Tuesday, December 22, 2009

வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 2

சத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்களின் ஆசிரமத்தில் இருந்து கிளம்பி, வெள்ளியங்கிரி அடிவாரக் கோவிலுக்கு வந்து அடைந்தோம். இங்கு திரு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. பெண்கள் தங்கள் குடும்பத்துடன் இங்கு வந்து வழிபாடு நடத்திப் பின்னர் தங்கள் கனவர், மற்றும் குழந்தைகள் அனைவரும் மலை மீது ஏறி திரும்பி வரும்வரை இங்குதான் காத்துருப்பார்கள். சுமாரான வசதிகளுடன் தங்கும் அறைகள்(சத்திரங்கள்) உள்ளன. (படத்தில் நானும் என் நண்பன் முரளியும் வலது ஓரம் உள்ளேம்) நாங்கள் இங்கு வந்து காலை கடன் முடித்துப் பின்னர் அங்குள்ள இறைவன் வெள்ளியங்கிரி ஆண்டவர், பார்வதி, விநாயகர் மற்றும் முருகன் ஆகியோருக்குப் புது வஸ்த்திரங்கள் அணிவித்துப் பூஜைகள் நடத்தி விட்டு, மதிய உணவு அருந்தி, இரவு பயணக் களைப்பு போக ஓய்வு எடுத்தோம். இரவு முழுக்க மலை ஏறிக் காலை சூரிய உதயத்தின் போது மலை மீது உள்ள வெள்ளியங்கிரி ஈசனின் அற்புத தரிசனம் காண்பதுதான் பயணத்தின் நேக்கம். ஆதாலால் மாலை ஜந்தரை மணிக்கு மலை ஏற திட்டமிட்டுக் கிடைத்த மூன்று மணி நேர தூக்கத்தைப் போட்டேம். ஆனால் எங்கள் வேலைகள் எல்லாம் மதியம் மூன்று மணிக்கு முடிந்து விட்டதாலும், கால நிலை மிகவும் அருமையாக, வெய்யிலும் இல்லாமல் இருந்ததால் மதியம் மூன்று மணியளவில் பயணத்தை ஆரம்பிக்கத் தொடங்கினோம். நான் கேமாரவின் பாட்டரி சார்ஜ் கருதி கோவிலைப் படம் எடுக்கவில்லை. மன்னிக்கவும்.

அங்கு இருக்கும் சாமியார்கள் பலர் இல்வாழ்க்கையை வெறுத்து, துறவறம் பூண்டவர்கள். அவர்களில் சிலர் நிறையப் படித்தவர்கள், நல்ல வேலைகளில் இருந்தவர்கள். அங்குள்ள சாமியார்கள் யாரிடமும் கையேந்தமாட்டார்கள். அவர்கள் கூட்டமாக அமர்ந்து தோவாரம், திருமுறைகள் போன்ற பாசுரங்களைப் பாடிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் முன்னர் ஒரு திருவோடும், கற்பூரத் தட்டும் இருக்கும். பக்தர்கள் தாங்கள் விரும்பும் காணிக்கையை இட்டு நமஸ்காராம் செய்தால் ஆசிர்வாதம் செய்வார்கள். காணிக்கை இடாவிட்டாலும் அவர்கள் ஒரே நிலையில் தான் இருப்பார்கள். குடும்பம் மற்றும் சொந்தபந்தங்களுடன் வருவேர் அங்கு சமைத்து இவர்களுக்கு அன்னதானம் இடுவார்கள். இவர்களும் அவர்களுடன் பூஜைகள் செய்து அவர்களை ஆசிர்வாதம் செய்வார்கள். அவர்கள் மலைப் பயணத்தின் போது கடைப்பிடிக்கும் சில அறிவுரைகள் கூறுவார்கள். மலையில் பனி, மழை,குளிர் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் போன்ற பயனனுள்ள தகவல்கள் மற்றும் தங்கும் இடங்களைப் பற்றியும் கூறுவார்கள். இவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நாங்கள் மூன்று மணியளவில், மலை தேவதையான செல்லியம்மனுக்கு புது வஸ்த்திரங்கள் சார்த்திப் பூஜைகள் முடித்து மலை ஏறத் தொடங்கினோம்.

