Thursday, January 28, 2010

பதிவர் வீட்டு ஊடலும், கூடலும்

(எச்சரிக்கை இது ஒரு கிளு கிளு கதை)

இரவு மணி பத்தரை, பதிவர் கோணாங்கிராயர் தன் மடிக்கணினியில் உக்காந்து பதிவு போட்டுக் கொண்டுருந்தார். சமையல் அறையில் அவரின் மனைவி பாத்திரங்களை அலம்புகிறேன் பேர்வழி என்று கடமுட என்று உருட்டிச் சத்தம் செய்தார். அவர் பாத்திரங்களை சுத்தம் செய்யும் முறையில் அவரின் கோபம் புலப்பட்டது. பின்னர் ஹாலுக்கு வந்தவர் பதிவரிடம்,

மனைவி :என்னங்க எவ்வளவு நேரமா நான் ஒருத்தி மட்டும் வேலை செய்வது? கொஞ்சம் கூடமாட ஹெல்ப் பண்ணினால் என்ன குறைந்தா போயிடுவிங்க?

பதிவர்: கொஞ்சம் பொறு நான் இந்த பதிவை முடித்து விடுகின்றேன்.

மனைவி(கோபத்துடன்): ஆமா புடலங்காப் பதிவு. எப்ப பார்த்தாலும் இதை வைச்சுக்கிட்டு உக்காந்துருங்க,நான் ஒருத்தி எவ்வளவு வேலை செய்வது?

பதிவர்: இதே இப்ப முடிச்சுருவேன்.

மனைவி: வர வர உங்களுக்கு என் மேல பாசமே இல்லை, எப்ப பார்த்தாலும் இதை வைத்துக் கொண்டு குத்துக்கல்லு மாதிரி இருக்கிங்க. முதல் எல்லாம் எவ்வளவு வேலை செய்வீர்கள்.

பதிவர்: ஒரு முக்கியமான பதிவு அதான்.

மனைவி: என்னை வீட அப்படி என்ன முக்கியமான பதிவு?

பதிவர்: அக நானுறில் ஒரு ஆராய்ச்சி

மனைவி: ஆமா இங்க ஒரு நூறுக்கே வழியக் காணேம். இதுல அக நானுறு வேறயா?. நீங்க இதைக் கட்டிக்கிட்டு அழுங்க, நான் உங்களைக் கட்டிக்கிட்டு அழறேன்.

கோபமாக படுக்கையில் சென்று விழுகின்றார். நம்ம ஆளும் வேறு வழியில்லாமல் உள்ளே செல்கின்றார்.

பதிவர்: குட்டிம்மா அதான் வந்துட்டேன் இல்லை, என்ன கோபம்?

மனைவி: இப்ப எல்லாம் உங்களுக்கு என் மேல பிரியம் இல்லை.எப்ப பார்த்தாலும் பதிவு,
பதிவுன்னு உக்காந்து கொள்கின்றீர்.

பதிவர்: அப்படி எல்லாம் இல்லைடா செல்லம். எனக்கு பிடித்துள்ளதால் எழுதுகின்றேன். பிளிஸ் கோவிச்சுக்காத பட்டு.

மனைவி(சிறிது கோபம் தனிந்து): நான் என்ன எழுத வேண்டான்னா சொல்றன். கொஞ்சம் எனக்கும் ஹெல்ப் பண்ணத்தான சொன்னேன்.

பதிவர்(சிறிது அணைத்து): சரி நாளையில் இருந்து பண்ணுகின்றேன் போதுமா?. சரி என் மேல குட்டிம்மாவுக்கு என்னடா கோபம்?

மனைவி(சிரித்து): கோபமா அது எல்லாம் இல்லை.இது மாதிரி செல்லமா கோவிச்சால்தான் நீங்க உடனே கணினியை வைத்துவிட்டு வருவீர்கள் என்று நடித்தேன்.

பதிவர்: அதானே பார்த்தேன்.நீ என் செல்லம் ஆச்சே.

மனைவி கணவரின் அன்பு,பாசம் மற்றும் கொஞ்சலில் வெட்கப்பட்டும் சிறிது நகைக்கின்றார்.

பதிவர்: ஏய் எதுக்கு இப்ப சிரிச்ச?

மனைவி: ஒன்னும் இல்லை.

பதிவர்: இல்லை என்னமே இருக்கு சொல்லு.எதுக்கு சிரிச்ச?

