Thursday, April 1, 2010

விளக்காடும் விநாயகர்


இது ஆன்மீகக் கட்டுரை அல்ல. இதுவும் ஒரு மொக்கைதான். இது உண்மையாக நடந்த சம்பவம். நான் பத்தாம் கிளாஸ் படித்த போது நடந்தது. படித்தபோது என்பதை வீட, நண்பனுடன் படிக்கின்றேன் என்று சொல்லி விளையாடப் போயிருவேன். அவன் வீட்டின் அருகில் அதிகம் வெளியில் தெரியாமல் ஒரு குட்டிப் பிள்ளையார் கோவில் இருக்கும். ஆறடி அகலமும்,எட்டடி நீளமும் கொண்ட ஒரு இருட்டுக் காங்கீரிட் கட்டிடத்தில்,பல வீடுகளுக்கு இடையில் இருக்கும்.ஆரவாரம் இல்லாத,கூட்டம் வராத கோவில் அது. காலையில் மட்டும் ஒரு புண்ணியவான் வந்து கோவிலைத் திறந்து, ஒரு குடம் தண்ணிய புள்ளையாரு மேல ஊத்தி,ரெண்டு வாழைப்பழம் வைச்சு பூசை பண்ணிப் பூட்டிப் போனால், அடுத்த நாள் தான் திறப்பார். கூட்டமும் இல்லாமல் படையல்,பூஜைகள் போன்றவை இல்லாமல்,ஒரு அழுக்கு வேஷ்டி, துண்டுடன்,என்னை மாதிரியே இருக்கும் ஏழைப் பிள்ளையார் அவர். கோவில் முன்னால் ஒரு திண்ணை இருக்கும். அதில் எப்பவும் குடிமகன்கள் கண்கள் சிவந்து, புகைப் பிடித்துக் கொண்டு உக்காந்து இருப்பாங்க. இவங்கதான் புள்ளையாருக்கு கம்பனி கொடுப்பவர்கள். (அட பேச்சுத்துணைக்கு அய்யா)


இப்படி இருக்கும் போது ஒரு நாள் தான் அந்த அதியசத்தைக் கவனித்தார்கள். பிள்ளையாரின் முன்னால் ஒரு சர விளக்கு,இரும்பு சங்கிலியில் கட்டித் தொங்க விட்டுருக்கும்.அது காலையில் மட்டும் ஏற்றப்படும். அந்த விளக்கு மெல்லியதாக தானக ஆடத் தொடங்கியது. ஒரே சீரான அசைவில் ஆடத் தொடங்கியது. முதலில் பார்த்தவர் அடுத்தவரிடம் சொல்ல, பின்னர் ஊர் பூராவும் பரவத் தொடங்கியது. எல்லாரும் அதிசயமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். பிள்ளையாரும் போமஸ் ஆகிவிட்டார். எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு பார்த்தார்கள். விளக்கை நிறுத்திப் பார்த்தார்கள். ஆனாலும் விளக்கு மெதுவாக ஆடிய வண்ணம் இருந்தது. ஊர் பூராவும் பேச்சு பரவியதால் எல்லாரும் கும்பலாக,அந்த அதிசயத்தைப் பார்க்கத் தொடங்கினர்கள்.கூட்டம் வர ஆரம்பித்ததும், பலரும் பல காரணங்களைச் சொல்ல ஆராம்பித்தார்கள். மக்கள் சூடும் சுவையுமாகப் பேச ஆரம்பித்தார்கள். ஆளாளுக்கு ஒரு காரணமும் கதையும் சொன்னார்கள்.

