Wednesday, April 21, 2010
சொல்லிச் சொல்லி அடிச்சாங்கப்பா
முஸ்கி: நம்ம பட்டாபட்டி, போன பதிவில் சார், சார் ஒரு கதை சொல்லுங்கன்னு சொன்னார். அவருக்கு குஷிப்படுத்தும் வகையில் என் அனுபவத்தைப் பதிவாய்ப் போடுகின்றேன். இது அவருக்கு இன்னமும் குஷியாயிருக்கும்.
சுதாக்குட்டி(நான்) ரொம்ப சமத்துப்பையன், (ஹலோ என்ன பிலாக் விட்டுப் ஓடிப்போறிங்க)அப்படின்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லிப்பாங்க. அதுபோல படிக்கறப்ப நான் கொஞ்சம் சமத்துதான்(இப்ப இல்லை). ஆனா இப்பவும்,அப்பவும், எப்பவும் எங்கிட்ட ஒரு குறை, என்ன என்றால் யாராது தவறாக பேசினால் அல்லது எதாவது தவறு செய்தால் உடனே ஸ்பாட்டில் சட்டுன்னுகோபம் வரும். மிகவும் தன்மையாக,மென்மையாக பழகும் ஒருவனா இப்படி என்று நினைப்பார்கள். ஆனா அடுத்த பத்தாவது நிமிடத்தில் நானே போய் மன்னிப்பு கேப்பேன் அல்லது என் இப்படி செய்தீர்கள் என்று கேட்டு சரி செய்வேன். அதுக்காக எப்பவும் இப்படி வரும் முன்கோபம் என்று நினைக்க வேண்டாம், இது எப்பாது வரும் அல்லது வெடிக்கும் எரிமலை. ஆனால் சீக்கிரம் புஸ்வாணம் ஆகிவிடும். அதுக்காக நான் எல்லாரிடமும் இப்படி நடந்து கொள்ள மாட்டேன். நான் யாரை அதிகம் நேசிக்கின்றேனே அல்லது பாசம் வைக்கின்றேனே, அவர்களிடம் மட்டும்தான் இந்தக் கோபம் வெளிப்படும். இது உரிமை என்பதா அல்லது அதிக எதிர்பார்ப்பின் வெளிப்பாடா என்பது தெரியாது.நான் இப்போது இந்தக் கோபத்தைக் கட்டுபடுத்த ஆரம்பித்துள்ளேன். இப்ப பரவாயில்லை. நான் பிளஸ் ஒன் படிக்கும் போது வந்த கோபத்தில் கத்த, அது என்னை தர்ம அடி வாங்க வைத்தது. நானும் ஹீரோதான் பதிவில் இந்த பதிவு வரும் என்று சொல்லியிருந்தேன். இப்ப பதிவுக்குப் போலாம்மா?
பிளஸ் ஒன் படிக்கும் போது, காலாண்டு பரிச்சைகள் முடிந்து விடைத்தாள்கள் கொடுத்தார்கள். அது சமயம் கணித ஆசிரியர் திரு. முத்துசாமி என்னும் நல்ல மனிதர், உயர்வானவர். கண்ணியம் மிக்கவர். எங்களின் கணிதத் தாள்களைக் கொடுத்தார். அப்போது சக மாணவர்கள் எல்லாரும் கையில் ஒரு ரெட் இங்க பேனா வச்சுக்கிட்டு, அவனுகளா ஒரு டிக் மார்க் போட்டுக்கிட்டு, ஒன்னு,இரண்டு மார்க் போட்டு, சாரிடம், " சார் டோட்டல் மிஸ்டேக் என்று சொல்லி, அதிக மார்க் எடுத்தார்கள். நான் என் விடைதாளை செக் செய்த போது அதில் நாலு மார்க் கூட்டலில்(உன்மையாக) விடுபட்டு இருந்தது. நான் போய்க் கேக்கலாம் என்ற போது பெல்லும் அடித்து விட்டது. மாணவர்கள் கும்பலாய் வகுப்பில் இருந்து வெளியே போகும் போது கூட