திருப்பதி மலை போல இங்கும் ஏழு மலைகள் ஏறவேண்டும். சிலர் சமவெளிகளை விட்டு விட்டு ஜந்து மலைகள் என்றும் கூறுவார்கள். ஆனால் அவை மலைமீது இருக்கும் ஏற்றத்தாழ்வான நிலப் பரப்பு ஆகையால் அவையும் மலைகள் தான். ஆக நாம் சரித்திரக் கதையில் வருவது போல ஏழு மலைகள் தாண்டிப் பயணம் செய்யவேண்டும். அந்த ஏழுமலைகள் வரிசையாக :

1. வெள்ளைப் பிள்ளையார் கோவில்,
2. பாம்பாட்டி சுனை,
3.கைதட்டி சுனை,
4.சீதாவனம் அல்லது விபூதி மலை,
5.ஆண்டி சுனை,
6.ஒட்டன் சமாதி,
7. சுவாமிமலை.

இதுதான் நமது பயண வழித்தடம். நாம் முதலில் வெள்ளைப்பிள்ளையார் கோவிலுக்குச் செல்வேம். கரடு முரடான, உருக்குலைந்த படிகள் ஏறக்குறைய மூவாயிரம் படிகள் ஏறினால் முதலில் வருவது வெள்ளைப்பிள்ளையார் கோவில். இங்கு இருக்கும் விநாயகர் கோவில் வெள்ளை வர்ணம் உடையதாலும், பிள்ளையார் முழுக்க விபூதி பூசப்பட்டு, வெள்ளையாக காட்சி தருவதால் வெள்ளைப்பிள்ளையார் கோவில் என்று அழைக்கப் படுகின்றது. சொல்வாடையில் சிலர் இதை அறியாமல் வெல்லப்பிள்ளையார் கோவில் என்று அழைத்து, நாட்டு வெல்லங்களைப் பிரசாதமாக தருவார்கள். இந்தக் கோவிலை அடைவதுதான் நம் பிரயாணத்தில் மிகவும் கடினமான பகுதி. செங்குத்தான படிகள். மழையில் சீர்குழைந்து இருக்கும். அப்போதுதான் ஏற ஆரம்பித்து இருப்பதால் மேல் மூச்சு வாங்கும். இதில் ஏறுவதுக்கு அதிக நேரம் பிடிக்கும். அதிகமாக காடு சூழ்ந்து இல்லாமல் அடர்ந்த மூங்கில் காடுகள் புதர் போல இருப்பதால் இங்கு நாகங்கள், கரடிகள் அதிகம் காணப்படும். இருனூறு படிகள் அல்லது மூந்நூறு படிகளுக்க்கு ஒரு முறை இது போல அமர்ந்து மூச்சு சமனிலைக்கு வந்தவுடன், திரும்பவும் ஏறவேண்டும். இருபுறமும் புதர்கள் மற்றும் மலைச் சரிவை வேடிக்கை பார்த்தபடியும், மனதில் ஈசனின் மந்திரம், அல்லது கடவுளைத் துதித்தபடி ஏறவேண்டும். நாங்கள் ருத்திரம் சொல்லிக் கொண்டு மலை ஏறினோம். பரத்குமார் ருத்திரம் படிக்க நாங்கள் அனைவரும் அவரைத் தொடர்ந்து மலை ஏறினோம்.(படத்தில் நானும் என் இரண்டாவது அண்ணா, திரு.இராமானுஜம் அவர்களும்)