கூட்டத்தில் ஒரு பெண்மணிக்கு அருள் வந்து, பிள்ளையாரை யாரும் கவனிப்பது இல்லை,அதுனால கோபத்தில் இருக்கார்.ஆதலால் தான் விளக்கு ஆடுகின்றது எனக் கூறக் கோவில் களை கட்டியது. கோவிலுக்கு வெள்ளையடித்து,முன்புறம் பந்தல் போடப்பட்டு, வாழைத் தோரணம்,மாவிலை, மைக் செட் எல்லாம் அமர்க்களப்பட்டது. விளக்காடும் விநாயகர் என்று டைட்டில் வேற கொடுத்துட்டாங்க. பிள்ளையாரைத் தரிசிக்க நிறைய பெண்மணிகள் கோவிலுக்கு வர,ஊர் திரண்டு அமராவதி ஆற்றில் இருந்து ஊர்வலமாக தீர்த்தம் எடுத்து வந்து திருமஞ்சனம்,ஆராதனை என்று அமர்க்களப் பட்டது. புது வேஷ்டி,புது துண்டு என கனேஷ் கலக்க ஆரம்பிச்சுட்டார். நிறைய கூட்டமும்,பலூன் கடைகளும்,கோலங்களும், சுண்டல்களும் எனக் கோவில் களை கட்டியது. அன்று மாலைதான் விளக்கு ஆடுவது நின்றது. பிள்ளையாரின் கோபமும் குறைந்ததாக அனைவரும் பேசிக் கொண்டார்கள். பூஜைகள்,கூட்டம் எனத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஊர் பூராவும் இதுதான் பேச்சு.

இரண்டு நாள்தான் இந்தக் கூத்து நடந்தது. இரண்டு நாள் கழித்து மீண்டும் விளக்கு ஆட ஆராம்பித்தது. மக்கள் குழம்பிப் போயினர். விளக்கு ஆடும் மர்மம் ஏன் என்று தெரியவில்லை. பூஜைகள் தொடர்ந்தன. பின்னர் சிலர் விளக்கு ஆடும் மர்மத்தை கண்டு பிடிக்க முயற்ச்சி செய்தார்கள். ஒரு குறிப்பிட்ட சமயம் விளக்கு ஆடிப் பின்னர் நின்றதையும் குறித்துக் கொண்டார்கள். அப்புறமாகக் காரணத்தையும் கண்டு பிடித்தார்கள். கோவிலின் பின் புறம் ஓட்டினார் போல நாலு பில்டிங் தள்ளி புதுசா ஒரு மாவு மிஷின் கடை ஒன்று திறந்தார்கள். அங்கு மாவு மிஷின் ஓடும் போது எல்லாம் அந்த கட்டிட அதிர்வில் விளக்கு ஆடுவதையும், மிசின் நின்றால், விளக்கு நிற்பதையும் கண்டறிந்தனர். காரணம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் எல்லாருக்கும் சப் என்று போனது. அவனவன் பிழைப்பைப் பார்க்கப் போனார்கள். அதுக்கு அப்புறமும் ஒரு வாரம் கூட்டம் வந்து போனது, இறுதியில் சுத்தமாகக் குறைந்து பேனது. பிள்ளையாரும் அதுக்கு அப்புறம் பழையபடி, அழுக்கு வேஷ்டிப் பிள்ளையார் ஆகிவிட்டார். மறுபடியும் அவருக்கு குடிமகன்கள் மற்றும் புகைப் பிடிப்பர்வர்கள் தான் துணை.
இது நடந்து ஒரு வாரம் கழித்து சர்ச் வாசலில் உள்ள மேரி மாதா படத்தில் இரத்தம் வழிகின்றது என்று ஒரு பரபரப்புக் கிளப்பினார்கள்.பின்னர் அதுவும் அடங்கியது. என்ன பண்ணுவது கடவுள் என்றாலும் நம்ம மக்கள் மாய மந்திரம்,அதிசயம் மாதிரி ஜோப்படி வித்தை எதாவது செய்தால் தான் கடவுள் என்று ஒத்துக் கொள்வார்கள் போல.

டிஸ்கி: எனக்கு கடந்த ஒருவார காலமாக வைரல் பீவர் வந்து போனது. இப்ப பரவாயில்லை. ஆனாலும் ஜலதோசமும்,கடுமையான உடல் வலியும் உள்ளது. இப்ப மூனு நாள் வார இறுதி விடுமுறை வருகின்றது. அதுனால நல்லா ரெஸ்ட் எடுக்கப் போறேன். திங்கள் சந்திப்போம். நன்றி.