மார்க் கேட்டனர். அவரும் ஒரு சிலருக்கு போட்டுக் கொடுத்து, நடந்து கொண்டியிருந்தார். இப்படி போட்டு அவர் வெறுத்துப் போகவும், நான் போகவும் சரியாக இருந்தது. நான் கேக்க ஆரம்பிக்க, அவர் போங்கடா, போங்க, போட்டதுதான் மார்க், இனி யாருக்கும் மார்க்கை கூட்டிப் போட மாட்டேன் என்றார். தப்பாகப் போட்டுப் போனவர்களுக்கு எல்லாம் மார்க் போட்டுவிட்டு, நியாமாகப் போய்க் கேட்ட என்னை உதாசினப்படுத்தியது, திடிரென்று என்னைக் கோபப்படுத்தியது. நான் உடனே " சார் இது டோட்டல் மிஸ்டேக், நான் ஒன்னும் வேணும் என்று போட்டு வரவில்லை" என்றேன். அவரும் எதுவா இருந்தாலும் சரி இனி போட முடியாது, போட்ட வரை அவ்வளவுதான் போ என்று திரும்பி நடக்க ஆரம்பித்தார். நான் உடனே கோபமாக " போடா .......... என்று திட்டி விட்டேன். இன்று வரை யோசித்தாலும், நானா அப்படி நடந்து கொண்டேன், ஏன் அப்படி செய்தேன் என்று புரியவில்லை. என்னை நான் கட்டுப்பாடு இழந்த சமயம். அவர் காதில் விழுந்து கூட அவர் சட்டை செய்யவில்லை. ஆனால் நான் திட்டிய சமயம் என் பின்னால் வந்து கொண்டு இருந்த இராமசாமி என்ற வாத்தியாருக்கு கேட்டு விட்டது.அவர் என் பின்னால் வா என்று சொல்லி என்னை பிஸிக்ஸ் லோப்புக்கு கூட்டிச் சென்றார். அப்போது கூட என் கோபம் குறையவில்லை. (தூய தமிழ்ன்னா கட்டுரை மாதிரி இருக்கு,இனி மொக்கையாகவே, என் பாணியில் சொல்கின்றேன்.)
நானும் அவர் பின்னால் சென்றேன். அங்கு, முத்துகோபல், லோகநாதன், குழந்தைவேலு மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் இருந்தனர். (என் பழைய பதிவுகளைப் படிக்காதவர்களுக்கும், புதியவர்களுக்கும் இந்த இடத்தில் ஒன்று சொல்கின்றேன். எங்க அப்பா கல்வித்துறையில் மூத்த எழுத்தராக (சீனியர் ஹெட் கிளார்க்) பணி புரிந்து ரிடையர்டு ஆனார். அவர் ஹெட் கிளார்க் என்றாலும் மாவட்ட கல்வி இயக்குனர் கூட எழுந்து நின்று வணங்கும் வகையில் மூத்தவர்,திறமையானவர். அந்த துறையின் சட்ட நுணுக்கள் அனைத்து அறிந்தவர். பய பக்தி ஒழுக்கம் மிக்கவர். இவர் சென்றால் இயக்குனர் கூட எழுந்து நின்று வணக்கம் சொல்லிவிட்டுப் பின்னர் உக்காந்து கேள்வி கேப்பதை நான் பார்த்து இருக்கின்றேன். இது மரியாதை காரணமாக வந்தது. செல்வாக்கால் அல்ல. அப்படி என்றால் எவ்வளவு சிறந்த மனிதராக இருந்து இருப்பர். என் அக்கா அந்த ஊரில் டீச்சராக இருந்தார்கள். நான் பெரிய மனுசன் ஆனது எப்படின்னு மூன்று பதிவுகளைப் படித்தல் உங்களுக்கு என் அக்காவைப் பற்றியும் தெரியும்.) சரி சொந்த புராணம் விட்டு பதிவுக்குப் போவேம்.
