Monday, April 5, 2010

போலி அல்ல நிஜம்.


சங்கு,சேகண்டியின் சத்தம் மெல்லியதாக அழுவதைப் போல ஒலித்துக் கொண்டு இருந்தது. ஒரு மூலையில் முத்து வாயில் துண்டை வைத்து சோகத்தின் பிம்பமாக அமர்ந்து இருந்தான். ஆண் என்றாலும் தந்தை என்பதால் அழுது,அழுதுஅவன் கண்கள் வீங்கி இருந்தன. வாசலில் பாடை செய்வதில் மும்முரமாக இருந்தார்கள் உறவினர்கள். சர சரமாய்த் பூக்கள் தொடுத்து பாடை உருவாகிக் கொண்டு இருந்தது. முத்துவின் ஒரே மகன் செல்வம் இறந்து கிடந்தான். அவனின் இறுதி யாத்திரை தான் தயாராகிக் கொண்டு இருந்தது. பக்கத்தில் கிழித்துப் போடப்பட்ட கந்தலாய் கிடந்தாள் குருவம்மா. செல்வத்தின் தாய் அழுது அழுது கண்கள் வற்றிப் போயி மனமும் கன்றிப் போனது. அழுகவும், கத்தவும் திரணியற்றுப் போயிருந்தாள். உற்றாரும் உறவினரும் அழுது ஒப்பாறி வைத்துக் கொண்டு இருந்தார்கள். இது எதுவும் தெரியாமல் சன்னாமாய் ஒளிர்ந்து கொண்டு இருந்தது தலைமாட்டுத் தீபம்.

நல்லா ஆடி ஓடி விளையாடிக் கொண்டு இருந்த மகன், காய்ச்சல் என்று மருத்துவ மனைக்குப் போனாள். டாக்டர் கொடுத்த மருந்து அலர்ஜியாகி விட்டது, உடல் முழுதும் நீலம் பார்த்து வீங்கி இறந்து விட்டான் மகன். டாக்டர் மருந்தைக் குத்தம் சொன்னார். மருந்துக் கடைக்காரன் டாக்டரைக் குத்தம் சொன்னார். யாரைக் குத்தம் சொல்லி என்ன பயன். பெற்ற ஒரே மகனே செத்த பின்னர். அழக்கூடத் தெம்பு இல்லாமல் எல்லாரும் சேர்ந்து எம்புள்ளையைக் கொன்னு போட்டேங்களே என்று புலம்பிக் கொண்டு மட்டும் இருந்தாள். பெரியோர்களும்,மற்றேரும் ஆறுதல் சொன்னார்கள். என்ன சொல்லி என்ன பயன் போனது போனதுதானே.

சரி நடந்தது நடந்துருச்சு, இப்படியே மூலையில் உக்காந்து அழுதா போனது வந்துருமா? அடக்கத்துக்கு ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்று சொல்லி ஊர் பெரிசுகள். பந்ததிற்க்கான ஏற்ப்பாடுகள் நடந்தது. செல்வத்தின் உடலை அழுது கொண்டே குளிப்பாட்டினார்கள். புது பண்ணாடை போட்டு அலங்காரித்து,மாலைகளுடன் சடலம் பாடையில் கிடத்தி வாய்க்கரிசியும் போடப்பட்டது. எல்லாரும் சுத்தி முடித்து பாடையை எடுத்து சவ வண்டியில் வைத்து ஊர்வலம் புறப்படத் தயாராயிற்று.முத்துவும் கொள்ளிப்பானையை எடுத்துக் கொண்டு ஒரே மகனுக்குக் கொள்ளி வைக்க ஊர்வலம் போகத் தயாராய் முன்னால் வந்தான். சங்கு முழங்கி வாண வேடிக்கையுடன், ஒப்பாரிகள் முழங்க ஆரம்பம் ஆகியது. அது வரை ஒதுங்கி இருந்த குருவம்மா பித்துப் பிடித்தவளைப் போல முன்னால் வந்தவள் எட்டி முத்துவின் தோள் துண்டை முறுக்கிப் பிடித்தாள். ஆவேசம் வந்தவள் போல கத்தத் தொடங்கினாள்.

