Thursday, December 17, 2009

பயணங்கள் முடிவதில்லை

நான் பதிவு எழுத வந்த கதையை என் ஜம்பதாவது பதிவில் கூறியிருந்தாலும், என் தங்கை சுசியின் அழைப்பை ஏற்று நூறாவது பதிவாக இடலாம் என நினைத்துருந்தேன். ஆனால் சபரிமலைப் இறுதிப் பதிவு நூறாவது பதிவாக அமைந்துவிட்டது. ஆதாலால் கல்யாண மொய் மாதிரி சுசியின் பதிவு நூத்தியேன்னா வச்சுக்கலாம். நான் சிங்கை வந்த கதையைப் பல பதிவுகளில் சொல்லிவிட்டேன். இங்க எனக்கு கணக்குப் பதிவுகளை, வெறும் மானிட்டர் பண்ணும் வேலைதான். ஆதலால் எனக்கு இங்க வேலை கம்மியாக இருந்தது. ஆனி புடுங்காம சும்மா உக்காந்து ஈ அல்லது கொசு ஓட்டலான்னா, இங்க அதுவும் கம்மியாதான் இருக்கு. என்ன பண்ண. அப்பத்தான் நம்ம ஊரு நாட்டு நடப்பை பத்தி தெரிஞ்சுக்கலாம்ன்னு தட்ஸ்தமிழ் பக்கமா ஒதுங்கினேன். அங்கனதான் நமக்கு பிளாக் பத்தி எல்லாம் தெரிஞ்சுது. அப்ப குடுகுடுப்பையாரின் கல்லூரி அனுபவங்களை பற்றி படிக்க நேர்ந்தது. பின் துளசி டீச்சரின் ஆன்மீக மற்றும் கோவில்கள் பதிவுகளையும் படிக்க ஆரம்பித்தேன்.(ஆக நான் பிளாக் எழுதும் தவறுகளுக்கு இவர்கள் தான் பொறுப்பு)

வீட்டுல மாலை வேளைகளில் நானும் என் பக்கத்து அறை நண்பன் திரு. பாஸ்கரும் இரவு சாப்பாடு, மற்றும் மாலை வாக்கிங் போவது வழக்கம். அப்ப நாங்கள் அலுவலம், வீடு மற்றும் கல்லூரிக் கதைகள் பேசுவது வழக்கம். அப்ப நான் அவனிடம் இப்ப பதிவில் இருக்கும் கதைகள் மற்றும் என் அனுபவங்களைக் கூறுவது வழக்கம். அவரும் நல்லா கதை கேப்பாரு. அதை விட்டா பொழுது போக வழியில்லை. அப்ப நான் அவரிடம் இந்த பிளாக்ஸ் பத்திக் கூற அவரும் மடிக்கணினியில் பார்த்துவிட்டு படிக்க ஆரம்பித்து விட்டார். என் கதைகளையும், நான் கூறும் விதத்தையும் கவனித்த அவர் என்னையும் பிளாக் ஆரம்பிக்க சொல்லி என்னை நல்லா சுருதி ஏத்திவிட்டார்.(என்ன நல்ல எண்ணம் பாருங்க அவரு காதுல இரத்தம் வந்த மாதிரி எல்லாருக்கும் வரனும் எண்ணம்- வெய் பிளட் சேம் பிளட்) நான் அப்ப கொஞ்ச கொஞ்சமா நிறைய பிளாக்ஸ் படிக்க ஆரம்பித்த சமயம் அது. ஜாதி இன மோதல்கள் பல இருந்தாலும் நம் பதிவர்கள் அந்த ஜாதிக்கார்களை எல்லாம் விட்டு விட்டு வெறும் பிராமண எதிர்ப்பு மட்டும் பகுத்தறிவு என்றும் ஒரு சாராரை மட்டும் திட்டி பதிவுகள் இடும் போக்கு எனக்கு வெறுப்பை தந்தது. அது மட்டும் இல்லாமல் வலது சாரி சிந்தனையாளர்களால் திரிக்கப் பட்ட அல்லது மறைக்கப் பட்ட இந்திய வரலாற்றை வைத்துக் கொண்டு, தலைவர்களையும், பாரதியையும் கேவலமாய் பேசும் போக்கும் எனக்கு மிகுந்த கோபமும், பிளாக் எழுத ஆர்வமும் வந்ததது. அதன் படி முதலில் இம்சை இளவரசன் என்ற பெயரில் ஆரம்பித்து இரண்டு நாளில் பித்தன், பின்னர் சென்னை பித்தனுக்காக பித்தனின் வாக்கு என்ற பெயருக்கு மாற்றம் செய்தேன். இந்திய வரலாறும் எனது சிந்தனை என ஆரம்பித்துப் பின்னர் நிறுத்தி விட்டேன். குழலி புருஸேத்தமன் அவர்கள் நட்பும், அழைப்பும் பெற்று பதிவர் கூட்டங்களுக்குச் சென்றேன். அதன் பின்னர் கோவியாரின் நட்பும், எனது கட்டுரைகளின் தாக்கத்தால் வால் பையனின் நட்பும் கிடைத்தது. வால் பையன் முதலில் என் பிளாக்கை வடிவமைக்க ஆலோசனைகள் கூறினார். பின்னர் அப்பாவி முருகு என்னும் முருகேசன் இப்போது இருப்பது போல பிளாக்கை வடிமைத்துக் கொடுத்தார். அவர் பிளாக்கில் எழுதும் முறை, பதிவர்களின் போக்கு மற்றும் பதிவுலக நடைமுறைகள் பற்றி இரண்டு மணி நேரம் உரையாடினார். அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. பின்னர் அனுபவக் கட்டுரைகள் எழுதவும் ஆரம்பித்தேன். அப்ப இருந்து இப்ப வரைக்கும் மாறாதது எனது எழுத்துப் பிழைகள்தான்.

