Friday, January 8, 2010

செத்த பொணம்














சூரியன் தனது அன்றாடக் கடமை முடித்துச் சாயுங்காலம்,தனது சிம்மாசனமான கட்டைச் சாய்வு நாற்காலியில் உக்காந்து, தான் ஆசையுடன் வளர்க்கும் ஆட்டுக்கிடாயுடன், விளையாடும் தன் பேரப்பிள்ளையைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார் பொன்னம்பலவானர். ஜந்து ஏக்கரா நஞ்சையும், சில காணி புஞ்சைக்கும் சொந்தக்காரான அவர் தன் வீட்டு முற்றத்தில் பேரனின் விளையாடும் அழகை இரசித்துக் கொண்டு இருந்தார். அவர் ஒரே மகனின் வாரிசுதான் சுப்பிரமனியன். வயது பத்தானாலும் மழலை மாறா பிஞ்சு முகம். மழலை மாறா மொழி.இவன் மழலையைக் கேட்டுத் தாத்தாவிற்க்கு கொள்ளை ஆனந்தம். சுப்பிரமனியனுக்கும் தாத்தாவின் மடியிலும், முற்றத்தில் ஆட்டுக்கிடாயுடன் விளையாடுவதில் கொள்ளைப் பிரியம். பள்ளி முடிந்தவுடன், இரவு படுக்கச் செல்லும் வரை இதுதான் அவனது பொழுது போக்கு.

பொன்னம்பலவானரின் மகனுக்குப் பக்கத்து ஊரில் இருக்கும் அரசு அலுவலகத்தில் உத்தியோகம். இவர் நிலம் நீச்சு போன்றவற்றைக் கவனித்துக் கொண்டார். சென்ற மூன்று மாதங்களுக்கு முன்னர் வந்த மாரடைப்பு அவருக்கு கொஞ்சம் ஓய்வைத் தந்தது. பொன்னம்பலவானருக்கு செர்க்கம் போய் ரம்பை,ஊர்வசி நடனம் பார்க்க ஆசையில்லை என்றாலும், சிரமப்படாமலும், மற்றவர்களுக்கு தொல்லை தராமல் போய்ச் சேரவேண்டும் என்பதில் ஆசை அதிகம்.இதுக்காக அவர் அடிக்கடி," சிவனே, சிவனே" என்று கூப்பிட்டு, காலனுக்கு ரெகமென்டேஸன் கடிதம் அனுப்பக் கேட்டுக் கொண்டார்.இப்ப பேரனும்,வயலும்தான் வாழ்க்கை என்று சுருக்கிக் கொண்டார். ஒரு நாள் மாலையில் இருந்து இரவு வரை சுப்பிரமனியன் தாத்தாவுடன் கொஞ்சி விளையாடித் தூங்கப் போனான். தாத்தாவும் அந்த சந்தோசத்திலேயே நிரந்தரமாய்த் தூங்கிப் போனார். ஆம் அவருக்கு தூக்கத்தில் மாரடைப்பு வந்து இறந்து போனார். மறுனாள் சடங்குகள் ஆரம்பமாயின. தாரை தம்பட்டை முழங்க பொன்னம்பலவானர் இறுதியாத்திரைப் போய்ச் சாம்பலானர். இது எதுவும் புரியாமல் மலங்க, மலங்க விழித்துக் கொண்டுருந்தான் சுப்பிரமனியன். தாத்தா இல்லாத வெறுமை அவனை வாட்டியது. தனிமைத் துக்கத்தைச் சொல்லவும் தெரியாமல், மெல்லவும் முடியாமல் தவித்தான். தாத்தா மடி போய்த் தந்தை மடி அவனுக்குச் செந்தமானது.

காரியங்கள் எல்லாம் முடிந்து பதினாறாம் நாள் கறிவிருந்து படையல் அமர்க்களமாக ஆரம்பம் ஆகியது. சுப்பிரமனியனின் விளையாட்டுத் தோழனான ஆட்டுக்கிடாய் அறுக்கப்பட்டு, சுத்தம் செய்ய மஞ்சளில் ஊறிக் கறித்துண்டங்களாக கிடந்தது. சுப்பிரமனியன் திண்ணையில் உக்காந்து இருந்த தந்தையின் மடியில் அமர்ந்துக் கேட்டான்.

" அப்பா தாத்தா எங்கப்பா?"