" அடப்பாவி மனுசா! அநியாயமாய் என் புள்ளையைக் கொன்னு போட்டியே? நீ உருப்படுவியா? இந்த வேலை வேண்டாம், விட்டு விடுன்னு எத்தனை தடவை சொன்னேன், கேட்டியா? என்னை மாதிரி எத்தினி பேரு பெத்த புள்ளைங்க இல்லாமத் தவிக்கிறாங்களே!

நான் போக விடமாட்டேன். இனிமே இந்த நாசம் புடித்த கன்றாவி வேலைக்குப் போக மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடு, இல்லைனா உன்னைப் போக விடமாட்டேன் என்று அடம்பிடித்தாள். ஆவேசம் வந்தவள் போல வெறித்தாள். உடைந்து அழுத முத்து

"இனி கோடி ரூவாய் கொடுத்தாக் கூட இந்த பாவம் புடிச்ச வேலையைச் செய்ய மாட்டேன் குருவம்மா, பணத்துக்காகப் பாவம் பண்ண மாட்டேன். இது செத்துப் போன என் புள்ளை மேல சத்தியம்" என்றான் அழுது வெடித்த குரலில்.

தீர்மானமாக நடக்க ஆரம்பித்தான் சுடுகாட்டை நோக்கி. என்ன செய்வது அவன் மகனின் மீது வைத்து இருந்த அன்பு போலியானது அல்லவே, அவன் போலிக் கம்பெனியின் சேல்ஸ் ரெப்பாய் விற்ற மருந்துகளைப் போல.

டிஸ்கி : இந்தக் கதைக்கான வித்து நம்ம வெட்டிப் பேச்சு சித்ராவால் அளிக்கப்பட்டது. பதிவு போட மனம் இல்லாமல் உக்காந்து இருந்த போது, அண்ணாச்சி போலி மருந்து தொடர்பா உங்க பாணியில் ஒரு கதை போடலாமே என்று சொல்லிய மறுகணம் உருவாகிய கதை இது. பாராட்டு தங்கை சித்ராவிற்கும், நீங்க திட்டினா அது எனக்கும் சாரும். நன்றி

35 comments:

  1. கலக்கிடீங்க. என்னதான் வித்து அவங்க குடுத்தாலும் அதை இவ்ளோ அற்புதமா சொல்லி இருக்கீங்க . எனவே பாராட்டு உங்களுக்குதான்.

    ReplyDelete
  2. கதைன்னே நினைக்கத்தோணலை.. அவ்வளவு தத்ரூபமா இருக்கு.எங்கியாவது உண்மையா இதுமாதிரி நடந்துகூட இருக்கலாம். யாருக்குத்தெரியும்!.

    ReplyDelete
  3. அட!!! நிதர்சன கதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  4. இது கதை அல்ல நிஜம்.. நன்றி

    ReplyDelete
  5. இன்னும் கொஞ்சம் வளத்திருக்கலாம். சட்டுனு முடிஞ்சமாதிரி இருக்கு

    ReplyDelete
  6. நல்லாருக்கு நண்பா! ஒரு யதார்த்தத்தை சொல்லியிருக்கிறீர்கள்...

    பிரபாகர்...

    ReplyDelete
  7. நிகழ்ச்சியை நெகிழ்ச்சியாக சொல்லியிருப்பது அருமை.

    ReplyDelete
  8. ரெப்புகள் அது போலி மருந்து என தெரியாமலேயே விற்கிறார்கள், அவர்களுக்கு தண்டனை எதுக்கு?

    ReplyDelete
  9. நல்லா எழுதி இருக்கீங்க அண்ணா.. உருக்கமான கதை.

    போலி மருந்து விஷயம் செய்தியில பார்த்தேன். நானும் செய்தியில பார்த்தேன்.

    ReplyDelete
  10. நல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. நல்ல கதை,ஆனா..........

    ReplyDelete
  12. ஆத்திரத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்திய ஒரு நிகழ்வை மையமாக வைத்து அருமையாக ஒரு சிறுகதையைப் பின்னியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. கதை நல்லா இருக்கு ஆனால் படிக்கும் போது மனம் கனக்குது

    ReplyDelete
  14. க‌தை ந‌ல்லா இருக்கு சார்....