எங்களைப் போன்றவர்கள் ஒரு இரவு முழுதும் இயற்கை இரசித்தபடி ஏற, அங்கு வாழும் சிறுவர்கள் ஜந்து மணி நேரத்தில் மொத்த மலையும் ஓடி ஏறுவார்கள். கடும் முயற்ச்சியில் மலை ஏறி கோவிலை அடைந்து அங்கு பிள்ளையாருக்கு வஸ்த்திரங்கள் சார்த்திப் பூஜைகள் முடித்துப் பின்னர் அங்கு உள்ள சோடாக்டையில் பன்னீர் சோடா, லெமன் சோடா போன்றவைக் குடித்துவிட்டு, ஒரு அரை மணி நேர ஓய்வுக்குப் பின்னர் மலைப் பயணத்தை ஆரம்பித்தோம். இரவு ஏழு மணியளவில், எங்களின் அடுத்த கட்டமான பாம்பாட்டி சுனை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.(படத்தில் எங்களை அழைத்துச் சென்ற திரு.பரத்குமார். நடுவில் எனக்கு முன் இருப்பவர்) வாருங்கள் நாமும் அடுத்த பதிவில் பாம்பாட்டி சுனைக்குப் போவேம். தொடரும். நன்றி.

டிப்ஸ் : இது போன்ற மலைப் பிராயனத்தில் ஓய்வு எடுக்கும் போது கால்களை மடித்து அமரக் கூடாது. அப்படி அமர்ந்தால் தொடை அல்லது கெண்டைகால் ஆடுதசைப் பிடிப்பு ஏற்ப்படும். கூடுமான வரையில் கால்கள் தளர்வாக நன்று நீட்டி அமரவேண்டும்.

டிஸ்கி : அடிவாரக் கோவிலின் அருகில் இருட்டுப் பள்ளக் காட்டில் ஒரு ஓடை உள்ளது. இங்கு சுதந்திர விரும்பிகளான நம் மக்கள் தமது கடன் கழிக்க, குளிக்கச் செல்வார்கள். எங்கள் குருப்பும் செல்வார்கள். ஆனால் நான் இவர்களுடன் இணையும் முன் வருடம். எங்க அண்ணா, மற்றும் பரத்குமார் ஆகியோர் குளிக்க ஓடைப் பக்கம் சென்று உள்ளனர். அங்கு ஓடைக் கரையில் இருந்த அப்போது போட்ட சூடான யானை லத்திகளைப் பார்த்துத் திரும்பி வந்து விட்டனர். ஆதலால் எனக்கு காட்டுக்குள் ஓடைக்கு செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கோவில் குழாய்யடிதான் குளியல்.

16 comments:

  1. முதலில் வெள்ளியங்கிரி எங்கு இருக்கிறது. அதற்கு அருகாமையில் உள்ள பெரிய ஊர், வழித் தடங்கள், பேருந்து வசதிகள் போன்றவற்றையும் தயவு செய்து பதியுங்கள்.

    ReplyDelete
  2. மன்னிக்கவும், உங்களின் முதல் பகுதிப் பக்கத்தைப் பார்க்காமல் பதித்து விட்டேன். வெள்ளிமலை என்று ஒன்றைப் பற்றியும் கேள்விப் பட்டதால் அதுதானே என அறிந்து கொள்ளும் ஆவலில் பதித்து விட்டேன். நன்றி.

    ReplyDelete
  3. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களே...
    நாங்கள் ஒரு குருப்பாக (25)பேர் டிசம்பர்/25ல் வெள்ளிய ங்கிரி செல்ல .ருக்கிறோம்...ஆகவே தயவுசெய்து மீதி பகுதியை உடனே எழுதும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். // க சேந்திரன் (மெப்கோ)

    ReplyDelete
  5. naangale poi vanthathu pola irukkirathu ungal pathippu.. nanru nanbare... naan esha yoga maiyathukku poi irukkiren.. ingu ponathu illai..

    ReplyDelete
  6. வெள்ளயங்கிரி மலை பற்றி சத்குருவை குருவாக ஏற்றுகொண்ட என் அத்தை சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். அவர் எனக்கு காட்டுபூ புத்தகத்தையும் கொடுத்தார். உங்கள் பதிவுகளை படிக்க ஆர்வமாக உள்ளேன்.

