Thursday, October 28, 2010

சகட யோகமும், மக்கு சாம்பிரானியும்










வந்தனம் வந்தனம், வந்த சனம் குந்தனனும். எல்லாருக்கும் இந்த பித்தன் என்ற கோமாளியின் வணக்கங்கள். மிக நீண்ட காலத்திற்கு பிறகு எழுத ஆரம்பித்துள்ளேன்.
தப்பு இருந்தா மன்னிக்கவும், இந்த இடைப்பட்ட காலத்தில் என் நலம் விசாரித்த தங்கைகள்,நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். முதலில் கொஞ்சம் சோகம் சொல்லிவிட்டு பின்னர் பதிவுக்கு போலாம்.

இந்த சகட யோகம் யாருக்கு பொருந்துதோ இல்லையோ, எனக்கு நல்லா பொருந்தும். எங்க அம்மா அடிக்கடி சொல்வார்கள், உனக்கு கால்ல சக்கரம் கட்டி உள்ளது என்று. அதுபோல வாழ்க்கை சக்கரத்தில் மெதுவாக மேலே ஏறிய நான் கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே இறங்கி விட்டேன். பனை மரத்தில் சிலந்தி கடித்தால் தென்னை மரத்தில் நெறி கட்டுவது போல பொருளாதார பங்கு வீழ்ச்சி என் வேலையை பறித்து விட்டது. சந்தை நிலவரம் காரணமும்,சில சட்ட சிக்கல்கள் காரணமாக என் நிறுவனம் சிங்கையில் வைத்து இருந்த கூட்டு நிறுவனத்தில் இருந்து விலகி விட்டது. ஆதலால் நானும் சிங்கையில் பணி முடித்து இந்தியா வரும்படி ஆகிவிட்டது. எனது இனிய சிங்கை பதிவர்கள் அங்கு ஒரு குழுவாக வந்து நான் திரும்புவது குறித்துக் கருத்துக்களைக் கேட்டனர். குழலி அண்ணா,ஜெகதீஷ்,அருமை ஜோதி, எனது இனிய முகவை இராம், ஞானப்பித்தன் என்னும் வெற்றிக்கதிரவன், என் உடன் பிறவா அண்ணா கோவி.கண்ணன்,இன்னமும் பலர் எனக்கு ஆறுதல் கூறினார்கள். வெட்டிப் பேச்சு சித்ரா, எண்ணங்கள் கீதா அம்மா ஆகியோர் எனக்கு தைரியம் சொன்னார்கள். நானும் பித்தனுக்கு(பரதேசிக்கு) எந்த மடமும் சொந்த மடம் என்ற எண்ணத்தில் மூட்டை கட்டிக் கொண்டு வந்து விட்டேன்.கோவி. அண்ணா என்னை விமான நிலையம் வரை வந்து வழி அனுப்பி வைத்தார்கள்.கார்டுலஸ் மவுஸ் ஒன்றையும் நினைவுப் பரிசாக அளித்தார்கள்.

