Tuesday, January 12, 2010

மாதக்கணக்கு

மனையாளுடன் சேர்ந்து பார்த்தேன்
மாதக்கணக்கு,
வரவை வீட செலவாய் இருந்ததது
மாதக்கணக்கு,

கேள்வி கேட்டால் குதர்க்கம் ஆகியது
மாதக்கணக்கு,
குதர்க்கம் பின்னால் தர்க்கம் ஆனது
மாதக்கணக்கு,

தர்க்கம் வளர்ந்து பிணக்காய்ப் போனது
மாதக்கணக்கு,
பிணக்காய் வளர்ந்து சண்டையாய் போனது
மாதக்கணக்கு,

சண்டை சச்சரவாய் கோபத்தில் முடிந்தது
மாதக்கணக்கு,
கோபத்தில் கொடுத்தேன் கன்னத்தில் நாலு
சிவந்து போனது மாதக்கணக்கு,

கன்னிச் சிவந்து போனது கன்னம்
வெட்கத்தில்,
சுபமாய் முடிந்தது ஊடலும்
மாதக்கணக்கும்.

21 comments:

  1. ///கன்னிச் சிவந்து போனது கன்னம்
    வெட்கத்தில்///

    நல்லாதான் கணக்கு பார்த்திருக்கீங்க.

    ReplyDelete
  2. ஐயா....பெரியவரே....சும்மா சொல்லாதீங்க.
    உங்களைத்தான் கொஞ்சநாளாக் காணோம்.
    கோயிலிக்குப் போனேன்னு சொன்னீங்க.
    மாதக்கணக்குப் பாத்து நல்லா வாங்கிக் கட்டினதை சாமிக்கிட்ட சொல்லிப் புலம்பப் போனீங்களோ !

    ReplyDelete
  3. சூப்பர்.. பாஸ்! நல்லா புரியும்படி எழுதியத்துக்கு..

    ReplyDelete
  4. மாதக்கணக்கு இந்த மாதத்தின் நல்ல கணக்கு.....

    ReplyDelete
  5. பள்ளியில் கணக்கு வாத்தியாரின் வீட்டுகணக்கு

    வீட்டிலோ அம்மா போடும் மனகணக்கு

    அப்பா போடும் பட்ஜட் கணக்கு

    அண்ணன் போடும் பிகர் கணக்கு

    தங்கை போடும் புதிர் கணக்கு

    தம்பி போடும் தப்பு கணக்கு

    விடை தெரியாத ஆண்டவன் கணக்கு

    எப்பவும் புரியாத விதி கணக்கு

    துராகிகள் போடும் சதி கணக்கு

    முதிர் கன்னி போடும் மாப்பிளை கணக்கு

    அரசியல் வாதியின் லஞ்சக் கணக்கு

    அதிகாரிகளின் அமுக்குன கணக்கு

    போலீஸ் காரர்களின் மாமூல் கணக்கு

    சீரியர்காரர்களின் விளம்பரக் கணக்கு

    இதனையும் தாண்டி வந்தா
    பித்தன் அவர்களின் மாதக்கணக்கு ...........

    குறிப்பு: (எனக்கு கணக்கு வராது )

    ReplyDelete
  6. ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க போல. நடத்துங்க... :-)) அருமையா இருக்கு. கனக்கப் புள்ளைங்கிரத கவிதை மூலமா சொல்லிட்டீங்க.

    ReplyDelete
  7. மாதக்கணக்கில் இவ்வளவு சிக்கல்களா?

    ReplyDelete
  8. இப்ப தான் கணக்கு பண்றிங்களா!?

    ReplyDelete
  9. கோபத்தில் கொடுத்தேன் கன்னத்தில் நாலு////

    நான் தப்பா புரிஞ்சுகிட்டேன்

    ReplyDelete
  10. நல்லாதான் கணக்கு பார்த்திருக்கீங்க.

    ReplyDelete
  11. அண்ணே வாழ்த்துகள்

    :)

    (எனக்கு உள்ளர்த்தம் புரிஞ்சது)

    ReplyDelete
  12. அண்ணா.. கணக்கு கணக்காத்தான் போட்டிருக்கீங்க..

