Friday, October 30, 2009

அந்த நாள் பயங்கரம் - சுனாமி- 3

அவர் அப்படி என்னிடம் கேட்டுவிட்டுப் பின் தான் தள்ளிக்கொண்டு வந்த அவரின் வண்டி கடல் தண்ணியால் பழுதுஆகி விட்டது. ஆதலால் உங்கள் வீட்டு காம்பவுண்ட் உள்ளே நிறுத்திப் போகின்றேன். அப்புறமா மெக்கானிக் கூட்டி வந்து சரி செய்து எடுத்துக் கொள்கின்றேன் என்றார்.(ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் வாகனம் வைத்துள்ளார் ஆனால் இடம் பெயர உதவவில்லை,இதாது பரவாயில்லை கார்களின் நிலை இன்னமும் மேசம், அடித்துச் செல்லப்பட்டு கதவு கண்ணாடிகள் உடைந்து சீட் எல்லாமும் செம்மண்ணும் சேருமாக இருந்தது). அவரும் நிறுத்திவிட்டுப் பின் தயங்கி என்னிடம் நீங்க கொஞ்சம் சாப்பாடு கேரியர்ரில் தர முடியுமான்னு கேக்க நான் இருங்க என்று சொல்லி என் மன்னியிடம் தெரிவித்தேன். அவர் சிறிதுகூட (நான் கூட யேசித்தேன்) யேசிக்காமல் சரி, உள்ள கூப்பிட்டு உக்கார சொல்லுங்க நான் கேரியர் ரெடி பண்ணுகின்றேன் என்று சமையலறை உள் சென்றார்.
மூன்றடுக்கு கேரியரில் எவ்வளவு அடைக்க முடியுமே அவ்வளவு போட்டு சாம்பார், ரசம் மேர் என்று கலர்ந்து கொடுத்தார். அவரின் கண்களில் தண்ணீர் வந்துவிடும் போல உணர்ச்சி வசப்பட்டு நன்றி கூறி கிளம்பினார். நான் இன்னும் யாராது கூப்பிட ரோட்டிக்கு அவருடன் வந்தேன். அவர் என்னிடம் மிகவும் தயங்கி தயங்கி ஒன்று கேட்டார்.

தம்பி சாப்பாடு கொடுத்தீங்க நன்றி, கேக்கக்கூடாது, ஆனாலும் எனக்கு வேறவழி தெரியலை, தப்பா எடுத்துக் கொள்ளவில்லை என்றால் ஒரு நூறுரூபாய் தரமுடியமா? நான் வண்டி எடுக்கும் போது கேரியரும் பணமும் கண்டிப்பா தருகின்றேன் என்றார். நான் ஒரு நிமிடம் திகைக்க அவர் சொன்னார், திடீர்னு கடல் அலைகள் வீட்டினுள் புகுந்து பீரோ, எல்லாம் கவித்து அடிச்சுட்டு போய்டுச்சு, பணம் நகை எல்லாம் போய்விட்டது, மின்சாரம் இல்லாததால் ஏ டி எம் வேலை செய்யவில்லை. அனுப்புரம் போய் எப்படி சென்னைக்கு இவர்களை உறவினர் வீட்டுக்கு அழைத்துப் போவது? பஸ்ஸிக்கு காசு வேணும் என்றார். அவரின் கண்கள் கலங்கிய நிலையில் இருந்தது. நான் அதுனால என்னங்க பரவாயில்லை என்று கூறி என் சட்டை பையில் பணம் எடுக்கும் நேரம் அவரின் மனைவி குழந்தைகள் மற்றும் பெரியோர் இருவரை கைபிடித்து அழைத்து இவரை காணாமல் தேடி வந்த அவரைப் பார்த்ததும் நான் ஒரு நிமிடம் மொத்த வாழ்கையும் வெறுத்துப் போனேன். எனக்கு மிக ஆச்சரியம் என்றாலும் கவலை சூழ்ந்தது. அவரின் மனைவி என்னுடன் பஸ்ஸில் வந்து பணிபுரியும் பெண்மணி.

நான் அவருடன் பேசியது இல்லை என்றாலும் தினமும் பார்த்து இருக்கின்றேன்(வேற என்ன வேலை). எப்படி இருப்பார் தெரியுமா? அவர் ஒரு பொறியியல் கல்லூரியின் விரிவுரையாளர். எங்கள் அலுவலகம் செல்லும் வழியில்தான் அவரின் கல்லூரியும் உள்ளது.
லலிதா, ஜி ஆர் டி, குமரன் என அத்தனை நகைக்கடைகளின் நகைகளையும் மொத்தமாக கழுத்தில், காதில், கையில் என தினமும் ஒரு முப்பது பவுன் நகை அனிந்துதான் வருவார். அவர் போடாதது கையில் புஜத்தில் மாட்டும் அணியும், ஒட்டியானமும் தான். இதை தவிர கழுத்தில் ஒரு மூனு வட செயின், நெக்லஸ், ஆரம் எனவும், இரு கைகளில் இருபது தங்க வளையல்களும் மூன்று விரல்களில் மேதிரம் என தினமும் கல்யாணத்திற்கு போவது போல்தான் கல்லூரிக்கு வருவார். அவர் கருப்பு என்பதால் நகைகள் இன்னும் ஜொலிக்கும். நானும் டிரைவரும் அவரை நகைக்கடை வருது, போகுது என்றுதான் பேசிக்கொள்வேம்.நான் அவருக்காக இல்லை என்றாலும், அவர் எனக்கு மிகவும் புடிக்கும் காதில் போடும் ஜிமிக்காக பார்ப்பேன். அப்படி இருந்தவர் எப்படி வந்தார் தெரியுமா. கலைந்த தலை, கண்களில் சேகம், பயம், சேர்வு, அவசரம் என்று வெறும் நைட்டியில் தாலி மட்டும் அனிந்து வந்தார். அவரைப் பார்த்ததும் நான் வாங்க என்றேன். அவர் தன் கனவரை என்னுடன் பார்த்ததும் புரியாமல் விழித்து, என்னங்க இவ்வளவு நேரம் கானமுன்னு பயந்து போய்த் தோடிக்கொண்டு வந்தேன் என்றார். அவர் இந்த தம்பி வீட்டில் நம்ம குழந்தைகளுக்கும், அப்பா அம்மாவிற்கு சாப்பாடும், சென்னை போவதற்கு பண்மும் கொடுத்தார்கள் என்றார். அவர் ஒரு நிமிடம் பார்த்து நீங்கள் பஸ்ஸில் வருவீர்கள் அல்லவா என்றார். நான் ஆமாங்க நீங்க வேனுமுன்னா எங்க வீட்டில் வந்து சேலையுடுத்தி பின் சாப்பிட்டு செல்லுங்க என்றேன். அவர் டையம் இல்லை, நான் அனுப்புரம் சென்று சாப்பிட்டு, உடைமாற்றிப் பின் சென்னைக்கு போகின்றேன். இப்ப அனுபுரம் பஸ்ஸை நிறுத்திவிட்டால் கஸ்டம். நாங்க சீக்கிரம் இங்கிருந்து போகவேண்டும் என்றார்.நான் அவர் கனவரிடம் இருனூறு ரூபாயாக கொடுத்து நாலு பேரும் போறதா இருந்தா 100 ரூபாய் பஸ்ஸிக்கே சரியாகிவிடும் ஆதலால் இதை வைத்துக் கொள்ளுங்கள், ஒன்றும் அவரசம் இல்லை பொறுமையாக கொண்டுவந்து தாருங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.
அந்த மனிதர் ஒரு பொறியாளர். மத்திய அரசில் உயர்ந்த பதவியில் உள்ளவர். வீடு நில புலங்கள் உள்ளவர், ஆனால் ஒரு நிமிடத்தில் இயற்கை நடுத்தெருவில் கொணர்ந்தது. அப்போது உணர்ந்தேன் நான் :---

