இறுதியாக நான் கடந்த 2007 ஆம் அண்டு டிசம்பரில் சபரி யாத்திரை முடித்து வந்து ஒரு மாதம் ஆகி இருக்கும், ஜனவரியில் ஒரு நாள் அலுவலகத்தில் காலையில் தேனீர் அருந்தும் போது நான், தொழிற்ச்சாலை மேலாளர், உற்பத்தி மேலாளர் அனைவரும் தொழிச்சாலை மேலாளார் அறையில் அமர்ந்து மிக முக்கியமான உரையாடல் நடத்திக் கொண்டு இருந்தோம். அது சிட்னி போட்டியில் ஆஸ்ரோலியாவின் அழுகுனி ஆட்டம் பற்றி மிகத் தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தோம். எங்கள் தொழிச்சாலை மிகவும் சிஸ்டமேட்டிக் மற்றும் ஆட்டோமாட்டிக் காஸ் ரிபில்லிங் யுனிட். இதில் பிரச்சனை ஏதும் இல்லாதவரை, எங்களுக்கு எந்த வேலையும் இருக்காது. எதாது பிரச்சனை என்றால் தான் எங்களுக்கு வேலை வரும். இல்லை என்றால் எல்லாம் ரெகுலர் புராசஸ் தான்.
அப்போது எங்க மேலான் இயக்குனர் என்னை அழைத்தார். தன்னை உடன் தலைமை அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு பணித்தார். நானும் உடனே கிளம்பி சென்னை வந்து, அவரின் அறையில் ஒரு பவ்யமாக வணக்கம் போட்டு நின்றேன். அவரும் அமரச் சொல்லி, என்னிடம், " என்னையா வேலை பார்க்குற? என்றார். நானும் இந்த ஆனி, அந்த ஆனி எல்லாம் பிடிங்கிக் கொண்டுள்ளேன். என்றேன். அவர் உடனே கோபமாக நீ எந்த ஆனியும் புடுங்கக் கூடாதுன்னு நான் எத்தனை தடவை சொல்வது, நான் தான் உனக்கு எல்லாத்திற்க்கும் உதவியாளர்களை நியமித்து உள்ளேன் அல்லவா? அவர்களை பிடிங்க சொல்லி நீ சும்மா வேடிக்கைப் பார். இனி நீ ஆனி புடுங்கினால், நான் உன்னை வேலையை விட்டு அனுப்பி விடுவேன் என்றார். நான் உடனே, சார் நான் குட்டிச் சாத்தான் மாதிரி, எதாவது வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும், இல்லை என்றால் எனது புத்தி பரதேசம் போய்விடும் என்றேன். நீ தான் எம் பி ஏ படிக்கின்றாய் அல்லவா அதைச் செய் என்றார். நான் அதையும் முதல் வகுப்பில் தோர்ச்சி பெற்று விட்டேன் என்றேன். அவர் ஜெர்க் ஆகி, "நீ எல்லாம் பாஸ் பண்ணுகிறாய் என்றால் நம்ம ஊரில் கல்வி அவ்வளவு மட்டமாவா இருக்கு" என்றார். நான் "இல்லை சார் எனக்கு பக்கத்துல்ல உக்காந்து எழுதிய பெண்ணு அவ்வளவு நல்லா படிச்சிருக்கு" என்றேன். அவரும் சிரித்து, "நீ நல்ல நாள்லயே அதைச் செய்யக் கூடாது, இதைச் செய்யக் கூடாது என்று ரூல்ஸ் போடுவாய். இப்ப எம் பி ஏ வேறய்யா எனக்குத் தான் தலைவலி. உன்னை முதல ஊரை விட்டுத் துரத்தனும்" என்றார்.
பின் அவர் சுதா நாம் சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தை பல மில்லியன் டாலர்கள் விலை கொடுத்து வாங்கியுள்ளேம். அதன் வரவு செலவுகளைப் பார்த்துக் கொள்ள (கொல்ல) எனக்கு நம்பிக்கையான ஆள் வேண்டும். ஆதலால் உன்னை அனுப்பத் தீர்மானித்துள்ளேன். நீ உங்கள் வீட்டில் அனைவரிடமும் கலர்ந்து பேசி, எனக்கு ஒரு முடிவு சொல் என்றார்(இவரும் நான் நல்லவன்னு ஏமாந்துட்டார்). நானும் என் அண்ணா, மன்னி, அம்மா, அப்பாவிடம் கலர்ந்து பேசிச் சம்மதம் தெரிவித்தேன். அம்மா மட்டும் தூரதேசம் எல்லாம் வேண்டாம், நாம் காசு, பணம் வைத்து என்ன பண்ணப் போறேம். பேசமா பக்கத்துல்லயே இரு என்றார். (இன்றும் அதைத்தான் சொல்லிக் கொண்டுள்ளார்). நான் பக்கம்தான் அம்மா பிளைட் புடித்தால் நான் ஜந்து மணி நேரத்தில் வந்து விடுவேன் எனச் சமாதனம் சொல்லியுள்ளேன். (இதுக்கு அப்புறம் நடந்த கதையை நான் மலைக்குப் போய்ட்டு வந்து சுசி அழைத்த தொடர் பதிவில் போடுகின்றேன்.)
