Wednesday, April 14, 2010

காக்கா சுட்ட வடை

முஸ்கி : இன்று அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந் நன்னாளை நாம் சிரிப்புடன் ஆரம்பிப்போம். இந்தப் பதிவை ஒரு நகைச் சுவையாக மட்டும் படிக்கவும். நம்ம தோழி. அன்புடன் மலிக்கா ஒரு வெள்ளைக் காக்கா படத்தை வைத்து கதை எழுதுனாங்க. அதைப் படித்ததில் இருந்து எனக்கும் கதை விடனுமுன்னு, அடச்சே கதை சொல்ல ஆசை வந்துருச்சு. எனக்காக எவ்வளவே பொறுத்துக்குறீங்க, இதுவும் பொறுத்துக்குங்கே. போன பதிவில் நம்ம மங்குனி முதல் பின்னூட்டத்தில் வடை வேணுமின்னு கேட்டார். ஆதலால் இந்த வடைப் பதிவு மங்குனிக்கு சமர்ப்பணம்.




















ரெண்டு ஊருல ரெண்டு லட்சம் காக்கா இருந்ததுங்க(எத்தினி நாளிக்குத்தான் ஒரு ஊருலன்னு சொல்றது), அதுல ஒரு காக்காதான் நம்ம ஹீரோயின் வெள்ளைக்காக்கா. இவரு பார்க் ஷேரட்டான் ஓட்டல் கிட்ட ஒரு புளிய மரத்துல ஒரு ஹூபோ கட்டி வாழ்ந்துக்கிட்டு இருந்துச்சு. அந்த மரத்துக்கு அடியில ஒரு 90 வயது பாட்டி வடை சுட்டு வித்துக்கிட்டு இருந்துச்சு. தினமும் இந்தக் காக்கா அந்தப் பாட்டி கிட்டதான் கிரடிட் கார்டுல அக்கவுண்ட் வைச்சு சாப்பிடும். ஒரு நாள் நம்ம தங்கைகள் வெட்டிப் பேச்சு சித்ராவும், யாவரும் நலம் சுசியும், தங்களின் சம வயது தோழியான பாட்டியை விஜய் நடிச்ச வில்லுப் படத்துக்கு வாங்கன்னு கட்டாயமா இழுத்துக் கிட்டுப் போனாங்க. பக்திப் படமுன்னு நினைச்சு பார்த்த பாட்டி, பார்த்தவுடன் பரலோகம் போயிட்டாங்க. இது தெரியாத காக்கா மங்குனி மாதிரி மூனு நாளு பசியோட வடைக்காக காத்துக் கிட்டு இருந்தது. அப்பத்தான் சேட்டை அனுப்பின கொசு மெயிலில் விஷயத்தை தெரிஞ்சு கிட்டு, சோகத்தோட ஜலிலாக்கா சமையல் பதிவை நோட்டம் விட்டது.

அவங்க சுட்டுக்கிட்டு இருந்த கொழுக்கட்டையை அவங்களுக்கு தெரியாம சுட்டுக்கிட்டுப் போயிருச்சு. அது தன்னேட மரத்துக்குப் போயி கொழுக்கட்டையை உடைக்க முடியாம உக்காந்து இருந்தப்போ, நரியார் வந்தார். என்ன காக்கா? இப்படி முழிச்சுட்டு இருக்கேன்னு கேட்டது. காக்காயும் நான் ஜலிலாக்கா செய்த கொழுக்கட்டை எப்படி உடைப்பது என்று தெரியாமல் முழிக்கின்றேன்னு சொன்னது. உடனே நரியார் இது என்ன பிரமாதம்? அதை மரத்து மேல இருந்து தூக்கிப் போட்டினா, உடைஞ்சு போயிடும்ன்னு சொல்லிச்சு. காக்காயும் தூக்கிப் போட, அப்பக்கூட உடையாத கொழுக்கட்டையை நரி தூக்கிக்கிட்டு போயிருச்சு. காக்காயும் ஏமாந்து போயி நம்ம மேனகா அக்கா பதிவுப் பக்கம் திருடப் போச்சு.