கற்றது எங்கே? கட்டிய மனையாள் எங்கே?உற்றார் எங்கே? பெற்ற செல்வம் எங்கே? மாட மணி மாளிகை எங்கே? சூழ்ந்த நண்பரும் எங்கே? சேர்த்த செல்வமும் எங்கே ?பாடையில் போகும் போது உடன் வருமோ? ஆவிதான் அதை திருப்பித் தருமோ? என்ற பட்டினத்தாரின் பாடல் என் கண்களில் நீராக வந்தது. உண்மையில் அந்த பாடல் அப்போதுதான் உறைத்தது. தெருவில் நான் குட்டிப்பாலத்தின் கைப்பிடி சுவரில் பிரமித்து சில நிமிடங்கள் உக்காந்து இருந்தேன். எங்க மன்னி சன்னல் வழியாக கூப்பிட சிந்தனை கலைந்து சென்றேன். அப்புறம் ஒரு தாயின் அன்பும் எமனிடம் போராடிய கதையும் ஒன்றும் உள்ளது. அந்த கதைக்குப் பின் நான் உயிர் பிழைத்த கதையச் சொல்லுகின்றேன். நன்றி.

டிஸ்கி : அடுத்த வாரம் நாங்கள் சபரி மலை செல்லுவதற்காக எங்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டேம். அவர்கள் அந்த கேரியர் நிறைய ஸ்வீட்டுடன், பணத்தையும் எதிர் வீட்டில் கொடுத்துச் சென்றுள்ளார்கள். அந்த நிகழ்வுக்குப் பின் அவர்கள் கடல் ஓர வீடே வேண்டாம் என்று செங்கல்பட்டில் சென்று குடியேறிவிட்டனர். கோடிரூபாய் கொடுத்தாலும் அந்த வீட்டுக்கு வருவதாக இல்லை என்றும் கூறிவிட்டார் அந்தம்மா. அதற்கு பிறகு நான் அவர்களை இதுவரை பார்த்ததில்லை. இது கூட அவர் போனில் கூறியதுதான். நன்றி.

Thursday, October 29, 2009

அந்த பயங்கர நாள் - சுனாமி 2

நான் இந்த பதிவு எழுதும் முன் சதுங்கப்பட்டினம் என்ற அந்த ஊரைப் பற்றிக்கூற வேண்டும். இந்த ஊரை நீங்கள் அனைவரும் கேள்விப் பட்டுருக்கமாட்டீர்கள். ஆனால் அனைவரும் ஒரு வரி உங்களின் ஏழாம் அல்லது எட்டாம் வகுப்பில் படித்துருப்பீர்கள்.
ஆம் முதன் முதலில் நம் நாட்டிற்கு கடல் வழி கண்டுபிடித்து வந்த போர்த்துக்கீசியர்கள், நம் நாட்டில் மூன்று இடங்களில் தங்களது கோட்டை மற்றும் பண்டகசாலைகளை கட்டினார்கள். தரங்கம்பாடி, கோழிக்கோடு மற்றும் சதுங்கப்பட்டினம் என்று படித்துருப்பீர்கள். அந்த சதுங்கப்பட்டினம் தான் இந்த ஊர். இங்கு அவர்களின் கோட்டை ஒன்றும் உள்ளது. பின்னாளில் இதை ஜான் டூப்ளே பிரஞ்சு கைப்பற்றி அவர்களின் கோட்டையாக்கினார். இங்கிருந்து பக்கிங்க்காம் கால்வாய் வழியாக அவர் அடையாறு ஆறு சென்று பின் சென்னைக் கோட்டையும் கைப்பற்றினார். சிலுவைப் போர்களின் பிரான்ஸின் தேல்வியை அடுத்து சென்னை மற்றும் இந்த கோட்டைகள் ஆங்கிலேயர் வசமாயிற்று. இன்று தொல்பொருள் இலாகாவிடம் உள்ளது. இது ஓர் ஊர் என்றும் கிராமம் என்றும் கூற முடியாத அளவில் உள்ளது. ஒரு பெரிய முக்கிய சாலை அதன் வலப்புறம் முழுதும் மீனவர் குப்பமும், கடலும் உள்ளது. இடப்பூறம் ஊரும் மார்கொட் முதலியவை உள்ளது. இந்த சாலை கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் ஆரம்பித்து புதுப்பட்டினம் வரை செல்லும். இந்த சாலைதான் முக்கிய தொடர்பு வழி. இதன் முக்கால் பகுதி கடலின் அருகில் அரை பர்லாங் தூரத்தில் இருக்கும். கல்பாக்கத்தின் ஒருபுறம் புதுப்பட்டினமும்(கேட்) மறுபுறம் சதுங்கப்பட்டினமும் இருக்கும். எங்கள் வீடு சதுங்கப்பட்டினம் அருகில் உள்ள கேட் பக்க்ததில் உள்ளது. எங்களுக்கு மார்கெட் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் சதுரை கேட் பக்கத்தில்தான். இங்கு ஒரு பொருமாள்(கிரி வரதர்) கோவிலும் ஒரு சிவன்(திருவட்டீஸ்வரர்) கோவிலும் உள்ளது. மற்றபடி நகரியத்தின் உள் பல கோவில்கள் தற்காலத்தில் கட்டப்பட்டது.

ஆனால் இங்கு மீனவர்கள் அவர்கள் குடியிருப்பு பக்கத்தில் பல அம்மன் கோவில்கள் கடலைப் பார்த்தவாறு இருக்கும். இந்த கோவிலுக்கும் கடலுக்கும் நடுவில் யாரும் வீடு கட்டமாட்டார்கள். அம்மன் கடலைப் பார்த்து அமர்ந்து, கடலில் செல்லும் தங்களை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம். (நான் இதை சொல்லுவதற்கும் ஒரு காரணம் உள்ளது, அது இந்த தொடரின் தனிப்பதிவாக வரும்)அதில் முக்கியமான ஒரு கோவில் தேவி கருமாரியம்மன் கோவில் ஒன்று(தனிப்பதிவு).