17 comments:

  1. விளக்காடும் காரணம் அருமை. உடம்பை பாத்துக்கோங்க நண்பா! ஓய்வெடுத்து சும்மா கும்முனு தெம்பா வாங்க!

    பிரபாகர்.

    ReplyDelete
  2. ஊர்ல‌ இது போல‌த்தான் நிறைய‌ செய்திக‌ள் பிர‌ப‌ல‌மாகும்... ரெஸ்ட் எடுத்துவிட்டு பொறுமையா வாங்க‌ சார்..

    ReplyDelete
  3. rest edutukonga sir,, udambu romba mukkiam

    ReplyDelete
  4. கடைசீலயாவது கண்டு புடுசான்களே

    ReplyDelete
  5. எப்படியெல்லாம் கிளப்புறாங்க.........
    Take care.

    ReplyDelete
  6. மங்குனி அமைச்சர் --//கடைசீலயாவது கண்டு புடுசான்களே//

    என்னத்தை கடைசீலயாவது கண்டு புடுசான்களே, மரமண்டை, நெனச்சாலே அழுவாச்சியா வருதுயா, அப்ப ஊர்ல முழு நேர கரண்ட் கட் இல்ல அதான் . அப்ப இந்த ஏர் காடு மினிஸ்டர் இல்லையா

    ReplyDelete
  7. அப்பையும் வெயில் காலத்துல எல்லாம் நெய்வேலி புரட்டக்ஷன் குறையும். அப்பவும் கரண்ட் கட் ஆகும். ஆனா இது போல தினமும் சிஸ்டமேட்டிக் எல்லாம் கட் பண்ண மாட்டாங்க. அப்ப கரண்ட் கட் ஆனா ஜாலி. கரண்ட் வருகிற வரை படிக்காம விளையாடாலாம். காலனி புள்ளைக கூட இருட்டுல ஜஸ் நம்பர் விளையாடலாம்.

    ReplyDelete
  8. mokkai padhivar sangam welcomes you! :-)


    Take good care of your health.

    ReplyDelete
  9. ரெஸ்ட் எடுங்க அண்ணா.. உடம்ப பாத்துக்கோங்க.

    எங்க ஊர் பிள்ளையார்ல இருந்து தேன் வந்துது அண்ணா :))

    ReplyDelete
  10. //அங்கு மாவு மிஷின் ஓடும் போது எல்லாம் அந்த கட்டிட அதிர்வில் விளக்கு ஆடுவதையும், மிசின் நின்றால், விளக்கு நிற்பதையும் கண்டறிந்தனர்.//

    எனக்கு முன்னாடியே தெரியும் இது போல ஏதாவது இருக்குமென்று, அப்புறம் சாமி ஆடிய அந்த பெண்மணியை பார்த்தீர்களா

    ReplyDelete
  11. ம்ம்ம்ம் என்னன்னமோ நடக்குது..உடம்பை கவனமக பார்த்துக்குங்க...

    ReplyDelete
  12. தோழரே...

    பிள்ளையார் பல் குடிக்கிற கதைதான்...
    எத்தனை பெரியார்கள் பிறந்தாலும் (அதற்காக அவர் சொன்னது அனைத்தும் வேதமாகிவிடாது... ஒட்டுமொத்த சமுதாயத்தை பாதிக்கும் மூடநம்பிக்கைகளை மட்டும்.... உதாரணமாய் பிரேமானந்தா, நித்யானந்தா...) நாமும் நம்மக்களும் திருந்தமாட்டோம் என்றால் எப்படி....
    நம் மக்கள் முட்டாள்தனதிற்க்கு நல்ல எடுத்துக்காட்டு....

    தாங்கள் சென்ற சில இடுகைகளுக்கு முன்னால்.... என் comments க்கான தாங்கள் பதிலில்

    ///நன்றி காஞ்சி முரளி, நீங்கள் பதிவு எதுவும் இடுவது இல்லையா?. படிப்பது மட்டும்தானா?. என்னால் உங்களின் பிளாக்கை அடையாளம் காண இயலவில்லை. நீங்க சின்னக் காஞ்சிபுரமா? பெரிய காஞ்சியா?. சின்னக் காஞ்சி கோவில் அருகில் எனது உறவினர்கள் உள்ளார்கள்.///

    என் பணிச் சுமையின் காரணமாக தங்களின் இந்த பதிலை பார்க்கவில்லை... sorry...!