இராமசாமி போயி நான் சொன்னதைச் சொல்லியவுடன் எல்லாருக்கும் ஆச்சரியம். வியந்து அல்லது அதிர்ந்து போயி என்னைப் பார்த்தார்கள், விஸ்வனாதன் மட்டும் சீக்கிரம் வந்து நீயாடா நான் எதிர்பார்க்க வில்லை என்று சொல்லி, என்ன தைரியம் இருந்தால் வாத்தியாரைத் திட்டுவாய் என்று சொல்லி அடிக்க ஆரம்பித்தார். அடின்னா, சும்மா மனுசன் ஊடு கட்டி அடிச்சார். இரண்டு கையிலும் மாறி மாறி அறைந்தார். என்னைப் பார்த்துப் பார்த்து நீயா? நீயா? எனக் கேட்டுக் கேட்டு அடித்தார். பின்னர் முட்டி போடச் சொல்லி விட்டார். அவருடன் இருந்த் முத்துகோபல் என்ற ஆசிரியர், எங்கள் குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர். அவரின் மனைவி சரஸ்வதி எங்க அக்காவுடன் டீச்சராக பணிபுரிகின்றார். கம்பளியம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். இந்த முத்துகோபால் என்னை அடிக்கும் விஸ்வநாதனுக்கு தூபம் போட ஆரம்பித்தார். விஸ்வனாதனும் சொல்லிச் சொல்லி அடிக்க ஆரம்பித்தார்.
முத்துகோபால் : என்னால இன்னமும் நம்ப முடியவில்லை, இவன் பாருங்க இப்படி செய்துள்ளான். இவர் சொல்லி முடித்த உடன் விஸ்வநாதன் எழுந்து என்னை டாமார், டமார், சடார்,சடார்ன்னு ஒரு நாலு சாத்து சாத்துவார். அப்புறம் மறுபடியும் முட்டி போடனும். என் சக மாணவர்கள் எல்லாம் ஜன்னல் வழியாக என்னமோ ஆப்பிரிக்காவில் பிடித்த கருங்குரங்கைக் கூண்டுக்குள்ளாற பாக்குற மாதிரி வேடிக்கை பார்த்தார்கள். எனக்கு அவமானம் பிடிங்கித் தின்றது. இன்னமும் கொஞ்ச நேரம் போயி இருக்கும் முத்துகோபால் ஆரம்பித்தார்.
முத்துகோபால் : இவன் அப்பா எவ்வளவு பெரிய மனிதர், எவ்வளவு நல்லவர். டிபார்ட்மெண்டில் எவ்வளவு செல்வாக்கானவர், ஆனா இவன் பாருங்க. என்று சொல்லி முடிக்கும் முன்னர் விஸ்வநாதன் எழுந்து டாமால் டிமீர்ன்னு எனக்கு பூஜா புனஸ்காரங்களைப் பண்ணினார். திரும்பவும் முட்டி போட்டேன். ஒரு பத்து நிமிசம் போயி இருக்கும். முத்துகோபால் மறுபடியும் ஆரம்பிச்சார்.
இவன் அக்கா எவ்வளவு நல்ல டீச்சர், என்ன டோலண்ட், எவ்வளவு போல்ட். ஆனா இவன் பாருங்க இப்படி.
திரும்பியும் சாத்துமுறை ஆரம்பித்தது. டாமால் டிமீர், சார் சார்ன்னு கத்த கதற ஒரே தர்ம அடிதான். எனக்கு டப்பா டான்ஸ் ஆடியிருச்சு. திரும்பியும் முட்டி, கொஞ்ச நேரம் கழித்து,
இவன் அண்ணனுக எல்லாம் இந்த ஸ்கூலில்தான் படித்தார்கள், நல்ல பசங்க, நல்லா படிப்பர்கள், அதிலும் பெரியவன் இரங்க ராஜ் எவ்வளவு திறமை. ஆனா இவன் பாருங்க, மறுபடியும் டமார், டிமீர்ன்னு விழுந்தது. எனக்கு உள்ளுக்குள்ள உதறல், அடப்பாவிங்களா, எங்க வீட்டில் மொத்தம் எட்டு டிக்கெட்டு, இப்படி ஒவ்வெருத்தரா சொல்லி உதைத்தால், எவ்வளவு உதை வாங்குவது என்று. மறுபடியும் முட்டி.