மேனகா சத்தியா பதிவுகளை படிக்க ஆரம்பித்து பின்னர் சமையல் பதிவுகளையும் எழுத ஆரம்பித்தேன். என் வீட்டில் சாதரனமாகச் செய்யும் சமையல்களுக்கு இங்கு நல்ல வரவேற்ப்புகளை பெற்றது.எனக்கு வால் பையன், முருகு, கோவியார்,குழலி,ஜோசப் பால்ராஜ், முகவைராம், ஜோதிபாரதி,நாடேடி, ஞானப் பித்தன், ஆகியோரின் அன்மை மற்றும் பழக்கம் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தாலும் என்னுடைய பிளாக் வாழ்வில் மிகவும் அக்கரையாகவும் ஆர்வமாகவும் படித்து, என்னை வளர்த்த சகோதரிகள் நீங்கள் அனைவரும் இந்த பயணத்தின் முக்கிய தூண்கள்.முதலில் வந்து பாராட்டிய துளசி டீச்சர்,மேனகா,சத்தியா,சாருஸ்ரீராஜ்,சுசி,ஹேமா,சுவையானசுவை,கலகலப்பிரியா,ரம்யா,தமிழரசி,அன்புடன்மலிக்கா,விஜி,சந்தனமுல்லை,சுருஸ்ரீ, தெய்வசுகந்தி,வல்லி அம்மா, சின்ன அம்மினி மற்றும் அனைவரும் என் எழுதும் ஆர்வத்திற்கு துணையாக இருந்தார்கள்.

சகோதரி சந்தன முல்லை அவர்கள் எனக்கு முதலில் பிளாக் அவார்டு கொடுத்தார்கள், பின்னர் ஜலில்லா, சுவையான சுவை, கலகலப்பிரியா,தோழி கிருத்திகா மற்றும் மலிக்கா அவர்களும் விருதுகள் கொடுத்து ஊக்க்ப் படுத்தினார்கள். தியாவின் பேனா, டி வி இராதாகிருஷ்னன், மகா, வால் பையன், சந்ரு,முகுந்தன், ஜெட்லி,ரோஸ்விக் மற்றும் சிங்ககுட்டி ஆகியோர் என் எழுத்துக்களுக்கு ஊக்கம் அளிக்கின்றார்கள். அய்யா குடுகுடுப்பையார் என்னை தன் வலைப் பதிவில் என்னை அறிமுகப்படுத்தினார். இப்படியாக எனது பிளாக் பயணம் பிளாக்(தடை) இல்ல்லாமல் செல்கின்றது. சுசி தங்கை மற்றும் சகோதரிகள், நண்பர்கள் சகபதிவர்கள் அனைவரும் இதுவரை ஆக்கமும், ஊக்கமும் அளித்த நீங்கள், நான் இன்னும் எழுத ஒத்துழப்பை தருமாறு பனிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

டிஸ்கி : இந்த பதிவு எழுத வந்த கதையை விவரிக்க நான் அழைக்கும் பதிவர்கள்,

மேனகா சத்தியா,
சுவையான சுவை,
ரோஸ்விக்,
மகா,
தியாவின் பேனா
ஜலில்லா
சாருஸ்ரீராஜ்

ஆகியோரை அழைக்கின்றேன். நன்றி.