    தோழரே.... உங்களைப் போல நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை... என் computer knowledge very poor....! சும்மா ஏதோ accidentடாக கணினி துறையில் பணிபுரிகிறேன்... 1997 வரை computer என்றால் எப்படியிருக்கும் என்றுகூட தெரியாது... எப்பிடியோ தத்திதத்தி கொஞ்சம் கத்துகிட்டு நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்... எனக்கு "பிளாக்" ஏதும் இல்லை.... பணிச் சுமையின் காரணமாக relax செய்திட தங்களைப் போன்ற தோழர்களின் "பிளாக்"க்கு வந்து செல்வது வாடிக்கை.... பிடித்திருந்தால் கருத்துக்கள்... சிலநேரம் விமர்சனம்... இதுவே என்னைப்பற்றி....


    அடுத்து....

    நானும் தங்கள் காஞ்சிபுரம் மாவட்டம்தான்....
    நான் பிறந்தது, வளர்ந்தது, கற்றது அனைத்தும் காஞ்சிபுரம்தான் ....
    பஸ் ஸ்டாண்டு அருகில் மூங்கில் மண்டபம் அருகேதான் என் வீடும்....
    என் பள்ளி, கல்லூரி நண்பர்கள் நிறைய பேர் தாங்கள் குறிப்பிட்ட சின்ன காஞ்சிபுரம் பெருமாள் கோவில் உள்ளனர்....

    தற்போது நான் சென்னையில் பணிபுரிகிறேன்... என் தாய் மற்றும் சகோதரர் இன்றும் காஞ்சிபுரதில்தான் உள்ளனர்....

    உடம்பை கவனமாய் பார்த்துக்குங்க...
    take care.... friend...

    நட்புடன்....
    காஞ்சி முரளி....

    ReplyDelete
  13. விளக்காடும் விநாயகர் சூப்பருங்க..
    ஆடின காரணம் தான் டாப்.. ரொம்ப நல்லா இருக்கு..

    ReplyDelete
  14. நன்றி பிரபாகர்,
    நன்றி நாடோடி,
    நன்றி எல்கே,
    நன்றி மங்குனி அமைச்சரே,
    நன்றி சைவ கொத்துபுரோட்டா,
    நன்றி ஜெய்லானி,
    நன்றி சித்ரா,
    நன்றி சித்ரா, உங்க ஊருலையும் இதே கதைதான. நாடு விட்டு நாடு போனாக் கூட மக்கள் மாறமாட்டார்கள்.
    நன்றி சசிகுமார்.
    நன்றி மேனகாசத்தியா,
    தகவலுக்கு நன்றி காஞ்சி முரளி. நானும் பெட்டி தட்டும் வேலை அல்ல. கணக்குப் பிள்ளை உத்தியோகம்தான்.எனக்கும் கணிணி அவ்வளவாக தெரியாது. நான் ஈரோடு மாவட்டக்காரன். காஞ்சிபுரம் அல்ல. கடைசியாக பத்து வருடங்கள் இருந்தது காஞ்சி மாவட்டம். பெறந்த போது எங்க ஊரு இருந்தது கோயமுத்தூர் மாவட்டம்,அப்புறம் மாத்தியது ஈரோடு. இப்ப எங்க ஊர் இருப்பது திருப்பூர் மாவட்டம். எதிர்காலத்தில் தாராபுரம் தனி மாவட்டமாகும் என்று நினைக்கின்றேன்.
    தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஆனந்தி,
    நன்றி தெய்வசுகந்தி.

    பின்னூட்டமும்,ஓட்டுக்களும் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  15. sire. http://vezham.co.cc pona vezham magazine padikalam

    ReplyDelete
  16. ஒரு ஆர்வத்துல செய்யிறதுதான்..தலைப்பை பார்த்த்தும் உங்க பதிவ பார்க்க ஓடிவற்றமே அதுமாதிரிதான்..

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.