Friday, April 23, 2010
அய்யாவாவது ஆட்டுகுட்டியாவது
நான் அடி வாங்கின கதையைக் கேட்டீர்கள், நான் வாத்தியாரிடம் அடி வாங்கிய நிகழ்வு இது ஒன்றுதான். நான் ரொம்ப சமர்த்து என்பதால் (அட நம்புங்கப்பா) இதுக்கு அப்புறமும்,சரி முன்னரும் சரி, அடி வாங்கியதில்லை. இன்னேரு சம்பவம் என் பள்ளி நாளில் என் எச்சரிக்கை மீறியதால் ஒருத்தன் தர்ம அடி வாங்கிய சம்பவம் இது. அடுத்தவன் அடி வாங்கியதையும் சொன்னால் தானே நமக்கு ஒரு ஆறுதல்.
எங்கள் பள்ளியில் ஒரு தமிழ் அய்யா இருந்தார். அவர் பெயர் இப்ராஹிம் அய்யா, நல்லா தாட்டியா, கட்ட முட்டையா இருப்பர். அவரு கை மட்டும் சும்மா சப்பாத்தி மாதிரி தடிமனா விரிந்து இருக்கும். ஒரு அறை விட்டா கன்னம் அப்படியே சிங்கார் குங்குமம் தடவுன மாதிரி சிவந்து விடும்.ஆனால் நல்ல குழந்தையைப் போல அனைவரையும் நடத்துவார். இப்ராஹிம் அய்யா கம்பராமாயணம் நடத்தினால் நாள் பூரா கேக்கலாம், அவ்வளவு சுவையாகவும் இனிமையாகவும் இருக்கும். சில சமயம் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும்,சில சமயம் அடி பின்னிப் பொடலெடுத்து விடுவார். என் வீட்டின் மீது நல்ல மரியாதை வைத்து இருந்ததால் என்னமே இவர் என்னை அடித்தது இல்லை. அப்புறமும் கேக்கும் கேள்விகளுக்கு ஒழுங்கா பதில் சொல்லிவிடுவேன். படிப்பிலும் குறை வைக்க மாட்டேன். ஆதலால் என்னை அடிக்கும் சம்பவம் இல்லை.
ஒரு நாள் நானும், என் நண்பனும் வகுப்புக்கு கொஞ்சம் தாமதமாகப் போனேம். அய்யா வந்துவிடுவார் என்று வகுப்புக்கு ஓடிப் போனேம். முன்னால் சென்ற நண்பன் ஓடிய வேகத்தில் வகுப்புக்குள் ஒரு கால் வைத்து விட்டான். பின்னர் அய்யா இருப்பதைப் பார்த்து நின்று " உள்ளே வரலாமா? அய்யா என்றான். எங்களுக்கு காலதாமதம் அடிப்பாரே என்ற பயம். ஆனால் அய்யா சிரித்தபடி, "அதான் திறந்த வீட்டில் வருவது போல உள்ளே வந்துட்டியே அப்புறம் என்ன உள்ளே வரலாமா? கூடாதான்னு ? உள்ள வா" என்றார். அவன் உள்ளே சென்றான். நானும் சரி கேக்காம போனா நல்லா இருக்காதேன்னு எக்யூஸ்மி சார் என்றேன். அவர் உடனே" " யேவ் அய்யிரே இந்த லொள்ளுதானே ஆகாது, தமிழ் வகுப்பில் என்ன எச்சுவுச்சு மி?, உள்ளாற வந்து தொலை என்றார். அதில் இருந்து நான் எதாவது சொல்ல எழுந்தால் எச்சுவுச்சு மீன்னு கிண்டல் செய்வார். அதில் இருந்து சில நாள் நான் பள்ளியில் எச்சுவுச்சு மி சுதாகர் ஆனேன். சமிபத்தில் ஒரு நாள் என் சொந்த ஊரில், எங்க தெரு வழியாக நடந்து சென்றார். நான் உடனே ஓடிச் சென்று அவரிடம் நலம் விசாரித்தேன். என்னைத் தெரிகின்றதா சார் என்றேன். அவரும் என்னப்பா உன்னைத் தெரியாம எப்படி இருக்கும், நீ எச்சுவுச்சு மி சுதாகர்தானே என்றார். பின்னர் என் தந்தையின் உடல் நலன் குறித்து விசாரித்துப் போனார். என்னைப் பற்றிக் கேட்டதுக்கு நான் சிங்கையில் இருப்பதைச் சொன்னேன். அவரும் எப்படியோ நல்லா இருந்தா சரி ரொம்ப சந்தோசம்பா என்றி சொல்லி மகிழ்வுடன் சென்றார். சரி, வாத்தியார் பற்றிச் சொல்லிவிட்டேன் பதிவுக்குப் போலாமா?