இந்த சாலையில் தான் ஸ்டேர்ஸ்,பெட்ரோல் பங்கு, மற்றும் பல கடைகள் அமைந்துள்ளன. அன்று காலை எங்க அண்ணாவிற்கு காலைப் பணி ஆதலால் அவர் காலை 5.30க்கு சென்று மதியம் 2.30க்கு திரும்புவார். ஆதலால் நாங்கள் காலை 4.30க்கு எழுந்து குளித்து 5.30க்கு பூஜை முடித்தேம். காலை தோனீர் அருந்தும்போது எங்க அண்ணா சொன்னார், மளிகையுடன் பூஜைப் பொருட்களையும் சேர்த்து செட்டியார் கடையில் வாங்கிவிடு, அதுக்கு ஒருதரம் இதுக்கு ஒருதரம் போகவேண்டாம் என்றார். நான் இல்லையண்ணா இருபது ரூபாய் மிச்சம் ஆகும் என்றேன். அண்ணா கடவுளுக்கு இவ்வளவு பண்றேம், அந்த இருபது ரூபாயில் என்ன பண்ணப்போறேம். இங்கேயே வாங்கிவிடு என்றார். நானும் மறுவார்த்தைப் பேசி பழக்கம் இல்லாததால் சரி என்றேன்.
அவர் சொன்னார் எனக்கு என்னமே ஸ்டேர்ஸ் போவது சரியாகப் படவில்லை என்றார்.அண்ணா சொன்னார் காலை செட்டியார் கடையில் திறந்தவுடன் பொருட்களை வாங்கிவிட்டு,சாமிகளுக்கு கொடுக்க ஒரு மூனு அல்லது நாலு லிட்டர் பாலும் வாங்கி வைத்துக்கொள் என்றார், நீ வாழைத் தோப்புக்குப் போய் ஸ்வாமி சப்பரத்தேர் கட்ட வாழைமரம், வாழையிலை, வாழைப்பழம் ஆகியவற்றை வாங்கி வா. சாமிகள் வந்துவிடுவார்கள். கேசவன் வீட்டில் அவர்களுக்கு துணையாக இருக்கட்டும் என்று கூறிவிட்டு, எங்கள் மன்னியிடம் இன்னைக்கி காலை எத்தனை பேர் சாப்பிட வருவாங்கன்னு தெரியாது நீ எதுக்கும் பத்துப் பேருக்கு சமைத்துவிடு. சுதா வாழைத்தோப்புக்கு போய் வந்து உனக்கு சமையலில் உதவுவான் என்றார். நானும் ஒப்புக்கொண்டேன். காலை ஆறுரை மணிக்கொல்லாம் கடைக்குப் போய் மளிகை வாங்கி வந்து, பின் 7.30க்கு இரு சாமிகள் வந்தனர். அவர்களுக்கு காபி கொடுத்து, ஒருவரை என்னுடன் அழைத்துக் கொண்டு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் போது ஏழு அம்பது. அந்த சாலை முழுதும் பயணம் செய்து நான் சதுங்கப்பட்டினம் செல்லும்போது எட்டு. பின் வாழைத்தோப்பை அடைந்து அங்கு வீட்டு முதலாளியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் சுவாமி சப்பரம் என்றால் பூத்துக் காய்த்த பட்ட மரத்தைதான் வெட்டவேண்டும். புது மரத்தை வெட்டி செய்தால் பாவம். வாங்க தோப்பினுள் சென்று பட்ட மரம் எங்க இருக்குனு பார்க்க சென்றேம். நாங்கள் ஒரு பத்து அடிகூட நடந்து இருக்கமாட்டேம். திபுதிபு என மக்கள் ஓடி வந்து கொண்டுருந்தனர்.

" எல்லாரும் ஓடுங்க ஓடுங்க கடல் கொந்தளித்து அலைகள் ஊருக்குள் வருகின்றது. மிகவேகமாக வருகின்றது எல்லாரும் ஓடுங்கள் " என கத்திக் கொண்டு ஓடி வந்தனர். நான் திகைத்து நிற்க முதலில் நான் ஜூன், ஜீலை காலங்களில் கடல் அலைகள் சிறிது ஊருக்குள் அல்லது மீனவர் குடியிருப்பில் வருவது வழக்கம். அதுபோல என்று இருந்தேன். ஆனால் ஓடிவரும் மக்கள் எண்ணிக்கையைப் பார்த்து அவர்களிடம் விசாரித்தோம். அவர்கள் சொன்னார்கள் கடல் கொந்தளித்துவிட்டது அலைகள் ஒரு பனைமர உயரத்திற்கு எழும்பி ஊருக்குள் வருகின்றது என்று. நான் உடனே பைக்கை எடுத்துக் கொண்டு வீடு செல்லமுயன்றேன், ஆனால் அவர் இப்ப போகவேண்டாம். எங்கள் வீடு இரண்டு மாடி, அவ்வளவு உயரம் கடல் வராது வா அனைவரும் மொட்டை மாடிக்கு செல்வேம் என்றார். அவர்கள் வீட்டில் அனைவரும் மேல் செல்ல நானும் அவரும் அவர்கள் வீட்டின் வாசல் கதவை திறந்து வைத்து ஓடி வரும் அனைவரையும் அவரின் வீட்டின் மொட்டைமாடிக்கு செல்லச் சொன்னேம். பலரும் பெண்கள் குழந்தைகள் பலரும் ஏறிக்கொண்டார்கள். நாங்கள் அனைவரும் அலைகளுக்காக காத்துருந்தேம். வந்தால் மாடிக்கு ஓடிவிடலாம், இல்லையேல் எவ்வளவு பேரை மாடிக்கு அனுப்ப முடியுமே, அனுப்பலாம் என்று. அலைகள் சத்ததுடன் அவர் வீட்டின் முன்னால் இருபதடி வரை வந்து ஓய்ந்ததை கண்ணால் கண்டேம். அது அலைகள் அல்ல ஒரு கோர இராட்சனின் கைகாளாக தோன்றியது. பின் சகலமும் ஓய்ந்தது. அதன்பின் நடந்த நிகழ்வுகள் கண்ணீர் விட வைப்பதாக இருந்தது.

