்ளது. இதில் இருந்து பிரபஞ்சம் முழுதும் சக்தி என்னும் மூலங்களால் ஆனது என்றும்,அது செயலின் விளைவு என்றும் பார்த்தோம் அல்லவா? இந்தக் காட்சியை அப்படியே வழிபாட்டுக்கடவுளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அதாவது வழிபாட்டுக்கடவுள் என்பது ஒரு மூலத்தின் அம்சம் என்பது போலக் கொண்டால் எல்லா வழிபாட்டுக் கடவுளும் ஒரு மூலத்தின் அம்சமாகத் தான் இருக்க முடியும். இந்த மூலங்களின் அம்சம் பரம்பொருள் என்னும் சக்தி மூலமாகக் கொள்ளலாம். இந்த பிரபஞ்ச ஆதரத்தை நன்றாகக் கவனத்தில் கொள்ளுங்கள். இதுதான் மூலமும், நம் உடலின் செயல்பாடும் ஆகும். இதை நான் பின்னால் விளக்குகின்றேன்.இதை ஒவ்வெரு ஆதராத்தின் போதும் பார்ப்போம். நன்றி தொடரும்.

டிஸ்கி: நான் கூறுவதைப் போல சக்தி, மற்றும் கடவுளை மட்டும் பகுத்து உணருங்கள். மாறாக மனம்,ஆன்மா, வாழ்க்கை ஆகியவனவற்றை புரிதலோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இவற்றை வாழும் சூழ்நிலையில் ஒப்பீடு செய்தால் அது நம் வாழ்வின் சுவாரஸ்யத்தைக் குறைத்து விடும். மனம்,செயல் தன்மை போன்றவற்றை இனி வரும் பதிவுகளில் கூறும் போது, அதை மேம்போக்காக மட்டும் பார்க்கவும்.உங்களிடமும்,உங்களை சுற்றி உள்ளவர்களிடம், உறவுகளிடமும் கூர்ந்து கவனிக்காதீர்கள். இது வாழ்க்கைக்கு ஆபத்து. ஆகவே கடவுள், நம் வாழும் முறை ஆகியனவற்றை மட்டும் உணருங்கள். நன்றி, மொத்த யோசித்தால் வெறுமை மட்டும் தட்டும். இது நல்லது அல்ல. ஆகவே இதை நாம் விவேகமாக மாற்றி வாழும் முறைக்காக சொல்கின்றேன். நன்றி.

8 comments:

  1. ///.உங்களிடமும்,உங்களை சுற்றி உள்ளவர்களிடம், உறவுகளிடமும் கூர்ந்து கவனிக்காதீர்கள். இது வாழ்க்கைக்கு ஆபத்து///

    உண்மைதான்.

    ReplyDelete
  2. கடவுள் என்பது வேறு, வழிபடும் கடவுள் என்பது வேறு. கடவுள் என்பது எங்கும் நிறை சக்தி,வழிபடும் கடவுள் என்பது அவரவர் மன நிலைக்கு ஏற்ப மாறுபடும் ஒரு தன்மை, அல்லது பழக்கவழக்கள் காரணமாய் அமைந்த விஷயம்.

    ............... இதை சரியாக புரிந்து கொள்ளாமல், எத்தனை மக்கள் நிம்மதி இன்றி இருக்கிறார்கள். ஒரு ஆழமான விஷயத்தை, அழகாக சொல்லி இருக்கிறீர்கள், அண்ணாச்சி.

    ReplyDelete
  3. உங்கள் கூற்று முழுக்க முழுக்க உண்மை. நான் இவற்றை பல காலமாக கடைபிடித்து வருகிறேன். மூலம் ஒன்றே என்று அனைவரும் உணர்ந்தால், மத சண்டையே இராது.

    ReplyDelete
  4. //சக்தி, மற்றும் கடவுளை மட்டும் பகுத்து உணருங்கள். மாறாக மனம்,ஆன்மா, வாழ்க்கை ஆகியவனவற்றை புரிதலோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இவற்றை வாழும் சூழ்நிலையில் ஒப்பீடு செய்தால் அது நம் வாழ்வின் சுவாரஸ்யத்தைக் குறைத்து விடும். மனம்,செயல் தன்மை போன்றவற்றை இனி வரும் பதிவுகளில் கூறும் போது, அதை மேம்போக்காக மட்டும் பார்க்கவும்.//

    உண்மை தான் அண்ணா..

    ReplyDelete
  5. ரொம்ப பொறுமையா ஆராய்ந்து எழுதி இருக்கிங்க போல.. சபாஷ்..

    ReplyDelete
  6. நன்றி,ஜெய்லானி.
    நன்றி சித்ரா.
    நன்றி சுரேஷ்குமார்.
    நன்றி திவ்யாஹரி.
    நன்றி சஞ்ஜய்காந்தி.
    பின்னூட்டம் இட்ட,ஓட்டுப் போட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  7. உங்களிடமும்,உங்களை சுற்றி உள்ளவர்களிடம், உறவுகளிடமும் கூர்ந்து கவனிக்காதீர்கள். இது வாழ்க்கைக்கு ஆபத்து.

    பட்டவர்தமான உண்மை சார்..

    ReplyDelete
  8. நன்றி எங்களின் தானைத் தலைவர் , முதல்வர் பட்டாபட்டி அய்யா

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.