ஒரு நாள் எங்கள் பள்ளியில் எங்களுக்கு பி.டி கிளாஸ் வந்தது, நாங்களும் விளையாடுவதுக்காக சாட்பால் பேட் மற்றும் பந்தை எடுத்துக் கொண்டு போனேம். அப்போது பேட் என் நண்பன் கார்த்திகேய அய்யப்பன் என்பவனிடம் இருந்தது. அவன் கிரவுண்டுக்கும் நடந்து செல்லும் வழியில் பேட்டை தடி சுழற்றுவது போல சுற்றிக் கொண்டு போனான். நான் டேய் வழியில் யாராவது வருவார்கள் என்றேன். உடனே அவன் "எதுக்கு வாரானுங்க"ஓரமாப் போகச் சொல்" என்றபடி சுழற்றினான். நான் பின்னால் திரும்பிப் பார்க்கவும். கழிவறைக்காக எங்களின் பின்னால் இப்ராஹிம் அய்யா வரவும் சரியாக இருந்தது. நான் உடனே டேய் அய்யா வர்றாருடான்னு கத்தினேன். உடனே அவன் குஷியாக, "அய்யாவாது ஆட்டுகுட்டியாவது" என்று சொல்லிக் கொண்டே திரும்பாமல் சுற்றினான். நான் மறுபடியும் டேய் இப்ராஹிம் அய்யாடா என்றேன் சத்தமாக. சடக்கென்று நிறுத்தி விட்டு,சுதா சும்மா வரமாட்டியா, அய்யா அய்யா வர்றாருன்னு" என்று அவன் சொல்லி முடிப்பதுக்குள் ஒரு நாலு அறை சப்பு சப்பென்று விழுந்தது. அவன் அய்யா அய்யான்னு கத்திக் கெண்டே அறை வாங்கினான். அய்யா சொன்னார், " வழியில் சுழற்றுவது தவறு, அதிலும் இவன் அய்யா வர்றாருன்னு சொல்லியும் சுழற்றுகின்றாய்ன்னு" சொல்லி அடித்தார். அவன் அய்யா, "இவன் விளையாட்டுக்குச் சொன்னான்" என்று நினைத்தேன் என்றான். அவரும்,"அய்யாவாது ஆட்டுக் குட்டியாவது என்று வேற சொல்லுகின்றாய்,எவ்வளவு திமிர்டா உனக்கு" என்று சொல்லி,மொத்தமாக ஒரு முப்பது அறை விழுந்து இருக்கும். நானும் என் நண்பர்களும் அமைதியாய் இருந்து விட்டேம்.
அய்யப்பன் நல்ல சிவந்த பையன், வாங்கிய அறைகள் மேலும் அவன் கன்னத்தை நல்லா சிவக்க வைத்து விட்டது. கன்னத்தை தடவியபடி என்னைப் பார்த்தான். உடனே நான், "டேய் நாந்தான் சொன்னேன் இல்லை, அய்யா வர்ராருன்னு, அதுக்கு அப்புறம் ஏண்டா சுத்தினாய்" என்றேன். "எனக்கு என்ன தெரியும் நீ தமாசுக்கு சொன்னாய்" என்று நினைத்தேன். "இப்ராஹிம் அய்யா என்று நீ மொதல்லே சொல்லியிருக்கலாம்" என்றான். சரி சரி விடுடா என்று விளையாட கிரவுண்டுக்குப் போனேம்.
நீங்களும் எல்லாரும் ஒழுங்கா ஒழுங்கா கமெண்ட் போட்டுவிடுங்கள் இல்லை என்றால் அய்யாவிடம் சொல்லி விடுவேன். நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
//"அய்யாவாது ஆட்டுக் குட்டியாவது என்று வேற சொல்லுகின்றாய்,எவ்வளவு திமிர்டா உனக்கு//
ReplyDeletehmmm
//எச்சுவுச்சு மி சுதாகர்//
ReplyDeleteithu nalla irukeee
//உங்க கனவுல பூதம் வரும்//
ReplyDeleteunka tamil vaaththiyaaraiyaa sonneenga?
:-((
ReplyDelete:-)))
ஹா...ஹா...
ReplyDeleteசுதாகரன்...
ReplyDeleteசுபெர்ப்ப்... இடுகை...
தங்கள் இடுகையின் நடுவில்...
கல்வி கற்றுத் தந்த ஆசானை - 'குருவை' இன்றும் மறவாமல்....
இன்று தாங்கள் உயர்ந்த இடத்தில் இருந்தாலும்..
அவரைக் கண்டும் காணமால் செல்லாமல்....
நலம் விசாரித்த தங்கள் பண்புக்கு... ஓர் சபாஷ்....!