பல பெண்கள் கண்ணீருடன் விரிந்த தலையுடனும் கத்திக், கதறி தங்களின் சொந்தங்கள் குழந்தைகளை தோடிக்கொண்டுருந்தார்கள்.
நான் வீட்டின் முன் நின்று அவர்கள் கூறும் பெயர்கள் மாடியில் இருக்கின்றார்களா இல்லையா எனக் கேட்டு கூறிக்கொண்டு இருந்தேன். பலரும் பல பெயர்களை கூறி இருந்தால், அடுத்தவர்களை தோடத் தொடங்கினார்கள். இல்லை என்றால் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழத் தொடங்கினார்கள். அங்கு நடந்தைவைகள் எனக்கு முழுதும் வயிற்றைப் பிசையத் தொடங்கியது. இயற்கையில் இரக்க சுபாவம் உடைய எனக்கு கண்களில் நீரும், மயக்கம் வரும் நிலை. என் கை கால்கள் நடுங்கின. அந்த வீட்டின் ஓனர் தெய்வம், அவரும் அவரின் அழகிய பெண்ணும்(குணத்தில் மாகலஷ்மியை சொல்லாம்) அங்கு எல்லாருக்கும் சக்திக்காக லெமன் ஜீஸ் கொடுக்க்த் தொடங்கினார். அப்போது ஒருவரிடன் நான் என்ன ஆயிற்று என்று வினாவ அவர் கடல் அலைகள் ஊருக்குள் வந்தையும் இன்னமும் அலைகள் வேகமாக பக்கிங்க்காம் கால்வாயில் உள்புகின்றது என்று சொன்னார். அவர் சொன்ன மறுவினாடி என் சர்வ அங்கமும் ஒடுங்கியது. ஏன் என்றால் பங்கிங்க்காம் கால்வாய் பேக்வாட்டர்ஸ் அருகில் உள்ள சீனியர் ஹாஸ்டல் பக்க்த்தில்தான் என் வீடும். என் வீடு முதல் மாடி என்பதால் அவ்வளவு உயரம் போய் இருக்காது என்றாலும் ஓபன் கால்வாயில் கடல் அலைக்கள் சீற்றத்துடன் சென்றால் உயர வாய்ப்புள்ளது ஆகையால் நான் உடனே கிளம்ப ஆரம்பித்தேன். என்னுடன் வந்த சாமியும் நான் எங்க வீட்டில் போய் பார்த்து வருகின்றேன் என்று சொல்லிப் போனார்.நானும் கிளம்ப அவர் விடவில்லை, அவரின் வீட்டு தொலைபேசியும் அவுட் ஆப் அர்டர் ஆகி இருந்தது, நான் புரியாது விழிக்க அவர் இருங்கள் முதலில் ரோடுவரை போய்ப் பார்ப்போம். பின் அனுப்பிகின்றேன். நானும் அவரும் ரோடுவரை சென்றேம். வழிபூராவும் கடல் தண்ணீர் முழங்கால் வரை இருந்தது. மக்கள் அவர்களின் வீடுகளின் இடிபாடுகளை சரி செய்தவண்ணம் இருந்தனர். அவர் சொன்னார் இதில் வண்டி ஓட்டிப் போனால் கடல் தண்ணீர் வண்டி கொட்டுவிடும் என்று. நான் பரவாயில்லை நான் முதலில் வீட்டுக்குப் போக வேண்டும் என்றேன்.பின் அவரும் சரி நிகழந்த பாதிப்புகளைப் பார்க்கும்போது இன்று பூஜை நடக்கும் என்று தோனவில்லை. மாலையில் வேண்டுமானால் வாருங்கள் மரம் தருகின்றேன் என்றார். நானும் சரி என்று என் பைக்கை வேகமாக ஓட்டத் தொடங்கினேன்.முழங்கால் தண்ணீரில் கொஞ்ச தூரத்தில் பைக் ஆப் ஆகிவிட்டது. இறங்கி அதில் தள்ளிக் கொண்டு வந்தேன். கல்லும்,வீட்டின் ஜன்னல் உடைந்த கண்ணாடித் துண்டுகளும், முட்களும் இருந்தாலும் வீட்டின் நினைவில் செருப்பில்லாத காலில் தள்ளிக் கொண்டு வந்தேன். வழி பூராவும் இடிந்த வீடுகள் சிதைந்த பாதைகள் என காட்சிகள் அலங்க்கோலமாக இருந்தது, கண்ணில் கன்னீர் முட்ட தள்ளி வந்தேன். சரியாக எங்கள் வீட்டின் பத்தடி முன்னால் அலைகள் ஓய்ந்துபோய் இருந்தது. ஆனால் அடுத்து பூகம்பமே அல்லது சுனாமி வரக்கூடும் என்ற காரணத்தினால் அங்கு அனைவரும் வீட்டை விட்டு காலி செய்துகொண்டு இருந்தனர்.
எங்கு பார்த்தாலும் கண்ணீர்ருடன் கவலை தேய்ந்த முகங்கள். பயத்தின் ரேகைகள்.

நான் என் வீட்டில் வந்து அண்ணா வந்துவிட்டார என வினவ எங்கள் அண்ணி, மூன்றாவது அண்ணா, நான் அனைவரும் நலம். ஆனால் கடலின் மிக அருகில் உள்ள அனுமின் நிலையத்தில் புகுந்து இருந்தால், அந்த அண்ணா எப்படி உள்ளார் என தெரியாமல் அண்ணி அழுதுகொண்டு இண்டர்காமில் முயற்சி செய்ய அதுவும் பழுது ஆகி இருந்தது.பின் அடுத்த ஜந்து நிமிடத்தில் எங்களுக்கு ஒருவர் வந்து தகவல் சொன்னார் எங்கள் அண்ணா கட்டுப்பாட்டு அறையில் இருந்தால் பத்திரமாக உள்ளார் எனவும் தன் செல்போனுக்கு போன் செய்தார் எனவும் சொன்னார். பின் நாங்கள் அனைவரும் ரோட்டில் வரும் பெண்கள் குழந்தைகள் அனைவருக்கும் உதவிகள் செய்யத் தொடங்கினேம். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அனைவரும் எங்கள் வீட்டில் மாடியில், படியில் அமர்ந்துருந்தனர். அவர்களுக்கு பெண்களுக்கு காலில் கண்ணாடியும் முள்ளும் கிழித்தவர்களுக்கு எங்க அண்ணி ஆயின்மெண்ட் பிளஸ் கட்டுப் போட்டுவிட்டார். அதில் நனைந்த உடையுடன் வந்த இளம் பெண்களுக்கு அவரின் சுடிதாரும், புடைவையும் கொடுத்தார். பின் அவர்கள் அனைவரும் காலை எட்டு ஜந்துக்கு அலை அடித்ததால் ஒருவரும் சாப்பிடவில்லை என்று அறிந்து அனைவருக்கும் சாப்பாடு கொடுத்தார். அதில் ஒரு பெரியவர் நாங்க பசி தாங்குவேம். வீடு வாசல் இழந்து சாப்பிட மனமில்லை ஆதலால் குழந்தைகள் மற்றும் சிறு வயது உடையவர்களுக்கு கொடுங்கள் என்றார். அப்போது நகரிய போருந்துகள் வரிசையாக வந்து மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் சென்றது. பல பஸ்களில் மக்கள் கூட்டங் கூட்டமாய் காலி செய்து போய்க் கொண்டு இருந்தனர். நானும், என் மூன்றாவது அண்ணாவும் பஸ்சிக்கு காத்துருந்தவர்களிடம் சென்று, குழந்தைகள்,சிறுவர்களுக்கு உணவு உள்ளது சாப்பிட வாருங்கள் என்று அழைக்கத் தொடங்கிகினேம். பலரும் தங்களின் குழந்தைகளுக்கு உணவும் பாலும் வாங்கிச் சென்றனர். அதில் பல பெண்கள் எங்க அண்ணிக்கு மகப்பேறு கிடைக்க வாழ்த்திச் சென்றனர். இப்படி நாங்கள் அழைக்கும் போது ஒருவர் வந்து மிகத் தயங்கி கூச்சத்துடன் குழந்தைகளுக்கு உணவு உள்ளதா எனக் கேட்டார். நானும் இருக்கு அழைத்து வாருங்கள் என கூற, அவர் வருத்ததுடன் இரண்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவர் உள்ளனர். அவர்கள் பஸ்ஸிக்காக நிறுத்ததில் உள்ளனர். அழைத்து வர இயலாது என்றார். அப்போது நான் கற்றபாடம் ஒன்று. பதிவு நீளமாகிவிட்டபடியால் மீதி அடுத்த பதிவில். (சேகங்கள் தொடரும்).

Wednesday, October 28, 2009

அந்த பயங்கர நாள்- சுனாமி 1

சென்னையில் இருந்து பாண்டி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் தாண்டியவுடன் வரும் புதுப்பட்டினம் கிராமத்தில் இறங்கி உள் சென்றால் வருவது கல்பாக்கம் அனுமின் நகரியம். அதில் ஒருபுறம் வீடுகளும், பார்க்குகளும் இருக்க, மறுபுறம் முழுதும் நீண்ட அழகான சுத்தமான வங்ககடல் கரை. அழகான கடற்கரை, நிறைய நெறுக்குத்தீனிகளுடன் நண்பர்களுடன் சென்று இரண்டு மணி நேரம் உரையாடி, மணலில் படுத்து வானத்து நட்சத்திரங்களை வேடிக்கைப் பார்த்து, விழும் எரிகற்களைப் பார்த்துப் பொழுதுபோக்கும் கடற்கரை, துக்கமே அல்லது மகிழ்வே நான் தனிமையில் இருக்கும் கடற்கரை, இதை நான் காதலித்ததும் உண்டு. சித்திரை முழுனிலவு நாளில் எங்க வீடு,எதிர் மலையாளி வீடு, என் அண்ணியின் நண்பியின் வீடு அனைவரும் கூட்டாஞ் சேறு கொண்டு சாப்பிட்டு மகிழும் கடற்கரை. கல்பாக்கம் நகரிய கடற்கரை, ஆனால் இது எல்லாம் ஒரு நாளில் மாறிப்போனது. அந்த நாள்?

