மன்னிக்கவும்,நான் அய்யப்பனின் அற்புதங்கள் தொடரை ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்லாமல் முடித்து விட்டேன். அதைச் சொல்லி விடுகின்றேன்.
என் முதல் வருட மலோரிய யாத்திரையில் எல்லா இடங்களும் சுற்றிக் கடைசியாக பழனியில் நிறைவு பெற்றது. பழனிப் பேருந்து நிலையத்தில் பேருந்து உள் நுழையும் மூலையில் ஒரு வடை, போண்டா போடும் டீக்கடை ஒன்று உள்ளது. அங்கு, நான் எப்ப பழனி போனாலும் சாப்பிடுவது வழக்கம். நான் நல்லா இருக்கும் என்று குருசாமியிடம் சொல்ல, அனைவரும் சாப்பிட்டு விட்டு, திருச்சி சென்று, சென்னையை அடையத் திட்டமிட்டேம். அங்கு சென்று சாப்பிடும் போது, எங்கள் குருசாமி எங்களிடம்," சாமிகளா இத்துடன் நமது மலையாத்திரை நிறைவு பெற்றது, இனி நாம் நமது வீடு நோக்கிப் போவேம் என்றார். நாங்களும் "சாமி சரணம்" என்று கூறி இரவு ஏழு மணியளவில் திருச்சிக்குப் பேருந்து ஏறினேம். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் எனக்கு கடுமையான குளிர் எடுத்தது, அதைத் தொடர்ந்து காய்ச்சல் கொதிக்கத் தொடங்கியது. என் பக்கத்தில் அமர்ந்த என் அண்ணா முரளி சாமி என்னிடம், " என்ன சாமி நாளைக்கு அலுவலகம் போகனும் சொன்னதும் காய்ச்சல் வந்துடுச்சா" எனக் கேட்டார். நான் அடுத்த நாள் மாலை மறுபடியும் டாக்டரிடம் போக, எனக்கு சுரம் 104 டிகிரியாக இருந்தது. டாக்டர் மிகவும் ஆச்சரியப் பட்டார். என்ன சார் 104 ல்ல போய்த், திரும்பி 104ல்ல வந்துருக்கீங்க. இந்த உடம்பை வைத்துக் கொண்டு, நீங்க போய் வந்தது ஆச்சரியம் என்றார். நான் உடனே நான் எங்க போனேன். அவன் கூட்டிப் போய்க் கொண்டு வந்து விட்டான் என்றேன். அவர் எனக்கும் ரொம்ப நாள் ஆசை, உங்களைப் பார்த்த பிறகு, நான் கண்டிப்பாய் அடுத்த வருடம் போவேன் என்றார்.அடுத்த வருடம் மலைக்கும் போனார். நன்றி.
அய்யப்பன் கருனைகள்(பிச்சைகள்):-
இந்த முதல் வருட யாத்திரையின் போது நான் எனது அலுவலகத்தில் சர்வீஸ் ரெப் ஆக பணிபுரிந்து வந்தேன். யாத்திரை போய் வந்த இரண்டாம் வாரம் நான் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் ரெப் ஆகவும், இரண்டாம் வருட யாத்திரை முடிந்தவுடன் ஏரியா சேல்ஸ் ரெப் ஆகவும்.