    நல்ல கணக்குத்தான் போங்க.

    ReplyDelete
  13. இப்பவே ப்ராக்டீஸ் பண்றீங்களா:)

    ReplyDelete
  14. நன்றாக இருக்கிறது...உழவர் திருநாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. நாங்கெல்லாம் கணக்கு பிணக்கு ஆமணக்கு கோஷ்டி

    பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. நன்றி நவாஸ், நல்லா கணக்கு பார்க்கவில்லை,கற்பனை பார்த்துள்ளேன்.
    நன்றி ஹேமா, என்னைப் பற்றியத் தகவலைப் படியுங்கள்.நான் மாதக்கணக்கு கூட தனியாத்தான் பார்க்கனும். மனையாள் கிடையாது. சாமிகிட்ட நான் புலம்ப முடியாது. அவருதான் குடும்பஸ்தன், ஆதாலால் அவர் புலம்பாம இருந்தா சரி.
    நன்றி கலையரசன், இதுல ஒன்னும் உள்குத்து இல்லையே,
    நன்றி மகா, நீங்க போட்ட கணக்கும்(கவிதையும்) சூப்பர். வாழ்த்துக்கள். உங்களின் பிகர் கணக்குக்கு,
    நன்றி ரோஸ்விக், என்ன இருந்தாலும் கணக்குத்தான.
    நன்றி முனைவர் அய்யா, இது சிக்கல் இல்லை,ஊடலுடன் கூடிய கூடல்.அதுதான் குடும்பம்.
    நன்றி வால்பையன், இன்னும் ஆரம்பிக்கலை. முன்னாடி ஒரு யோசனை, அவ்வளவுதான்.
    நன்றி பிரியமுடன் பிரபு,தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும்.
    நன்றி அப்பாவி முருகு, இதில் உள் குத்து எதுவும் இல்லை.நானும் அப்பாவிதான்.
    வாம்மா சுசி, லீவு முடிந்ததா? இன்னும் கணக்கு ஆரம்பிக்கவே இல்லை.இது ஒத்திகை அவ்வளவுதான்.

    // இப்பவே ப்ராக்டீஸ் பண்றீங்களா:) //
    நன்றி சுவையான சுவை, இது சும்மா காலையில் சண்டையிட்டு, மாலையில் கூடும் தம்பதியரைப் பற்றிய கற்பனை.
    // நாங்கெல்லாம் கணக்கு பிணக்கு ஆமணக்கு கோஷ்டி //
    நன்றி சின்ன அம்மினி, நானும் படிக்கும் போது பாரதியார் வம்சம்தான். போகிற போக்கைப் பார்த்தால் உங்களைத் தானைத் தலைவியா போட்டு, நான், மகா எல்லாம் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பிக்கலாம் போல. கணக்கு வராதோர் முன்னேற்றக் கழகம் அப்படின்னு பேர் வைச்சுரலாம்.

    அனைத்துப் பதிவர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  17. பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. ம்ம்ம்ம் நல்லாத்தான் கணக்கு பண்ணியிருக்கீங்க....அடமாத கணக்கை சொன்னேங்க.....

    ReplyDelete
  19. //கோபத்தில் கொடுத்தேன் கன்னத்தில் நாலு
    சிவந்து போனது மாதக்கணக்கு,//
     
    சிவக்கும் அளவிற்கா? ;-)

    ReplyDelete
  20. உங்களுடைய மனக்கணக்கும், மகா உடைய கணக்கும் சூப்பர்

    ReplyDelete
  21. நன்றி கமலேஷ், தங்களின் முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி,
    நன்றி டி.வி ஆர் அய்யா,
    நன்றி தமிழரசி, நான் எப்பவும் நல்லா கணக்கு பண்ணுவங்க, அட நான் என் நிறுவன கணக்கைச் சொன்னேன்.
    நன்றி உழவன், என்ங்க கற்பனையில் ஆவது சிவக்கட்டுமே,
    நன்றி ஜலில்லா.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.