    ReplyDelete
  15. கதை மிகவும் நன்றாக இருந்தது...கதையாக படிக்கும் பொழுது மட்டுமே..உண்மையில் நடந்தால் மிகவும் கொடுமை...அருமையாக எழுதி இருக்கின்றிங்க...

    ReplyDelete
  16. கதையின் கருவை கதையாக் பின்னியமை அருமை.....எல்லாம் போலி மயம்............

    ReplyDelete
  17. //வால்பையன் said...

    ரெப்புகள் அது போலி மருந்து என தெரியாமலேயே விற்கிறார்கள், அவர்களுக்கு தண்டனை எதுக்கு?//

    இதே கேள்வி என் மனசுலயும் ஓடிச்சு . நீங்க கேட்டுடீங்க. நன்றி தலைவா !!!!

    ReplyDelete
  18. தீர்மானமாக நடக்க ஆரம்பித்தான் சுடுகாட்டை நோக்கி. என்ன செய்வது அவன் மகனின் மீது வைத்து இருந்த அன்பு போலியானது அல்லவே, அவன் போலிக் கம்பெனியின் சேல்ஸ் ரெப்பாய் விற்ற மருந்துகளைப் போல.


    ....... தெரிந்தோ தெரியாமலோ விற்கப்படும் போலி மருந்துகளால், ஏற்படும் பேரிழப்புகள் உண்டாக்கும் வலி கொடிது. மனதை உலுக்கும் வகையில் கதை வந்து உள்ளது, அண்ணாச்சி. என் கருத்தை ஏற்று எழுதியதற்கு நன்றி.

    ReplyDelete
  19. ரொம்ப உருக்கமா எழுதீருக்கீங்க, கண்ணுல தண்ணி வரவழைச்சுட்டீங்களே, தம்பி. வளர்க உங்கள் எழுத்துத்திறமை.

    ReplyDelete
  20. ரொம்ப உருக்கமான கதை.. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.. அளித்த விதமோ அருமை..

    "வித்தை அளித்த சித்ராவுக்கும் அதையே
    சொத்தாய் கொண்டு கதையமைத்த உமக்கும்..
    மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!"

    ReplyDelete
  21. //அது வரை ஒதுங்கி இருந்த குருவம்மா பித்துப் பிடித்தவளைப் போல முன்னால் வந்தவள் எட்டி முத்துவின் தோள் துண்டை முறுக்கிப் பிடித்தாள். ஆவேசம் வந்தவள் போல கத்தத் தொடங்கினாள்.//

    கதையெல்லாம் நல்லா தான் எழுதுறிங்க.....ஆனால் போலி மருந்து விக்கிறவன் குருவம்மா புருஷனாகத்தான் இருக்கனுமா ?

    சேஷாத்திரி கம்பெணியில் போலி மருந்து ஸ்டாக் வைத்திருக்கமாட்டார்களா ? அதை டாக்கர் ஸ்ரீனிவாஸ் பரிந்துரைந்திருக்க மாட்டாரா ?

    கதைக்குள்ள பாமர மக்கள் தான் இது போல் பிராடு தனம் பண்ணுவாங்க என்கிற உங்க இடைச் சொருகல் எனக்கு பிடிச்சுருக்கு. நீங்களும் அயோத்தியா மண்டபம் கதை எழுதலாம்.

    ReplyDelete
  22. நிஜம் என்று நம்பிதான் படித்தேன்....

    கதை போலி அல்ல நிஜம்

    ReplyDelete
  23. http://news.webindia123.com/news/Articles/India/20100328/1473768.html
    Rajesh Mehta, a relative of the prime accused Pradeep Chordia was arrested in Chennai city in connection with the expiry drug racket.

    http://www.thehindu.com/2010/04/02/stories/2010040261670500.htm

    Meenakshi Sundaram, one of the prime suspects in the expired drugs case, was involved in recycling time-barred medicines for many years,

    Another important suspect, Sanjay Kumar

    இன்னும் நோண்டினால் சேஷாத்திரிக்களும் ஆச்சாரியாக்களும் மாட்டலாம்

    கதைக்குள் "குருவம்மா" புருசன்கள் தான் தவறுசெய்கிறார்கள் என்று திணிக்கும் ஷங்கர் யுத்தி கயவாளித்தனத்தை விடுவது எப்போதோ?

