Tuesday, December 15, 2009

சபரிமலை யாத்திரை


கன்யாகுமரியில் வெய்யில் பட்டையைக் கிளப்பியது. அங்கு குமரி அம்மனை தரிசனம் செய்து, இரண்டு மணி நேரம் சுற்றி விட்டு, பின் மதியம் அங்கு உள்ள திரிவேணி ஓட்டலில் நானும், என் அண்ணாவும், என்னுடன் வந்த சாமிகள் 22 பேருக்கும் அன்னதானம் செய்தேம். பின்னர் மாலை திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள நவதிருப்பதிகளில் நாலு மட்டும் தரிசனம் செய்தேம். தென் திருப்போரை, திருகோளுர், ஆழ்வார்திரு நகரி, திருவைகுண்டம் சென்றேம். ஆழ்வார் திரு நகரியில் உள்ள 5199 அண்டுகள் பழமையான உறங்காப் புளியமரம் பார்த்துவிட்டு, பார்த்துவிட்டு ஸ்ரீவைகுண்டம் செல்லும் போது கிட்டத்தட்ட மணி எட்டு. அங்கு இரவு கோஸ்டி பூஜை முடிந்து அருமையான வெண்பொங்கல் கொடுத்தார்கள். இரவு திருச்செந்தூர் சென்று முருகனின் தரிசனம் செய்தேம். இரவு பதினோரு மணி வரை சக நண்பர்களுடன் (சாமிகள்) கடல்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டு பொழுது பேக்கினேம். இரவு பன்னிரண்டு மணியளவில் புறப்பட்டு, வெக்காளியம்மன் தரிசனம் செய்து காலை திருப்பரங்குன்றம் அடைந்தேம். அங்கு காலைக் கடன் முடித்து, தரிசனம் செய்து பின்னர் மதுரை புறப்பட்டேம்.

கன்யாகுமரியில் இருந்து திருச்செந்தூர் பயணம் செய்த போதுதான் கடந்த பத்து நாள்கள் முன்னர் அடித்த மழை மற்றும் புயலின் தீவிரம் புரிந்தது. வழிபூராவும் தண்ணீர் வெள்ளக்காடாக இருந்தது.
வயல், பொட்டல்,வீடுகள் ஆகியவை முழுதும் நீரால் சூழப்பட்டுள்ளது. பத்து நாள் கழித்து இவ்வளவு தண்ணீர் தேங்கியுள்ளது என்றால்,அப்போது எவ்வளவு பாதிப்பு இருக்கும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அம்மா ஆட்சியின் போது செய்திகளை நீட்டி முழக்கும் ஒரு டீ வீ காரார்கள் இதை எல்லாம் இருட்டடிப்பு செய்து விட்டதாகவும், அரசு வெள்ள பாதிப்புகளை மறைத்து விட்டதாகவும், வண்டியில் பேசிக் கொண்டனர். நாங்கள் சென்ற பாதையில் ஒரு இடத்தில் கால் கிலோ மீட்டர் தூரம் சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியது, அதில் ஆடிக் கொண்டு சென்றபோது நாங்கள் கவிழ்ந்து விடுமோ என அஞ்சினேம், ஆனால் ஓட்டுனர் சாமார்த்தியமாக கடந்து சென்றார். திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இடைத்தேர்தல் பிராச்சாரம் அனல் பறந்தது. அனைத்து கட்சிகளும் ஓட்டு வேட்டையாடிக்(ஓட்டுப் பிச்சை) கொண்டு இருந்தனர். இதை எல்லாம் பார்க்கும் போது எனக்கு கோவில் வாசலில் வயிற்றுக்காக பிச்சை எடுப்பவர்கள் மற்றவர்களை வீட கொளவரம் மற்றும் கடமை, கண்ணியம் மிக்கவர்களாக தெரிந்தனர்.

