Tuesday, December 29, 2009

வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 5

நான் என் திருக்கோவில் தரிசன பதிவில் தெளிவாக கூறியிருப்பது போல, ஒரு கோவில் தரிசனம் என்பது வெறும் கருவறையில் சூடம் ஏற்றி சாமி கும்பிடுவது மட்டும் அல்ல. அந்தக் கோவிலில் சுற்றிப் பார்த்து பிரகாரம்,சிற்ப்பங்கள்,கதை,, குளம்,பிராசாதம் என பூராவும் அனுபவித்து வந்தால்தான் மனதுக்குத் திருப்தி தரும். நாமும் இந்தக் கட்டுரையில் மலையின் அழகு, காட்டின் சிறப்பு மற்றும் அங்கு உள்ள சிறப்பு,பாதக அம்சங்கள் பற்றித் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இந்தக் கட்டுரையின் இப்பதிவில்தான் நாம் மலை அழகை இரசிக்கலாம். சீதாவனம்,ஆண்டி சுனை மற்றும் சுவாமி மலையின் அடிவாரம் ஆகியவை இயற்கை அழகை பரிபூரணமாக காட்டுவை. நாம் பார்க்கலாம் வாருங்கள்.

இந்த இடங்கள் மலையுச்சியில் உள்ள சமவெளிகள் ஆகும். இங்கு சிறிது ஏற்ற இறக்கமாகவும்,சுற்றிலும் அடர்ந்த வனங்கள், பூக்கள்,மூலிகைச் செடிகள்,மரங்கள்,பாறைகள் நிறைந்த இடங்கள். இங்கு பல இடங்களில் குகைகள் உள்ளன. இங்குள்ள தும்பை,கொன்றை மலர்ச் செடிகளின் அழகும்,மணமும் மிக அழகாக இருக்கும். மலைகளின் சரிவுகள் நம்மை பிரமிக்க வைக்கும். நாம் இங்கு மலையின் ஒருபுறம் கோவை மாநகரின் அழகும்,மறுபுறம் கேராளாவின் பாலக்காட்டின் அழகும் அற்புதமாக இருக்கும். இரவில் தெரியும் மின்விளக்குகளின் அழகு அதி அற்புதம். இந்த மலையின் சரிவில் கோவை மாநகரின் குடினீர் ஆதராமாக விளங்கும் சிறுவானி நதியின் தண்ணீர் கேட்ச்மெண்ட் ஏரியா என்னும் நீர்பிடிப்புப் பகுதிகளைக் காணலாம். சிறுவானி நதியின் அணையின் ஒரு பகுதியும் மிக அழகாக இருக்கும். இரவு மற்றும் அதிகாலைப் பனியின் நீல வண்ண அழகு மிக இரம்மியமாக இருக்கும்.

நீலமலைத் தொடர்களின் அழகும்,மிக ஆபத்தான பள்ளத்தாக்குகளும் பயத்துடன் கூடிய அற்புத உணர்வைத் தரும்.அதிகாலைப் பனியில் கலந்து வரும் இயற்கையின்,மரங்களின் வாசனை உணர்ந்து அனுபவிக்கத் தக்கது. இங்கு நீங்கள் படத்தில் காண்பது ஜோதிப்புல் என்னும் புல் வகையச் சார்ந்தது. இந்தப் புல் பகலில் சூரியனில் இருந்து வெப்பத்தை எடுத்து இரவில் வெளியிடும். இதன் கதகதப்பு மிகவும் அருமையாக இருக்கும். இது இரவில் பனியில் நனைந்து அதன் இலைகளில் நீர்த்துளியாக கேர்த்து இருக்கும். அந்த நீர்த்துளிகளில் நிலவின் ஓளி பட்டு எதிரெளிப்பது,தீ எரிவது போல தோன்றமளிக்கும். ஆதலால்தான் இதை ஜோதிப்புல் என்பார்கள்.
இந்த புல்லை வெட்டி அங்கு இருக்கும் தங்கும் குடிசைகளின் உட்புறம் போட்டு இருப்பார்கள். இந்தக் காய்ந்த புல்லின் மீது படுத்தால்,நமக்கு இயற்கையான கதகதப்பு கிடைக்கும்.

