Monday, January 18, 2010

பதிவர்கள் வீட்டு சமையல் அறையில்

வாரத்தின் முதல் நாளை மிக்க மகிழ்வுடன் துவக்குவோம். நான் சில நகைச்சுவைகளை எழுதலாம் என்று நினைத்தேன். அதில் இடம் பெறும் பாத்திரங்கள் நாம் அறிந்த நபர்களாக இருந்தால் கொஞ்சம் டச்சிங்காக இருக்கும் என்றும், என்னுடன் பழகியவர்கள் என்ற முறையில் எனது சகோதர, சகோதரிகள் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கையிலும் இந்த பதிவைப் போடுகின்றேன். இது சிரிக்க மட்டும்தான், சிந்திக்க அல்ல.

நான் ஞாயிறன்று கனவில் ஒரு உலக சுற்றுப் பயணம் போனேன். அப்ப எல்லா நாட்டிலும் பதிவர்கள் என்னை வரவேற்று, அவர்கள் இல்லத்தில் விருந்து கொடுத்தார்கள். அப்ப அவர்கள் வீட்டில் நடந்த சம்பவங்கள். முதல்ல நம்ம சுசி தங்கை வீடு.

சுசி: ஏங்க நான் பத்து வெங்காயம்தான உரிக்கச் சொன்னேன். அதுக்கு ஏன் இப்படிக் கண்ணீர் விடுறிங்க?.
குணாளன் மச்சான் : நான் அதுக்கு அழலை. அதுக்கு அப்புறம் சமைச்சுக் கொடுத்துச் சாப்பிடச் சொல்வியே, அதை நினைத்துதான் அழறேன்.
சுசி பசங்க: கவலைப் படாதிங்க அப்பா! நாங்க இருக்கமேமில்லை.

அடுத்து ஜலிலா அக்கா வீடு,
ஜலில்லா : ஏங்க சும்மா டீ.வீ சீரியல்தான பார்க்கின்றீங்க. அப்படியே நான் சமைத்த சாப்பாட்டை சாப்பிடலாம்மில்ல,
கனவர் : ஒரே நேரத்தில் எதுக்கு ரெண்டு கொடுமைன்னு யோசிக்கின்றேன்.

நம்ம பப்பு கொடுத்த பல்பு(அடிக்கடி வாங்குவர்):
சந்தன முல்லை அக்கா: பப்பு மறக்காம பள்ளிக்கு டிபன்பாக்ஸ் எடுத்துப் போ. நான், வெஜ் புலாவ் பண்ணி வைச்சிருக்கேன்.
பப்பு : இம்ம் டீச்சர் கொடுமை பத்தாதுன்னு நீங்க வேறயா?

நாஸியாக்கா வீட்டில் :
நஸியா: ஏங்க பிரியானி சட்டியைப் பரண் மேல இருந்து எடுத்துத் தாங்கன்னு சொன்னா ஏன் இப்படி யோசிக்கிறீங்க?
கனவர் :இல்லை இப்ப சட்டியை எடுக்கலாம், அப்புறம் பிரியானியைச் சட்டியில் இருந்து எடுப்பது எப்படின்னு யோசிச்சேன்.

தமிழோசை தமிழரசி சமையல் அறையில்:

தமிழ் அக்கா : கடுகு என்னும் காதலன் வெள்ளுத்தம் பருப்பு என்னும் காதலியுடன் எண்ணெய் என்ற காதலில் கலர்ந்து வாழ்க்கை என்னும் தாளிப்பில்,
அக்கா கனவர் : அம்மா முதல்ல பசிக்குது, அப்புறம் கவிதை எழுதலாம். கும்பி காயுது தாயே.

கவிதாயினி ஹேமா :
என் சமையலறையில் விழுந்திட்ட கனியே! உன்னை மருந்திட்டு கொன்றது யார். அழகாய் உதிர்த்த காயைப் பிஞ்சில் பறித்திட்ட கயவன் யார். உதிரம் சொட்ட ஆட்டை அறுத்திட்ட கொடுமை பாரீர்.
கனவர் : கவிதை எல்லாம் நல்லா இருக்கு, மறந்து போய் அந்த பேப்பரையும் போட்டு சமைத்துப் போடதே.
ஹேமா : வழக்கமாச் சாப்பிடுவீங்க, இன்னிக்கி என்ன வந்தது?

கலகலப்பிரியா : கோழியைக் கொலை செய்து, காயை நறுக்கி,எண்ணெய்யைக் குத்தி, மிளகாயை உடைத்துப் போட்டு,கனியை அறுத்து,
கனவர் : அப்பாடா இன்னிக்கு நான் தப்பிச்சேன். நீ ரொளத்தரம் பழகுபவளன்னு சொன்னது இதுதானா?