இங்கு வந்தால் நான் இல்லாத இரண்டு வருடங்களில் எனது நிறுவனம் அதல பாதாளத்தில் போய் விட்டது. நிறுவனத்தை மீண்டும் கொணரும் முயற்ச்சியில் ஈடுபட்டேன். சில சட்ட சிக்கல்களை என்னால் முடிந்த வரை முடித்து வைத்தேன். ஆனாலும் சம்பளம் கொடுக்கும் அளவுக்குக் கூட நிறுவனம் இல்லாத நிலையில், இரண்டு மாதங்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்தேன். ஆனாலும் பயன் இல்லை. என் நிறுவன மேலான் இயக்குனரின் தொடர் அறிவுறுத்தல்கள் பேரில்,விலக மனம் இல்லாமல், அந்த நிறுவனத்தில் இருந்து விலகி விட்டேன். என் வேலை போனது என் குடும்பத்தாருக்கு மிகவும் மகிழ்வை கொடுத்தது. அண்ணாக்கள், அக்காள்மார்கள், அண்ணிகள் எல்லாரும் என்னை கூப்பிட்டு அவர்கள் இல்லத்தில் குறைந்தது ஒரு வாரமாவது தங்கும்படி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். என் பெரிய அண்ணா, மற்றும் இரண்டாவது அக்கா ஆகியோர் என்னை இரண்டு மாதம் அனைவரிடமும் தங்கி விட்டு ரிலாக்ஸ் செய்து பின்னர் அடுத்த வேலை பார்க்குமாறு கூறினார்கள். நானும் வேலையின் காரணமாக யார் வீட்டிலும் ஒரு நாள் அல்லது மூன்று மணி நேரத்துக்கு மேல் இருந்தது இல்லை. பாசமாக அனைவரும் கூப்பிட்டதால், ஒரு மாதம் அவர்கள் அனைவரின் வீட்டிலும் இரண்டு நாட்களாவது தங்கலாம் எனவும், அம்மாவுடன் பத்து நாள் இருக்கலாம் எனவும் முடிவு செய்தேன். அதன்படி என் பெரிய அண்ணா வீட்டுக்கு சென்றேன். மூன்று நாட்கள் தங்கி இருந்த நிலையில் எனக்குக் கணக்குப் பதிவியலில் வேலை கத்துக் கொடுத்த ஆடிட்டர் யார் மூலமாகவே எனக்கு வேலை இல்லாத விசயத்தைத் தெரிந்து போன் செய்து உடனடியாக வரும்படி அழைத்தார்.

நான் போன போது சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் கணக்கு மேலாளர் வேலை காலியிருக்கின்றது, நான் ஒரு நல்ல ஆளாக உன்னை அனுப்புவதாக கூறிவிட்டேன் என்று கூறி கையேடு காரிலும் ஏத்தி அழைத்துப் போய்விட்டார். எனக்கு மனம் இல்லாவிட்டாலும் அவர் குரு போன்றவர். அவரின் வார்த்தைகளை தட்ட முடியாமலும் மனம் இல்லாமலும் அந்த நிறுவனத்தில் இணைந்து விட்டேன். சரி ரொம்ப அறுத்துவிட்டேன். இனி நம்ம ஸ்டைல் பதிவுக்குப் போகலாம்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் என்னைப் பாதிக்கவில்லை, ஆனால் இப்போ இந்த நிறுவனம் இருக்கும் இடம்தான் கயலான் கடை ஏரியா. புதுக்பேட்டையில் கார்கள் தட்டுமுட்டு சாமானங்கள் உடைக்கும் இடம். சுத்தியும் குப்பை கூளமான கூவம் ஏரியா, சுத்தமான சிங்கையில் இருந்து குப்பை தொட்டியில் போட்டது போல.
உயரத்தில் இருந்து அதல பாதாளத்தில் விழுந்து போல் இருந்தது. ஆனால் நிறுவனமும் அதன் மேலான் இயக்குனரும் மிகவும் அன்பான, தங்கமானவர்கள். என்னை மிகவும் நன்றாக வைத்துள்ளார்கள். நான் நேர்காணலின் போது அவரிடம் என்ன ஆணி எல்லாம் புடுங்கலாம் என்ற போது, அவர் இங்கு நீங்கள் கண்டிப்பாக ஆணி புடுங்க்க் கூடாது, சும்மா வேடிக்கை பாருங்கள் அதுபோதும் என்றார். முதலில் ஒரு ஆறு மாதத்திற்க்கு ஒரு சிஸ்டமேட்டிக் அக்கவுண்டிங்க் புரசீஜர் எஸ்டாபிளிஷ் செய்யுங்கள், பின்னர் அது சரி வர இயங்குகின்றதா என்று வேடிக்கை பாருங்கள் அது போதும் என்றார். நான் ஒரு வாரம் நிறுவனத்தை ஸ்டடி செய்துவிட்டு பின்னர் சில யோசனைகளை சொன்னேன். அது அனைத்தும் அவருக்குப் பிடித்து இருந்தது. எக்ஸலண்ட் என்று சொன்ன அவர் பின்னர் என்னிடம் இந்தியா முழுதும் இருக்கும் நிறுவனத்தின் ஆறு கிளைகளின் கணக்கு வழக்குகளையும், நானுறுக்கு மேற்ப்பட்ட டிஸ்ட்ரிபூட்டர்கள் பேமண்ட்களையும் ரிகன்சில் செய்து, சரி செய்து விட்டுப் பின்னர் உங்களுடைய சிஸ்டமேட்டிக் அக்கவுண்ட்ஸை ஆர்கனை செய்யுங்கள். உங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கின்றேன், தேவைப் பட்டால் கிளைக்கு செல்லவும், அவர்களுடன் தொடர்பு கொள்ளவும் சொன்னார். பின்னர் ஆறு கிளை மேலாளர்களிடம் என்னை ஈ-கான்பிரஸ்ஸில் அறிமுகம் செய்து, எனது வழிகாட்டுதலின்படி நடக்குமாறு சொன்னர். நானும் இப்போ ஆணி புடுங்குவதில் ரொம்ப பிசியாகி விட்டேன். வரும் திபாவளிக்குள் பழைய ஒன்னரை வருடக் கணக்குகளை ரிகன்ஸ்ஸில் செய்து முடிப்பதில் ஆர்வம்கொண்டு உள்ளேன்.இந்த ஹைடு அண்ட் சீக் போல ரிகண்சில் செய்யும் பணி எனக்கு மிகவும் பிடித்த மனதுக்கு சந்தோசமான பணி ஆகும்.