அங்கன போன காக்கா, மேனகா 27.10.2009ல போட்டு போனியாகாத சிக்கன் தந்தூரில ஒரு லெக்பீசை லவட்டிக்கிட்டு வந்துருச்சு. அட நம்ம சமையலைக் காக்காவாது இரசிச்சு துண்ணுதேன்னு சந்தோசத்துல அக்காவும் பேசாம விட்டுட்டாங்க. காக்காயும் மரத்துல உக்காந்து பீசைச் சாப்பிடுவதா வேண்டாமன்னு மோந்து பாத்துக்கிட்டு இருந்தது. அப்ப வில்லன் நரியார் சோகமாக,ஜெய்லானி மாதிரி அப்பாவியா முகத்தை வைத்துக் கொண்டு வந்தது. காக்காயும் இன்னிக்கு எப்படியும் ஏமாறக் கூடாதுன்னு பட்டாபட்டி மாதிரி புத்திசாலியா, லெக்பீசை லெக்குக்கு நடுவில் வைத்துக் கொண்டது. இதைக் கவனித்த நரியார், சேப்டியா பண்ற இருடி கவனிச்சுக்கிறேன்னு சொல்லி, சோகமா லுக் விட்டது. இதைப் பார்த்த காக்காயும், நரியாரே இன்னிக்கு என்ன சோகமா இருக்கேன்னு கேட்டது. நரியார் அதை எப்படி சொல்வது?. பெமினா மிஸ். இந்தியா போட்டி நடக்குது. உன்னோட அழகுக்கு நீ கலந்துக்கிட்டினா, உனக்குத்தான் பட்டம் கிடைக்கும், அப்படியோ உலக அழகி,பிரபஞ்ச அழகி எல்லாம் ஆகிவிடலாமுன்னு சொன்னது. உடனே காக்காயும் மெய்மறந்து அப்படியான்னு? இரங்கமணி சொல்ற பொய்க்கு, வாய் பிளக்கும் தங்க மணி மாதிரி ஆகிடுச்சு. அப்பத்தான் நரியார், ஆனா அதுக்கு கேட் வாக் எல்லாம் போகனும், ஆனா உனக்குத்தான் சுத்தாமாத் தெரியாதேன்னு சொல்லுச்சு. உடனே டென்சன் ஆன காக்காயும், மவனே யாரைப் பார்த்து கேட் வாக் தெரியாதுன்னு சொன்னே? அந்தக் கேட்டுக்கே, கேட் வாக் சொல்லிக் கொடுத்த பரம்பரைடான்னு சொல்லி விஜயகாந்து ஸ்டைலில் லெக்கை எடுத்து வைத்தது. லெக்கை எடுத்ததும் லெக் பீசு ஸ்லிப் ஆக, நரியும் காக்காயே எத்தனை சொன்னாலும் உனக்கு எல்லாம் புத்தி வராதுன்னு சொல்லி லெக் பீசை லவட்டிக் கிட்டு ஓடிப் போச்சு.

ஏமாந்து போன காக்காயும், சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல, மறுபடியும் புளிய மரத்தில் இருந்து போயி, ஒரு அகில பிரபஞ்ச புகழ் பதிவர் கிட்ட இருந்து வடையைச் சுட்டு வந்தது. மறுபடியும் மரத்துக்கு வந்த காக்காய் வடையைத் திண்பதா வேண்டாமான்னு யோசித்துக் கொண்டு இருந்தது. அப்ப கிளைமோக்ஸில் வரும் சினிமா போலிஸ் மாதிரி, கரட்டா நரி வந்தது. காக்காயும் ரொம்ப எகத்தாளமாக, நரியாரே இன்னிக்கு நீ என்னத் தந்திரம் பண்ணினாலும் பலிக்காது, வடை உனக்குக் கிடைக்காதுன்னு(தமிழரசி கவிதை மாதிரி) சொல்லிச்சு. ஆனா நரி காக்கா வடையை நீயே திண்ணுக்கே, ஆனா அதுக்கு முன்னாடி உன்னைத் திங்க உனக்குப் பின்னாடி பாம்பு ரெடியா இருக்கு பாருன்னு சொல்லுச்சு, காக்காயும் என்னது பாம்பான்னு கேட்டு ஒரு ஜம்ப் பண்ணுச்சு, வடையும் எகிறி விழ, காக்கா சுட்ட வடையை, நரியார் சுட்டுக்கிட்டு ஓடினார்.

