என்ன பதிவு போடலாம், நில்லுங்க கொஞ்சம் சைட் டிஷ் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் எடுத்து வைச்சுக்கிறேன்.நமக்கு எல்லாம் பதிவுக்குக் கூட சைட் டிஷ் வேணும்.
கொறுக் கொறுக்,
என்ன பதிவு போடலாம், ஆங்க் இந்த மலிக்காவும், ஜலில்லாவும் நாலு கொழுக்கட்டையை யாருக்கும் தெரியாம துபாய் பார்க்குல மறைஞ்சு சாப்பிட்டாங்களே, அதை சொல்லலாமா?
கொறுக் கொறுக்,
நம்ம வெட்டிப் பேச்சு சித்ரா யு எஸ் ல நெல்லை அல்வா கிண்டறதை சி ஜ ஏ மூலமா தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கு பயந்துதான் ஒபாமா இந்தியா வந்தாருன்னு உண்மையை சொல்லிரலாமா?
கொறுக் கொறுக்,
நம்ம துளசி டீச்சர் போட்ட கோயில் பதிவுகளில், எந்த கோயில் பிராசதம் நல்லா இருக்கும்முன்னு சொல்லாம மறைச்சுட்டாங்களே அதைப் பதிவா போடலாமா?
கொறுக் கொறுக்
போன தீபாவளிக்கு நம்ம மேனகா சக்கரையும், நெய்யும் போட மறந்து ஒரு மைசூர் பாகு பண்ணினாங்களே, அதை போட்டு உடைக்க முடியாமா கஷ்டப்பட்டாங்களே, அதை சொல்லலாமா?
கொறுக் கொறுக்,
ஜிலேப்பி மாதிரி வளைச்சு வளைச்சு எழுதுனா கவிதைன்னு ஹேமுவும், தமிழும், தொழில் இரகசியம் சொல்லிக் கொடுத்தாங்களே, அதைப் பதிவா போடலாமா?
கொறுக் கொறுக்,
வட கொரியா போட்ட குண்டு எல்லாம் எடுத்து, பழைய இரும்புக் கடையில நம்ம சிங்க குட்டி அய்யா போட்டுப், பொட்டுக் கடலை வாங்குனத சொல்லலாமா?
கொறுக் கொறுக்,
வர்ற சக்கரைப் பொங்கலுக்கு சக்கரையே போடாம சக்கரைப் பொங்கல் பண்ணாலாமுன்னு சுசி எடுத்த இரகசிய சபதத்தைப் போட்டு உடைக்கலாமா?
கொறுக் கொறுக்,
என்னடா பித்தன் மாலை போட்டுட்டு ஆன்மீகப் பதிவே போடலைன்னு யோசிக்கறவுங்களுக்கு, நம்ம சாமிகிட்ட டூ விட்ட விசயத்தை சொல்லலாமா?.
கொறுக் கொறுக்,
இல்லைன்னா, நம்ம பட்டாபட்டி முதல்வர் எத்தனை பொறம்போக்கு இடத்தை பட்டா போட்டாருன்னு, ஸ்பெக்ட்ரம் கணக்கா ஒரு பதிவு போடலாமா?
கொறுக் கொறுக்
அதும் இல்லைன்னா, நம்ம மங்குனி அமைச்சர், எந்த நாட்டு அமைச்சர்ன்னு கேட்டு ஒரு பொது அறிவுப் போட்டி வைக்கலாமா?.
கொறுக் கொறுக்
இல்லைன்னா, நம்ம ஜெய்லானி பத்தாங்க் கிளாஸில் பத்து வருசம் படிச்சதை பதிவா போடலாமா?
கொறுக் கொறுக்,
இது எல்லாம் வேண்டாம் நம்ம மண்டையில ஏற்கனவே முடி இல்லை, எல்லாரும் சேர்ந்து க்டுப்புல நம்ம மண்டைய ஆளாளுக்கு புடிச்சாங்கனா, அப்புறம் இருக்குற நாலு முடி கூட மிஞ்சாது, பேசாம, தொப்பையானந்தாவை வைச்சு ஒரு காமெடிப் பதிவு போட்டுருராலாம்.
