Monday, April 19, 2010
பிண்டத்தில் உருவாகி
அண்டம் சதிராட பிண்டமாய் நான்
பிண்டத்தில் குடியிருந்து பிண்டமும்
பிண்டத்தைச் சுமக்க நீரினுள்
குடியிருந்தேன் நான்.
முக்கிலும், வாயிலும் நிணமும்
நீரும் சூழ்ந்துருக்க
நாபியில் சுவாசித்துப் பிண்டமாய் நான்,
தவிக்கின்ற பிண்டமாய் நான்
கையும் காலும் சுருட்டிக் கொள்ள
அசைய முடியா சூழலில்
அசைந்தாடும் பிண்டமாய் நான்
ஓசையின்று அழும் பிண்டமாய் நான்
தவிர்ப்பு ஏறி. இடம் போதாமல்
கை,கால் அசைத்து உதைத்து
எழும்பிப் பிண்டமாய் சுழன்று
உதைத்து உதைத்து பிண்டம் வெளி வர
பனிக்குடம் உடைத்து வெளிவர
பிண்டத்தில் இருந்து உயிர்ப்பு
நிலை எய்திப் பிண்டமாய் நான்,
எடுத்துக் கொஞ்சிய கைகளில்
குழந்தையாய் நான்.
நான் வளர்ந்து,வாழ்ந்து
நரை,திரை எய்தி
மரணிக்கும் நாளது
என் மகன் இட்டான் எனக்குப் பிண்டம்
பிண்டத்தில் இருந்து உருவாகிப் பிண்டமானேன்.
Subscribe to:
Post Comments (Atom)
//நான் வளர்ந்து,வாழ்ந்து
ReplyDeleteநரை,திரை எய்தி
மரணிக்கும் நாளது
என் மகன் இட்டான் எனக்குப் பிண்டம்//
அருமை,
ரொம்ப எளிமையா வாழ்கைய சொல்லிடீங்க. கவுஜ அருமை
இது சித்தரின் வாக்கு போலிருக்கிறது. அருமை
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுதலும் முடிவும் வரை அழகா சொல்லிட்டீங்க அண்ணா...
ReplyDeleteஒவ்வொரு மானிட பிறவியும் நினைவில் வைத்து கொண்டு, வாழ வேண்டிய கருத்து. ஆழ்ந்த அர்த்தம் கொண்ட கவிதை.
ReplyDeleteவாழ்வியலை அழகாய் கவிதை பாடிவிட்டீர்கள்.
ReplyDeleteஅடேங்கப்பா!!!
ReplyDeleteஒரு மனிதனின் உருவாக்கத்தில்
ஆரம்பித்து முடிவு வரை
சொல்லிட்டீங்களே!!!
அருமை.
எங்கிருந்து உங்களுக்கு இந்த வார்த்தைகள் கிடைத்ததோ...அந்த இடத்தை நமஸ்கரிக்கிறேன்....! வாழ்த்துக்குள் நண்பரே.....!
ReplyDeleteஹாய்...சுவாமிகளே...இது நீங்க ...நீங்க...நீங்களே எழுதுனதுதானே !
ReplyDeleteஇவ்ளோ நாள் எங்கே போச்சு இந்த ஞான்மெல்லாம்.மனித வாழ்வின் யதார்த்த நகர்வு.
தத்துவமான கவிதை சுதாகர்.
முதல்ல "கவுஜ" ன்னு இருக்கிறதை
கவிதை ன்னு மாத்துங்க.
பித்தன் உங்கள் பதிவுகள் அருமை
ReplyDeleteதமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.
இப்படிக்கு
டென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்
கணேஷ் பாபு
அருமை...
ReplyDeleteநகைச்சுவையிலிருந்து தத்துவத்தில் அடைக்கலமாகி விட்டீர்கள்!
ReplyDeleteபறவைகள் ஒலியெழுப்பிய குளக்கரை திடீரென்று மயான அமைதி கொண்டது போலிருக்கிறது!
வாழ்க்கையின் உண்மை நிலையை கடைசி வரிகளில் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!என் வாழ்த்துக்கள்!!
நல்லா எழுதி இருக்கீங்க.
ReplyDeleteபிண்டத்திலுருந்து தோன்றும் பிண்டம் அருமை.
ReplyDeleteமிகவும் அருமையாக எழுதி இருக்கின்றிங்க...
ReplyDeletenalla irukku anna!
ReplyDeleteஏன் சார்.. நல்லாத்தானே போயிட்டிருந்துச்சு..
ReplyDeleteஏன்..ஏன்.. இந்த கவிதை வெறி..
நல்லாத்தான் இருக்கு,... ஆனா எனக்கு புரியலே..ஹி..ஹி.. கொஞ்சம் பத்தாது சார்...
( சார்,... ப்ளீஸ் எனக்காக..அடுத்த பதிவில, ஒரு கதை சொல்லுங்க சார்.. இது அன்பு ரசிகனின் ரத்தவெறி கொண்ட வேண்டுகோள்....)