பின் சில மாதங்கள் கழித்து வந்த அவர், நான் தூங்கமல் வேலை செய்வதைப் பார்த்து மகிழ்ந்து, "சுதா நீ இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படி வேலை செய்வாய், நீயும் முதலாளி ஆக வேண்டாமா" எனக் கேட்டவர். தனது பங்குகளில் இருந்து சில பங்குகளைப் பிரித்து எனக்குக் கொடுத்து என்னை நிதி நிர்வாக இயக்குனராய் அழகு பார்த்தார். கூடவே "மகனே இனி நீ சிங்கபூர்ல தான் இருக்கனும், ஒழுங்கா இங்க கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிடு, இனி அங்க (சென்னை) வந்து எனக்கு குடைச்சல் கொடுத்தா, அவ்வளவுதான் காலி பண்ணிடுவேன்" எனக் கூறிவிட்டு ஓடிப் போய்ட்டார். இப்ப நான் எங்களின் ஒரு நிறுவனத்தில் மூத்த நிதி எச்சக்கூட்டிவ் ஆகவும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் மற்றெரு நிறுவனத்தின் இயக்குனர் ஆகவும் உள்ளேன். முதலில் நான் மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் போது நான் ஒரு சபதம் போட்டேன். நான் என் வாழ்க்கையில் ஒரு பொது மேலாளர் - நிதி அல்லது உதவி அதிபர் - நிதி (வைஸ் பிரசிடெண்ட்) ஆக வருவது என் லட்சியமாகக் கொண்டேன். ஆனால் இப்போது மிகக் குறுகிய காலத்தில் என் உழைப்பு, படிப்பு(இதுக்கு ஒரு தனிப் பதிவு வரும்) மற்றும் அய்யப்பனின் அருள் காரணமாக, இன்று அதுக்கும் மேலாக நிதி இயக்குனர் ஆக உள்ளேன். இது எல்லாம் அவன் அருளன்றி வேறு இல்லை.
இந்த வருடம் நான் மூன்று பிரார்த்தனைகளுடன் சபரி மலை செல்கின்றேன், அவை யாவையும் அய்யப்பன் நிறைவேற்றுவான் என நம்புகின்றேன்.
1.என் அண்ணா ஒருவர் திருமணம் இல்லாமல் இருக்கின்றார், அவருக்கு திருமணம் ஆக வேண்டும்.
2. எனக்கு முகம் அறியாது, எந்த தொடர்பும் இல்லாத, டேக்கடு வெப் சைட்டில் நண்பியாக பழகும் ஒரு வட இந்தியப் பெண்ணிற்க்கு குழந்தை பாக்கியம் அளிக்க வேண்டும். (ஏழு வருடமாக குழந்தை இல்லை)
என் மன்னியின் தோழி கனடாவில் வாழும் ஒரு இலங்கைத் தமிழ் சகோதரிக்கு மழலைச் செல்வம் அளிக்க வேண்டும் ( பன்னிரண்டு வருடங்கள்).
3. இலங்கைத் தமிழர்கள் அனைவரும் தங்களின் பழைய நிலைமைக்கும், நல்ல அமைதியான வாழ்க்கைக்கும் திரும்ப வேண்டும்.
அப்புட்டுதாங்க. இன்றிரவு (04.12.09)சென்னை செல்லும் நான் இரண்டு நாள் கல்பாக்கத்தில் என் அண்ணாவின் குழந்தையுடன் விளையாடி, அங்கு, கிரிவரதர், திருவட்டிஸ்வரை தரிசனம் செய்து, தாராபுரம் போய் இரண்டு நாள் அம்மா சமையல் சாப்பிட்டு, எனது அனுமார், அகஸ்தீஸ்வரர் ஆகியோரைத் தரிசனம் செய்து, 08.12.09 அன்று நண்பகல் காளியம்மன் கோவிலில் இருமுடிக் கட்டு முடித்து, இரவு எரிமேலியில் பேட்டைதுள்ளி, 09.12.09 அன்று அதிகாலை பம்பை பூஜை முடித்து மலைஏறி அய்யப்பனை தரிசனம் செய்து, அன்று மாலை வரை இறை தரிசனம் செய்து, இரவு மலை இறங்கிப் பின்னர், 10.12.09 அன்று திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி, நாகர்கோவில் நாகராஜா, திற்ப்பரப்பு நீர்வீழ்ச்சி,கன்யாகுமரி, சுசீந்தரம், திருச்செந்தூர்(11.12.09), வெக்காளியம்மன், ஆழ்வார் திருனகரி, ஸ்ரீவைகுண்டம், நாங்கு நேரி, முதலிய பொருமாள் கோவிலும், திருபரங்குன்றம், மதுரை மீனாட்சியம்மன் தரிசனம் செய்து தாராபுரம் வந்து விடுவேம்.