கொறுக் கொறுக்,
அடச்சே இங்க தமிழ் நாட்டுல ஒருத்தர் சொத்துக் கணக்கு சொல்லி அறிக்கை விட்ட காமெடிதான் 2010 ஆம் ஆண்டின் தலை சிறந்த காமெடி, அதை வீட மிக சிறப்பான காமெடி இனிமேல வர முடியாது,
அய்யே பாவம், நம்ம கவுண்ட மணி, செந்தில்,விவேக், வடிவேலு மற்றும் சந்தானம் கூட இதை வீட எப்படிடா காமெடி போட முடியும் யோசிக்கிறாங்க.அவங்களுக்கு எல்லாம் சான்ஸ் கிடைக்காம வீட்டுக்குள்ள முடங்கிப் போய்ட்டாங்க.
கயிர முத்து அப்படியே ஷாக் ஆகி, இதைப் பாராட்டி என்ன கவிதை எழுதுறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டார்.
கொறுக் கொறுக்,
கஜினி வேற, இருக்குற கன்பியூஸ் பத்தாதுன்னு இன்னம் கன்பியூஸ் ஆகிட்டார், இதுக்கு ஒரு பாராட்டு விழா எடுத்தா என்ன சொல்லாம்முன்னு மண்டைய பிச்சுக்கிட்டார், பேசாம இமய மலையில வாங்குன ஊசி,பாசிதான் நம்ம சொத்துன்னு சொல்லற முடிவுல இருக்கார்.
கிமலுக்கு அந்த பிரச்சனையே கிடையாது, எப்படியும் அவரு பேசறது யாருக்கும் புரியாது.(அவரையும் சேர்த்து).
கீரமணி வேற இதைப் பாராட்டி அறிக்கை விட ஜால்ரா கிடைக்காம கஷ்டப்படாறார்.
இப்படி ஒரே அறிக்கையில எல்லாரையும் இவரு தூக்கி சாப்பிட்டதுக்கு அப்புறம் நம்ம காமெடி எல்லாம் எடுபடாது.
கொறுக் கொறுக்,
அப்புறம் என்ன பதிவு போடலாம், பேசமா நமக்கு புடிச்ச " தொடரும்" அப்படின்னு போட்டு இதைத் தொடர் பதிவா போட்டுரலாமா?
பதிவு போடாம விட்டா, சாருஸ்ரீ, ஜனனி பர்த்டேக்கு ஸ்விட் தராம விட்ட மாதிரி நம்மளும் பதிவு போடாம விட்டுர மாதிரி ஆயிடும்
கொறுக் கொறு
அச்சேச்சே சிப்ஸ் தீர்ந்து போச்சுங்க சரி அடுத்த வாரம் வேற சிப்ஸ் வாங்கி வைச்சுப் பதிவு போடலாம்.
டிப்ஸ்: ரொம்ப நாள் ஆச்சுன்னு, சும்மா ஒரு ரவுண்ட் எல்லார் பெயரும் சொல்லிப் பார்த்தேன். அப்புறம் காஞ்சி முரளி அய்யா வேற இன்னமும் நிறையா பேரை சொல்லலைன்னு கோவிச்சுப்பார், அதுனால மீதி இருக்குறவங்க அப்புறமா ஒரு பதிவில,
வணக்கம் இது எல்லாம் சும்மா தமாசா எடுத்துக்குங்க, சிரிக்க மட்டும் சிந்திக்க அல்ல,
என்னது சின்னப்புள்ளத்தனமா? பேச்சு பேச்சா இருக்கனும், இப்படி உருட்டுக் கட்டை எல்லாம் எடுக்கக் கூடாது, வரட்டா!!!!!!.
hahahah
ReplyDeleteஹா ஹா
ReplyDelete//கொறுக் கொறுக்
போன தீபாவளிக்கு நம்ம மேனகா சக்கரையும், நெய்யும் போட மறந்து ஒரு மைசூர் பாகு பண்ணினாங்களே, அதை போட்டு உடைக்க முடியாமா கஷ்டப்பட்டாங்களே, அதை சொல்லலாமா?
// ஹா ஹா நானுமா?? ரகசியத்தை சொல்லிட்டீங்களே அண்ணா..
//இல்லைன்னா, நம்ம ஜெய்லானி பத்தாங்க் கிளாஸில் பத்து வருசம் படிச்சதை பதிவா போடலாமா?
// ஹா ஹா இதான் செம டாப்பு..சூப்பர்ர்
....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...... அண்ணா..... ""உண்மையை"" எல்லாம் இப்படி சொல்லப்படாது......
ReplyDeleteசோளக்காட்டில் பேய் கதை என்ன ஆச்சு?