எங்க பார்த்தாலும் செல்போன் மயம், மனிதர்கள் பைத்தியாமாகி விட்டனர் என்று செல்போனை நான் திட்டுவது உண்டு, வீட்டில் இருக்கும் பெரியேரை மதிக்காத ஒருவன், செல்லில் நண்பருக்கும், நண்பிக்கும் எஸ் எம் ஸில் குட்மார்னிங் சொல்வார்கள் என கிண்டல் செய்ததும் உண்டு. ஆனால் செல்போன் மிகவும் அவசியம் என உணர்த்திய நாள். அந்த நாள்?.

நாம் திரட்டிய செல்வம், பணம், காசு, ஏ டி எம், நகைகள், கட்டிய வீடு அனைத்தும் பெய், இயற்கை நினைத்தால் அனைத்தையும் ஒரு நொடியில் புரட்டிப் போட்டுவிடும் என உணர்த்திய நாள் அது. நம்மால் ஆவதும் ஒன்று இல்லை, நம்மால் முடியாத காரியமும் உள்ளது என உணர்த்திய நாள் அது. செல்வந்தனும், குடிசை ஏழையும் தெருவிற்கு வந்த நாள்.

கட்டிய மனைவி, பெற்ற செல்வம்(குழந்தை), உடன் பிறந்தவர், உற்றார் உறவினர் என அனைத்தும் மாயை. நொடியில் அழியும் என எனக்கு உணர்த்திய நாள் அது. என் வாழ்வில் நிகழ்ந்த,எனக்கு பாதிப்பு இல்லாது, ஆனால் என்னை மிகவும் வேதனையிலும்,துன்பத்திலும் ஆழ்த்திய நாள் அது. என் கண் முன் நடப்பது, காண்பது கனவா அல்லது நிஜமா என்பது புரியாத நாள். இறைவா நீ இருக்கின்றாயா அல்லது நீயும் செத்துவிட்டாயா எனக் கேட்ட அந்த நாள்.
என் வாழ்வில் முன் கண்டிராத பயங்கர நாள். நானும் இறக்கவேண்டியிருந்து அல்லது நான் மயிரிழையில் தப்பித்த அந்த நாள் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று காலை. ஆம் நம் நாட்டின் சுனாமி என்னும் அரக்கன் வந்த நாள். எல்லாமும் புரட்டிப் போட்ட நாள் அது. அதை ஒரு பதிவில் சொல்வது இயலாது என்பதால் தொடராக எழுதுகின்றேன். படியுங்கள்.

அந்த வருடம் எனது ஏழாவது சபரி மலை யாத்திரைக்காக மாலை போட்டுருந்தேன். எங்க இரண்டாவது அண்ணா முதல் வருடமும், என் மூன்றாவது அண்ணா இராண்டாம் வருட யாத்திரைக்காக மாலை போட்டுயிருந்தார்கள். எங்க இரண்டாம் அண்ணாவின் முதல் வருடம் என்பதால் கன்னிசாமி பூஜை அன்று மாலை நடப்பதற்க்கு ஏற்பாடுகள் செய்துகொண்டு இருந்தேம்.அதன் முந்திய நாள் பொருட்கள் வாங்குவது குறித்த விவாதம் நடந்தது. நான் மளிகை பொருட்கள் எல்லாம் சட்ராஸ் செட்டியார் கடையிலும், பூஜை பொருட்கள் எல்லாம் நகரிய ஸ்டேர்ஸ்லும் வாங்கலாம் என்றேன். பத்தி, சூடம் எல்லாம் ஸ்டேர்ஸில் ஒரு ரூபாய் அல்லது ஜம்பது காசு கம்மீயாக இருக்கும் மொத்தமாக வாங்குவதால் ஒரு இருபது, முப்பது ரூபாய் மிச்சமாகும் என்றேன், எங்க அண்ணாவும் சரி என்றார். அதன்படி நானும் எங்க மூனாவது அண்ணாவும் போய் காலை 6.30க்கு மளிகை வகைகளை செட்டியார் கடையிலும், காலை எட்டு மணிக்கு ஸ்டேர்ஸ் திறந்தவுடன் பூஜை பொருட்களை வாங்குவது என்று முடிவு செய்தேம்.அதன் பின் மாலை(24.12.04) நாங்கள் கடலுக்கு மிக அருகில் உள்ள ஒரு வீட்டில் பக்தர் ஒருவரின் பூஜையில் கலந்துகொண்டேம். பூஜை சரியாக பத்து மணிக்கு ஆரம்பித்து அன்னதானம் முடிய மணி பன்னிரண்டு ஆகிவிட்டது. அதன்பின் நாங்கள் அங்கு வந்த அனைவரையும் நாளை எங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்துவிட்டு அங்கு கடற்கரையில் அவர்கள் குழு மீட்டிங் நடந்தது. அதில் ஒரு சாமியின் குடும்ப சூழ்னிலை காரணமாக பணம் செலுத்த இயலவில்லை எனவும் குழுவில் உள்ளவர்கள் சிறிது பணம் போட்டு அவரை அழைத்து செல்லாம் என குருசாமி கூறியவுடன் எங்க அண்ணா அவருக்காக ஜநூறு ரூபாய் பணம் கொடுத்தார். அவரும் நாளை பூஜைக்கு காலையிலேயே வந்து உதவி செய்வதாக கூறினார். குருசாமியும் இன்னும் இருவரை காலையில் எங்கள் வீட்டுக்குப் போய் உதவி செய்யுமாறு பணித்தார். அவர்களும் வர இசைந்தனர். நாங்கள் நாளை முழுதும் எங்கள் வீட்டில் சாப்பிடுங்கள் எனவும் காலையில் வந்துவிடுங்கள் எனவும் கூறிவிட்டு கடற்கரையில் இருந்து வந்தேம். அப்போது கூட இன்னம் எட்டு மணி நேரத்தில் அந்த கடல்கரை மரண சாம்ராஜ்ஜியம் ஆகும் எனத் தெரியாது.

அந்த மறுனாளும் வந்தது. பதிவின் நீளம் கருதி முடித்து அடுத்த பதிவில் எழுதுகின்றேன். நன்றி.

