இந்த பூமிப் பிரபஞ்சத்தில் மிகச் சிறந்ததும், புண்ணிய பூமியுமான நம் பாரத தேசம், மிகப் பழமையானதும், சக்திவாய்ந்ததும் ஆகும். எண்ணற்ற மகான், மற்றும் சித்தர்களால் நம் நாடு சிறப்புற்றது. அவர்கள் மலைவாழிடங்களில் தங்களின் சக்தியாலும், தவத்தாலும் கணக்கற்ற மலைகளில் கோவில்களும், பீடங்களும் நிறுவி இருக்கின்றார்கள். மலை,கடல் நிலம் போன்றவைகளில் சக்தி மிக்க இடங்களை தெரிந்து, அவற்றில் இவற்றை நிறுவி இருக்கின்றார்கள். அங்கு நாம் செல்வதின் மூலம், நாம் நமது மனம், உடல் மற்றும் ஆன்மாவை வலுப்படுத்திக் கொள்ள முடியும். சில இடங்களில் இறைவனே சுயம்புவாக வந்து குடியேறியும் உள்ளான். அவனின் ஆற்றல் மிக்க இடங்களாகும் அவை. அப்படி எல்லாம் வல்ல ஈசனாகிய சிவபெருமான் வந்து குடியேறிய இடம் தான் நாம் பார்க்கும் இந்த திருத்தலம்.
வட நாட்டில் பரந்து விரிந்த இமாலயத் தொடரில் எண்ணற்ற மலைச் சிகரங்களும், சக்திபீடங்களும் உள்ளன. அது போல நம் தென்னாட்டிலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருப்பதி,காளகஸ்தி, திருவண்ணாமலை, பர்வதராஜமலை, கொல்லிமலை, ஜவ்வாது மலை, திருமூர்த்தி மலை போன்ற மலைகள் உள்ளன. சபரி மலையும் சக்தி வாய்ந்த ஒரு மலைதான். இது போல ஏறுவதுக்கு கடினமான மலையும், உயரம் கூடிய மலையும் ஆகிய வெள்ளியங்கிரி மலைதான் நாம் இந்த தொடரில் காணும் திருத்தலம் ஆகும். இறைவன் இங்கு ஒரு குகையில் சுயம்புவாக ஒரு பாறை வடிவில் தோன்றி காட்சியளிக்கின்றான். தினமும் காலை ஒரு அற்புத தரிசனமும் அளிக்கின்றான். நாம் அந்த அற்புத தரிசனம் காண இந்த மலைக்கு யாத்திரை செய்வேம். நான் இந்த யாத்திரையை தொடக்கத்தில் இருந்து முடிவு வரை ஒரு பயணம் செய்வதைப் போல கூறவுள்ளேன். அருமையான சுனைகள், நீறுற்றுக்கள், மூலிகை நிறைந்த தண்ணீர் என ஒரு வித்தியாசமான காட்சிகளைப் பார்க்கலாம் வாருங்கள்.
சபரிமலைப் போலவே இந்த மலையிலும் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. பன்னிரண்டு வயதில் இருந்து ஜம்பது வயது வரை உள்ள பெண்களுக்கு இந்த மலையில் ஏற அனுமதி இல்லை. அங்கு யாரும் இருந்துகொண்டு, யாரையும் போகக் கூடாது என்று தடுப்பது இல்லை. ஆனாலும் காலகாலமாய்த் தொடரும் சம்பிரதாயம் இது. மீறி ஏறும் பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிப் பாதியில் திரும்பி வந்ததாகச் செவி வழிக்கதைகள் கூறுகின்றன. நான் ஏற்கனவே உங்களை சபரி மலைக்கு அழைத்துச் சென்றேன், அதுபோல உங்களால் தரிசிக்க முடியாத வெள்ளியங்கிரி மலைக்கும் அழைத்துச் செல்லுகின்றேன்.மான், காட்டுஎருமை, யானைகள், கரடிகள், சிறுத்தைகள், செந்நாய்கள்,பறவைகள்,குரங்குகள் மற்றும் நொடியில் கடித்து ஆளைக் கொல்லும் மிக விஷம் உடையதும் மிக நிளமானது ஆன இராஜ நாகங்கள்,கரு நாகங்கள் அடந்த காடு இது. அனால் இவற்றில் ஒன்றைக்(நம்ம ஆளு குரங்கைத் தவிர) கூட நான் கண்ணால் பார்த்தது இல்லை. சித்திரை மாதம் முதல் மூன்று மாதங்களில் மட்டும் பயணம் செய்வார்கள். நாம் ஏறும் தடம் பூராவும் மழைக்காலங்களில் தண்ணீர் வழிந்தோடும் வழியாதலால் கோடை காலத்தில் மட்டும் பயணம் மேற்க் கொள்ளுகின்றனர்.