பதிவர் சின்ன அம்மினி வீட்டில் :
சின்ன அம்மினி : என்னங்க இந்த ஊரு குளிருக்கு இதமா, மிளகு இரசம் வைச்சிருக்கேன், ஒரு டம்ளர் குடியுங்கன்னு சொன்னா ஏன் இப்படித் திரு திருன்னு முழிக்கிறீங்க?
கனவர் : என் காதுல விசம்ன்னு விழுந்தது அதான்.
சின்ன அம்மினி : சும்மா குடியுங்க! ரெண்டும் ஒன்னுதான்!.

தெய்வ சுகந்தி : ஏங்க நான் ஆட்டுக்கால் சூப் வைச்சா ஏன் சாப்பிட யோசிக்கிறீங்க.
கனவர் : ஒன்னும் இல்ல, போனதடவை தலைக்கறி சாப்பிட்ட தலைவலி இன்னும் போகலை. கால்வலி வேறயா?

சுவையான சுவை : ஏங்க இன்னும் ரெண்டு தோசை போடட்டா?
கனவர் : ஓ நீ போட்டது தோசையா ? நான் வறட்டின்னு நினைச்சேன்.

சுஸ்ரீ: ஏங்க எதுக்கு இன்னிக்கி என்னை இட்லி பண்ணு,பண்ணுன்னு சொல்றீங்க?.
கனவர் : ஆனி அடிக்க சுத்தியல் இல்லை அதான்.
(சுஸ்ரீ கோபத்தில் என் மண்டையில் போட்றாதிங்க ஏற்கனவே நான் சொட்டை)

நம்ம பதிவு வாசகி விஜி :
கனவர் : விஜிம்மா ரொம்ப பசிக்குது, எதாது ஒன்னு சீக்கிரம் பண்ணிக் கொடும்மா?
விஜி: சும்மா இருங்க, நான் என்ன சமைக்கிறதுன்னு, எல்லாப் பதிவையும் படிச்சு, ஒரு மணி நேரத்தில் ரெடி பண்ணறேன்.

மாதேவி வீட்டில்
மாதேவி: ஏங்க இந்த மீனைக் கொஞ்சம் சுத்தம் பண்ணிக் கொடுங்க.
கனவர் : ஆமா இப்ப மீனைச் சுத்தம் பண்ணனும், அப்புறம் அடிப்பிடிச்ச குண்டான சுத்தம் பண்ணனும். ஒழுங்கா மீன் குழம்பு வைக்க மாட்டியேன்னு, நம்ம வீட்டு பூனை கூட தற்கொலை பண்ணிக்கிச்சு.

கீதா ஆச்சாள் வீட்டில் :
கீதா ஆச்சாள் : ஏங்க இன்னிக்கி சுதாகர் வந்துருக்காரு, எதாவது ஸ்பெசலா பண்ணலாம்மா?
கனவர் : அப்படின்னா இன்னிக்காவது, நீ கொஞ்சம் சாப்பிடற மாதிரி சமையல் பண்ணீடும்மா தாயே!

துளசி டீச்சர் : ஏங்க நான் ஒரு பதிவுல போட்ட மாதிரி, புடலங்காய் பொறியல் பண்ணலாம்மா?
கோபால் மாமா: ஆமா அதையும் பின்னூட்டம் மாதிரி, பின்னாலதான் கொட்டனும்.எப்பவும் போல நானே சமைக்கிறேன். நீ சும்மா இருந்தா அது போதும்.

(உங்க எல்லார் காதுலையும் புகை வருதுன்னு எனக்கு நல்லாத் தெரியும். நீங்களும் என் மண்ணிகள் மாதிரி, " இருடா! உனக்கு ஒருத்தி வருவா இல்லை, அவ என்ன பண்ணப் போறான்னு பார்க்கறம்?" அப்படின்னு நினைக்கிறீங்க. உங்களுக்கு கஷ்டம் வேண்டாம். நானே ஒரு கற்பனை பதிவைப் போட்டு விடுகின்றேன்.என் மனைவி சீரியலில் கதா நாயகியை அழவைக்கும் வில்லனைக் கோவமாக பார்த்து கொண்டுருக்கையில்....)