நரி ஓடுவதைப் பார்த்த காக்காயும் கை,கால் சுளுக்குன பிரபுதேவா மாதிரி ஒரு டான்ஸ் ஆடுச்சு. ஹை ஹை ந்னு காக்காய்க்கு ஒரே குஷி. சத்தம் போட்டு சொல்லுச்சு.
"போ நரி, போ. அது அந்தக் கன்றாவி சமையல் பதிவர் பித்தனின் வாக்குல, " ஊசிப் போன வடையை ஊற வைச்சுத் தின்பது எப்படி?" அப்படிங்கிற பதிவில் சுட்டது. மக்கா நீ மட்டும் அந்த வடையைத் தின்னா, மகனே உனக்கு சங்குதாண்டின்னு" சொல்லி ஆட ஆரம்பித்தது. இப்படிக்கா காக்கா, நரிக்கு அல்வா கொடுத்தது.

டிஸ்கி: கதைன்னா ஒரு மெசேஜ் இருக்கனும், அதுனால இந்த மெசேஜை நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் விஷ்ன்னு ஒரு விரலைத் தூக்கிப் படிங்க.

" எல்லாரையும் எல்லா நேரத்திலும் எமாத்த முடியாது, அப்படி எமாத்தினாலும் அந்த அண்டவனை எப்பவும் ஏமாத்த முடியாது" இது எப்படி இருக்கு?.
காக்காய் விட்ட அடச்சே காக்காய் படம் கொடுத்த மலிக்காவிற்க்கு நன்றி.

எல்லாரும் எல்லா வளமும்,நிறைவும் பெற இனிய சித்திரைத் தழிழ் நாள் வாழ்த்துக்கள்.

நன்றி நன்றி நன்றி.

46 comments:

  1. //வெட்டிப் பேச்சு சித்ராவும், யாவரும் நலம் சுசியும், தங்களின் சம வயது தோழியான பாட்டியை//

    அருமை அருமை


    கதை ரொம்ப சூப்பரா எழுதி இருக்கீங்க அண்ணா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஒரு நாள் நம்ம தங்கைகள் வெட்டிப் பேச்சு சித்ராவும், யாவரும் நலம் சுசியும், தங்களின் சம வயது தோழியான பாட்டியை விஜய் நடிச்ச வில்லுப் படத்துக்கு வாங்கன்னு கட்டாயமா இழுத்துக் கிட்டுப் போனாங்க. பக்திப் படமுன்னு நினைச்சு பார்த்த பாட்டி, பார்த்தவுடன் பரலோகம் போயிட்டாங்க.

    ........ பித்தன் கொள்ளு தாத்தா, (நாங்கள் உங்கள் "தங்கைகள்" என்றால்????) எதற்கு இந்த லொள்ளு, நல்ல நாளும் அதுவுமா?
    அண்ணனை வாழ்த்தலாம்னு வந்தால், சாபம் விட வச்சுருவீங்க போல....... ஹா,ஹா,ஹா......

    ReplyDelete
  3. அழகி போட்டில ஜெயிச்சதா!!!!!


    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஒருத்தரையும் விட்டு வைக்கல பொல இருக்கே... சூப்பரா கதை விட்ருக்கீங்க... புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. //காக்காயும் இன்னிக்கு எப்படியும் ஏமாறக் கூடாதுன்னு பட்டாபட்டி மாதிரி புத்திசாலியா, லெக்பீசை லெக்குக்கு நடுவில் வைத்துக் கொண்டது.///

    //சொல்லி விஜயகாந்து ஸ்டைலில் லெக்கை எடுத்து வைத்தது. லெக்கை எடுத்ததும் லெக் பீசு ஸ்லிப் ஆக, நரியும் காக்காயே எத்தனை சொன்னாலும் உனக்கு எல்லாம் புத்தி வராதுன்னு சொல்லி லெக் பீசை லவட்டிக் கிட்டு ஓடிப் போச்சு.///