    ReplyDelete
  7. ஐயப்பா சாமி சேவ பண்ணக் கூடாதும்பா, நீங்கள் க்ளீன் சேவ் செய்திருக்கேளே.

    ReplyDelete
  8. டிப்ஸ் : இது போன்ற மலைப் பிராயனத்தில் ஓய்வு எடுக்கும் போது கால்களை மடித்து அமரக் கூடாது. அப்படி அமர்ந்தால் தொடை அல்லது கெண்டைகால் ஆடுதசைப் பிடிப்பு ஏற்ப்படும். கூடுமான வரையில் கால்கள் தளர்வாக நன்று நீட்டி அமரவேண்டும்...............பயனுள்ள தகவல். நேரில் நடப்பது போல வாசிப்பவருக்கு தோன்றும் விதமாக எழுதும் உங்கள் நடையும் நல்லா இருக்குங்க.
    வாசிச்சு வோட்டும் போட்டுட்டேன்...........

    ReplyDelete
  9. மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  10. ரொம்ப நல்லா இருக்கு அண்ணா.

    புனிதப் பயணம்கிரதால பகுதி ஒன்னை படிச்சுட்டுதான் பகுதி ரெண்டு படிச்சேன்.

    ReplyDelete
  11. உங்க தங்கைதான்னு உறுதி செய்திட்டேனா..

    அது ஒன்னை இல்ல பகுதி ஒண்ண. :))

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்
    நல் வழி பிறக்கட்டும்

    ReplyDelete
  13. ஏழுமலைகள் தாண்டும் வெள்ளியங்கிரி பயணம் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  14. நன்றி உத்தம புத்திரா, தங்களின் வரவுக்கும், பின்னூடத்திற்க்கும் நன்றி.
    நன்றி மகா தங்களின் தொடர் ஆதரவுக்கு,
    நன்றி இராஜேந்திரன், நான் இதை ஒரு கைடாக விளக்கமாக எழுதுவதால் சுருக்கமாக எழுத இயலாது. ஆனால் ஒன்றைக் குறிப்பிட உள்ளேன். ஆண்டி சுனையில் குளித்து, அதிகாலை சூரிய உதயத்தின் போது ஈசனை தரிசிக்கவும். நன்றி. விளக்கங்களுக்கு எனது அலைபேசி எண். 0065-91327896 க்கு தொடர்பு கொள்ளுங்கள்.
    நன்றி திவ்யா ஹரி, இறுதிவரை படித்து வாருங்கள். நல்ல தகவலும் காணக் கிடைக்காத தரிசன படமும் பார்க்கலாம்.
    நன்றி திருமதி சரண், தங்களின் முதல் வரவுக்கும், பின்னூடத்திற்க்கும் நன்றி.
    நன்றி கோவி அண்ணா, இது ஜயப்ப சாமி யாத்திரை அல்ல. வெள்ளியங்கிரி யாத்திரை. ஏப்ரல் மாதத்தில் போவது.
    நன்றி சித்ரா, அனால் உங்களின் கலக்கலான எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.
    நன்றி சுவையான சுவை,
    நன்றி சுசி, எப்பவும் எனது தங்கைதான். விடுமுறை எப்படி போகுது?
    நன்றி தியாவின் பேனா,தங்களின் தொடர் ஆதரவுக்கு,
    நன்றி மாதேவி, இறுதிவரை படித்து வாருங்கள். நல்ல தகவலும் காணக் கிடைக்காத தரிசன படமும் பார்க்கலாம்.
    பின்னூடமும் ஓட்டும் இட்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  15. பயண கட்டுரை ரொம்ப நல்ல இருக்கு, எல்லாம் கால் வலியோடு டயர்டாக அமர்ந்து இருப்பது போல் தெரிகிறது.

    அங்கு செல்பவர்களுக்கு மிகவும் உபயோகமான பதிவு.

    ReplyDelete
  16. பயனுள்ள பதிவுகள்

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.