நாங்க எல்லாம் பீனிக்ஸ் பறவையை போல, சாம்பலாக்கி விட்டாலும் உயித்தெழும் சாதி, திரும்பியும் பழைய நிலைக்கு வருவதற்க்கான முயற்ச்சியில் உள்ளேன். இங்க சென்னையில் மடிப்பாக்கத்தில் தங்கி புதுப்பேட்டையில் வேலை செய்கின்றேன். ஒவ்வெரு வார இறுதியிலும் நான் கல்பாக்கம் (இரண்டாவது அண்ணா வீடு) சென்று விடுவேன். அங்க அவரின் இரண்டரை வயது மகள்தான் படத்தில் இருக்கும் குட்டி(மொட்டை)இப்ப நம்ம கேர்ள் பிரண்டு. எங்க அண்ணிதான் பாவம். நாங்க அடிக்கும் லூட்டி தாங்க முடியாம, சமாளிக்க முடியாமல் கஸ்டப்படுகின்றார். வார இறுதியில் விதவிதமாக சமைத்துப் போடுகின்றார். எங்க அம்மாவும் இப்போது இங்கு இருப்பதால் எனக்கு மிகவும் குதுகுலமாய் உள்ளது. நம்ம யுனிகோடு அழகி சரிவர வேலை செய்யாமல் இருந்ததால், மற்றும் பிரவுசிங்க் செண்டரில் பதிவுகளை படித்து வந்ததால் சரிவர கமெண்ட்ஸ் போட முடியவில்லை. ஆனாலும் முடிந்த வரை அனைவரின் பதிவுகளை ரெகுலராக படிக்கின்றேன். இனி அடிக்கடி பதிவுகள் வரும் என்றும் விரைவில் இங்கு மெமரி கார்டு ரீடர் வாங்கி புகைப் படங்களுடன் சமையல் மற்றும் பொழுது போக்குப் பதிவுகளைப் போடுவேன் என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த மாதம் ஏறக்குறைய மூன்று வருடங்கள் கழித்துக் குடும்பத்தாருடன் தீபாவளி கொண்டாடப் போகின்றேன். அது முடிந்தவுடன் எனது சபரி மலை யாத்திரை ஆரம்பித்து விடும். இந்த இரண்டும் முடித்துப் பின்னர் இந்த் நிறுவனத்தில் நான் ஏற்றுக் கொண்ட பணிகளையும் முடித்த பின்னர் தான், இங்கே அல்லது சிங்கையில் வேலைக்கு முயச்சிக்க வேண்டும். அது வரைக்கும் இங்க எனது அட்டாகாசம் தொடரும். நன்றி.
எனக்கு சாட்டில் மிகவும் ஆறுதலாக இருந்த கிருஷ்ண மூர்த்தி அவர்களுக்கும்,சித்ராவுக்கும் மிகவும் மனமார்ந்த நன்றிகள். ஜலில்லா, சுசி,ஹேமு, தமிழ் அக்கா,எல்.கே,மேனகா,சாருஸ்ரீராஜ்,மாதேவி,ஆனந்தி மற்றும் நான் பதிவு போடாவிட்டால் கூட மறக்காமல் விருது அளித்த தம்பி ஜெய்லானி, நம்ப சைவ கொத்து சார், பிரகாஷ், இப்பவும் செல்லில் உரை ஆற்றும் மான்புமிகு,பாசமிகு, மதிப்புக்கும் மரியாதைக்கு உறி(ரி)ய மங்குனி அமைச்சர் அவர்களுக்கும் எனது நன்றிகள். பட்டாவுக்கு நன்றி சொல்லாவிட்டால் சோடா பாட்டில் வீசுவார் அவருக்கும் எனது நன்றிகள்.(பட்டா உங்களை விட மாட்டேன் இராசாஆஆஆஅ). மிக முக்கியமாக நான் சென்னை வந்து விட்டேன் என்றதும் தொடர்பு கொண்டு விசாரித்த கேபிள் அண்ணாவுக்கும் எனது நன்றிகள்.