என் தந்தை சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் இந்த பயணத்தை மேற்க் கொண்ட போது ஒழங்கான பாதையும், வசதிகளும் இல்லை. கையில் பாதை ஏற்ப்படுத்த கத்தியும், மன்னெண்ணய் விளக்குமாய் பயணம் செய்ததைக் கேட்டதில் இருந்து நான் இந்த மலைக்கு பயண ஆசை கொண்டேன். ஆனால் கடந்த நாலு வருடங்களுக்கு முன்னர் தான் என் ஆசை நிறைவேறிற்று. முதல் வருடம் ஒரு பயணத்தைப் போலத் தான் இருந்தது. இரண்டாம் வருடம்தான் நல்ல அனுபவங்களும், புகைப் படமும் எடுக்க முடிந்தது. ஆகையால் என் இரண்டாம் வருட யாத்திரையை விவரிக்கின்றேன். கல்பாக்கத்தில் இருந்து நிறையப் பேர் வருடா வருடம் இங்கு போவது வழக்கமாக கொண்டுள்ளனர். என் இரண்டாவது அண்ணாவும் அவர்கள் அலுவலக ஊழியர்களும், திரு. பரத்குமார் என்பவரின் தலையில் மேற்க் கொண்ட யாத்திரை இது. நாங்கள் அனைவரும் கல்பாக்கத்தில் இருந்து இரயிலில் கோவை சென்று, காந்திபுரம் புற நகர் பேருந்து ஒன்றில் போரூர் வழியாக முதலில் இருட்டுப் பள்ளம் என்றும், பூண்டி என்னும் மலை அடிவாரப் பகுதியும், காட்டுப் பகுதியில் உள்ள யோகி.ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஆசிரமத்தை அடைந்தேம்.காந்திபுர பேருந்து நிலையத்தில் என் நண்பன் முரளியும் தாராபுரத்தில் இருந்து வந்து இணைந்து கொண்டான்.
அங்கு முழுக்க பாதரசத்தில் ஆன பாதரச லிங்கத்தின் குளத்தில் குளித்துப் பின்னர், பாதரசத்தைக் கட்டி செய்து உருவாக்கி இருக்கும் தியான லிங்கத்தில், மண்டபத்தில் உக்காந்து, தியானம் செய்துவிட்டு எங்களின் வெள்ளியங்கிரிப் பயணத்தைத் தொடர்ந்தேம். இங்கு இருட்டுபள்ளம் பூராவும் வளமான தென்னந்தோப்புகள் மற்றும் பாக்கு மரங்கள், அடர்ந்த காடுகள் உள்ள பகுதி. அங்காங்கே "இது யானைகள் நடமாடும் பகுதி யாரும் தனித்து நடமாட வேண்டாம்" என போர்டு வைத்து நம் சுவாஸ்யத்தைக் கூட்டுவார்கள். இந்த பகுதி சாலையில் போருந்துகள் உள்ளன. அவைகளில் ஏறி நாம் வெள்ளியங்கிரி மலை அடிவாரம் வரை செல்லலாம். கோவை, ஈரோடு, பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் மக்கள் சர்வ சாதரனமாய் செல்லும் இடம் வெள்ளியங்கிரி ஆகும். வயது மூத்த பெண்கள் கூட, காடு கழனிகளில் வேலை பார்த்த திடகாத்திரத்துடன் சாதரனமாய் ஏறுவதையும் காணலாம்.