நான்(கையில் கரண்டியுடன்) : குட்டிம்மா, நான் இந்த சோழா பட்டுரா மாதிரி, சோழா நுட்டுரான்னு ஒரு வித்தியாசமான அயிட்டம் பண்ணட்டா?.
மனைவி(கோவத்துடன்) : இந்த வித்தியாசமான அயிட்டம் எல்லாம் பதிவு போடறதோட நிறுத்திக்குங்க. முதல்ல உருப்படியா, ஒழுங்கா உப்புமா பண்ற வேலையைப் பாருங்க.

எல்லாம் சிரித்து இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். மாத இறுதியில் ஆண் பதிவர்கள் அவர்களின் வீட்டுக்கு அழைத்து இருக்கின்றார்கள். போய்விட்டுப் பதிவு போடுகின்றேன்.


டிஸ்கி : என்னை உதைக்க நினைப்பவர்கள், என்னைத் தேடிச் சிங்கப்பூருக்கு வரவேண்டாம். நான் ஒரு வார விடுப்பில் இந்தியா செல்கின்றேன். ஆட்டோ அனுப்புவர்கள் அங்கு அனுப்பவும். (மருத்துவச் செலவுக்குப் பணமும் அடிப்பவர்களிடம் கொடுத்து அனுப்பவும்)

32 comments:

  1. ஆட்டோ வந்துக்கிட்டே இருக்கு :)

    ReplyDelete
  2. என்னது மீண்டும் விடுப்பா? இந்த முறை புடலையைப் பண்ணியே போட்டுறணும்போல!!!!!

    உப்பு ஜாடியை ஒளிச்சுவச்சால் ஆச்சு:-)))))

    நல்லா யோசிக்கிறீங்கப்பா! அதுவும் ......

    ReplyDelete
  3. மேனகா சத்தியா,மலிக்கா,சித்ரா எல்லாம் தப்பிச்சுட்டேம்ன்னு நினைக்காதீங்க. இன்னும் வரும்.

    ReplyDelete
  4. உண்மையிலேயே பல நகைச்சுவையா இருக்கு... பெரும்பாலும் எல்லாம் சுவை பத்தி இருக்கதாலையோ என்னவோ... :-)))

    ஏன் இந்த கொலைவெறி பெண் பதிவர்கள் மேல? ஐய்யா ராசா ??

    ReplyDelete
  5. நான் தப்பிக்கலியா? அட, அட, அடடா.... நெல்லை அருவா, சாந்தி ஸ்வீட்ஸ் mixture ரெடியா வச்சிருக்கேன். பதிவை படிச்சிட்டு எதுன்னு முடிவு பண்றேன். ...........
    நகைச்சுவை பதிவு அசத்தல்..........!

    ReplyDelete
  6. யப்பா ...சிரிச்சி சிரிச்சி வயிறும் வாயும் வலிக்கிறது.....காலையில் சிரிக்க வச்சி என் இன்றைய பொழுதை சுகமாக்கியதற்கு நன்றி....

    ஆமாம் அது என்ன அக்கா? லொல்லா....அப்புறம் எழுத்தோசையில் இருந்து ஒரு கவிதை பார்சல் வரும் எப்படி வசதிங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

    ReplyDelete
  7. எங்க வீட்டில் ஒருவருக்கும் மீன் வாடையே ஆகாது என்று எப்படியுங்க உங்களுக்குத் தெரிஞ்சிச்சு.

    அனைவரும் படித்துச் சிரித்தோம்.

    ReplyDelete
  8. ஹா ஹா ஹா. சூ.................ப்பர். ஒவ்வொன்னும் செமத்தியா இருக்கு.

    ///மாத இறுதியில் ஆண் பதிவர்கள் அவர்களின் வீட்டுக்கு அழைத்து இருக்கின்றார்கள்.///

    நல்லவேளை அந்த டைம்ல நான் வெளியூர் போறேன் சாமி.

    ReplyDelete
  9. //அடுத்து ஜலிலா அக்கா வீடு,
    ஜலில்லா : ஏங்க சும்மா டீ.வீ சீரியல்தான பார்க்கின்றீங்க. அப்படியே நான் சமைத்த சாப்பாட்டை சாப்பிடலாம்மில்ல,
    கனவர் : ஒரே நேரத்தில் எதுக்கு ரெண்டு கொடுமைன்னு யோசிக்கின்றேன்//

    அட உண்மைய பளிச்சின்னு சொல்லிடீங்களே.

    எல்லாரை பற்றியும் படித்து ரசித்து நல்ல சிரிச்சாச்சு.