டிஸ்கி: இன்னி கொஞ்ச நாள் சென்னையில் குப்பை கொட்டுவதால் என் தொடர்பு எண்: 9894561034. போனில் திட்டுவபர்கள் கண்டிப்பாக சுவிட்ஸ் ஆப் செய்து இருக்கும் போது போன் செய்யவும்.மிக நீண்ட காலம் ஆகிவிட்டதால் பதிவும் நீளம் ஆகிவிட்டது. மன்னிக்கவும். அடுத்த பதிவு(மொக்கை) (ஹார்டுவேர் ஆறுமுகம்) விரைவில் வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

16 comments:

  1. அண்ணா.. சாரி அண்ணா.. :((((

    நடந்தது போச்சுது. இனி எல்ல்ல்ல்லாமே நல்ல்ல்ல்லா நடக்கும் பாருங்க.

    ReplyDelete
  2. குட்டீஸ் கியூட்டா இருக்காங்க.

    ReplyDelete
  3. அண்ணா, வாங்க ..... வாங்க.... வலது காலை எடுத்து வைத்து வாங்க...... இனி கச்சேரி களை கட்டிரும்ல..... ஜூப்பரு!

    ReplyDelete
  4. சின்னக் குழந்தைதான் அண்ணா பொண்ணு. உடன் இருப்பவள் அவளின் பக்கத்து வீட்டு தோழி.

    ReplyDelete
  5. appa புதுபேட்டை தானா ஜாகை.. ஒரு நாள் கூடிருவோமா..?