மீண்டும் நாளை புனிதப் பயணத்தைத் தொடருவேம். நன்றி.
அப்பா போயிட்டு இருந்தார். பொதுவா பவுர்ணமி நாளில்தான் போவது வழக்கம்.
ReplyDeleteஆமாம் சின்ன அம்மினி, சொல்ல மறந்துவிட்டேன். சித்திரா பொளர்னமி அன்று போவது விசேஷமான ஒன்று. அன்று மிகவும் கூட்டமாக இருக்கும். தகவலுக்கு நன்றி.
ReplyDeleteமறுபடியும் கலக்க ஆரம்பிச்சிடிங்க வாழ்த்துக்கள் ....
ReplyDelete//"இது யானைகள் நடமாடும் பகுதி யாரும் தனித்து நடமாட வேண்டாம்" என போர்டு வைத்து நம் சுவாஸ்யத்தைக் கூட்டுவார்கள்.//
ReplyDeleteதில்லான ஆளுதான் நீங்க ...
நிறைய விஷயங்களை இப்போதான் கேள்விப்படுறேன்...பகிர்வுக்கு நன்றி! :-)
ReplyDeleteசுவாரஸியமாக இருக்கு பகிர்தலுக்கு நன்றி.
ReplyDeleteரொம்ப நல்ல இடம்.. நான் கூட ரெண்டு மூனு தடவ போயிருக்கேன்..
ReplyDeleteஇப்போதான் கேள்விப்படுறேன்!!!
ReplyDeleteநல்லதொரு பயணமும் பகிர்வும்.
ReplyDeleteநன்றி சின்ன அம்மினி,
ReplyDeleteநன்றி மகா, போர்டு இருந்தாலும் அது பொது மக்கள் புழங்கும் இடம்தான்.
நன்றி சந்தன முல்லை, தொடர்ந்து படியுங்கள் பயன் தரும் பதிவு இது,
நன்றி நன்றி சாருஸ்ரீராஜ்,
நன்றி சேலம் வசந்த், தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி,
நன்றி சுவையான சுவை, தொடர்ந்து படியுங்கள் இன்னமும் பல தகவல்கள் வரும்,
நன்றி ஹேமா, நான் இன்னமும் பயணம் ஆரம்பிக்கவில்லை. தொடர்ந்து படியுங்கள்.
கோவை சென்று, காந்திபுரம் புற நகர் பேருந்து ஒன்றில் போத்தனுர் வழியாக முதலில் இருட்டுப் பள்ளம் என்ற மலை அடிவாரப் பகுதியும், காட்டுப் பகுதியில் உள்ள யோகி.ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஆசிரமத்தை அடைந்தேம்
ReplyDeleteThe above is wrong route. The actual route is
Kovai(Gandhipuram) --> Perur --> Chemmedu (iruttu Pallam)....
Please correct it. The வெள்ளியங்கிரி மலை அடிவாரம் is called Poondi (this is different from 'Thirumurugan' Poondi Tirupur)
நன்றி நண்பரே, நாங்கள் வருடம் ஒருமுறை செல்வதால், சிறு குழப்பம் ஏற்ப்பட்டது. தாங்கள் கூறிய பிறகுதான் எனக்கு பேரூர் ஈசனை பேருந்தில் அமர்ந்த வண்ணம் வணங்கியது ஞாபகம் வந்தது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள். திருத்திக் கொள்கின்றேன். தங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றிகள்.
ReplyDeleteநல்ல தொரு பகிர்வு அழகான முறையில் ஆரம்பித்து இருக்கீஙக
ReplyDeleteவிஷ ஜந்துக்களை தாண்டி எப்படி போனீர்கள் என்று நினைக்கும் போது ரொம்ப கபீருன்னுது...