அதுல பாருங்க, இவன் அண்ணன் இராமு ஊரிலே முதல் மாணவன், இப்ப கூட பாலிடெக்னிக்கில் மாநிலத்தில் முதல் மாணவன், ஆனா இவன். டமால், டிமீர்ன்னு விழுந்தது. என்ன தர்ம சங்கடம் பாருங்க. குடும்ப பெருமை பேசினா எல்லாருக்கும் சந்தேசம், ஆனா அன்னிக்கு எனக்கு மட்டும் அவஸ்த்தை. இன்னமும் நாலு இருக்கே அதை எல்லாம் சொல்லி உதைப்பானுங்கான்னு டவுட் வந்துருச்சு. திரும்பியும் முட்டி. இந்த வடிவேலு சொல்வாரே, அதுபோல மாத்தி மாத்தி அடி விழுந்தது.
இவன் அண்ணன் கண்ணன் கூட நல்லா படிச்சான், எவ்வளவு பிரிலியண்ட், ஆனா இவன் பாருன்னு, மறுபடியும் இடி இடிச்சு சாரல் மழை. டெல்லி கணேசை மணிவண்ணன் தெளிய தெளிய வச்சு அடிப்பாரே அது போல என் நிலைமை மேசம் ஆகிடுச்சு.
இப்படியே இவங்க சொல்லிச் சொல்லி தர்ம அடி அடி அடிப்பதைப் பார்த்த லோகநாதன் என்ற வாத்தியார், விஸ்வநாதன் கொஞ்சம் அசந்து பக்கத்து ரூமுக்குப் போன போது, என்னைப் பார்த்து ஏப்பா இப்படி எல்லாம் பண்ணுகின்றாய், படிக்கிற பையனுக்கு இது எல்லாம் தேவையா, நீ கேட்டது நியாயம் என்றாலும் இப்படி எல்லாம் செய்யக் கூடாதுன்னு சொல்லி, என்னைப் பார்த்துப்" போ போய் முத்துசாமி வாத்தியாரிடம் மன்னிப்புக் கேள்" என்று சொல்லி வெளியே போகுமாறு தலையசைத்து சைகை செய்தார். நானும் தலை தப்பியது தம்பிரான் புன்னியம் என்று ஓடி வந்துவிட்டேன். பின்னர் முத்துசாமி சாரிடம் மன்னிப்புக் கேட்ட போது. இது எல்லாம் பெரிய விஷயமா ஸ்டுடண்ட் லைப்புல இது எல்லாம் சகஜம், ஒழுங்கா படிப்பதைப் பாருன்னு சொல்லிச் சிரிச்சார். எனக்கு சொல்லிச் சொல்லி அடித்தது வருத்தம் முத்துகோபால் மீதும் கோபம் இருந்தது. இது நடந்து ஒருவாரம் ஆகியிருக்கும். மாலை நான் கடை வீதி செல்லும் சமயம் வீட்டு வாயில் நின்ற முத்துகோபால் என்னை அழைத்து, ஏன் இப்படி செய்தாய், வாத்தியாரிடம் அவமரியாதை செய்வது மிகவும் தவறு. உன்னை ஹெட்மாஸ்டரிடம் வைத்து டீ.சீ கொடுத்து இருப்பர்கள். நாந்தான் உன் வீட்டாரைப் பற்றிக் கூறி அடியுடன் காப்பத்தினேன். இனி இம்மாதிரி செய்யாதே என்று சொல்லி, படிப்பதைப் பாரு. உங்க அண்ணன் மாதிரி நல்லா படிச்சு, நாலு மார்க் போடவில்லை என்றால் எட்டாக எடுக்க முயற்ச்சி செய் என்றார்.