    ReplyDelete
  24. //உடல் முழுதும் நீலம் பார்த்து வீங்கி இறந்து விட்டான் மகன். டாக்டர் மருந்தைக் குத்தம் சொன்னார். மருந்துக் கடைக்காரன் டாக்டரைக் குத்தம் சொன்னார். யாரைக் குத்தம் சொல்லி என்ன பயன்.//

    உண்மை சார்

    ReplyDelete
  25. கதை மனதினை பாரமாக்கி விட்டது.இது கதை மட்டும்மல்ல நிஜமும் கூட.

    ReplyDelete
  26. இதுபோல இருந்தாலே படிக்க பயப்படுவேன் ரொமப அழுகாச்சி வரும், படிச்சாச்ச்சு, நிஜம் என்று நினைத்து அந்த அம்மாவை நினைத்து வருத்த பட்டுட்டு கீழே பார்த்தால் போலி, ஆனால் விழப்புணர்வுடன் ஒரு கதை.


    இதுபோல் நிறைய இடத்தில் நடக்கவும் செய்கீறது

    ReplyDelete
  27. நல்ல எதார்த்தமான கற்பனை.... நிஜத்திலும் நடந்திருக்கலாம்.... ஆனால் திருந்திருந்தால் இருபது வருடம் இப்படி உயிரை குடிக்கும் தொழிலை நடத்திருப்பார்களா?!?!? நூறு கோடிக்குமேல் சொத்து தான் சேர்த்திருப்பார்களா????

    சட்டம் கடுமையாக்க படனும்.... அதை விட அது சரியாக அமலாக்க படனும்....

    ReplyDelete
  28. நன்றி யூரிகாரிகன்,
    நன்றி எல்கே,
    நன்றி அமைதிசாரல்,தங்களின் முதல்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
    நன்றி ஸ்ரீராம்,
    நன்றி சைவகொத்துபுரோட்டா,
    நன்றி பிரசன்னா,
    நன்றி சின்ன அம்மினி,
    நன்றி அம்மு மது,
    நன்றி ஜெய்லானி,
    நன்றி சித்ரா,
    நன்றி டாக்டர் அய்யா,
    நன்றி ஆனந்தி,இதுக்கும் ஒரு கவிதை சொல்லீட்டிங்க,
    நன்றி கோவி அண்ணா,
    நன்றி மலர்,
    நன்றி குழலி அவர்களே,
    நன்றி ஸாதிகா,
    நன்றி ஜலில்லா,
    நன்றி அன்புத்தோழன்,தங்களின் முதல்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
    நன்றி வால்பையன்,
    நன்றி நிறைமதி,தங்களின் முதல்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

    பின்னூட்டத்திற்கும், தங்களின் ஓட்டுக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன், நன்றி.

    ReplyDelete
  29. கதையல்ல நிஜம். நிஜத்திலே பயம்
    மிக அருமை எழுதியிருக்கீங்க அண்ணாதே சார்..

    நீரோடையில் நாட்டுப்புறப்பாடு எழுதியுள்ளேன் பாருங்க..

    ReplyDelete
  30. சும்மா ரெஸ்ட் வெச்சு பார்த்தேன்..சும்மா சொல்லக்கூடாது சார்..
    நீங்க மூளைக்காரருனு ஒத்துக்கிறேன்..

    எம்மேல, எப்படியும் காண்டாத்தான் இருப்பீங்க.. அதுக்குத்தான்.. ஹி..ஹி..

    இந்த மாத கடைசசியில் மீட் பண்ணலாம் சார்..
    ( ஆனா, ஆரஞ்சு பச்சிடி சாப்பிடுனு தொந்தரவு பண்ணக்கூடாது..சொல்லிட்டேன்..)

    ReplyDelete
  31. தண்டனை கிடைச்சாத்தான் திருந்துறாங்க சிலபேர்..

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.