அருமை. வாழ்த்துக்கள்
ReplyDeleteசூப்பரா எழுதிருக்கிங்க ....
ReplyDeletesuperb.
ReplyDelete//பிண்டத்தில் இருந்து உருவாகிப் பிண்டமானேன்.//
ReplyDeleteஇதுதான் நிதர்சனம்
ரொம்ப நல்லா இருக்குண்ணா..
ReplyDeleteஜமாய்ங்க..
ஒரு வேளை சாமியாரா போக முன்னேற்பாடா ???. தலைவா ஒன்னும் புரியல !!!!!
ReplyDelete//அண்டம் சதிராட பிண்டமாய் நான்// முதல் வரியிலேயே நெஞ்சை தொட்டுட்டீங்க.. ஆமா! அந்த புகைபடத்தில் இருப்பது நீங்களா? நல்லாவே வண்டி ஓட்டுறீங்க.
ReplyDeleteசுழற்சி முறையில் மனித வாழ்க்கையை கவிதைக்குள் உயிர் தந்திருக்கிறீர்கள் சார்! அருமை!
ReplyDeleteமிக்க நன்றி எல்கே.
ReplyDeleteநன்றி சேட்டைக்காரன். சித்தர் வாக்கு இல்லை, பித்தன் புலம்பல் (மாத்தி விட்டேன்).
நன்றி தமிழரசி, (ஆகா, இந்தப் பதிவை இரண்டு கவியரசிகள் வாழ்த்தி இருக்காங்க, தமிழ், ஹேமு)
நன்றி சித்ரா,
நன்றி ஸாதிகா,
நன்றி சைவ கொத்துபுரோட்டா,
நன்றி தேவா, ஆனா இது கொஞ்சம் அதிகப்படியான பாராட்டு. இது ஒன்னும் நமஸ்காரம் பண்ணும் அளவுக்கு பெரிய விஷயம் இல்லை, வாழ்வின் நடைமுறையை,யதார்த்தத்தை எழுதியிருக்கின்றேன்.
என்ன கேள்வி இது ஹேமு. இது நான் நான் நானே எழுதியதுதான், ஏன் மண்டபத்தில் யாராது வந்து எழுதிக் கொடுத்தார்களே என்னும் சந்தோகமா? எனக்காக சோமசுந்திரக் கடவுள் வர்ற அளவுக்குப் பெரிய ஆளா என்ன?. இதுதான் உண்மையான பித்தன். ஆனா இப்படி எடுத்து விட்டால் தாங்க மாட்டார்கள் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றேன். அவ்வளவுதான். நீ கவிதை என்று சொன்னாலும், இது எதையே தேடும் பித்தனின் புலம்பலாகத்தான் தோன்றுகின்றது. இனி இந்த டைட்டிலில் இது போல வரும். நன்றி ஹேமு.
நன்றி கணேஷ் பாபு, இணைந்து விடுவேம்.
நன்றி ஸ்ரீராம்.
நன்றி மனோ அம்மா, யதார்த்தம் அவ்வளவுதான்.
நன்றி சாருஸ்ரீராஜ்,
நன்றி மாதேவி,
நன்றி கீதா ஆச்சாள் அவர்களே
மிக்க நன்றி தக்குடு பாண்டி,
வாங்க பட்டாபட்டி, ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் மாதிரி, எல்லா இடத்துலையும் ஒரு கால் வைக்கனும்.
நன்றி மதுரை சரவணனன்.தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
நன்றி மேனகாசத்தியா,
நன்றி அம்முமது,
நன்றி அபாரசித்தன், தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
வாம்மா சுசி, மிக்க நன்றி.
ஆகா ஜெய்லானி, நாம எல்லாம் சாமியாரா போயி, ஆசாமியாகி, போக்கிடம் இல்லாம அலையற பரதேசிகள் அப்பனே.
நன்றி ஜெய்லானி.
அண்டமும், கருப்பொருளும் சேர்ந்தால் தானே பிண்டமே வருது. அதான் முதல் வரியில் அண்டத்தை சதிராட விட்டு விட்டேன். அந்தப் படம் கூகிளாண்டவர் கொடுத்தது. நன்றி பிரின்ஸ்.
மிக்க நன்றி கவிதன்.
இந்த எண்ணங்கள் என் தந்தை இறந்து அவருக்கு காவிரிக் கரையில் பிண்டம் சேர்த்துப் பிடித்துப் பின்னர் கரைக்கும் போது, என்னை பிண்டமாக்கியவருக்கு நான் இடும் பிண்டம் அப்பா, என்ற ரீதியில் சிந்தனைகள் வந்தன. அதை இப்போது கவிதை ஆக்கிவிட்டேன். படித்த அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteபித்தன் சார் கவிதை நல்ல இருக்கு,அந்த பிண்டம் என்ற வார்த்தை தான் மனதை என்னவோ செய்யுது.