Tuesday, October 27, 2009

புளி அவல் உப்புமா

எல்லாரும் சீக்கிரமாக சமைக்க அருமையாக விரைவில் செய்ய ஒரு டிபன் வகை உப்புமா. இதுல அவல் உப்புமா எல்லாரும் பண்ணுவது ஒன்றுதான். ஆனாலும் அதில் மிகவும் சுவையான புளி அவல் உப்புமா தான் நம்ம பதிவு. இதை உப்புமா என்று சொல்லக் கூடாது ஏன் என்றால் இதுவும் புளிசாதம் மாதிரிதான். இது கோயிகளில் கூட பிரசாதமாக தரும் ஒன்று. ஏகதசி விரதத்திற்கு ஏற்றது. சரி செய் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
1. கொட்டி அவல் 1/2 கிலோ,
2.புளி சிறிதளவு,
3.பச்சை மிளகாய் 4
4. இஞ்சி சிறிது,
5.நிலக்கடலை 50கிராம்.
6.முந்திரி 4 (தேவைப்பட்டால்),
7.எண்ணெய்,கடுகு,பெருங்காயத்தூள் தாளிக்க,
8.தேங்காய் துருவல் நாலு ஸ்பூன்.

முதலில் ஓர் உருண்டைப் புளியை நல்லா கொதிக்கும் தண்ணிரில் விட்டு ஊறவைத்து கரைத்து அந்த கரசலை கொஞ்சம் பச்சை வாசம் போக, கொஞ்சம் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு கொதிக்க விடவும். புளித்தண்ணீர் கொதிக்கும் போது, கொட்டி அவலை கல் இல்லாமல் எடுத்து ஒரு மிக்ஸியில் போட்டு இரண்டாக்கவும்( ஒரு சுற்றுப் போதும்). அவல் இரண்டாக உடைபட்டால் போதும். தூள் ஆகக் கூடாது. ஒரு பாத்திரத்தில் இந்த உடைத்த அவலில் சூடான புளித்தண்ணிரை கொஞ்சமாக விட்டு கிளறி ஊறவைக்கவும். அவலும் தண்ணீரும் சரியாக இருக்கவேண்டும். அதிக புளித்தண்ணீர் கூடாது. தெளித்தாற் போல அதே சமயம் அவல் நனையும் வண்ணம் இருக்கவேண்டும். இதை ஒரு 5 நிமிடம் ஊற வைக்கவேண்டும்.

நிலக்கடலையை ஒன்றுக்கு நாலு ஆகா (கடலைப் பருப்பு) அளவில் மிக்ஸில் இட்டு பொடித்துக் கொள்ளவும், முந்திரியையும் அதே அளவில் பொடிக்கவும்.இஞ்சியை மிக சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

பின் அடுப்பில் ஒரு வாணலியை இட்டு இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் அரை ஸ்பூன் மஞ்சள் பொடி, அரைஸ்பூன் பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அதில் கடலைப் பருப்பு ஒரு ஸ்பூன், நிலக்கடலை, முந்திரி, பச்சை மிளகாய் கருவேப்பிலை,இஞ்சி போட்டுப் பின் உறிய அவலையும் போட்டு கலக்கவும். அவலில் உள்ள ஈரப்பதம் போகும் வரை சூடு செய்யவும்(மிதமான சூட்டில்). அவல் வெந்ததும் அடுப்பை அனைத்து அதில் தேங்காய் துருவலை போட்டு களறி அடுப்பின் மீது மூடி வைக்கவும். அடுத்த ஜந்து நிமிடத்தில் புளி அவல் ரெடீ.

கவனிக்க: புளி அவல் உதிரியாக இருக்க வேண்டும். ஆதலால் புளித்தண்ணீர் கொஞ்சமாக தெளித்தாற் போல விடவேண்டும். லேசு அவல் ஆக இருப்பின் புளித்தண்ணிரில் ஊற வைக்காமல் தாளித்து முடித்ததும் அதில் அவலைப் போட்டு அதில் புளித்தண்ணீர் தெளித்துக் கிளரினால் போதும்.அவல் புளித்தண்ணீர் பிளஸ் சூட்டில் வெந்துவிடும்.
இதில் புளிக்கு பதிலாக எழுமிச்சை கலர்ந்த நீரைப் பயன்படுத்தி எழுமிச்சை அவல் கூட பண்ணலாம். நன்றி.

Friday, October 23, 2009

நாங்களும் கிரிகெட் அடுவமில்லை

என்னங்க எல்லாம் நல்லா இருக்கீங்களா, இன்னைக்கு நம்ப நர்சிம் ஒரு கிரிக்கெட் மறுபதிவு போட்டு நம்மள கொஞ்சம் டென்சன் ஆக்கிட்டார். எனக்குள்ள இருக்கற பூனை முழிச்சுக்கிச்சு. அதுனால இன்னைக்கி நான் கில்லி சீய் கிரிக்கெட் விளையாடின சுவாரஸ்யமான விசயங்கள் தான் இந்த பதிவு. சும்மா சொல்லக்கூடாதுங்க நான் கிரிக்கெட் ரொம்ப நல்லா ஆடுவன். நான் ஒரு ஆல் ரவுண்டர் ஆக்கும். எங்க டீமின் ஒபெனிங் மட்டையாளர் மற்றும் பார்ட் டைம் பவுலர் நான். பரிசு கிடைக்குதே இல்லையே நமக்கு முழங்கால் முழங்கை, கால்ல கைல அடி நல்லா வாங்குவேன். பேட்டிங்க் பார்த்திங்கனா எங்க டீமில் நாந்தான் ஒபினிங் பாட்ஸ்மென். அப்பிடினு எனக்கு ரொம்ப பெருமை. அப்புறம்தான் தெரிஞ்சுது மக்கா என்னை இறக்கி பாஸ்ட் பவுலிங் எல்லாம் முடிஞ்சவுடன அவனுங்க வந்து அடிப்பாய்ங்க. நம்மல பலிகாடா ஆக்குனங்கா. பாட்டிங் நல்லா பண்ணுவன். நான் ஒபனிங் இறங்கப் போகும்போது, கேப்டன் சிவக்குமாரும், கார்த்தியும் வந்து என் கிட்ட கெஞ்சுவாங்க, சுதா தயவு செய்ஞ்சு கிராஸ் பேட் ஆடாத. ஸ்ரெய்ட் பேட் ஆடுன்னு. ஆமாங்க நான் ஸ்ரெய்ட் பேட் ஆடுன்னா டிராவிட் மாதிரி, என் விக்கெட்டை எவனாலும் எடுக்க முடியாது. அவ்வளவு மட்டை(டெக்) வைப்பன். என்னேட ஸ்ரெய்ட் பேட் டாப் ஸ்கேர் என்னன்னு சொன்னா உங்களுக்கு புரியும் 13 ஒவர் விளையாடி எட்டு ரன் எடுத்தேன். அதுவே கிராஸ் பேட் ஆடுன்னா நான் ஸ்ரீகாந்து மாதிரி பால் எல்லாம் பாக்கமாட்டேன் சும்மா காட்டுஅடிதான். கவர் டிரைவ், ஸ்கொயர் கட். ஒவெர் த ஹெட், ஹூக் சாட்னு சும்மா அடி மாத்துவன். மார்புல, கீல கால்ல நமக்கு விழுகிற அடியும் கணக்கு இல்லைங்க. கிராஸ் பேட் டாப் ஸ்கேர் 142 ரன் 79 பால்ல எடுத்துருக்கன். அதிக பட்சமா பசங்க எங்கிட்ட முதல் 10 ஒவெர் நிக்கனும், ஒரு 30 ரன் எடுத்தா போதும்னு சொல்லுவாங்க. என்னேட டார்கெட் 25 ரன் வரைக்கும் பொறுமையா ஆடுவேன், அதுக்கு அப்புறம் கிராஸ் பேட் இறங்கி ஒரு 10 15 ரன் எடுத்து அவுட் ஆகிடுவன். இதுதாங்க என் பேட்டிங்க் ஸ்டைல். எங்க ஊருல எங்க எம் ல் ஏ பையன் முருகேசன் ஒருத்தன் பயங்கர வேகப்பந்து வீச்சாளர். அவன் பந்துன்னா எல்லாரும் தொடை நடுங்குவாங்க, மக்கா என்னை ஒபனிங் சொல்லி இறக்கி விட்டாங்க, எனக்கும் நடுக்கம்தான் சும்மா ஒரு துனிச்சல்ல நின்னேன். ஒவெர் போடுறதுக்கு முன்னாடி எங்கிட்ட வந்து சுதாகரு நீயா பேசாம ஓடிப்போய்டுன்னான். முதல் ஒவெர் முதல் பால் போட்டான். பந்து சாட் பிச்சுல பவுன்சர்,எனக்கு தலைக்கு குறி வைத்து, அப்ப ஹெல்மட் எல்லாம் கிடையாது. நானும் கண்ணை மூடிக் கொண்டு ஒரு ஹீக் சாட் சுத்தினேன், என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியாது. எங்க டீம் பசங்க எல்லாரும் கைதட்டி ஒரே சத்தம் என்னனு பார்த்த பந்து பேட்ல பட்டு கீப்பர் தலைக்கு மேல பறந்து சிக்ஸருங்க. இதுதான் நான் அடித்த முதல் சிக்ஸர்.
அவன் வந்து என்னை முறைத்துப் பார்த்து போய் மறுபடியும் மிடில் அண்ட் லெக்ல ஒரு பாஸ்ட் பால். நான் இம்முறையும் பல்லை கடித்துக்கொண்டு ஒரு லெக் டிரைவ் செய்ய பந்து பவுண்ட்ரிக்கு பறந்து விட்டது. அவன் கடுப்பாகி விட்டான். அடுத்த பால் ஸ்ரெட் யார்க்கர், நான் லாங் மிட் ஆப்பில் டிரைவ் செய்ய பால் மிஸ் ஆகி என் மிடில் ஸ்டெம்பை காலி செய்தது. முருகேசன் வந்து பரவாயில்லை சுதா ஒல்லிப்பிச்சான் மாதிரி இருந்துகொண்டு என் முதல் பால் சிக்ஸ் அண்ட் ஃபேர் அடித்தது நீதான் என்றான் சிரித்துக் கொண்டு. இதுதாங்க நம்ம பேட்டிங் ஸ்டைல்.