இதுக்கு அப்புறம் தான் தாடித்தாத்தா சொன்னது எனக்குப் புரிந்தது.
செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்அல்லிடத்துக்
காக்கின் என் காவாக்கால் என்
இப்ப சரிங்களா, நீங்களும் இவன் பாருங்க இப்படின்னு ஒரு பின்னூட்டம் போட்டுக் கும்மலாம். நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
//எனக்கு உள்ளுக்குள்ள உதறல், அடப்பாவிங்களா, எங்க வீட்டில் மொத்தம் எட்டு டிக்கெட்டு, இப்படி ஒவ்வெருத்தரா சொல்லி உதைத்தால், எவ்வளவு உதை வாங்குவது என்று. மறுபடியும் முட்டி. //
ReplyDeleteஐயோ பாவம்>>>>>>>>
/////என் சக மாணவர்கள் எல்லாம் ஜன்னல் வழியாக என்னமோ ஆப்பிரிக்காவில் பிடித்த கருங்குரங்கைக் கூண்டுக்குள்ளாற பாக்குற மாதிரி வேடிக்கை பார்த்தார்கள்.///
ReplyDelete.....உங்கள் அனுபவ பதிவை படிக்கும் போது, நானும் அந்த மாணவர்களுடன் நின்று வேடிக்கை பார்த்த மாதிரி இருந்துச்சு. "நல்லா" இருந்துச்சுனு சொன்னால், உங்கள் கிட்ட தர்ம அடி வாங்கணும். அதனால், ரொம்ப பாவமா இருந்துச்சுன்னு சொல்லி s ஆகிறேன்.
அடப்பாவி.............
ReplyDeleteநாக்குலே சனியன் வந்து உக்கார்ந்தா இப்படித்தான்....
கோவம் சண்டாளமுன்னு சும்மாவாச் சொல்லி வச்சுருக்காங்க?
அப்ப மீதி 4 தனி ஆவர்த்தனம் கிடைக்கலையா?
அச்சச்சோ.........
என்னது சுதா குட்டியா? அச்சச்சோ நான் பையனுள்ள நெனச்சேன்..
ReplyDelete/////என் சக மாணவர்கள் எல்லாம் ஜன்னல் வழியாக என்னமோ ஆப்பிரிக்காவில் பிடித்த கருங்குரங்கைக் கூண்டுக்குள்ளாற பாக்குற மாதிரி வேடிக்கை பார்த்தார்கள்.///
அந்தகூட்டத்துல நானும் இருந்தத சொல்லலையே!
வாங்க வாங்க
http://niroodai.blogspot.com/2010/04/blog-post_21.html
http://fmalikka.blogspot.com/2010/04/blog-post.html
அட அப்ப வே வடிவேலு இப்ப எல்லோரும் பிரிச்சி மேய்ற மாதிரி, அந்த காலத்திலேயே எல்லாவாத்தியும் சேர்ந்து உங்கள பிரிச்சி மேய்ந்துட்டாஙகலா.
ReplyDelete/////என் சக மாணவர்கள் எல்லாம் ஜன்னல் வழியாக என்னமோ ஆப்பிரிக்காவில் பிடித்த கருங்குரங்கைக் கூண்டுக்குள்ளாற பாக்குற மாதிரி வேடிக்கை பார்த்தார்கள்.///
அப்ப எல்ல்லோரும் பார்க்கும் போது வளிக்காத மாதிரி நடிச்சீங்கலா?
ஆனால் பாவாம் இத்தனை பேர் வேடிக்கை பார்க்கும் போது ரொம்ப வே மானம் போய் இருக்கும்..
சூப்பர்...பதிவு... நீங்க அடி வாங்கினதுக்கு இல்லங்க..
ReplyDeleteநீங்க எழுதியிருக்கும் விதம்... ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு..
அப்படியே கண் முன்னால் நடப்பது போல் இருந்தது..
"எல்லாரும் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து அடிச்சாங்க போல இருக்கே?? ""
கடைசியில், அந்த சார் ஏன் அப்படி செய்தார் என்று குறிப்பிட்டது அருமைங்க.