    நல்லா கவனிங்க மக்கா,

    "கக்கா பட்டாப்பட்டி மாதிரி புத்திசாலியா , லெக்பீசை லெக்குக்கு நடுவில் வைத்துக் கொண்டது"

    அப்புறம் லேபீச எடுத்த நரி சொல்லுச்சு

    "எத்தனை சொன்னாலும் உனக்கு எல்லாம் புத்தி வராதுன்னு"

    இதிலிருந்து பித்தன் வாகு சார் , என்ன சொல்ல வருகிறான் எனபது எனக்கு புரிய வில்லை , உங்களுக்கு புரிந்தால் தயவு செய்து விரிவாக விளக்கவும் ,
    (அப்பாட....................... கோத்து விட்டாச்சு இனி வெடிக்க பாக்கலாம் )

    ReplyDelete
  6. ///ஆதலால் இந்த வடைப் பதிவு மங்குனிக்கு சமர்ப்பணம்.
    ////


    பித்தன் வாக்கு சார் , உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க சார் , ஒரு பட்டாபட்டி என்னா சார் ? ஆயிரம் பட்டாபட்டி வந்தாலும் உங்கள ஒன்னும் செய்ய முடியாது சார் .
    (ம்மம்ம்ம்மம்ம்ம்ம்.............................. இதுவும் ஓகே , மங்கு இன்னும் கொஞ்சம் யோசி , இன்னும் கொஞ்சம் )

    ReplyDelete
  7. இந்த மாதிரி நிறைய கதைகளைத் தொகுத்து ஒரு புஸ்தகமாவே போடலாம் நீங்க! :-)))

    அசத்தல்!!!!

    ReplyDelete
  8. //அப்ப வில்லன் நரியார் சோகமாக,ஜெய்லானி மாதிரி அப்பாவியா முகத்தை வைத்துக் கொண்டு வந்தது. காக்காயும் இன்னிக்கு எப்படியும் ஏமாறக் கூடாதுன்னு பட்டாபட்டி மாதிரி புத்திசாலியா, லெக்பீசை லெக்குக்கு நடுவில் வைத்துக் கொண்டது.//

    பட்டுவுக்கும் எனக்கும் உள்ள பந்தம் விக்கிரமாதித்தனுக்கும் , வேதாளத்துக்கும் உள்ள சொந்தம் மாதிரி சார் ,

    ReplyDelete
  9. வடை சுட்ட‌ க‌தை ந‌ல்லா இருக்கு பித்த‌ன் சார்..

    ReplyDelete
  10. என்னாச்சு பித்தன் சார்..
    ஒரே கவுச்சியாயிருக்கு?..

    அன்னைக்கே சொன்னேன்.. ஆரஞ்சு பச்சிடிய, அடுத்தவங்களுக்கு கொடுங்கனு..

    கேட்டீங்களா?..

    ReplyDelete
  11. சார்.. அடுத்து, London bridge is falling down.. falling down..பற்றி எழுதுங்க.. ஹி..ஹி

    ReplyDelete
  12. @ஜெய்லானி...
    //
    பட்டுவுக்கும் எனக்கும் உள்ள பந்தம் விக்கிரமாதித்தனுக்கும் , வேதாளத்துக்கும் உள்ள சொந்தம் மாதிரி சார் ,
    //

    அது.. அப்படி சொல்லுங்க ஜெய்லானி...

    ReplyDelete
  13. @மங்குனி
    (அப்பாட....................... கோத்து விட்டாச்சு இனி வெடிக்க பாக்கலாம் )
    //

    ஏப்பா.. சிக்கன்ல ரெண்டு கால்தான் இருக்கும்..

    அதனால, ஆடு கிடைக்குமானு பாரு.. ( நாலு கால் இருக்குமையா..)

    ReplyDelete
  14. நமக்கு கொழுக்கட்டை கிடைக்கலையேன்னு உடைக்க முடியாம உடைச்சேன்னு உதார் விடுறீங்கலா//

    வெள்ளைக்காக்கவா அங்கிருந்து அபேஸ் பண்ணிட்டு , மேனகா உடைய சிக்கன் லெக் பீஸ கோர்த்து விட்டாச்ச்சா...