மூன்றாம் வருட யாத்திரையின் போது நான் ஏரியா சேல்ஸ் மேலாளராகவும் பதவி உயர்வுகள் பெற்றேன். அடுத்த மூன்று வருடங்கள் நான் மலையாத்திரை செய்யவில்லை. இந்த வருடங்கள் என் வாழ்வின் இருண்ட காலங்கள். எப்பவும் சேகம், மனக்குறை. வாரம் நாலு நாள் குடி, ஊர் சுற்றுவது என்ற வாழ்க்கை ஓடியது. குடி என்னை முழுமையாக ஆக்ரமித்தது. ஒன்னு நான் குடிப்பேன் இல்லை என்றால் நண்பர்களை நச்சிக் குடிக்க வைப்பேன். என் வேலையும் என்னை தென் இந்தியா முழுதும் சுற்ற வைத்தது. இளம் வயது, கை நிறையப் பணம், வேலை, வேலை மற்றும் வேலை சார்ந்த குடி, செல்லும் இடங்கள் எல்லாம் ஊர் சுற்றிப் பார்ப்பது என்பது மட்டும் எனது வாழ்க்கை முறையாக இருந்தது. 2000 ஆண்டில் திடிரென்று நான் பார்த்த நல்ல வேலை (அரசு திட்டங்கள் மாறியதால் ஆட்குறைப்பு) போனது. அப்போது நான் நிலைகுழைந்து போனேன். என் நண்பன் ஒருவன் மிகவும் திறமையான ஜோதிடர் மற்றும் பிரஸ் முதலாளி. அவன் என ஜாதகத்தைப் பார்த்து, உனக்கு வேலை போனது நல்லது என்று நினைத்துக் கொள், இல்லை என்றால் நீ திருட்டுப் பட்டத்துடன் அல்லது கெட்ட பெயருடன் வேலை போயிருக்கும், இப்ப நீ நல்ல பெயருடன் இரண்டு மாத சம்பளத்துடன் வேலை போனது நல்லது என்றான். இன்னமும் ஆறு மாதத்திற்க்கு எந்த வேலைக்கும் போகதே. என் கடையில் சும்மா உட்க்கார், உனக்கு வேளாவேளைக்கு நான் டீ, காப்பி, வடை, போண்டா,(சரக்கு) வாங்கித் தருகின்றேன். என்றுகூறி செய்யவும் செய்தான். எங்க அம்மாவும் எத்தனை நாள் ஊரு,ஊரா சுத்துவ கொஞ்ச நாள் நான் சமைத்துப் போடுகின்றேன் உக்காந்து சாப்பிடு என்றார் ஆசையாக. ஆறு மாதங்கள் கழித்து அவர்கள் வீட்டில் அனைவரும் சபரி மலை செல்பவர்கள் ஆதலால் என்னையும் அழைத்தான் நான் வேலை இல்லாமல் எப்படி என்றேன். அவன் நீ வாடா அது தானா அமையும் என்றான். நானும் என் அம்மாவிடம் கேக்க, அவரும் ஆவலுடன் சம்மதித்தார். நான் மாலையிட்ட இரண்டாம் நாள் எனக்கு மபத்லால் நிறுவனத்தில் கோவையில் வேலை கிடைத்தது. பின் நான் அந்த வேலையும் பிடிக்காமல் எட்டு மாதத்தில் விட்டு விட்டேன், அலையும் சந்தையியல் வேலை எனக்கு பிடிக்காமல் போனாதால், நான் படித்து இருந்த பி.ஏ. கூட்டுறவை வைத்து, சென்னை வந்து டாலி அக்கவுண்ட் சாப்ட்வேரையும் கற்று, கிண்டியில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தேன். நான் சந்தையியலில் இருந்தாலும், குடித்துச் சுற்றினாலும், எனக்கு படிப்பில் ஆர்வம்(ஸ்டடி செண்டரில் பெண்ணுக கூட கடலை) காரணமாக நான் எம். ஏ . பொது மேலான்மையும், உயர்னிலை சந்தையியல் டிப்ளமோ படிப்பும் படித்துருந்தேன். சந்தையியலில் நான் மாதம் பதினைந்தாயிரம் வாங்கிய வேலையை விட்டு, அக்கவுண்ட்ஸில் வெறும் மூவாயிரம் ரூபாயில் சேர்ந்தேன்.