மிக மிக ரசித்து படித்தேன்.. நன்றி..
குட்டியை, ரூம் போட்டுல்ல அடிச்சிருக்காங்க,
ReplyDeleteஹையோ...........ஹையோ..............:))
தக்காளி பட்டா கத கேட்டில இப்ப சாவு , நேர நானே போய் ஆப்கனிஸ்தான் தீவிர வாத்திகிட்ட சரண்டர் ஆயிடுறேன் ,
ReplyDeletearumai
ReplyDelete// தக்காளி பட்டா கத கேட்டில இப்ப சாவு , நேர நானே போய் ஆப்கனிஸ்தான் தீவிர வாத்திகிட்ட சரண்டர் ஆயிடுறேன் , //
ReplyDeleteஎலோ மங்கு, நீ சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்ட மாதிரி, பதிவு போட்டு மாட்டிக்கிட்டு. அதுக்கு எஸ் ஆக ஓடுகின்றாய். அதுக்கு காரணம் என் பதிவா? போடி மகனே ஆப்கானிஸ்தனிலும் ஒட்டக கறியும், ஓப்பியமும் உன் செலவுதாண்டி. எஸ்கேப் ஆக முடியாது.
போயி துண்டு போட்டு வை.
உங்களது ஆசிரியரைப் பற்றி நீங்கள் சொன்ன ஒரு வார்த்தையும்
ReplyDeleteஅதைத் தொடர்ந்து நீங்கள் பட்ட தர்ம அடியும்,
தர்ம அடியைத் தொடர்ந்து விளங்கிய ஞானோதயமும்
அதற்கு அழகு கூட்டிடும் குறளின் இரு அடியும்
இப்பதிவு ' பித்தனின் வாக்கா ?
இல்லை .. நல் முத்துக்கள் கோப்பா !!
வியக்கிறேன் நான்.
நீங்கள் படிக்கும் பதிவுகளின் எண்ணிக்கை கண்டு பிரமித்தேன்.
தமிழ்ப்பதிவுகளின் அட்டவணை போல் அல்லவா இருக்கிறது !!
உங்களுக்கு நேரம் எப்படி கிடைக்கிறது !!
துளசி கோபால் அவர்கள் வலை வழியே வந்த
சுப்பு தாத்தா.
தோஹா. (தற்சமயம்)
கலக்கறீங்க போங்க! ஜூப்பர்!!!!
ReplyDeleteச்சே... எவ்லோ அடிச்சாலும் தாங்குறீங்களே... நீங்க ரொம்ப நல்லவரு... :(
ReplyDeleteஸோ.. இப்ப உங்க உடம்பு எவ்ளோ தாங்குங்குற கணக்கு தெரியும் :-)
ReplyDeleteஅச்சச்சோஓஓ அப்போ அன்னிக்கு செம தர்ம அடியா?? பாவம்ணா நீங்க...
ReplyDeleteஆகா.. சூப்பராயிருக்கு...உங்க அனுபவம்..
ReplyDeleteகலக்குங்க...
அண்ணா.. வலி நினைவிருந்தாலும் இப்போ வலிக்கல இல்லை..
ReplyDeleteஏன்னா ரொம்ப சிரிச்சிட்டேன் :))))
ஓ..சுதாக்குட்டி....நீங்க சொல்லியா தெரியணும்.இப்ப இந்த புளொகர்லயே என்னென்ன அட்டகாசம் பண்றீங்க.இப்பகூட அதே உதை தரணும்.தரத்தான் ஆளில்லை !
ReplyDeleteஅந்த வயதுச் சிறுவனின் நியாய உணர்வையும் சீற்றத்தையும் மிக அழகாக சுவையான கதைபோல வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!
ReplyDeleteசூப்பரப்பு கலக்கிடீங்க, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி,
ReplyDeleteஇப்ப நினைத்தால் எனக்கே சிரிப்பாக இருக்கு, ஆதலால் கோபம் வராது சித்ரா, வருகைக்கு நன்றி.