மதுரை வந்ததும் எனக்கு என்னமே களைப்பு மற்றும் மனம் சரியில்லாதால் நான் மீனாட்சி அம்மன் கோவில் செல்லாமல் வண்டியில் படுத்து உறங்கிவிட்டேன். பின்னர் மதியம் திருமலைனாயக்கர் மகாலுக்கு சென்று விட்டு அழகர் மலை நோக்கி பயணம் செய்தேம். வழியில் வசந்தம் ஹேட்டலில் உணவு எடுத்து நாங்கள் பழமுதிர்சோலைக்கு சென்றேம். அங்கு முருகனை வழிபட்டு, ஒரு மணி நேர இளைப்பாறுதலுக்கு பின்னர் அழகர் கோவிலும் சென்று தரிசனம் செய்தேம். நேராக உள்ளே சென்று பெருமாளை வழிபட்ட நான், கலைசிற்பம் மிகுந்த அந்தக் கோவிலில் சுற்றிப் பார்க்க ஆசைப் பட்டேன். ஆனால் வயிறு மற்றும் இயற்கை உபாதைகளால் நான் விரைவில் கோவிலில் இருந்து வெளியில் வரவேண்டியதாயிற்று. பின்னர் திருமோகூர் செல்லக் குருசாமி கேட்டபோது,உடன் வந்த சாமிகள் வீடு திரும்ப ஆசைப்பட்டதால், அனைவரும் வீடு திரும்ப வேண்டியதாயிற்று. இரவு எட்டு மணி அளவில் தாராபுரம் வந்து அடைந்தேம். மறுனாள் காலை அய்யப்பனின் பூஜைகள் முடித்து, மாலை கழட்டிப்,அன்று இரவு மங்களூர் விரைவு வண்டியில் செங்கல்பட்டு வந்து, கல்பாக்கத்தில் ஞாயிறு இருந்து அவியல் சாப்பிட்டு, இரவு புலி வாகனத்தில் (டைகர் ஏர்வேஸ்) ஏறி சிங்கை வந்து அடைந்தேன். கடந்த ஒரு மாத காலமாய் எழுதி உங்களை டிரையல் ஆக்கிய சபரிமலைத் தொடரை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன். ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. களைப்பு மற்றும் உடல் அசதி இன்னமும் உள்ளது. குற்றாலத்தில் வண்டியில் உள்ள ஒரு இரும்பு கம்பி என் காலை பதம் பார்த்து விட்டது. நான் அதை சிறு காயம் என்று அலட்சியமாக விட்டது, தவறாய் போய் இங்கு வந்து வீங்கி விட்டது. அசதி,ஜலதோசம் மற்றும் வயிறு உப்புசங்கள் உள்ளது. இன்னமும் இரண்டு நாளில் பூரண குணமடைவேன் என எதிர்பார்க்கின்றேன். நன்றி.

8 comments:

  1. ஹை இந்த தடவை நான் தான் first . உங்கள் பயணக் குறிப்பை பார்கும் போது ஓய்வு எடுக்க இரண்டு நாள் பத்தாது போல சீக்கிரம் உடல் நலம் பெற வாழ்துக்கள்

    ReplyDelete
  2. சீக்கிரம் உடல் நலம் பெற வாழ்துக்கள்!!

    ReplyDelete
  3. //நானும், என் அண்ணாவும், என்னுடன் வந்த சாமிகள் 22 பேருக்கும் அன்னதானம் செய்தேம்//

    இங்க குடைகடைலையும் வந்து அன்னதானம் செய்ங்க -:)

    //நாங்கள் கவிழ்ந்து விடுமோ என அஞ்சினேம், ஆனால் ஓட்டுனர் சாமார்த்தியமாக கடந்து சென்றார்//

    அப்ப ஐயப்பனோட சாமர்த்தியத்தால தப்பிகலையா ? ( அடுத்த வருடம் நீங்க போடபோற இடுகைல ஐயப்பனின் அருளால் கடந்தவருடம் தப்பித்தோம் என்று எழுதாமல் இருந்தால் நலம் ) :))))))))

    // கடந்த ஒரு மாத காலமாய் எழுதி உங்களை டிரையல் ஆக்கிய சபரிமலைத் தொடரை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்//
    ரொம்ப நன்றிங்க....

    இப்ப உடம்பை பாத்துக்குங்க, ஐயப்பனை அடுத்தவருடம் கார்த்திகை வரும்பொழுது பாத்துக்கலாம், -:)

    ReplyDelete
  4. சுகமா வந்திட்டீங்களா ?சந்தோஷம்.பிரயாண அலுப்பு முடிச்சு அப்புறமா பதிவு போடுங்க.

    ReplyDelete
  5. உடல் நலம் பெற வாழ்துக்கள்!

    ReplyDelete
  6. அச்சச்சோ.. இப்போ எப்டி இருக்கு அண்ணா?

    டாக்டர பாத்தீங்களா?

    சீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  7. நன்றி, சாருஸ்ரீராஜ், தங்களின் முதல் பின்னூட்டத்திற்க்கும் நன்றிகள்,ரெண்டு நாள் பத்தாது ஆனா
    வருடக் கணக்கு வேலைகள் உள்ளன.
    நன்றி மேனகாசத்தியா,
    நன்றி ஞானப்பித்தன், அன்னதானம் பண்ணலாம். ஆனா நீங்க சாப்பிடுவது நாலு இட்டிலி ரெண்டு தோசைதான?( இது அன்னமா? டிபனா?)
    நன்றி ஹேமா, இனி பதிவுகள் ஆரம்பம்,
    நன்றி சுசி, டாக்டரிடம் போகவில்லை. மருந்து மாத்திரைகள் உள்ளன. தற்போது பரவாயில்லை.

    ReplyDelete
  8. உடல் நலம் பெற வாழ்துக்கள்

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.