கிண்டியில் அந்த நிறுவன முதலாளி, ரொம்ப நல்லவர், உழைப்பால் உயர்ந்தவர், கண்டிப்பானவர், தந்தையைப் போன்றவர். நான் பத்து வருட காலத்தில் கற்றுக் கொள்ளும் உற்பத்திக் கணக்குகள், வங்கிக் கணக்குகள், அரசு வரிக் கணக்குகள் போன்றவை ஒரு வருட காலத்தில் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அவர் அதிகாரம் மிக்கவர், சில சமயம்(பொரும்பாலும்) கன்னாபின்னா என்று திட்டுவார். இதில் கெட்ட வார்த்தைகளும் அடங்கும். திட்டிய அரைமணி நேரத்தில் மன்னிப்பும் கேப்பார். அனாலும் நல்லவர். (இவர் சொன்ன தத்துவம் ஒன்னு இந்தக் காலத்துப் பசங்களுக்குப் பொருந்தும் அது என்ன என்றால், "இளம் பசங்க ஒன்னு பணத்தின் மீது ஆசை வையுங்க, இல்லை என்றால் பெண்களின் மீது ஆசை வையுங்க, அப்பத்தான் உருப்படுவீர்கள்" என்றார் ). அந்த வருடம் நான் மலைக்கு செல்லும் போது நிறைய வாழ்த்துச் சென்னார். அனுப்பி வைத்தார். நாலாம் வருட யாத்திரையும் சென்று வந்தேன். பின்னர் ஒருனாள் அவர் நான் மலைக்குப் போய் வந்ததை, மிகக் கேவலமாக வர்ணித்தார். எனக்குப் பிடிக்க வில்லை. அந்த நிமிடம் எதுவும் யோசிக்காமல் வேலையை விட்டு நின்றுவிட்டேன். பத்து நாளைக்கு அப்புறம் அந்த நிறுவனத்தின் ஆடிட்டர் கூப்பிட்டு சமாதானம் செய்தார். நான் மறுத்து விட்டேன். அந்த ஒரு வருடத்தில் சில முறை என்னைத் திட்டியவைகளைக் கூட பொறுத்துக் கொண்ட நான் வயதில் மூத்தவர்,அவர் அய்யப்பனைத் திட்டியதைப் பொறுக்க இயலவில்லை. பின் ஆடிட்டர் நீ ரொம்ப நல்லவன்(இப்படித்தான் பலரும் ஏமாறாங்க) ஆதலால் உன்னை மாதிரி ஆளுங்க எனக்கு வேணும் என்று தன்னுடன் இணைத்துக் கொண்டார். பின் அவரிடம் ஆடிட் அசிஸ்டெண்ட் ஆக, ஒரு வருடம் ஆறு மாதங்கள் வேலை பார்த்தேன். இந்த காலங்களில் எனக்கு, டி.வி.ஸ், சிம்சன்,ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களில் வகுச்சிங் மற்றும் அக்கவுண்ட்ஸ் ரிகன்ஸ்லேசன் போன்றவை நல்லாப் பழக்கம் ஆனது. சிம்சனில் ஆடிட்டர் சார்பாக எனக்கு ஒரு வருட அனுபவம் கிடைத்தது. வாசு, ஸ்ரீனிவாஸ் மற்றும் நிதி மேலாளர் இராஜகோபால் போன்றவர்கள் எனக்கு வெளி ஆளாக பார்க்காமல் நிறைய நுணுக்கங்கள் சொல்லித் தந்தார்கள். மூனு வேளையும் அலுவலகத்தில் சாப்பிட்டு, காலை எட்டு முதல் மாலை எட்டு வரை பணி புரிந்தேன். நல்ல சந்தோசமான சூழ்னிலை மற்றும் நிறையக் கற்றுக் கொண்ட காலம் அது.