15 comments:

  1. 101 க்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  3. ஆஹா...... நூத்தியொன்னுக்கு இனிய பாராட்டுகளும் வாழ்த்து(க்)களும்.

    'ஆட்டோ அனுப்புவர்களுக்கான பின் குறிப்பு:

    வீட்டைக் காலி செஞ்சுட்டேன்:-)))))))

    ReplyDelete
  4. ஐந்தே மாதத்தில் நூறு பதிவு!
    இது சேவாக்கை விட வேகமாவுல இருக்கு!

    வாழ்த்துக்கள் மொய் வச்சதுக்கு!

    ReplyDelete
  5. 101. வாழ்த்துக்கள். தொடர்ந்து நல்படைப்புகளைகொடுத்து அசத்துங்க..

    ReplyDelete
  6. வாழ்த்துகள்! தொடர்ந்து எழுதுங்கள்! :-)

    ReplyDelete
  7. vaalththukkal. arumaiyaana padhivukal. athilum aiyappan kaaturaikalai romba rasitththen.

    -vidhya

    ReplyDelete
  8. 101 க்கு வாழ்த்துகள்....

    ReplyDelete
  9. //அப்ப இருந்து இப்ப வரைக்கும் மாறாதது எனது எழுத்துப் பிழைகள்தான்.//
    ஹிஹிஹி..

    நேத்து கவனிக்கல அண்ணா. நூறாவது பதிவு அதுவும் ஐயப்பன் பதிவா அமைஞ்சத்துக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. //ஆதாலால் கல்யாண மொய் மாதிரி சுசியின் பதிவு நூத்தியேன்னா வச்சுக்கலாம். //
    இதுவும் நல்லாதாண்ணா இருக்கு.. :))))

    நல்லாவே எழுதி இருக்கீங்க. நீங்க எழுத வந்த கதைய.

    இன்னும் உங்க எழுத்து சிறப்பா வளர அன்புத் தங்கையின் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நன்றி ஜெட்லி. உங்க பஞ்ச் டயலாக் பார்த்துதான் நான் என் கேப்சனை எழுதினேன்.
    நன்றி கேசவன், உங்கள் கட்டுரைகளும் அருமையாக இருக்கின்றது,
    நன்றி டீச்சர், என்னை மாதிரி மூட்டைப் பூச்சிகளுக்கு பயந்து வீடு எல்லாம் மாற்றாதீர்கள்,
    நன்றி வால்ஸ், உங்கள் ஆதரவு எப்பவும் தேவை,
    நன்றி மலிக்கா,
    நன்றி சந்தனமுல்லை, பப்புக்குட்டி எப்படி இருக்கா?
    நன்றி சாருஸ்ரீராஜ் எப்பவும் முதலில் பாராட்டும் உங்கள் ஆதரவுக்கு நன்றி
    நன்றி வித்யா, தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மகிழ்ச்சி,
    நன்றி சுருஸ்ரீ,
    நன்றி அப்பாவி முருகு,
    நன்றி சுசி, நீங்கள் தங்கையாக கிடைத்தது என் மகிழ்வுகளில் ஒன்று. காலம் பூராவும் நிலைக்க இறைவனை வேண்டுகின்றேன்.
    அனைவருக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  12. பதிவு எழுத சொன்னமைக்கு மிக்க நன்றி .... எனது நூறாவது பதிவிலேயே நான் பதிவு எழுத வந்த கதையை சுருக்கமாக கூறி விட்டேன் .....

    தங்கள் அன்புக்கு நன்றி ....

    ReplyDelete
  13. அனுபவமான அருமையான சூப்பர் பதிவுகள் குறைந்த மாதத்தில் 101 பதிவு போட்டு அசத்தி இருக்கீங்கள்.


    பதிவு எழுத என்னையும் அழைத்தமைக்கு நன்றி.

    நானும் முதலே அவார்டு பதிவில் சொல்லி இருக்கேன். மறுபடி போடுகிறேன்.

    இன்னும் நிறைய குறிப்புகள் போட்டு அசத்த என் வாழ்த்துக்கள்

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.