Friday, January 15, 2010

ஒரு நொடி வாழ்க்கை

தாயின் கத கதவென்ற சூடும், நிணனீரும்
என் வாழ்வாகிப் போனது,அவள் வயிற்றில்
கை,கால் உதைத்து, விளையாடிய பொழுதுகள் எல்லாம்
ஒரு நொடியில் மாறின, நான் அழுது கொண்டு ஜனித்த போது,

பிறந்து, இருந்து,தவழ்ந்து விளையாடி,
கொஞ்சி,அழுது,உண்டு உறங்கி
சுவைத்து, முத்தம் இட்டு, வாங்கிய பொழுதுகள் எல்லாம்
ஒரு நொடியில் மாறின, நான் பருவம் அடைந்த போது,

என்னை ஊண் தந்து,உறக்கம்அற்று,வளர்த்து,சுகிர்த்து,எனக்காய்
வாழ்ந்த,என் தாய் உறவாடிய பொழுதுகள் எல்லாம்
ஒரு நொடியில் மாறிப் போனது,
அவளின் பிரதினிதியாய் என் மனைவி வந்தபோது,

என் ஊண் பட்டு, படுக்கை கலர்ந்து,
என்னுள் அவளும்,அவளுள் நானும் கலர்ந்து
இருந்து,மகிழ்ந்த உறவாடிய பொழுதுகள் எல்லாம்
ஒரு நொடியில் மாறியது,அவள் தாயாய் ஆன போது,

மகளுடன் விளையாடிக்,கதை பேசி, திரைப்படங்கள் பார்த்து
கவலை இல்லா குடும்ப வாழ்க்கை
நிம்மதியான மனம் என்ற பொழுதுகள் எல்லாம்
ஒரு நொடியில் மாறிப் போனது,அவள் பருவம் வந்த போது,

வீரம்,கம்பீரம்,ஆணவம்,ஆனந்தம்,மகிழ்வு,அழுகை
இத்தனையும் செய்து,களித்துக் கவலையில்லா
வாழ்க்கை அனுபவித்து வந்த பொழுதுகள் எல்லாம்
ஒரு நொடியில் மாறிப் போனது,நோயுடன் முதுமை வந்த போது,

மருத்துவ வாழ்க்கை, செவிலியர் கவனிப்பு,
மனையாளின் கவலையிலும் சிரித்த முகம்,
அன்பு மகன், மகளின் ஆறுதல் தந்த பொழுதுகள் எல்லாம்
ஒரு நொடியில் மாறின,என் சுவாசம் நின்ற போது,

நின்ற, நடந்த, படுத்த, உடல் மாறிப் போய்,
விரைத்துக், குளிந்த, அசையாப் பொருளும் ஆகி,
ஆரம்பத்தில் இருந்து வந்த நிண நீர் பொருளும் ஆகி,
நான்,எனது என்றும்,இப்போ பிணம் என்ற பொழுதுகள் எல்லாம்
ஒரு நொடியில் இல்லாது போனது,என்னை எரித்த போது,

வரும் இடம் தெரியா சூனியத்தில் தொடங்கி
போகும் இடம் தெரியா சூனியத்தில் முடிந்து
பிறப்பும், இறப்பும் அறியா வாழ்வில்
நொடியில் மாறும் வாழ்க்கை வாழும் மானிடரே

சிந்தீப்பீர், இதில் ஏன் மதம்,இனம்,மொழி,ஜாதிகள் எல்லாம்,
அன்பு செய்து மானுடம் வளர்ப்போம் வாருங்கள்,
சண்டை,சச்சரவு என்னும் இப்பொழுதுகள் எல்லாம்
ஒரு நொடியில் மாறிடக் காரணம் ஆவேம் வாருங்கள்.

8 comments:

  1. நல்லா எழுதி இருக்கீங்க அண்ணா..

    சிந்திப்பாங்களா மக்கள்??

    ReplyDelete
  2. நல்லா எழுதி இருக்கீங்க!!!

    ReplyDelete
  3. நல்ல இடுகை, மிக நல்ல பகிர்வு, மிக மிக அருமையான சிந்தனை :-)

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. //சிந்தீப்பீர், இதில் ஏன் மதம்,இனம்,மொழி,ஜாதிகள் எல்லாம்,
    அன்பு செய்து மானுடம் வளர்ப்போம் வாருங்கள்,
    சண்டை,சச்சரவு என்னும் இப்பொழுதுகள் எல்லாம்
    ஒரு நொடியில் மாறிடக் காரணம் ஆவேம் வாருங்கள். //

    இது ரொம்ப புடிச்சிருக்கு... வாங்க பழகலாம். :-)

    ReplyDelete
  5. கொஞ்ச நாள் வரல உங்க ப்ளாக் பக்கம்.. நிறைய எழுதிருக்கீங்க போல.. நல்ல பதிவு அண்ணா.. சொல்ல வார்த்தைகள் தேடுகிறேன்..

    ReplyDelete
  6. வரும் இடம் தெரியா சூனியத்தில் தொடங்கி
    போகும் இடம் தெரியா சூனியத்தில் முடிந்து
    பிறப்பும், இறப்பும் அறியா வாழ்வில்
    நொடியில் மாறும் வாழ்க்கை வாழும் மானிடரே

    சிந்தீப்பீர், இதில் ஏன் மதம்,இனம்,மொழி,ஜாதிகள் எல்லாம்,
    அன்பு செய்து மானுடம் வளர்ப்போம் வாருங்கள்,
    சண்டை,சச்சரவு என்னும் இப்பொழுதுகள் எல்லாம்
    ஒரு நொடியில் மாறிடக் காரணம் ஆவேம் வாருங்க

    ஆழ்மனதிலிருந்து வரும் வரிகள்.....அருமை...

    ReplyDelete
  7. நல்ல பதிவு..

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.