    ReplyDelete
  6. தனியார் வேலை என்றாலே கொஞ்சம் முன்னேற்பாடோடதான் இருக்கணும்.
    எந்த நிமிடமும் வேலை இழக்கும் அபாயம் உண்டு.
    கூடுமானவரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேலையை கற்க வேண்டும்.
    பின்னால் சுயமாக தொழில் (தில் இருந்தா) தொடங்க உதவியாய் இருக்கும்.
    உங்களுக்கு மறுபடியும் பணி கிடைத்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  7. ஹா,ஹா,ஹா,,,,,........... இம் ... நாட்டியம் ஆரம்பமாகட்டும் .... சே .... அவையில் பேசி பேசி அதே நியாபகம் , வணக்கம் சார் ..... இம்.... ஸ்டார்ட் மூசிக் ,..... ஆரம்பியும்கள்

    ReplyDelete
  8. அண்ணா வாங்க கேட்க கஷ்டமா இருக்கு ... சீக்கிரம் நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வாருங்கள் நண்பரே. பதிவுலகம் உங்களுக்காகத் தான் காத்திருக்கிறது.

    நட்புடன்

    வெங்கட் நாகராஜ்
    புது தில்லி.

    ReplyDelete
  10. நான் கூட கல்யாணம் செய்து விட்டு பிசியாகிட்டீங்களோன்னுதான் நினைச்சேன் .பொருமையா வரட்டுமேன்னுதான் .. !! :-(
    வெளிநாட்டு வாழ்க்கை எப்பவும் நிரந்தரம் இல்லை .
    வெலகம் பேக் ..!!

    எல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சுக்கோங்க பிரதர்..!!:-))

    ReplyDelete
  11. வாங்க பாஸு.. வாங்க.. ரொம்ப நாளா சொல்லாம கொள்ளாம எஸ் ஆயிட்டீங்க..

    பதிவுலகம் உங்களை வரவேற்கிறது...

    ReplyDelete
  12. வந்துட்டீங்களா...வாங்க..வாங்க...

    ReplyDelete
  13. // குழலி அண்ணா//
    என்னாது குழலி அண்ணாவா? ஹல்லோ உங்களை பார்த்தவங்க என்னை உங்களுக்கே அண்ணானா, ஹல்லோ என்ன நெக்கலா? சரி சரி வேலைய கரீக்டா பாருங்க ஊருக்கு வரும்போது கலக்கலாம்

    ReplyDelete
  14. படிச்் ரொ்்் கழ்டம தான் இரு்்த்து. வேலை பி்டித்த வேலை என்பதால் அது ஒரு ஆறுதல் இல்்ையா?


    ்//நான் கூட கல்யாணம் செய்து விட்டு பிசியாகிட்டீங்களோன்னுதான் நினைச்சேன் .பொருமையா வரட்டுமேன்னுதான் .. !! :-(
    வெளிநாட்டு வாழ்க்கை எப்பவும் நிரந்தரம் இல்லை .
    வெலகம் பேக் //்ானும் நி்னை்்தேன். பாகற்கா்் ்ிட்லைய பார்க்க வந்தேன்ன் இன்னும் செய்யல....
    நானும் அப்ப அப்ப வ்ந்த் போ்ே்்

    ReplyDelete
  15. சொல்லவே இல்ல...!

    வணக்கம்...! சார்,

    என்ன இருந்தாலும்...
    அன்பையும் பாசத்தையும் கலந்து 'நிலாச் சோறு" ஊட்டிய தாயின் முன்னே அனைவரும் தூசு...! அது இறைவனை இருந்தாலும்...!

    அதைப்போலவே...

    சிங்கையை விட...
    சென்னையில் அலங்கோலங்களும்... அசிங்கங்களும்... சகிக்கமுடியாதவை இருந்தாலும்...!

    தாய்நாட்டிற்கு...
    தாங்கள் பிறந்த மண்ணுக்கு ஏதும் ஈடாகா...!நண்பரே...!

    என் நாடு பிச்சைக்கார நாடாயினும்...
    என் மக்கள் பிசைக்காரராய் இருந்தாலும்...
    என் நாடும்... பொன்னாடுதான்...!
    என் மக்களும்... பொன்மக்கள்தான்....!

    வாருங்கள்...!
    எந்நாடு... தங்களை தவிக்கவிட்டாலும்...
    தங்கள் தாய்நாடு...தவிக்கவிடாது...
    ஒருவேளை சோறாவதிடும்..!


    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.