பவுலிங் பார்த்திங்கன நான் மிதவேகம் மற்றும் ஸ்பின் ரெண்டும் போடுவங்க, நான் போடுற பால் ரொம்ப வேகம் இருக்காது, பாக்க சும்மா அல்வா கணக்கா சுலேவா வரும், ஆனா டுவிஸ்ட் அதிகமா இருக்கும். பால் லட்டு மாதிரி இருக்குன்னு பேட்டா தூக்கினா போதும் ஒன்னு ஸ்டெம்ப் இருக்காது இல்லை காட்ச் ஆகிடும். நமக்கு ரைட் ஆர்ம் பவிலிங் வித் ஸ்விங் தான் முக்கியம். ஆப் கட்டர், லெக் கட்டர் பால் தான் என் போவரைட். என் பால் நான் உயரம் கம்மியா இருப்பதால் முழங்காலுக்கு மேல எழும்பாது. ஆதாலால் என் பாலை சாட் செய்வது ரொம்ப கடினம். நான் பவுலிங் போடும் போது பேட்ஸ்மென்னை நல்லா ஏமாத்துவேன். முதல் பால் லொ ஸ்ரெய்ட் டெலிவரியா இருக்கும். இரண்டாவது பால் அவுட் சைடில் ஒரு ஷாட் பால் போடுவேன், அவனும் சும்மா ஒரு பேர் அல்லது இரண்டு ரன் எடுப்பான். மூன்றாது பாலும் நேராக போடுவேன். நாலாது பால் தான் என் பேவரைட் பால். இரண்டாது பால் போலவே அவுட் ஆப் ஸ்டெம்ப் பால் வித் ரிவர்ஸ் ஸ்விங் இன் கட்டர் ஆக இருக்கும். என் இரண்டாவது பால் நினைப்பில் அவனும் சுற்றுவான் ஆனா பால் இன் கட் ஆகி ஆப் அல்லது மிட்டில் ஸ்டெம்ப் தூக்கிடும். அல்லது பேட்ல பட்டு பால் நேராக மேலே எழும்பி காட்ச் ஆகும். ஸ்பின் பவுலிங் பார்த்திங்கனா பால் சும்மா லட்டு கணக்கா மெதுவா வரும் ஆனா ஸ்விங்க் ரொம்பா அதிகமா இருக்கும். கொஞ்சம் அஜாக்கிரதையா அடினா பால் சுத்திக்கிட்டு காட்ச் போகும். என் ஒவெர்னா உசார் ஆகிடுவாங்க டேய் பால் சுத்தும்டா பார்த்து ஆடுன்னு சொல்லறது எனக்கு கேக்கும். வாலிபால் கூட நான் சர்வீஸ் ஸ்விங் பண்ணிதான் போடுவேன். செர்வீஸ் எடுப்பது ரொம்ப சிரமம். கையின் நடுவில்(பேர் ஆர்ம்) தான் சர்விஸ் எடுக்கனும் இல்லைனா பால் அவுட்லைனில் போய்விடும்.
இதுதாங்க நம்ம பவுலிங்க ஸ்டைலு.