//மலிக்காவும், ஜலில்லாவும் நாலு கொழுக்கட்டையை யாருக்கும் தெரியாம துபாய் பார்க்குல மறைஞ்சு சாப்பிட்டாங்களே//
ReplyDeleteஇது எப்போ சொல்லவே இல்ல...:))
ஹா..ஹா.. வரவர எல்லொரும் காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டீங்க..
ReplyDeleteஉம்.. நடக்கு..நடக்கு...
சென்னையில இன்னும் மழை பெய்யுதா பாஸ்?
:-)
//சொத்துக் கணக்கு சொல்லி அறிக்கை விட்ட காமெடிதான் 2010 ஆம் ஆண்டின் தலை சிறந்த காமெடி//
ReplyDeleteஅந்த கூத்தை தான் இங்கே பரபரப்பா பேசிட்டு இருக்காங்க. ஹிந்திகார பயபுள்ளைக கூட நம்ப மாட்டேங்குதுகன்னா பாத்துக்கோங்களேன் !!!
ஓ...சாமியோட டூ வா ....!
ReplyDeleteஅடடா சிப்ஸ் இவ்வளவு சீக்கிரமா தீர்ந்து போச்சா, சீக்கிரம் சிப்ஸ் வாங்கிட்டு வாங்க “கொறுக்… கொறுக்”
ReplyDelete/// ஆங்க் இந்த மலிக்காவும், ஜலில்லாவும் நாலு கொழுக்கட்டையை யாருக்கும் தெரியாம துபாய் பார்க்குல மறைஞ்சு சாப்பிட்டாங்களே, அதை சொல்லலாமா?///
ReplyDelete///இல்லைன்னா, நம்ம ஜெய்லானி பத்தாங்க் கிளாஸில் பத்து வருசம் படிச்சதை பதிவா போடலாமா?////
///தொப்பையானந்தாவை வைச்சு ஒரு காமெடிப் பதிவு போட்டுருராலாம்.////
இந்த மூன்று "கொறுக் கொறுக்"குகளும்
"நறுக்... நறுக்...!".
என்ன... சுதாகர் சார்...! என்னையும் இழுத்துவிட்டுடீங்க...!
என் பணிவான வேண்டுகோள்....!
என்னை "முரளி" என்றே ஒருமையில் அழையுங்கள்...! ///காஞ்சி முரளி அய்யா//// என்றெல்லாம் வேண்டாமே..! அப்படி அழைக்குமளவிற்கு நான் ஜீனியசுமில்லை... அறிவாளியுமில்லை... தங்களைப்போலவோ அல்லது வலைபதிவு ஜாம்பவான்களில் ஒருவனோ இல்லை... நான் சாதாரணமானவன்...!
வயதிலும்... அறிவிலும்... மூத்தோரையும் - சான்றோர் பெருமக்களையும்தான் "அய்யா" என அழைப்பர்...! ஓகே...!
இஞ்ச பார்ரா...!
நீங்க அந்த "கொழுக்கட்டை"ய விடல...!
மலிக்கா அந்த "வெள்ளக்காக்கா"வையும் விடல...!
ஹா... ஹா... ஹா...!
சூப்பரப்புங்கோ...!
என்ன பதிவு போடலாம், ஆங்க் இந்த மலிக்காவும், ஜலில்லாவும் நாலு கொழுக்கட்டையை யாருக்கும் தெரியாம துபாய் பார்க்குல மறைஞ்சு சாப்பிட்டாங்களே, அதை சொல்லலாமா//
ReplyDeleteஅந்த கொலுகட்டைமேலேயே அல்லாருக்கும் ஒரு கண்ணு.ஆங் அஸ்கு புஸ்கு நாங்க உங்களுக்கெல்லாம் அந்த வெளைக்காக்காகிட்டமட்டும்தான் கொடுதுவிடுவோம் அது தந்தா வாங்கிகோங்க..
என்னது நான் அண்ணாதேக்கிட்டேன்னு சொல்லவேயில்லையே..
இஞ்ச பார்ரா...!
ReplyDeleteநீங்க அந்த "கொழுக்கட்டை"ய விடல...!
மலிக்கா அந்த "வெள்ளக்காக்கா"வையும் விடல...!//
அத அவ்வளவு சீக்கிரமா விடமுடியுமா என்ன.
அதுசரி அண்ணாதே 10 வருசமாவா இப்புடி நாம் அதுக்குமேலேன்னுல நெனச்சேன்..
பிரதாப்™ said...