மனைவி: இல்லை நீங்க பிலாக்கில போடறதும் பதிவுன்னு சொல்லிப் படிச்சு, அதுக்கு பின்னூட்டம் வேற போடுறாங்களே!! அவங்களை நினைச்சன், சிரிச்சேன் (என்று பதிவருக்கு பல்பு கொடுக்கின்றார்).

பதிவர் அடிக்கள்ளீ என்று மனையாளைக் கிள்ளீ அணைக்கின்றார்(அட லைட்டு அணைச்சாருங்க).அங்கு ஊடல் முடிந்து கூடல் ஆரம்பம் ஆயிற்று.

டிஸ்கி: சாமி சத்தியமா இது முழுக்க முழுக்க அக்மார்க் கற்பனை பதிவுங்க. சித்ரா அவர்கள் கணவன் மனைவி இருவரின் காதல் பதிவைப் படித்ததால் வந்த கற்பனை இது.
வழக்கம் போல ஆட்டோ அனுப்புவர்கள், ஆட்டோவை அவருக்கு அனுப்பவும் நன்றி.

17 comments:

  1. அட, அட, அடடா....... இந்த கணவன் மனைவி காதல் வைரஸ் ரொம்ப contagious போல ............ ஹா, ஹா, ஹா...
    கதை சூப்பர், அண்ணாச்சி.

    ReplyDelete
  2. விட்டா, ஆட்டோவுக்கு காசு நீங்களே கொடுத்து அனுப்புவீங்க போல இருக்கே.

    ReplyDelete
  3. நல்ல வேலை லைட் ஆப் பண்ணிடிங்க ...

    ReplyDelete
  4. கதை ரெம்ப நல்லாவே இருக்கு .... ஒரு வேலை உண்மையாகவே கற்பனையா இருக்குமோ ....

    ReplyDelete
  5. NALLA KARPPANAI..
    AUTO MATTUM VAENDAAM..
    EN THOEZHI PAAVAM..

    ReplyDelete
  6. ஓ.. கதையா.. சரீங்கண்ணா..

    ReplyDelete
  7. //சாமி சத்தியமா இது முழுக்க முழுக்க அக்மார்க் கற்பனை பதிவுங்க.//

    இது என்னவோ..
    சினிமாவில் எங்கயாவது நடந்ததை படமா எடுத்துட்டு, அப்புறம் பிரச்சனை வரும்னு "கதையில் வரும் கதா பாத்திரங்கள் கற்பனையே"ன்னு போடுறா மாதிரி இருக்கு.. (ஹி ஹி.. ஏதோ என்னால முடிஞ்ச வரை போட்டு கொடுத்துட்டேன்.. சம்மந்தபட்டவங்க ஆட்டோ அனுப்பலாம்.. அண்ணன்வீட்டுக்கு)

    ReplyDelete
  8. அட கற்பனை நல்லா இருக்கே.

    ஆனா உண்மையாவே பேச்சிலர்ஸ் சிலர் லவ்வர்கிட்ட தன்னோட ப்ளாக் பத்தி பேசி பேசியே வெறுப்பேத்துறாங்களாமே. நிஜமா?

    அதனாலயே இன்னும் சிலர் பேச்சிலராவே இருக்குறதாவும் சொல்லிக்கிறாங்களே, அதுவும் உண்மையா?

    ReplyDelete
  9. ”வீட்டுல எலி வெளியில புலி ”தெரிந்த விசயம்தானே... இதுக்கு ஏன் ஆட்டோ பயம்

    ReplyDelete
  10. பதிவர் அடிக்கள்ளீ என்று மனையாளைக் கிள்ளீ அணைக்கின்றார்(அட லைட்டு அணைச்சாருங்க).அங்கு ஊடல் முடிந்து கூடல் ஆரம்பம் ஆயிற்று.

    ////

    நல்லாயிருக்கு
    அந்த பல்ப் சூப்பர்
    நீங்க வாங்கியதா?

    ReplyDelete
  11. //சாமி சத்தியமா இது முழுக்க முழுக்க அக்மார்க் கற்பனை பதிவுங்க.//

    உண்மை சொல்லுங்க.எந்தச் சாமி ?
    சுதானந்தா சாமியா !

    ReplyDelete
  12. //S.A. நவாஸுதீன் said...
    அட கற்பனை நல்லா இருக்கே.

    ஆனா உண்மையாவே பேச்சிலர்ஸ் சிலர் லவ்வர்கிட்ட தன்னோட ப்ளாக் பத்தி பேசி பேசியே வெறுப்பேத்துறாங்களாமே. நிஜமா?