ஆமா டீச்சர், அப்ப ஏழரை எனக்கு முதல் ரவுண்ட். நல்லவேளை மத்த மூனுபேரும் அடிக்கலை. நன்றி டீச்சர்.
ஓ மலிக்கா நீங்களும் ஜன்னல் வழியா வேடிக்கை பார்த்தீர்களா? ஹா ஹா மிக்க நன்றி.
// அப்ப எல்ல்லோரும் பார்க்கும் போது வளிக்காத மாதிரி நடிச்சீங்கலா? //
வேற வழி, முட்டி போட்டுக்கிட்டு, தலையைக் குனிந்து பாக்காத மாதிரியே நடிச்சேன். தர்ம அவஸ்த்தை. நன்றி ஜலில்லா.
மிக்க நன்றி, ரெஸ்ட் எடுத்தது அடிச்சது மட்டும் இல்லை, இடையில் டிரிங்கஸ் பிரோக் மாதிரி டீ குடிச்சிட்டு அடி விழுந்தது.
என்ன பண்ணுவது சைவகொத்துபுரோட்டா, ஏடாகூடமா மாட்டிக் கிட்டேன். மிக்க நன்றி.
மிக்க நன்றி எல்கே,
மிக்க நன்றி சுப்பு தாத்தா, தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
நன்றி சேட்டைக்காரன்,
ஆகா மறுபடியும் அடிக்கிறீங்களே, அடி வாங்குனா நல்லவானா? யோகானந்தன் தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
நன்றி உழவன், உங்க கணக்கு பயமா இருக்கு, மாட்டினா அடிவிழுகும் போல.
என்ன செய்வது மேனகா, இதுதான் வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்குவது போல. நன்றி மேனகா.
நன்றி பட்டாபட்டி.
நன்றி சுசி, நானுந்தான் இப்ப சிரிச்சிட்டேன்.
நன்றி ஹேமு, என்னது இது? அடிக்க ஆள் இல்லை என்றால் கூட அனுப்பி விடுவீர்கள் போல. இனி ஹேமுகிட்ட ஜாக்கிரைதையாய் இருக்கனும்.
மிக்க நன்றி மனோ சாமிநாதன் அம்மா.
நன்றி சசிகுமார்.
அத்தனி அடி வாங்கியும் குசும்புதான்.
ReplyDeleteஅடப்பாவிங்களா, எங்க வீட்டில் மொத்தம் எட்டு டிக்கெட்டு, இப்படி ஒவ்வெருத்தரா சொல்லி உதைத்தால், எவ்வளவு உதை வாங்குவது என்று. மறுபடியும் முட்டி.
ஸ்டுடென்ட் வாழ்கையில "இதெல்லாம் சகஜமப்பா"...!
ReplyDeleteசுதாகர் சார்...
நீங்க சொன்ன நிகழ்வைவிட சொன்ன விதம் அருமை...!
உங்கள டின்னு கட்டுன வாத்தியார் என்ன கோவத்தில இருந்தாரோ..?
வடிவேலு பாணியில் சொல்ல வேண்டுமானால்.... " வீட்டுக்குத்தான் அனுபுறாங்கலோன்னு... நம்பி...... ஏறுனம்மா.. நேரா ஒரு ......சந்துக்குள்ளார போச்சும்மா..... அங்க பத்து பேருமா... ரவுண்டுகட்டி அடிசான்ங்கம்மா . அதுல ஒருத்த சொன்னா... "இவ ரொம்ப நல்லவன்னு சொன்னாம்மா... எவ்வளவு நேரந்தா வலிக்காத மாதிரி நடிக்கறது..."
ஹி.. ஹி.. ஹி.. இந்த மாதிரி நாங்களும் வாங்கியிருக்கொமுங்கோ....
நான் பள்ளி வாழ்கைக்கு சென்று வந்த மாதிரி இருக்கு...
நல்ல இடுகை... தோழா...
வாழ்த்துக்கள்....
நட்புடன்...
காஞ்சி முரளி....