//மலிக்காவும், ஜலில்லாவும் நாலு கொழுக்கட்டையை யாருக்கும் தெரியாம துபாய் பார்க்குல மறைஞ்சு சாப்பிட்டாங்களே//
இது எப்போ சொல்லவே இல்ல.//
நல்லவேளை அன்னகின்னு ரிப்போட்டருங்க யாரும் வரலைஇல்லைன்னின்னா இதவேற லைவாயில்ல காட்டியிருப்பாவோ..
எங்கே நீரோடைபக்கமே காணோம் பயப்புடாம வாங்க உங்களுக்கான செய்தியெல்லாம் போடமாட்டேன் ஓகேவா
ReplyDeleteபடித்த மற்றும் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள், எல்லார் பின்னூட்டத்திற்கும் தனிப்பட்ட முறையில் பதில் எழுத ஆசைதான், ஆனால் நேரம் கிடைப்பது அரிதாக இருக்கின்றது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteமன்னிக்கவும் விரைவில் பின்னூட்டங்களுக்கு உரிய முறையில் பதில் எழுதுகின்றேன்.
ReplyDeleteஎன்ன நாங்க கொழுக்கட்டை செய்து சாப்பீட்டாமும் சாப்பிட்டோம். ஒரு வருடம் ஆக ப்போகுது நீங்களும் ஜெய்லானியும் காதுல புகை விட்டு கொண்டே இருக்கீங்க
ReplyDeleteமரவள்ளி கிழங்கு சிப்ஸ் சா மழை நேரம் சாப்பிட்ட ரொம்ப ஜோரா இருக்குமே
வாஙக் இனிய காணம் பாட அழைக்கிறேன்
முடிந்த போது வாங்க
மரவள்ளி சிப்ஸ் சாப்ப்பிட்டு கொண்டே எல்லாரையும் நெறுக்கியாச்சா
ReplyDeleteடெம்ப்ளேட் ரொம்ப அருமையா பச்சை பசேலுன்னு புள் வெளிக்கு வந்துட்டு போனாப்பல இருக்கு
பிரதாப்™ said...
ReplyDelete//மலிக்காவும், ஜலில்லாவும் நாலு கொழுக்கட்டையை யாருக்கும் தெரியாம துபாய் பார்க்குல மறைஞ்சு சாப்பிட்டாங்களே//
அட மலிக்கா அன்ன்னிக்கு ஒரு முக்கியமான ரிப்போட்ட்டர் வந்தார், தினமனியில் போடவான்னும் கேட்டாரே
நாம தானே ரகசியமா இருக்கட்டுமுன்னு சொன்னோம்
அருமையான பதிவு. ஹி ஹி இப்போத்தேன் படிக்க முடிஞ்சது. இனி ஃபாலோ பண்ணிக்கிறேன்ண்ணா.. :)) அடுத்த கொறுக் கொறுக் எப்ப? :)))))
ReplyDeleteஅட இப்பதானே வாசிக்கிறேன்,சூப்பர் காமெடி.
ReplyDeleteஹா ஹா ஹா... ஹ்ம்ம்... இப்பவாச்சும் முடிவு பண்ணிட்டீங்களா... அடுத்த என்ன பதிவுன்னு??
ReplyDeleteநல்லா இருந்துச்சு... உங்க ஸ்நாக் பகிர்வு..!! :-))
நம்ம வெட்டிப் பேச்சு சித்ரா யு எஸ் ல நெல்லை அல்வா கிண்டறதை சி ஜ ஏ மூலமா தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கு பயந்துதான் ஒபாமா இந்தியா வந்தாருன்னு உண்மையை சொல்லிரலாமா?
ReplyDeleteஆகா அருமையாத்தான் காமடி இருக்குது .இந்த விசயம் நம்ம சித்தரா மேடத்துக்கு தெரியுமா?......வரட்டும் வரட்டும் நான் போட்டுக் குடுக்குறன் நகைச் சுவை
அருமை என்று சொல்லி ஹி......ஹி.....ஹி......மிக்க நன்றி பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோ ......
இப்பதான் உங்க பிளாக் பக்கம் வந்தேன்.
ReplyDeleteஅனைவரையும் கலககிட்டீங்க. அருமையான பதிவு.
பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள் சகோ.
அதுசரி எங்கே காணோம் ஆளையே!
ReplyDeleteபதிவு எழுதுவதேயில்லையா 2012 பிறந்துருச்சி இன்னும் 2010 லிதிலேயே நிக்கிறதே