எனது ஜந்தாம் வருட பயணம் முடிந்தவுடன் போது எனக்கு திருப் போருர் அருகே ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கு நான் கல்பாக்கத்தில் வீட்டில் இருந்து சென்று வர ஏதுவாக இருக்கும் என்று, திருவல்லிக்கேனி மேன்சனைக் காலி செய்து விட்டு அந்த நிறுவனத்தில் அக்கவுட்ன்ஸ் அசிஸ்டெண்ட் ஆக இணைந்தேன். எனது முதல் அக்கவுட்ண்ஸ் வேலை போல, உற்பத்தி, விற்பனைக் கணக்கு, சில்லறை வங்கிக் கணக்கு(கேஷ்),அரசு வரிக்கணக்கு( விற்பனை வரி, கலால், சுங்கம், தொழில் வரி, பஞ்சாயத்து வரிகள்) முதலியன என் வசம் இருந்தது. சம்பளம் மூவாயிரம் ரூபாய்தான். இந்த நிறுவன நேர்முகத் தோர்வின் போது என் திறமைகளைப் பரிசோதித்த அவர்கள், நீங்கள் என்ன எதிர்பார்க்கின்றீர்கள் என்றனர். நானும் நீங்க என்ன வேணா கொடுங்க, ஆனா என் கண்டிசன் ஒன்னுதான். நான் வருடா வருடம் டிசம்பர் இறுதியில் சபரி மலை போவேன். ஆதலால் அதற்கு எனக்கு ஒருவாரம் லீவு கட்டாயமாகத் தர வேண்டும், தராவிட்டால் வேலையை விட்டு விட்டுப் போய்விடுவேன் என்றேன். அந்த நிறுவன மேலான்மை இயக்குனர் சிரித்து விட்டார். நேர்முகத் தோர்வில் லீவு கேக்கற ஆளை இப்பத்தான் பார்க்கின்றேன் என்றவர், ஆனா மக்கா! "உன் நேர்மை எனக்குப் புடித்துள்ளது" என்றார். "நமது நிறுவனம் இந்த வருடம் தான் ஆரம்பித்துள்ளேன். ஆதலால் உனக்கு நான் சம்பளம் குறைவாகத் தான் தருவேன். ஆனால் ஒரு வாக்குறுதி தருகின்றேன். நமது நிறுவனம் வளர, வளர நீங்களும் வளருவீர்கள்" என்றார். நானும் "இது, இதைத்தான் எதிர்பார்த்தேன், உங்க நேர்மையும் எனக்கு புடிச்சுருக்கு" என்று இணைந்தேன். ஆனால் உண்மையில் எனக்கு இணைய விருப்பம் இல்லை, அதுபோல அவருக்கும் என்னை சேர்த்துக்க விருப்பம் இல்லை. அனாலும் இருவரும் இணைந்தோம் என்பதுதான் விதி. நான் தொழிற்சாலையில் பணி புரிந்தேன். இறுதியாக நிறைய நேரம் சும்மா கிடைத்ததால் நானும் சைட் அடிக்க, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முது நிலை வணிகவியல் பாடத்தில் இணைந்தேன்.
எனது ஆறாம் வருட யாத்திரை முடிந்த ஒரு இருபது நாள் கழித்து அவர் கூப்பிட்டார். என்ன சுதாகர் என்ன பண்ணறிங்க என்றார். நானும் நல்லா ஆனி புடுங்கறன் சார், ஆனா அலுவலகத்தில் சரியா தூக்கம் வர மாட்டேன் என்பதால், ஒரு டபுள் காட் மெத்தையும், குளிர் சாதன அறையும் வேண்டும் என்றேன். அவரும் நிறுவன விசிட்டர் ஓய்வு அறை சும்மாதான இருக்கு, நீ அங்க போய் படுத்துக்கே என்றார். அதுக்கு சம்பளமா ஒரு ஜந்தாயிரம் தருகின்றேன் என்று கொடுத்தார். பின்னர் நான் நல்லா தூக்கம் வருது என்று சொன்னதால் ஒன்பதாயிரம் ஆக்கினார். அப்ப என் வேலை என்ன தெரியுமா? உண்மையைக் கூறுகின்றேன்.
காலை ஒன்பது மூப்பதுக்கு உள்ள போய், பேப்பர் படிக்க ஆரம்பித்தால், ஹிண்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமலர், தினத்தந்தி படிக்க பதினேன்னு. மசாலா டீ வரும் குடித்து விட்டு, இரண்டு மணி நேரம் அன்றைய அலுவலக வேலை. பின் ஒரு மணிக்கு நல்லா நிறைய நெய் தடவிய இராஜஸ்தான் ரெட்டி, தால், சப்ஜி, கொஞ்சம் சாம்பார் சாதம், சாப்பிட்டு படுத்தால் மதியம் மூனு வரைக்கும் தூக்கம், பின் மசாலா டீயுடன் எழுப்பி விடுவார்கள். குடித்து விட்டுப் போய் உக்காந்து மாலை ஜந்து வரை அலுவலக வேலை. பின் ஏழு மணி வரை அலுவக நண்பர்களுடன் கிரிக்கெட் அல்லது வாலிபால் விளையாட்டு. பின் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்புவேன்.