காட்டின் ஓரத்தில் மலை சரிவில் வனத்துறையினர் மூங்கில்,நாணல் மற்றும் பனை ஓலைகளைக் கொண்டு குடிசை அமைத்து,தரையில் இந்த ஜோதிப் புல்லைப் பரப்பி இருப்பார்கள். வெளியே அடிக்கும் குளிரின் பகுதிதான் இந்தக் குடிசைக்குள் இருக்கும். தூங்குவதுக்கு மிக அருமையான இடமும் இது ஆகும். எப்போதும் படுக்க உரச்சாக்கும், பாலித்தீன் ஷீட்களையும்,தலைக்கு மப்ளரும் எடுத்துச் செல்லும் நாங்கள்,இந்த முறை இரவு முழுதும் மலை ஏறலாம் என்ற திட்டத்தின் படி அவற்றை எடுத்துச் செல்லவில்லை. இங்கு நின்றால் அல்லது அமர்ந்தால் குளிரும், நடந்தால் வியர்க்கும் ஆதலால்,இரவு முழுக்க நடக்கப் போகின்றேன். தேவையில்லை என்று கொண்டு வரவில்லை. ஆனால் நல்ல காலனிலை நிலவியதால் நாங்கள் ஆண்டி சுனை என்னும் பகுதிக்கு இரவு பதினோரு மணியளவில் அடைந்து விட்டேம். இனி சுவாமி மலை ஒன்றுதான் பாக்கி. மிக மெதுவாக ஏறினால் கூட ஒரு மணி நேரப் பயணத்தில் ஏறி விடலாம். சுவாமி மலை உச்சியில் ஜம்பது பேர் மட்டும் தங்க முடியும் என்பதால், நாங்கள் இரவு ஆண்டி சுனையில் இந்தக் குடிசையில் தங்கி அதிகாலையில் சுனையில் குளித்து மலை ஏற முடிவு செய்தனர். நானும் என் அண்ணாவும், படுக்க மற்றும் குளிருக்கு மப்ளர், ஸ்வெட்டர் இல்லாமல் மாட்டிக் கொண்டேம். என்ன செய்வது, சமாளிப்போம் என்று இரவு தங்க முடிவு செய்தோம். நண்பர்கள் கொண்டு வந்த உரச்சாக்கில் புல்லின் மீது விரித்து படுத்தோம். இன்று புகைப்படங்கள் அதிகம் ஆதலால் நாளை எனது வித்தியாசமான அனுபவத்தை எழுதுகின்றேன்.நான் இரசித்து எழுதிய மாதிரி இந்த இயற்கை அழகுகளை ஒரு முறைக்கு, இரு முறை கண்டு களியுங்கள். நன்றி.

11 comments:

  1. மிகவும் அருமையாகவும் படிக்க படிக்க ஆவலை தூண்டும் விதமாக எழுதுகிறீர்கள்.நன்றி

    ReplyDelete
  2. பயண கட்டுரை படிக்க சுவாரசியமாக இருக்கு , தொடரட்டும் உங்கள் எழுத்து பணி ... இன்று ஊருக்கு செல்வதால் அடுத்த பாகத்தை 04.01.2010 அன்று தான் படிக்க முடியும். உங்களுக்கு எங்களது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. படத்தை பார்த்தாலே
    போனும்னு தோணுது தலைவரே...

    ReplyDelete
  4. இந்த பயணகட்டுரையில் மலை அழகை மிகவும் அழகாக சொல்லியிருக்கிங்க. மற்றும் படங்களை பார்க்கும் பொழுதே உடனே அங்கு போகனும் போல இருக்கு..

    ReplyDelete
  5. படங்கள் எல்லாமே மிகவும் அருமையாக இருக்கிறது ....

    ReplyDelete
  6. அண்ணா நல்லா இன்ட்ரஸ்டிங்கா இருக்கு!! இயற்கை என்னைக்கும் அழகு தான் மாற்றாமே இல்லை இப்ப தான் இந்த புல்லை பத்தி கேள்வி படுகிறேன் வெரி இன்ட்ரஸ்டிங்!! கொஞ்சம் பார்சல் பண்ணி அனுப்புங்க:) குளிர் தாங்க முடியலை:(

    ReplyDelete
  7. நன்றி புதியவன், தங்களின் வாழ்த்துகள் என்னை உற்சாகப்படுத்தியது.
    நன்றி சாருஸ்ரீராஜ், தங்களின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்,
    நன்றி ஜெட்லி, ஒரு முறை போய்வாருங்கள். அவசியம் காணவேண்டிய இடம்.
    நன்றி திருமதி.பைஸியாகாதர், பெண்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை.ஆதலால் இந்தக் கட்டுரையில் வரும் அனைத்து படங்களையும் பாருங்கள்.
    நன்றி சுவையான சுவை, அங்க ரொம்ப குளிருதா. உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  8. நல்ல விபரங்களுடன் இயற்கையின் அழகிய படங்களும் மிகவும் அருமை.

    ReplyDelete
  9. காட்டைவிட்டு வெளியே புல்லையும் குடிசையும் பார்த்ததும் தான் அப்பாடான்னு இருக்கு

    படங்கள் அனைத்தும் அருமை.

    மிதி பதிவை நாளைக்கு படிக்கிறேன்

    ReplyDelete
  10. மிகப்பொறுமையுடன் அனைத்துப் பதிவுகளையும் படித்துப் பின்னூட்டம் இட்டமைக்கு மிகவும் நன்றி ஜலில்லா. மீதியும் படியுங்கள் நன்றி.

    ReplyDelete
  11. http://www.orkut.co.in/Main#Album?uid=8208051182491887143&aid=1274164769

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.