எனக்கு திடிர்ன்னு பல வருடங்களுக்கு முன்னர் பழைய வண்ணாரப் பேட்டையில் கார்ப்பேரசன் குழாயடிச்சண்டை பார்த்தது ஞாபகம் வந்தது. அதை பதிவர்கள் கிட்ட பகிர்ந்துக்காலம் என்ற எண்ணம். டீசண்டான பதிவர்கள் இதைப் படிக்க வேண்டாம். தெருவில் குழாயடியில் நிகழம் இரு பெண்களின் சண்டைக் காட்சிகளை மனதில் கொள்ளவும்.
அடியே, நாங்க நிக்கறது தெரியலை, குடத்தை தூக்கிட்டு முன்னால போற பெரிய துரைசானி இவ.
ஆமா இவ பெரிய மயிறு, இவ நிக்கறான்னு நாங்க ஒதுங்கனுமாக்கும்,
அடியே யாரைப் பார்த்து மயிறுன்ற உன் லட்சணம் தெர்யாதாக்கும், ஊரே நாறுது,
ஆமாண்டி நாதாரி, என் கதை ஊரு நாறுது, நீ மட்டும் என்ன உசத்தியாக்கும், ஒன்னும் தெரியாத என் புருசனை மயக்கி முந்தானையில முடிஞ்சு வைச்சுக் கிட்டியே.
அடியே பல்லை பேத்துப் புடுவேன். அவனை அடக்கத் தெரியல்லை, என் கிட்ட வந்து ரவுசு உடாதே.நீ என்ன யோக்கியமாடி நீயுதான் என் புருசன் கிட்ட பல்லை இளிக்கிற.
ஆமாண்டி நான் இளிச்சா அவனுக்கு புத்தி எங்க போச்சு, ஊராறிஞ்ச நாதாரி என்னைப் பத்திப் பேசாதடி
அடியே நான் ஊராறிஞ்சா? நீ என்ன உலகம் அறிஞ்சவளா.....
பொறம் போக்குக் கழுதை வாயாப் பார்த்தியா என்ன பேச்சுப் பேசறா, அவுசானிக் கழுதை.
ஏய் மரியாதையாப் பேசு, என்ன வுட்டா வாய் நீளுது, அறுத்துப் போடுவேன் அறுத்து நாதாரி நாயே.........
அடியே யாரைப் பார்த்து மரியாதை தெரியாதுன்னு சொல்ற. மரியாதை கொடுப்பதில் நாந்தான் நம்பர் ஒன்னு, நீ மூடிக்கிட்டுப் போடி.......
இப்படியா இந்த் சண்டை பலரின் அந்தரங்கத்தை தெருவில் வைத்து விமர்சனம் செய்யப் பட்டது.இருவரின் கணவன்மாரும் தங்களின் மனைவியரின் சண்டை சாமார்த்தியத்தை மாற்றி மாற்றி புகழந்து கொண்டார்கள். தெரு சணம் பூராவும் வேடிக்கை பார்த்தது இவ சரியா அவ சரியா என விவாதம் பண்ணிக் கொண்டது,
நடுனிலையான என்னை மாதிரி சிலர் கருமமடா சாமின்னு தலையில் அடித்துக் கொண்டது.
ரொம்ப முக்கியமான டிஸ்கியோ டிஸ்கி:---
இது நான் பார்த்த தெரு சண்டைதாங்க, நீங்க பாட்டுக்கு இங்கன ஒருத்தர் அய்யோ ஸ்பெக்ட்ரீம் ஸ்பெக்ட்ரிம்னு அறிக்கை விட, அதுக்கு பதிலுக்கு உன்னைப் பத்தி தெரியாதான்னு, டீன்ஸி,டீன்ஸி கேஸுல மாட்டுன ஆசாமிதான நீ என்று கேக்கறதும், பத்திரிக்கைகள் அதை பெரிதாக, பெருமையாக விளம்பரம் செய்ய, மக்கள் பொழுது போவதற்க்காக பேப்பரை படித்து விவாதம் செய்வதையும்.
பாராளுமண்ற குழுவுக்கு எதிர்க்கட்சிகள் இரகளை பண்ணும் காட்சிகளையும், அதுக்கு எதியுரப்பாவை இராஜினமா பண்ணச்சொல்லி ஆளுங்கட்சி கத்துவதையும் நினைத்துக் கொண்டால் அதுக்கு நான் பொறுப்பு அல்ல.
மூணவது தெரு முச்சந்தியமன் மேல சத்தியமா. மங்குனி சாட்சியா நான் தெரு சண்டையத்தான் எழுதினேன். நீங்களாக எதாவது கற்பனை பண்ணிக் கொண்டால் அதற்க்கு நான் பொறுப்பு அல்ல.
என்னங்க பதிவு கொஞ்சம் கேவலமா இருக்கா, மன்னிச்சுகுங்க, இதுக்கு மேல அழகா விமர்சனம் பண்ண எனக்கு தெரியல்லை.