" தாத்தா செத்துட்டாருடா."

" பொய் நீதான் தாத்தாவை தூங்கும் போது தூக்கிட்டுப் போயிட்ட, தாத்தா இனி வரமாட்டாராப்பா?"

" இல்லடா தாத்தா செத்துட்டாரு,செத்தா அதுக்குப் பொணம்னு பேரு, அதைக் கொண்டு போய் எரித்து விடுவேம் "

" ஏம்பா வீட்டுல வைக்ககூடாதா?,பொணத்த எதுக்கு எரிக்கனும்?."

" செத்துட்டா அந்த உடம்பு அழுக ஆரம்பித்து விடும்,அதுல கிருமிகள் வரும். உயிர் இருக்கும் வரைக்கும்தான் மதிப்பு, இல்லை என்றால் அது பொணம், வெறும் உடல்தான், என்று தன் மகனிடம் அவனுக்கு புரிகின்றதோ இல்லையே, தமது அறிவைக் கொட்டிக் கொண்டிருந்தார் அவன் தந்தை.

இது ஒன்றும் புரியாமல் விழித்த சுப்பிரமனியன், " அப்படின்னா ஆடும் செத்துருச்சா அப்பா?" என்றான். "ஆமாண்டா" என்று கூறியவர், வேலை வர எழுந்து சென்றார். காலியாகி இருந்த தாத்தாவின் சாய்வு நாற்காலியில் ஏறி அமர்ந்து விளையாட ஆரம்பித்தான்.அவ்வப்போது செத்த ஆட்டுக்கிடாயின் கறித்துண்டுகளைப் சேகமாய்ப் பார்த்துக் கொண்டுருந்தான். நல்லவேளை அவனுக்கு செத்துப் போன ஆட்டுக்கிடாயின் உடலும் செத்த பொணம்தான என்ற எண்ணம் வரவில்லை. இல்லை என்றால் அதை எரிக்காமல்,பொணத்தை ஏம்பா சாப்பிடுறாங்க என்று கேட்டுருப்பான்.

டிஸ்கி : இது நான் முதன் முதலில் எழுதும் கதை. பிழை இருந்தால் பொறுத்தும், குறை இருந்தால் சுட்டிக் காட்டவும்.

நடை, வளமை,இனிமை எல்லாம் இருக்காது. இதை உதாரனமாக வைத்து மூத்தவர்கள் கருத்துச் சொன்னால் திருத்திக் கொள்கின்றேன்.

உண்மையில் இது சிறுவயதில் எனக்கு வந்த சந்தேகம். செத்த ஆடு,மாடு, மீன் எல்லாம் பொணம்தானே என்பது என்னுடைய கருத்து. அதுக்காக பொணந்திண்ணியா என்று எல்லாம் கேக்கக் கூடாது. நன்றி. பித்தனின் வாக்கு- சுதாகர்.

20 comments:

  1. உண்மையில் இது சிறுவயதில் எனக்கு வந்த சந்தேகம். செத்த ஆடு,மாடு, மீன் எல்லாம் பொணம்தானே என்பது என்னுடைய கருத்து. அதுக்காக பொணந்திண்ணியா என்று எல்லாம் கேக்கக் கூடாது. நன்றி. பித்தனின் வாக்கு- சுதாகர். //

    இதுல ஏன் கொலைவெறி.......!

    ReplyDelete
  2. எல்லோரையும் பருப்புக்கு மாறச் சொல்லும் உங்கள் அரசியலை கண்டிக்கிறேன். அதே சமயத்தில் சிறுவன் மாட்டுப்பாலை மாட்டின் இரத்தமா என்று அறிவு பூர்வ ஆராய்ச்சி அடுத்த கதையில் தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    செத்த பொணம் பழமை வாத நாறிய பிணம்.

    ReplyDelete
  3. குழந்தைகள் கேள்வி கேட்க ஆரம்பித்தால்[கேட்க அனுமதித்தால்]நாம் கொஞ்சம் திண்டாடித்தான் போவோம்

    ReplyDelete
  4. மிகவும் அழகான!
    பொருள் பொதிந்த!
    எளிமையான!
    கதை நண்பரே!!

    குறையொன்றுமில்லை!
    தொடர்ந்து எழுதுங்கள்!