    //சரி சரி வர தங்கமணிக்கு வாய்க்கு ருசியா இருக்கமாதிரி உப்புமாவை கிண்ட கத்துக்கோங்கோஓஓஓஓ .//

    ReplyDelete
  10. ஹிஹி.. ரொம்ப ரசித்தேன்! :)))) அடுத்த வெஜ் பிரியாணி உங்களுக்கு தான்

    ReplyDelete
  11. சுதாகர் சார்,என்னே கற்பனை வளம்.எங்களை எல்லாம் குலுங்க சிரிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி சார்.எதற்கு மாத இறுதி வரை காத்து இருக்கின்றீர்கள் ஆண் பதிவர் வீடுகளுக்கு செல்ல..?இப்போதே போய் வந்து பதிவை போட்டு விடுங்கள் ஆவலுடன் இருக்கிறோம் வாசிப்பதற்கு.

    ReplyDelete
  12. நல்ல கற்பனை நண்பா.. உண்மையா நடந்த மாதிரி எழுதி இருக்கீங்க.. keep it up.. இன்னும் நிறைய எதிர் பார்க்குறேன்.. யாரெல்லாம் பெண் பதிவர்கள் இருக்காங்கனு தெரிஞ்சிக்க தான்.. வேற ஒன்னும் இல்லை.. ஹி.. ஹி.. ஹி..

    ReplyDelete
  13. ஸ்ஸ்ஸ்ஸபா.... முடியல.. என்னைப் போய் கோழிய குத்த வச்சிட்டீங்களே... =))... நடத்துங்க நடத்துங்க...

    //சின்ன அம்மிணி said...

    ஆட்டோ வந்துக்கிட்டே இருக்கு :)//

    அப்பாடா.. அப்போ எனக்கு அந்த வேலை மிச்சம்... நன்றிங் சின்னம்மிணியோ...

    ReplyDelete
  14. இந்த பல்பு ஓக்கே..சின்ன அம்மிணி வாங்கின பல்பு பார்க்கும்போது!!

    ReplyDelete
  15. அண்ணா முதல்ல கைய குடுங்க.. காமெடி பின்னி இருக்கீங்க.

    நல்லவேளை எனக்கு டேமேஜ் கம்மி :)))
    (அப்டீன்னு சொல்லிக்க வேண்டியதுதான்)

    ReplyDelete
  16. மீ த ஃபர்ஷ்டா.. அதனால புகை வரல..

    ReplyDelete
  17. அன்புடன் மலிக்காJanuary 18, 2010 at 7:55 PM

    அம்மாடியோ நான்தப்பிச்சேனு நிம்மதிய நிமிர்ந்தபோது பின்னூட்டம் பார்த்தா

    அடுத்தது நாங்களுமா?
    யாரங்கே என் பூனைப்படையெல்லாம் எங்கே போனிங்க பயணம் சென்றாலும் விடாதீங்கோ பித்தன் சாரை
    விரட்டிபிடிச்சு உண்மையை மட்டும் சொல்லிடவேணான்னு எச்சரிச்சிட்டு வாங்கோ.

    ஹா ஹா அருமையான தொகுப்பு. நல்லபடியா சென்று வாருங்கள்...

    ReplyDelete
  18. ஹ ஹ ஹா... காமிடி அருமை :-)

    ஆமா! எப்படி நீங்க நம்ம மேனகா சத்தியா,சித்ரா, பாயிஸா வீட்டுக்கு எல்லாம் போகாம விடலாம்? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :-)

    நல்லவேளை நீங்க எங்க வீட்டு பக்கம் வரல, இங்க போனவாரம் பூரா குளிர் -16 டிசி :-)

    ReplyDelete
  19. சுவாமி.சுதானந்தா ,உங்களை...என்ன செய்யலாம்ன்னு யோசிக்கிறேன்.உங்க அட்டகாசம் வர வரக் கூடுது.இருங்க ஊர்ல இருந்து ஒரு அகப்பைக்காம்பு பார்சலில எடுத்திட்டு அப்புறம் பேசிக்கிறேன்.எனக்குக்.....கன(ண)வர் வேறயா !நானே வேலை இடத்தில தாற உப்பு உறைப்பு இல்லாத சுவிஸ்காரன் சாப்பாடு சாப்பிட்டுக்கிட்டு நாக்கு செத்துப் போய்க் கிடக்கிறேன் !
    என்றாலும் சிரிச்சு முடில.

    ReplyDelete
  20. அடப்பாவமே!! என்னைய மட்டும் ரெண்டு தடவை போட்டுருக்கீங்க!! சுஸ்ரீ, சுவையான சுவை அதனால ஆட்டோ பத்தாது லாரியை(ட்ரக்கை) அனுப்புறே ன்:) நல்ல காமெடி!!! இந்தியாவிற்க்கு பொண்ணு பார்க்க போறீங்களா??:‍‍‍‍)))) கல்யாண சாப்பாடு எப்போ?