12.12.09 அன்று அம்மா கையால் சாப்பிட்டுக், கொஞ்ச நேரம் மடியில் தாய்ச்சிப், பின்னர் அன்று இரவு கல்பாக்கம் வந்து 13.12.09 இரவு சிங்கைக்கு வருகின்றேன். இந்த அனுபவங்களை நான் 14.12.09 அன்று இடும் பதிவில் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கின்றேன். உங்கள் அனைவரின் வாழ்விலும் சாந்தியும், சந்தோசமும் நிலவ அந்த இறைவனை வேண்டி வருகின்றேன். நன்றி. சாமிய்யே சரணம் அய்யப்பா !!!.
டிஸ்கி : 2007 ஆம் வருடம் கனடாவைச் சேர்ந்த ஒரு இலங்கை தமிழ் சகோதரிக்கும், திருச்சியைச் சார்ந்த ஒரு முகமதிய சகோதரிக்கும் வேண்டினேன். அவைகளை நிறைவேற்றிய இறைவன் இந்த முறையும் இந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைப்பான்.
2006 ஆம் ஆண்டு பதினேழு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த, எங்க அண்ணா மன்னிக்கு குழந்தை வரம் அருளினார். (தனிப் பதிவு வரும்). நன்றி.
உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் வீண்போகவில்லை..வேண்டிக் கொண்டு மொத்தமா கடவுளே பார்த்துப்பார் நமக்கு படிப்பும் பதவியும் வந்து விடும் என எண்ணாமல் முயன்ற உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டபடவேண்டியது அந்த சிறப்பையும் கடவுளுக்கு தந்த நீங்கள் நிஜமாவே பெருந்தன்மைக்காரர்ப்பா... நண்பர்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் உங்கள் நல்லெண்ணம் நட்பின் முக்கியத்துவம் அனைத்தையும் கண்டு வியக்கிறேன் பித்தன்....உங்கள் பயணம் நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள்... எல்லாப் புகழும் இறைவனுக்கே...
ReplyDeleteநன்றி. தமிழரசி. முயற்ச்சி முக்கால், தவம் கால்பாகம் என்று நம் முன்னேர்கள் கூறியபடிதான் செய்துள்ளேன். நன்றி.
ReplyDelete//சார் நான் குட்டிச் சாத்தான் மாதிரி, எதாவது வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும், இல்லை என்றால் எனது புத்தி பரதேசம் போய்விடும் என்றேன்.//
ReplyDeletenanum ungala mathiri thaan..
//உங்கள் அனைவரின் வாழ்விலும்,சாந்தியும்,சந்தோஷமும் நிலவ அந்த
ReplyDeleteஇறைவனை வேண்டிவருகிறேன்.//
நமக்காக வேண்டுவதை விட மற்றவர்களுக்கு
வேண்டுவதை இறைவன் விரும்புவான்.
உங்கள் வேண்டுதலை அய்யப்பன் நிறைவேற்றி வைப்பான்.
நன்றி.
உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள், உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்
ReplyDelete//(இன்றும் அதைத்தான் சொல்லிக் கொண்டுள்ளார்). //
ReplyDeleteஅம்மா இல்லையா அண்ணா... அப்டிதான் சொல்வாங்க.
//சுசி அழைத்த தொடர் பதிவில் போடுகின்றேன்.//
வெயிட்டிங்கு....
//இது எல்லாம் அவன் அருளன்றி வேறு இல்லை//
ReplyDeleteஉண்மை..
உங்க பிரார்த்தனைகளை ஏற்கனவே நிறைவேத்திய ஐயப்பன் இவற்றையும் நிச்சயம் நிறைவேத்துவார் அண்ணா..
உங்க பயணம் இனிதே அமையணும்னு நானும் வேண்டிக்கிறேன் அண்ணா.
ஐயப்பன் துணையிருப்பார்.
உங்கள் அனைத்து ப்ரார்த்தனைகளும் நிறைவேற நானும் பிரார்த்திக்கிறேன்+வாழ்த்துக்கள்.நல்லபடியாக போய் வாருங்கள்.
ReplyDeleteஎல்லாத்துக்கும் தனி பதிவு வருமாஆஆஆஆ சாமியே சரணம் அய்யப்பா...
உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள், உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள் வந்து பதிவை தொடருங்கள்.
ReplyDeleteEllam valla antha manikandan anaivarathu prarthanaigalaiyum niraivetruvaan. Pirarukkaga avanidam prarthanai seiyum ungal uyarntha manam kandu magizhnthaen. Antha sabarikireesan engalukkum oru mazhalaiyai koduppaan endruthaan indrum avanai prarthikkirom. Swami saranam
ReplyDeleteஉங்கள் பயணம் இனிதாக அமைய மற்றும் உங்கள் வேண்டுதல் மீது கடவுள் கருணை வைக்க நானும் வேண்டுகிறேன்.
ReplyDeleteபயணம் இனிதாக அமைந்து அமைதியாய் இருந்துவிட்டு சீக்கிரமா வந்திடுங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள் பித்தன்.
ReplyDelete