இப்படியாக நான் கஷ்டப் பட்டு வேலை பார்த்து ஏழம் வருட யாத்திரை சென்று வந்த போது அழைத்த அவர். சரி தூங்கியது போதும் இனிமே கொஞ்சம் நிறைய ஆனி புடுங்க வேண்டும் என்று கூறியவர். நான் முது நிலை வணிகவியலை முதல் வகுப்பில் தோர்ச்சி பெற்றதைச் சொன்னவுடன், உனக்கு எல்லாம் எவன் மார்க்கு போட்டது. ஒன்னும் தெரியாம பாஸ் பண்றது எப்படின்னு உங்கிட்டதான் கத்துக் கொள்ளனும் சொல்லி, சரி,சரி இன்னியில் இருந்து நீ அக்கவுண்ட்ஸ் எச்சக்கியுட்டிவ்(எக்ஸிகியுட்டிவ்), உன் சம்பளம் பதினாலாயிரம் என்றார்.
எட்டாம் வருட யாத்திரை முடித்த போது, நான் எனது மூன்றாம் முது நிலைப் படிப்பான எம். பி. ஏ வில் நிதி மேலான்மை எடுத்து முதல் வருடம் முதல் வகுப்பில் தோர்ச்சியடைந்தேன். ஒரு மாதம் கழித்து அழைத்த அவர் என்னிடம் நிறுவன விசயங்களைப் பற்றி உரையாடி விட்டு, நானும் நீ எதாது உருப்படியா ஆனி புடுங்கவாய் என்று பார்த்தால், உருப்படி இல்லாமல் இருக்கின்றாய். இனி நீ எச்சக்கூட்டிவ் எல்லாம் கிடையாது, இன்று முதல் தொழிற்ச்சாலை நிதி மேலாளர் என்றும், உனது சம்பளம் இருபது ஆயிரம் என்றும் சொல்லிச் சென்று விட்டார். நானும் மேலாளர் ஆகிட்டா தூக்கம் வருமா? வராதா? என்ற கவலையில் வீட்டுக்கு வந்துட்டேன்.
ஒன்பதாம் யாத்திரை முடிந்தவுடன் (ஒவ்வெரு வருடம் நான் டிசம்பரில் யாத்திரையும், ஜனவரியில் பதவி உயர்வும் கிடைப்பது வழக்கம், ஆனால் நிறுவனத்தில் எல்லாருக்கும் மார்ச்சில் தான்).
ஒரு நாள் அழைத்த அவர் சும்மா இங்க தொழிற்சாலையில் அமர்ந்து ஈ ஓட்டுனா மட்டும் பத்தாது. நீ நம்ம தில்லி, அகமதாபாத், மும்பை, ஹைதிராபாத் ஆகிய கிளைகளுக்கும் சென்று அங்கும் சரியாகத் தூக்கம் வருதா என பரிசோதிக்க வேண்டும் என்றார். நானும் சரி என்று கூறிவிட்டு திரும்ப, அவர் என்னிடம் இனி நீ சீனியர் நிதி மேலாளார். நீயும் நம்ம தலைமையக சீனியர் மேலாளாரும் இணைந்து கூட்டாகக் கணக்குப் பார்க்கவும் என்றார். நானும் ஜந்தாயிரம் ரூபாய் சம்பளஉயர்வு பெற்றுத் திரும்பினேன். இப்படி நாலு வருடத்தில் நாலு பதவி உயர்வும், பத்து மடங்கு சம்பள உயர்வும் அந்த அய்யன் எனக்கு என் தகுதிக்கு மீறி பிச்சையிட்டார். நிறுவன மேலான் இயக்குனருக்கும் நான் மிகவும் கட்டுப் பட்டவன் ஆனேன். அவரும் நான் உனக்கு கொடுக்கக் கூடாதுதான் நினைக்கின்றேன், ஆனா எப்படியோ வாங்கி விடுகின்றாய் என்பார். இப்படியாக நான் வளருகின்றேனே மம்மி என்பது போல நாற்பது கிலோ இருந்த நான் எழுபது கிலோவும், ஒல்லியா எழும்பனாய் இருந்தவன் இராஜஸ்தான் ரெட்டியாலும், எங்க மன்னியின் சுவையான வீட்டுச் சாப்பாட்டாலும் குண்டாய், தொப்பையுடன் வளர்ந்தேன். அதுக்காகத் தான் சொல்லறேன் மதியம் தூங்காதீர்கள். அதுவும் அலுவலகத்தில் தூங்காதீர்கள். நன்றி..... பத்தாம் வருடத்தை நாளைய இறுதிப் பதிவில் பார்க்கலாம்.... நன்றி.