    லெக் பீஸ் சாப்பிட ஆசையா இருந்தா சாப்பிட வேண்டியது தானே..
    ஓஒ இது அமைச்சருக்கா.
    போச்சு இனி மங்கு வடை கேட்கும், வுஹு

    ReplyDelete
  15. உங்க தங்கைகளே பாட்டிங்கன்னா அப்ப நீங்க என்ன தலைவரே இப்படி நீங்களே உங்களை போட்டு தள்ளிகிடீங்க. இது தான் சொந்த செலவில் சூனியம் வச்சிகிருதா. கதை நல்லாயிருக்கு சார்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. சுவாமிகளுக்கு புத்தி ஏன் இப்பிடியெல்லாம் போகுது.ஓ...காக்கா வடையைக் காவல் காக்குதாம்.எல்லாரும் கவனிக்கனும்.ஒரு நாளைக்கு யார் கையிலயாச்சும் மாட்டப் போறீங்க.தூரமா இருக்கிற தைரியத்தில எல்லாரையும் வம்புக்கு இழுக்கிறீங்க !

    நல்லதொரு நகைச்சுவை.இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. // கதை ரொம்ப சூப்பரா எழுதி இருக்கீங்க அண்ணா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் //
    நன்றி எல் கே உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. // அண்ணனை வாழ்த்தலாம்னு வந்தால், சாபம் விட வச்சுருவீங்க போல....... ஹா,ஹா,ஹா...... //

    நீங்க திட்டினாலும்,வாழ்த்தினாலும் எனக்கு சந்தோசம் தான். உங்க ரவுண்ட் முடிஞ்சுது, அடுத்து சுசி வரணுமே!!!!

    ReplyDelete
  19. // அழகி போட்டில ஜெயிச்சதா!!!!! //
    நம்ம காக்கா ஜெயிக்காம இருக்குமா?

    ReplyDelete
  20. நன்றி ஜோதி பாரதி.
    நன்றி டி.வி ஆர் அய்யா,
    நன்றி அனு,தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  21. (அப்பாட....................... கோத்து விட்டாச்சு இனி வெடிக்க பாக்கலாம் )
    மங்கு உங்க பாச்சா பலிக்காது, நானும் பட்டாவும் விரைவில் ஒரு உடன்படிக்கை போடப் போறேம்.

    // பித்தன் வாக்கு சார் , உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க சார் , //
    இதுவேறய்யா!! நன்றி மங்குனி அமைச்சரே.

    ReplyDelete
  22. நன்றி சேட்டைக்காரன்.

    நன்றி ஜெய்லானி, ரெண்டு பேருல யாரு வேதாளம்?

    நன்றி நாடோடி சார்,

    // அன்னைக்கே சொன்னேன்.. ஆரஞ்சு பச்சிடிய, அடுத்தவங்களுக்கு கொடுங்கனு.. //

    இன்னமும் நீங்க ஆரஞ்சி பச்சடி பாதிப்பில் இருந்து வருலையா?

    எழுதிருவேம், ஆமா இது ஜெர்மன் கவிதையா?
    // அதனால, ஆடு கிடைக்குமானு பாரு.. ( நாலு கால் இருக்குமையா..) //
    கிழட்டு எருமை கிடைக்கும் பரவாயில்லையா?
    நன்றி பட்டா பட்டி

    ReplyDelete
  23. // நமக்கு கொழுக்கட்டை கிடைக்கலையேன்னு உடைக்க முடியாம உடைச்சேன்னு உதார் விடுறீங்கலா//

    பின்ன நீங்க மட்டும் அஞ்சு கொழுக்கட்டையை எடுத்துப் போயி, அதை பார்க்குல வைச்சு யாருக்கும் கொடுக்காம சாப்பிட்டா எப்படி?
    // போச்சு இனி மங்கு வடை கேட்கும், வுஹு//
    அவரு இனி சுண்டலுக்கு மாறிவிடுவார்ன்னு நினைக்கின்றேன்.
    நன்றி ஜலில்லா.