டிஸ்கி: எனது முந்தைய பதிவுக்கு பலரும் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி. நேரம் கிடைக்காததால் பதில் அளிக்க முடியவில்லை. அனைவருக்கும் எனது நன்றிகள்.
சுதாகர்....முதல்ல மன்னிச்சுக்கோங்க.இரண்டு பதிவு ஏற்கனவே வந்திருக்கு.என் இணையம் அறுந்திருந்தபோது மீண்டும் வந்திருக்கிறீர்கள்.நான் கவனிக்கவேயில்லை.இப்போதான் உங்களின் பதிவு பார்த்துச் சந்தோஷத்தோடு வந்துவிட்டீர்கள் என்று ஓடி வருகிறேன்.முன்னுக்கு இரண்டு பதிவுகள்.
ReplyDeleteமீண்டும் பார்க்கிறதில சந்தோஷம் சாமியாரே...
சுகம்தானே.எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.நடந்துகொண்டுமிருக்கு.அதன்வழியே நாங்கள்.முயற்சியை மட்டும் விடாமல் பின் தொடர்வோம்.
சந்தோஷத்தோடு இனிப் பதிவுகளோடு சந்திப்போம் !
சுதாச் சாமியாரே....தெருச்சண்டையெல்லாம நின்னு பொறுமையாப் பாக்கிறீங்கபோல.அப்பிடியே ஒரு சொல்லு விடாம எழுதியிருக்கீங்க.அவங்க கையில நீங்க அகப்படணுமே.அப்போ தெரியும்.நானும் நிறையக் காலமாச்சு இப்பிடி ஒரு சண்டை பாத்து !
ReplyDeleteஎன்னங்க, பதிவுலகத்திலயும் அப்பப்ப கொழாயடிச்சண்டை நடக்குதே, அதப்பத்தியும் கொஞ்சம் எழுதுங்க.
ReplyDeleteடீசண்டான பதிவர்கள் இதைப் படிக்க வேண்டாம்.
ReplyDelete//
போங்கண்ணே.. என்னைப்போயி புகழ்ந்துக்கிட்டு..
வெக்க வெக்கமா வருது..
எப்படி இருக்கின்றிங்க...ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கின்றிங்க...அடிக்கடி ப்ளாக் பக்கம் வாங்க...
ReplyDeleteலேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்கோ.....! :-)
ReplyDeleteஅண்ணே..!!திரும்பவும் நா குழாயடிக்கே போய்ட்டேனோன்னு ஒரு சந்தேகம் வந்துடுச்சி ...!! வசனம் எப்படி மனப்பாடமா போட்டிருக்கீங்க.. ஒரு வேளை ரெக்காடிங்கா..!! :-))
ReplyDelete//என்னங்க, பதிவுலகத்திலயும் அப்பப்ப கொழாயடிச்சண்டை நடக்குதே, அதப்பத்தியும் கொஞ்சம் எழுதுங்க// ரீப்பிட்
ReplyDeleteசுதாகர் சார்,இதிலிருந்து ஒன்று புரிகின்றது.குழாயடி சணடையை சுவாரஸ்யமாக நின்று வேடிக்கை பார்த்த அனுபவம் நிறைய இருக்கிறது உங்களுக்கு..ஆம் ஐ கரெக்ட்??
ReplyDeleteஹா ஹா ஹா..
ReplyDeleteவரும் போதே சண்ட இழுத்துட்டு வர மாதிரி இருக்கு...!! :-))))
//மூணவது தெரு முச்சந்தியமன் மேல சத்தியமா. மங்குனி சாட்சியா நான் தெரு சண்டையத்தான் எழுதினேன். நீங்களாக எதாவது கற்பனை பண்ணிக் கொண்டால் அதற்க்கு நான் பொறுப்பு அல்ல.\\
ReplyDeleteஎதுவானாலும் கப்படிகுது .
//அதுக்கு எதியுரப்பாவை இராஜினமா பண்ணச்சொல்லி ஆளுங்கட்சி கத்துவதையும் நினைத்துக் கொண்டால்//
ReplyDeleteஇங்க நிக்குறீங்க அண்ணே நீங்க.
:)))))
ReplyDeleteஇதப்பார் நைனா..! நம்மப்பேட்டைல நந்துகினத அப்டியே... புட்டுபுட்டு வைச்சுகினகீர...!
ReplyDeleteநம்ம யெரியா மான்த்த ஏம்பா வாங்குற...!
அப்புற...
நீ பெஜாராய்டுவ...! வேணா...!
தங்களின் கருத்துகளை சொன்ன அனைவருக்கும் எனது நன்றிகள்.
ReplyDeleteஅட டா சென்னைக்கு போனதும் குழாயடி சண்டை பதிவா?
ReplyDeleteஅங்கு தான் ஆங்கேங்கே பார்க்கலாம்
(பிலாக் பெயரை மாற்றிட்டு அல்லோலம், கொஞ்சம் நாள் கழித்து தான் வருவேன்) என் பதிவு பக்கம் தேடி வந்தமைக்கு மிக்க நன்றி