டிஸ்கி : நாளைக்குள்ள முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தால நான் இன்னைக்கி கொஞ்சம் பெரிய பதிவாக போட்டு விட்டேன். தயவு செய்து பொறுமையாக படித்து நன்றாகத் திட்டவும். நன்றி.
// மதியம் தூங்காதீர்கள். அதுவும் அலுவலகத்தில் தூங்காதீர்கள். //
ReplyDeleteகடைசியா என்ன ஒரு பன்ச் டைலாக் :)
//காலை ஒன்பது மூப்பதுக்கு உள்ள போய், பேப்பர் படிக்க ஆரம்பித்தால், ஹிண்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமலர், தினத்தந்தி படிக்க பதினேன்னு. மசாலா டீ வரும் குடித்து விட்டு, இரண்டு மணி நேரம் அன்றைய அலுவலக வேலை. பின் ஒரு மணிக்கு நல்லா நிறைய நெய் தடவிய இராஜஸ்தான் ரெட்டி, தால், சப்ஜி, கொஞ்சம் சாம்பார் சாதம், சாப்பிட்டு படுத்தால் மதியம் மூனு வரைக்கும் தூக்கம், பின் மசாலா டீயுடன் எழுப்பி விடுவார்கள். குடித்து விட்டுப் போய் உக்காந்து மாலை ஜந்து வரை அலுவலக வேலை. பின் ஏழு மணி வரை அலுவக நண்பர்களுடன் கிரிக்கெட் அல்லது வாலிபால் விளையாட்டு. பின் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்புவேன்.//
ReplyDeleteremba kastamana velayala iruku.....
//இப்படியாக நான் கஷ்டப் பட்டு வேலை பார்த்து //
ReplyDeleteம்க்கும்...
//அதுக்காகத் தான் சொல்லறேன் மதியம் தூங்காதீர்கள். அதுவும் அலுவலகத்தில் தூங்காதீர்கள்//
ஆஹா.... அனுபவம் பேசி இருக்கே...
நல்லா எழுதி இருக்கீங்க அண்ணா.
சாமி சரணம்
ReplyDeleteநல்லா எழுதிருக்கிங்க.
ReplyDeleteஒரு சின்ன வேண்டுக்கோள்.
சின்ன சின்ன பத்திகளாக போட்டால் படிக்க ஈஸியாகவும்,ஆர்வமாகவும் இருக்கும்.
பெரிய பத்திகள் படிக்க கஷ்டமாக இருக்கும் சகோ...
நல்ல சுவாரஸ்யமான பதிவு.எப்பிடித்தான் இவ்ளோ எழுதுறீங்களோ !
ReplyDeleteநாதாஸ், உழவன் தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றிகள்.
ReplyDeleteநன்றி மகா ரொம்ப கஷ்டமான வேலைதான்.
நன்றி சுசி. இப்ப தூங்குவது இல்லை.
நன்றி மேனகா சத்திய, கண்ணை மூடிகிட்டு டைப்பிடறன், அப்புறம் பார்த்தா பெரிய பத்தி ஆகிவிடுகின்றது. இனி பிரித்துப் போடுகின்றேன்.
நன்றி ஹேமா, எல்லாம் நீங்கள் அனைவரும் தரும் ஆதரவுதான் என்னை எழுத தூண்டுகின்றது.
அனைவருக்கும் நன்றிகள்.