    ReplyDelete
  24. // உங்க தங்கைகளே பாட்டிங்கன்னா அப்ப நீங்க என்ன //
    சசி உங்களுக்கு விசயம் தெரியாதா, நான் தொப்பையானந்தாவின் காயகல்பம் சாப்பிட்டு, பதினேட்டு வயசுக்கு மேலே வளரவில்லை, ஆனா தங்கைகள் வளந்துட்டாங்க.
    உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. // சுவாமிகளுக்கு புத்தி ஏன் இப்பிடியெல்லாம் போகுது.ஓ //

    வாங்க ஹேமு, நீங்க பாட்டுக்கு ரொம்ப நாள் லீவுல போயிட்டிங்க. அதான் இப்படி( கண்டிக்க ஆள் இல்லை).

    // ஒரு நாளைக்கு யார் கையிலயாச்சும் மாட்டப் போறீங்க. //

    எல்லாரும் எனது அருமை தங்கைகள் கோவிச்சுக்க மாட்டாங்க. அந்த தைரியம் தான்.

    நன்றி ஹேமு.

    ReplyDelete
  26. இந்த பாட்டி வடை கதை...
    என்ன பாடுபடுதுடா சாமி....!

    வெள்ளக்காக்கா கதை நல்லாதாயிருக்கு.... ஆனா....
    எல்லாரையும் இழுத்துவிட்டீங்கள... அப்படியே கோத்துவிட்டீங்களே.....

    நல்லாயிருக்கு...

    சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்... எல்லோருக்குக்தாங்கோ....!

    நட்புடன்....
    காஞ்சி முரளி............

    ReplyDelete
  27. தொப்பையானந்தாவுக்கு லொள்ளுதான்....:) சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் anna!

    ReplyDelete
  28. இந்த கதையை எங்க காலனி பசங்க கிட்ட சொன்னேன். அவங்க பார்த்த பார்வை இருக்கே..ஜன்மத்துக்கும் மறக்க முடியாம பண்ணிட்டீங்க.. அது சரி.. கனவுல பூதம் வரும்னு பயமுறுத்திதனால கமெண்ட் போட்டேன். அது சரி..ஆம்பளை பூதமா..பொம்பளை பூதமா?

    ReplyDelete
  29. கடைசியில "வட போச்சே"

    ReplyDelete
  30. piththan sir. vadai vellakkaa kathai ammaadiyoo
    thaangkamudiyala. een eeeeeeeeeeeeeeen ippadi

    tamil font. veelai seyyalangkakoooooooooooo

    assoo assoooooooooooooo...

    ReplyDelete
  31. //
    " எல்லாரையும் எல்லா நேரத்திலும் எமாத்த முடியாது, அப்படி எமாத்தினாலும் அந்த அண்டவனை எப்பவும் ஏமாத்த முடியாது" இது எப்படி இருக்கு?.// சூப்பர் பன்ஞ்..

    ReplyDelete
  32. ரொம்ப நகைச்சுவையா இருந்தது . தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. சுட்ட படத்த வச்சு எழுதினதுன்னாலும் கதை சூப்பரா இருக்கு அண்ணா..

    உங்களுக்கும் இனிய சித்திரை வருஷ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. //அங்கன போன காக்கா, மேனகா 27.10.2009ல போட்டு போனியாகாத சிக்கன் தந்தூரில ஒரு லெக்பீசை லவட்டிக்கிட்டு வந்துருச்சு. அட நம்ம சமையலைக் காக்காவாது இரசிச்சு துண்ணுதேன்னு சந்தோசத்துல அக்காவும் பேசாம விட்டுட்டாங்க.//எப்படி சுதா அண்ணா தேதியோட இவ்வளவு கர்க்டா போடிருக்கிங்க..ம்ம்ம் என் சிக்கன் தந்தூரிக்கு நேர்ந்த சோகத்தை நான் என்னன்னு சொல்றது..

    எப்படியோ உங்களுக்கு தந்தூரி சாப்பிடனும்னு ஆசை வந்துடுச்சு போல அதான் என் சிக்கன் தந்தூரியை பார்த்து நல்லா கொள்ளு விட்டுருக்கிங்க.இன்னிக்கு பார்த்து இந்த பதிவை போட்டிருப்பதால் நான் உங்களை திட்டலை,வாழ்த்துகிறேன் என்னவென்றால் வெகு விரைவில் உங்க தங்கமணியுடன் தந்தூரி சாப்பிட வாழ்த்துகிறேன்..இது எப்படி இருக்கு..