நட்புடன்....
காஞ்சி முரளி....
வாங்குன அடியில ஒண்ணாவது அவன் உங்களுக்கு கொடுத்திருக்கணும்....
ReplyDeleteஐயா, கமெண்ட் போட்டுவிட்டேன் ஐயா, இப்ராஹிம் அய்யாவிடம் சொல்லி நையப்புடைச்சிராதீங்க ஐயா!
ReplyDeleteஅண்ணா.. நான் கமன்ட் போட்டாச்சு..
ReplyDeleteஅண்ணன், பள்ளி நினைவுகளுடன் எழுதும் இடுகைகளில் எல்லாம் ஒரு குழந்தையின் துள்ளல் நடை இருக்கும். இதிலும் இருக்கிறது. :-)
ReplyDelete//நீங்களும் எல்லாரும் ஒழுங்கா ஒழுங்கா கமெண்ட் போட்டுவிடுங்கள் இல்லை என்றால் அய்யாவிடம் சொல்லி விடுவேன்//
ReplyDeleteகமெண்ட் போட்டுட்டேன்
அடுத்தவன் அடி வாங்குனா , உங்களுக்கு அவ்வளோ சந்தோசம் , ம் ம்ம்ம்ம்ம்ம்ம்......................
ReplyDelete//இப்ராஹிம் அய்யா கம்பராமாயணம் நடத்தினால் நாள் பூரா கேக்கலாம்.//
ReplyDeleteஇந்த இடத்தில் உங்கள் குருவை நானும் மதிக்கிறேன் சுதாகர்.
பாருங்க....அடியும் வாங்கிக் குடுத்திட்டு அதையும் ரசிச்சிட்டு பதிவு வேறயா போடுறீங்க.இருங்க இருங்க.அதே ஐயாவும் ஆட்டுக்குட்டியும் உங்களுக்கும் அடி குடுத்த கதையும் சொல்லுவீங்க !
//" யேவ் அய்யிரே இந்த லொள்ளுதானே ஆகாது, தமிழ் வகுப்பில் என்ன எச்சுவுச்சு மி?,//
ReplyDelete"சிவந்த கன்னங்கள்" என்று தலைப்பிட்டிருக்கலாம்...!!
ReplyDeleteஉங்கள் இந்த இடுகை யூத் ஃ புல் விகடனில் குட் ப்ளாக் லிஸ்ட்டில் பார்த்தீர்களா..?
ReplyDeletehttp://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp
சூப்பர் கதை சார், உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDelete//இன்று தாங்கள் உயர்ந்த இடத்தில் இருந்தாலும்..
ReplyDeleteஅவரைக் கண்டும் காணமால் செல்லாமல்....
நலம் விசாரித்த தங்கள் பண்புக்கு... ஓர் சபாஷ்// delhikku rajava irunthaalum namba vaathyarukku yennikkum naama studentuthaan illaiyaa anna!!...;)
ha ha...
ReplyDeleteஒவ்வொரு நிகழ்வும் சுவாரசியமாக இருக்கிறது ...
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteanna, youthful vikatanin good blogs la indha idugai vandhurukku. Congrats!
ReplyDeleteஏதோ உங்கள முடிஞ்ச உதவி.. செஞ்சீங்க..
ReplyDeleteஉங்க பிரண்ட் தான் புரிஞ்சுக்காம தர்ம அடி வாங்கிட்டாங்க.
நல்லா இருக்கு.. :)
நாங்க பதிவு போட்டம் ,அப்ப நீங்க
ReplyDeleteநண்பனை மாட்டிவிட்டுட்டு அத பதிவு போட்ட உங்களைத்தான் இப்ராஹீம் ஐயா-கிட்ட புடிச்சுக் குடுக்கனும்..!
ReplyDeleteChitra said...
ReplyDeleteanna, youthful vikatanin good blogs la indha idugai vandhurukku. Congrats!
//
வாழ்த்துக்கள்.. எப்ப சார் டீரீட்?.. ஹி..ஹி
ஒவ்வொரு நிகழ்வும் சுவாரசியமாக இருக்கிறது..
ReplyDeleteநிஜம்தான் சுதாகர்சார்.
அதுசரி காக்காவ சுட்டுகிட்டுபோனதோட சரி
காணோம் ஆளையே.
எங்காவது ஆளைசுட போயிட்டேளா..
//" யேவ் அய்யிரே இந்த லொள்ளுதானே ஆகாது, தமிழ் வகுப்பில் என்ன எச்சுவுச்சு மி?, உள்ளாற வந்து தொலை என்றார். அதில் இருந்து நான் எதாவது சொல்ல எழுந்தால் எச்சுவுச்சு மீன்னு கிண்டல் செய்வார்...//
ReplyDelete:)))nalla per.