    ReplyDelete
  5. கதை சிந்தனையைத் தூண்டுவதாகவுள்ளது நண்பரே..

    ReplyDelete
  6. முதல் முயற்சிக்கு என வாழ்த்துக்கள் ......

    ReplyDelete
  7. கதை அருமையா இருக்கு..

    ReplyDelete
  8. Nice story.Thanks for visiting my blog.Happy 2010!

    ReplyDelete
  9. ஏன் வெள்ளிக்கிழமையும் அதுவுமா இந்தக் கொலை வெறி.சாதனையா....புரட்சியா !

    ஆனாலும் சிந்திக்க வைக்குது. ¨

    கொஞ்ச நாளில சுவாமி சுதாகர்ன்னு பதிவு வரப்போகுது.

    ReplyDelete
  10. உங்கள் கதை நல்லா இருக்கு சுதாகர் :-)

    ReplyDelete
  11. முதல் முயற்சி நன்றாகவே வந்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
  12. இரத்த ஓட்டம் கொண்ட அனைத்து உயிரினத்துக்கும் வலி பொதுவான விசயம், தனக்கு வலிப்பது போல் மற்ற உயிருக்கும் வலிக்கும் என்பதாலே தான் கொல்லாமையை கடை பிடிக்க வேண்டும் என்றார்கள். தாவரங்களைத் தவிற மற்ற உயிர்கள் உணவுக்காக மற்றொன்றை சார்ந்தே இருக்கின்றன இதில் மனிதனும் விதிவிலக்கல்ல.

    மாமிசம் சாப்டிடுபவர்கள் பொணம் திண்ணிகள் என்றால் முட்டை, மாட்டுப்பால் குடிப்பவரை என்னவென்பது?

    உங்களது கருத்துக்கள் பக்கச் சார்பாக இருப்பதாக உணர்கிறேன்.

    ReplyDelete
  13. நன்றி ஜோதிபாரதி, இது கொலைவெறி ஒன்னும் இல்லை. சும்மா எனக்கு இருக்கும் சந்தோகம், அனைவரிடமும் ஒரு கதையின் மூலமாக பகிர்ந்து கொள்கின்றேம்.
    நன்றி டி.வி. ஆர்.
    நன்றி கோவி அண்ணா, நான் யாரையும் மாறச் சொல்லவில்லை. கேள்வி மட்டும்தான் கேட்டுள்ளேன். அடுத்த கதை சொல்லச் சொல்லி இருப்பதால் நான் விளக்கத்தை அடுத்த பதிவில் தருகின்றேன்.
    நன்றி கோமா, உண்மைதான் சில சமயம் ஏடாகூடமாகவும், சில சமயம் புத்திசாலித்தனமாகவும் இருக்கும். தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
    நன்றி முனவர்.குணசிலன் அவர்களே, தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.தங்களின் உற்சாகமான வாழ்த்துக்களுக்கு நன்றி.
    நன்றி மாகா,
    நன்றி கலையரசன், தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
    நன்றி வித்யா,
    நன்றி பத்மா, தங்களின் பதிவுகளை நான் ரொம்ப நாளாக படித்து வருகின்றேன். பின்னூட்டம் இட்டது இப்போதுதான்.
    நன்றி ஹேமா, சுவாமி சுதாகர் நல்லா இல்லை, வேனா சுவாமி.சுதானந்தா என்று வைத்துக் கொள்ளலாம். தமிழ் நாட்டில் இப்ப எல்லாம் நிறைய பெண்கள் போலிச் சாமியார்களைத்தான் நம்புகின்றார்கள். ஆதலால் விரைவில் ஆசிரமம் வைக்கலாம். ஹா ஹா ஹா.
    நன்றி சுவையான சுவை,
    நன்றி சிங்ககுட்டி,
    நன்றி எஸ் ஏ நாவாஸ்,
    நன்றி கலகலப்பிரியா, நன்றி பட்டா பட்டி
    நன்றி வேடிக்கைமனிதன், எனது கருத்து ஒரு பக்க சார்பு அல்ல. நான் ஒரு பக்க கருத்து மட்டும் கூறியுள்ளேன். மறுபக்கம் விரைவில் எழுதுகின்றேன். நன்றி.

    ReplyDelete
  14. மிகவும் அழகான எளிமையான கதை

    ReplyDelete
  15. கதை ரொம்ப நன்றாக உள்ளது.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.