ReplyDeleteஆஸியா உமர் பிண்டம் என்பது சாதா வார்த்தைதான், சதைப்பொருள், கருப்பொருள் என்று பொருள்படும். மிருகத்தின் உடலை மாமிசம் என்பது போல. மனிதக் கரு அல்லது உடலை பிண்டம் என்பார்கள். ஆன்மா இல்லாத உடல்தான் பிணம். ஆன்மா இருக்கும் கருவும். சாதத்தில் புகுத்திய ஆன்மாவும் பிண்டம் என்று சொல்வார்கள். இது தவறு அல்ல.
ReplyDelete"Circle of life" - written poetically is awesome. Romba nalla irukku!Sila vaathaigal puriyalai. annalum enna solla var-reenga-nnu puriyarathu!
ReplyDeleteபித்தன் சார் , அருமையா இருக்கு, எனக்கு ரூம் போட்டு யோசிச்சாலும் இப்படி வரமாட்டேன்டுது
ReplyDeleteமுதலும் முடிவும்!
ReplyDeleteவாங்க கூல் லஸ்ஸி, தங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் எனது நன்றிகள்.
ReplyDeleteவாப்பா மங்குனி, என்ன ரொம்ப வேலையா? கொஞ்ச நாளா ஆளைக் காணேம். இல்லை ரூம் போட்டு யோசிக்க போய்விட்டாயா?. வருகைக்கு மிக்க நன்றி.
வாங்க அருணா, பூங்கொத்து எல்லாம் தரமாட்டிங்களா?. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
Weldon... Sudhakar...!
ReplyDelete////பிண்டமாய் நான்
பிண்டத்தில் குடியிருந்து
பிண்டமும்
பிண்டத்தைச் சுமக்க////
///மரணிக்கும் நாளது.... மகன் இட்டான் எனக்குப் பிண்டம்///
நல்ல வரிகள்...
நல்ல கவிதை... சுதாகர்...
'பிண்டமே கரு.. உரு... உலகம்... வாழ்க்கை'.... என ' எல்லாம் பிண்ட மயம்' என்று விளக்கிய கவிதை...
இதை படித்து... மனதில் பதித்தாலே... மனிததிற்க்குள் இருக்கும் ஆசை, ஆணவம், அகந்தை, காமம், குரோதம், பேராசை, பொறாமை, மாச்சர்யம் இவையனைத்தும் அழிந்துவிடும்....
Superb...!
நல்ல கவிதை....
Sorry..! I am too late...!
வாழ்த்துக்கள்..
நட்புடன்...
காஞ்சி முரளி....
ஸ்டுடென்ட் வாழ்கையில "இதெல்லாம் சகஜமப்பா"...!
ReplyDeleteசுதாகர் சார்...
நீங்க சொன்ன நிகழ்வைவிட சொன்ன விதம் அருமை...!
உங்கள டின்னு கட்டுன வாத்தியார் என்ன கோவத்தில இருந்தாரோ..?
வடிவேலு பாணியில் சொல்ல வேண்டுமானால்.... " வீட்டுக்குத்தான் அனுபுறாங்கலோன்னு... நம்பி...... ஏறுனம்மா.. நேரா ஒரு ......சந்துக்குள்ளார போச்சும்மா..... அங்க பத்து பேருமா... ரவுண்டுகட்டி அடிசான்ங்கம்மா . அதுல ஒருத்த சொன்னா... "இவ ரொம்ப நல்லவன்னு சொன்னாம்மா... எவ்வளவு நேரந்தா வலிக்காத மாதிரி நடிக்கறது..."
ஹி.. ஹி.. ஹி.. இந்த மாதிரி நாங்களும் வாங்கியிருக்கொமுங்கோ....
நான் பள்ளி வாழ்கைக்கு சென்று வந்த மாதிரி இருக்கு...
நல்ல இடுகை... தோழா...
வாழ்த்துக்கள்....
நட்புடன்...
காஞ்சி முரளி....
ஸ்டுடென்ட் வாழ்கையில "இதெல்லாம் சகஜமப்பா"...!
ReplyDeleteசுதாகர் சார்...
நீங்க சொன்ன நிகழ்வைவிட சொன்ன விதம் அருமை...!
உங்கள டின்னு கட்டுன வாத்தியார் என்ன கோவத்தில இருந்தாரோ..?
வடிவேலு பாணியில் சொல்ல வேண்டுமானால்.... " வீட்டுக்குத்தான் அனுபுறாங்கலோன்னு... நம்பி...... ஏறுனம்மா.. நேரா ஒரு ......சந்துக்குள்ளார போச்சும்மா..... அங்க பத்து பேருமா... ரவுண்டுகட்டி அடிசான்ங்கம்மா . அதுல ஒருத்த சொன்னா... "இவ ரொம்ப நல்லவன்னு சொன்னாம்மா... எவ்வளவு நேரந்தா வலிக்காத மாதிரி நடிக்கறது..."
ஹி.. ஹி.. ஹி.. இந்த மாதிரி நாங்களும் வாங்கியிருக்கொமுங்கோ....
நான் பள்ளி வாழ்கைக்கு சென்று வந்த மாதிரி இருக்கு...
நல்ல இடுகை... தோழா...
வாழ்த்துக்கள்....
நட்புடன்...
காஞ்சி முரளி....