    அதனாலயே இன்னும் சிலர் பேச்சிலராவே இருக்குறதாவும் சொல்லிக்கிறாங்களே, அதுவும் உண்மையா?//



    அப்பிடியா?

    சொல்லக்கூடாதா?

    ReplyDelete
  13. / / விட்டா, ஆட்டோவுக்கு காசு நீங்களே கொடுத்து அனுப்புவீங்க போல இருக்கே. //
    ஆட்டோவுக்கு காசு என்ன? மீட்டருக்கு மேல கூட போட்டு அனுப்பவுவேம். உங்களுக்கு வர்ற ஆட்டோதான.நன்றி சித்ரா.
    நன்றி ரோமியோ, லைட்டை ஆப் பண்ணவில்லை என்றால் பதிவர்கள் நம்மை ஆப் பண்ணீருவாங்க. அதுனாலதான் கதை லைட் ரெண்டையும் கட் பண்ணீட்டேன்.
    நன்றி மகா இது எனக்கு மட்டுதான் கற்பனை, உங்க மாதிரி திருமணம் ஆன பதிவர்களுக்கு நிஜம்.
    நன்றி தமிழினி, நீங்க சொல்வதால் உங்க தோழீ வீட்டுக்கு ஆட்டோ அனுப்பவில்லை. ஒகே. ஆனா சித்ரா பாவம் என்பதால் அல்ல.
    அவங்க கிட்ட மாட்டிக்கிட்டா, ஆட்டோல போறவங்க பாவம் என்றுதான் அனுப்பவில்லை. நெல்லைக்கார பெண்ணு இல்லையா அதான் அருவா பயம்.
    நன்றி சுசி, என்ன! நம்பாத மாதிரி கேக்குற. இது கற்பனை கதைதாம்மா,
    நன்றி திவ்யா, வந்த வேலை சந்தோசமா முடிஞ்சுதா? இப்ப திருப்தியா? ஹா ஹா.
    // ஆனா உண்மையாவே பேச்சிலர்ஸ் சிலர் லவ்வர்கிட்ட தன்னோட ப்ளாக் பத்தி பேசி பேசியே வெறுப்பேத்துறாங்களாமே. நிஜமா? //
    வாங்க நவாஸுதீன், இது எனக்குத் தெரியாது. ஏன்னா எனக்கு லவ்வர்ஸ் யாரும் கிடையாது. அது என்னமோ தெரியலை. நான் லவ்வுன்னு சொன்னா பெண்ணுக ஓடிப் போயிடுறாங்க. நன்றி நவாஸ்.
    நன்றி ஜய்லானி, ஆட்டோ சும்மா தமாசுக்கு,
    வாங்க பிரியமுடன் பிரபு, என் புரபைல் படிங்க. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. ஆதலால் இந்த பல்பு எனக்கு இல்லை.
    நன்றி மேனகாசத்தியா,
    நன்றி நசரேயன்,
    ஆகா ஹேமா, விட்டா எனக்கு தாடி,குடுமி எல்லாம் வைச்சு, கையில கமண்டலம் எல்லாம் கொடுப்பிங்க போல இருக்கு. நானும் வைத்துக் கொள்ள ரெடிதான். ஆனா அதுக்கு அப்புறம் பெண் சிஷ்யைகள் அதிகம் ஆகிடுவாங்களேன்னு பயம்தான்.நன்றி ஹேமா.
    வாங்க முருகு, நிச்சயம் முடிந்ததா, எப்ப கல்யாணம்? பார்ட்டி எப்ப வைச்சுக்கலாம்? பிலாக் பத்தி பேசலாம் முருகு தப்பில்லை, அதுக்காக ஒரே பிலாகினம் தான் படிக்க கூடாது. சும்மா பிளாக் பத்தி பேசி வெறுப்பு தட்டக்கூடாதுன்னு சொல்றார். அவ்வளவுதான்.

    அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  14. கதைன்னு நம்பிட்டோம்ல....

    ReplyDelete
  15. மனைவி: இல்லை நீங்க பிலாக்கில போடறதும் பதிவுன்னு சொல்லிப் படிச்சு, அதுக்கு பின்னூட்டம் வேற போடுறாங்களே!! அவங்களை நினைச்சன், சிரிச்சேன் //

    ஹா ஹா அக்மார்க் கற்பனை கதை சூப்பர்.

    ReplyDelete
  16. //முழுக்க முழுக்க அக்மார்க் கற்பனை பதிவுங்க//

    உண்மையா இருந்தாதான் என்ன? நல்ல விசயம்தான :-)

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.