    ReplyDelete
  21. ஆட்டோக்காரனிடம் பணம் கொடுங்க சின்ன அம்மினி. நன்றி.
    எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான் டீச்சர்.நன்றி
    இருங்க ரோஸ்விக் உங்களுக்கும் இருக்கு. நன்றி
    நீங்க நெல்லை இல்லையா, அதான் உங்களுக்கு அல்வா ஜோக், நாங்க திருப்பாச்சி, வீச்சு அருவா எல்லாம் பார்த்துட்டோம்.நன்றி.
    // ஆமாம் அது என்ன அக்கா? லொல்லா.... //
    இது எல்லாம் கண்டுக்காதிங்க.அப்ப அப்ப அக்கான்னு சொல்லி, என் வயசை கம்மி பண்ணிக்குவேன். நான் கல்யாணம் ஆகாத கன்னிப்பையன். நீங்க எல்லாம் திருமதிகள். அப்ப அக்காதான.நன்றி
    நன்றி மகா,
    நன்றி மாதேவி,
    நன்றி நவாஸ்,அடுத்து நீங்கதானுங்க,
    நன்றி ஜலில்லா,
    நன்றி புதுகை தென்றல்,
    நன்றி சாருஸ்ரீராஜ்,
    நன்றி நஸியா, பிரியானியை அனுப்ப மறந்துறாந்திங்க,
    நன்றி ஸாதிகா, ஊருக்கு போய்ட்டு வந்து அவங்களைப் ஒரு கை பார்க்கலாம்.
    நன்றி திவ்யாஹரி,
    நன்றி கலகலபிரியா, இதுலையும் மிச்சமா?
    நன்றி முல்லை, என்ன இருந்தாலும். பப்பு பல்பு மாதிரி வராது.
    நன்றி சுசி, இன்னமும் இருக்கு,
    நன்றி மலிக்கா,
    அடுத்து நீங்கதான் சிங்ககுட்டி,
    நன்றி ஹேமா, கம்பங்களி எனக்கு மிகவும் பிடிக்கும்.
    நன்றி சுவையான சுவை, எப்பவும் நீங்கதான் முதல் பின்னூட்டம் போடுவீங்க இல்லை. அதான் ஸ்பெசல்.
    அனைவருக்கும் எனது நன்றிகள். திருமணம் எனக்கு இல்லை. எங்க அக்கா பெண்ணிற்க்கு.

    ReplyDelete
  22. //ப்பு மறக்காம பள்ளிக்கு டிபன்பாக்ஸ் எடுத்துப் போ. "நான், வெஜ் புலாவ்" பண்ணி வைச்சிருக்கேன்.//

    நான் வெஜ் புலாவா !!!

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

    ReplyDelete
  23. //நான்(கையில் கரண்டியுடன்) : குட்டிம்மா, நான் இந்த சோழா பட்டுரா மாதிரி, சோழா நுட்டுரான்னு ஒரு வித்தியாசமான அயிட்டம் பண்ணட்டா?.
    மனைவி(கோவத்துடன்) : இந்த வித்தியாசமான அயிட்டம் எல்லாம் பதிவு போடறதோட நிறுத்திக்குங்க. முதல்ல உருப்படியா, ஒழுங்கா உப்புமா பண்ற வேலையைப் பாருங்க.//

    :)

    கனவுலேயே குடும்பம் நடத்தாமல் விரைவில் டும்டும் நடக்கட்டும்.

    ReplyDelete
  24. நன்றி கோவி அண்ணா, நான் ,,,, வெஜ் புலாவ்ன்னு போட்டு இருக்கேன். அடுத்த வாரம் உங்க வீட்டுக் காமெடிதான் வரும்.

    ReplyDelete
  25. கலக்கல் சுதாகர்...

    தமிழு உங்களோட நிலமைய நினைச்சு இன்னும் சிரிப்ப அடக்க முடில.....

    ஹேமா சமையல் கவிதை ஜூப்பரு...

    சுசி , நிஜமாவாக்கா பாவம் குணா மச்சான்..

    ReplyDelete
  26. ஓ...பூனை கூடதற்கொலை பண்ணிகிச்சா.....எங்களுக்கும் ஒரு நேரம் வரும்....அப்ப பாத்துக்கலாம்....சிரிப்புன்னா சிரிப்புதான்......

    ReplyDelete
  27. சிரிச்சி... சிரிச்சி வயத்த கலக்குது

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.