    பஞ்ச் டயலாக் சூப்பர்..உங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  35. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  36. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. மிகவும் நகைசுவையாக இருக்கின்றது..அதற்காக இப்படியா எல்லொரையும் காலை வாருவது...இருந்தாலும் படிக்கும் பொழுது சிரிப்பினை அடக்க முடியவில்லை...

    ReplyDelete
  39. கதை.. சூப்பர்.. பதிவுலக நண்பர்களை வைத்தே அழகா கதை சொல்லிடீங்க..

    ReplyDelete
  40. மிக்க நன்றி காஞ்சி முரளி,தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
    வாங்க தக்குடு, எல்லாம் நீங்க கத்துக் கொடுத்தது. தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
    // அது சரி..ஆம்பளை பூதமா..பொம்பளை பூதமா? //

    அது நம்ம காணுகின்ற கனவைப் பொறுத்தது, கனவுல வர்றது ஆம்பளையா இருந்தா என்ன? பொம்பளையா இருந்தா என்ன ரெண்டும் பிரோயஜனம் இல்லையே. மிக்க நன்றி ஆரண்ய நிவாஸ்.

    மிக்க நன்றி சிவா, அது ஊசிப் போன வடைதானே,
    வாங்க மலிக்கா, உங்க படம் காக்காயை வைத்து வந்த பதிவு, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    வாங்க ஸாதிக, அப்ப. அப்ப இது மாதிரி தத்துவம் எல்லாம் தொப்பையானந்தாவிற்கு வரும். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    வாங்க சாருஸ்ரீராஜ், மிக்க நன்றி, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    சுட்ட படமா? சுடாத படமான்னு வித்தியாசம் எல்லாம் கிடையாது, பதிவு போடனும். அவ்வளவுதான். சுசிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    வாங்க மேனகா, முதல்ல ஜலில்லாவும், மலிக்காவும் பார்க் மறைவுல தனியா சாப்பிட்ட கொழுக்கட்டையை உடைக்க முடியல்லைன்னு சொல்லிட்டேன், அப்ப உங்க தந்தூரி லெக் பீசை என்ன கிண்டல் சொல்வது என்று பார்த்த போது மேல தேதி இருந்தது, ஆதுனால அதைப் போட்டு பழசுன்னு(போனியாகத) சொல்லிவிட்டேன். இது எல்லாம் அப்படியே கற்பனையா வரும். உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    // உங்க தங்கமணியுடன் தந்தூரி சாப்பிட வாழ்த்துகிறேன்..இது எப்படி இருக்கு.. //

    அப்படி என்றால் உங்க வீட்டுக்கு வரும் வாய்ப்பே இல்லையா? எனக்கு என்னமோ தங்கமணி வரும் என்று நம்பிக்கை இல்லை.

    வாங்க தோழி இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,
    வாங்க அம்மு மது, அடுத்த பதிவில் உங்க காமெடியும் வந்துரும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,
    வாங்க மாதேவி, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,
    வாங்க கீதா ஆச்சாள், மிக்க நன்றி.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,
    வாங்க ஆனந்தி, பதிவர்கள் சமையலறையில் இன்னமும் படிக்கவில்லையா?

    பின்னூட்டங்களும், ஓட்டும் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  41. உங்க காக்காய நான் பிடிச்சிகிட்டு போய் என் பிளாக்கில விட்டுட்டேன்.

    ReplyDelete
  42. படிக்கப் படிக்க சிரிப்பை அடக்க முடியவில்லை. உங்களின்
    சிறந்த நகைச்சுவை உணர்வும்
    அருமையாக கதை எழுதும் திறமையும்
    அசத்த வைக்கிறது.
    உங்களின் திறமைக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  43. மிக்க நன்றி அம்மா, மனோ சாமிநாதன் அம்மா. தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  44. //அவங்க சுட்டுக்கிட்டு இருந்த கொழுக்கட்டையை அவங்களுக்கு தெரியாம சுட்டுக்கிட்டுப் போயிருச்சு.//

    சூப்பர் ஹிட் காமெடி! நல்ல சுவாரஸ்யமா இருந்தது சார்!!! கலக்கல்!

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.