நான் சென்னைக்கு வந்தவுடன் எங்க அண்ணன் விளையாடும் டீமில் நானும் பந்து பொறுக்கி போட போவேன். அப்ப ஒரு மேட்சில் ஆள் இல்லைனு சொல்லி என்னைக் கூட்டிப் போனாங்க. நானும் ஆசையாக போனேன். ஆனா கிரவுண்ட்ல போனதும், வரமுடியாதுன்னு சொன்ன ஆளுக எல்லாம் வந்ததால என்னை சும்மா உக்கார வைச்சுட்டாங்க. நான் உக்காந்து வேடிக்கை பார்ப்பது இல்லாமல் கீப்பருக்கு பின்னால பந்து பொறுக்கி போட்டு இருந்தேன். அந்த 30 ஒவர் மாட்சில் 15 ஒவெர் முடிந்தவுடன், எங்க டீம் 85க்கு 6 விக்கெட் போய் இருந்தது. அப்ப என்னை போய் லெக் அம்பரிங் பண்ண சொன்னார்கள். நானும் விளையாடத கடுப்பில் போய் நின்னேன். அப்ப சீனு அண்ணாதான் 35 ரன் எடுத்து டீமின் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடிக் கொண்டுடிருந்தார். அப்ப திடிர்னு விக்கெட் கீப்பர் ஒரு பாலை காட்ச் செய்து ஸ்டேம்பிங்கும் பண்ணி அவர் யாதார்த்தமாக அவுட் கேக்க நான் பதார்த்தமாக அவுட் கொடுத்தேன். சீனு அண்ணா என்னை முறைத்துக் கொண்டு போய்விட்டார். மாட்ச் முடிவில் நாங்க தேத்துப் போய்ட்டேம். சீனு அண்ணா என்னிடம் ஏண்டா அவுட் கொடுத்தாய் எனக் கேக்க நான் ஸ்டெம்பிங்கு கொடுத்தேன் எனக் கூற அவர் தலையில் அடித்துக் கொண்டு "அடப்பாவி அவன் அவுட் கேட்டது காட் பிகேண்ட்டுக்குடா" அப்பிடினு சொன்னார். எல்லாரும் என்மேல கடுப்பாகி டீம் தேத்ததுக்கு காரணத்தை என்மேல போட்டுட்டாங்க. நானும் ஒருத்தருக்குத்தான் அவுட் கொடுத்தேன் மத்த எல்லாம் ஏன் விளையாடுல்லைனு ஆர்கியு பண்ண, அதுக்குள்ள எதிர் அணி கேப்டன் வந்து உங்க எல்லாருக்கும் சாப்பாடு செய்து வச்சுருக்கேம். சாப்பிட்டுப் போங்க என்றான். எங்க எல்லாருக்கும் ஆச்சரியம்,ஏன்னா அவங்க எங்கிட்ட முதல்ல சொல்லவில்லை. எங்க பசங்க வெளியில் சாப்பிட தயங்கினாங்க.அங்க பக்கத்துல்ல வீடு அதனால அவங்க அம்மா வந்து தம்பி உங்க டீமில ஜயமாரு பசங்க இருக்கிறதா சொன்னாங்க அதுனால நாங்களும், பூண்டு மசாலா இல்லாம சுத்தமா குளிச்சு சமையல் பண்ணியிருக்கேம், மறுக்காம சாப்பிடுங்க என்றார். எங்க ஆளுங்க அந்த அம்மாவின் அன்புக்கு கட்டுப்பட்டு நாங்க அனைவரும் சாப்பிடப் போனேம். அங்க சாப்பாடு, கல்யான சாப்பாட்டை தேக்கடிக்கும் விதமாக பிரமாதமாக செய்துருந்தார்கள். எங்க பசங்க கூச்சத்தை விட்டு வெட்டினார்கள். அப்ப அந்த அம்மாவிடம் சாப்பாடு அருமையாக இருக்கு நன்றி எனக் கூற அவர்களும் உங்க டீமில் ஜயரு பசங்க வராங்கனு சொன்னதும், நான் பக்கதுத்து வீட்டு ஜயரம்மாவை வைத்து சமையல் பண்ணிணேன் என்றார். எங்க டீமில் வந்து சாப்பிடும் இந்த 13 பேரும் ஜயருங்கதான். இன்னைக்கி அம்மாவாசை, நீங்க 13 பிராமினர்களுக்கு சாப்பாடு போட்டுருக்கீங்க, உங்களுக்கு ரொம்ப புண்ணியம் கிடைக்கும் என்றார். அதைக் கேட்டது அந்த வீட்டு அய்யா இன்னைக்கு அமாவாசையா, நீங்க எல்லாரும் ஜயருவூட்டு புள்ளையானு ஆச்சரியப்பட்டு சட்டையை மாட்டிக்கிட்டு வெளிய போனார். நாங்களும் சாப்பிட்டு முடிக்க அவரும் கையில வெத்தலை வாங்கி வந்து எங்க எல்லாருக்கும் 11 ரூபாய் தட்சனை, ஒரு தேங்காய், பழம் எனக் கொடுத்தார். எங்க டீமில் எல்லாரும் கூச்சப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் அன்பிற்கு கட்டுப்பட்டு எல்லாரும் வாங்கிக் கொண்டேம். எங்க டீம் பசங்க நம்மளும் ஒரு நாள் கூப்பிட்டு எதாது செய்யனும்டா என்று அடுத்த மாதம் மாட்ச் ஆடி ஜயித்து அவர்களுக்கு எங்க சித்தி வீட்டில் விருந்து கொடுத்தேம். நாங்க தச்சனை கொடுக்கவில்லை.

டிஸ்கி:
1.இதுக்கு அப்புறம் சீனு அண்ணா என்னை கிண்டல் பண்ணுவது இன்னமும் நிற்கவில்லை. நான் எதாது பேசினால் டேய் உன்னைப் பத்தி தெரியுமுடா நீ காட் பிகேண்ட்டு ஸ்டெம்பிங் கொடுத்தவந்தன் தான என்பார்.
2. இந்த டீமில் விளையாடிய மூவர் இப்ப டாக்டர்கள், இருவர் அமெரிக்காவில் பொட்டியும்,இருவர் பொங்களூரில் பொட்டியும் தட்டுகின்றார்கள். என் அண்ணா அனுமின் நிலைய விஞ்ஞானி. ஒருவர் எல்லைப் படையில் எஞ்சினியர். இருவர் மத்திய அரசு அலுவலர். ஒருவர் இஸ்ரேவில் எஞ்சினியராக உள்ளனர்.
3.இந்த பதிவுக்கு என்னை வால்ஸ் கண்டிப்பா திட்டுவார்.
4. நமக்கு கேரளா, கர்னாடகா கொடுக்காத தண்ணி எல்லாம் என் மூக்கில் ஒழுகி ப்புளு வந்துவிட்டதால் இரண்டு நாளாக பதிவு எழதவில்லை. இப்ப பராவயில்லை, டிரை காப் மட்டும் உள்ளது.
நன்றி.

Tuesday, October 20, 2009

வெள்ளரிப் பிஞ்சு மசாலா

வணக்கம். நான் இன்று முற்றிலும் வித்தியாசமான ஒரு மாலை நேர நெறுக்குத் தீனி பற்றிய பதிவு இது. கண்டிப்பாக செய்யவும். செய்வதும் வெகு சுலபம். அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். வெள்ளிரிக்காய்யில் நாட்டுவெள்ளரி, மலை வெள்ளரி என இரண்டு வகை உண்டு. நாட்டு வெள்ளரி இளம் பச்சை நிறத்தில் மிகவும் மென்மையாக நீளமாக இருக்கும்( லேடிஸ் பிங்கர்ஸ் போல). மலை வெள்ளரி குண்டாக தடிப்பாக கரும் பச்சை மற்றும் வெள்ளை வரிகள் இருக்கும்(குண்டான லேடிஸ் பிங்கர்). பச்சடி செய்யப் பயன்படும். நாட்டு வெள்ளரி மிகவும் மென்மையாக நிறைய நீர் பற்றுடன் சாப்பிடுவதற்கு ஏற்றது. மிளகாய் பொடியுடன் தொட்டு சாப்பிடலாம். இந்த நாட்டு வெள்ளரிதான் நம் வெள்ளரிப் பிஞ்சு மசாலாவுக்கு ஏற்றது. சாப்பிட மென்மையாக இருக்கும், கிடைக்காதவர்கள் மலை வெள்ளரியில் செய்யலாம், ஆனால் சாப்பிட கொஞ்சம் தடிப்பாக இருக்கும். நல்ல பிரஷ்னான ஆறு நாட்டு வெள்ளரிகளை வாங்கவும். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
1. நாட்டு வெள்ளரிப் பிஞ்சு 6,
2. பொட்டுக் கடலை 100கிராம்
3. மிளகு 15
4.உப்பு தேவையான அளவு.
5.புளி மிகவும் சிறிதளவு.

தாளிக்க :
1.கடுகு
2.எண்ணெய்
3.கறிவேப்பிலை.
4.பெருங்காயத்தூள் அரைப் ஸ்பூன்.
5.வெள்ளுத்தம் பருப்பு.

முதலில் வெள்ளரிப் பிஞ்சுகளை நன்றாக அலம்பி, நீர் உலர்ந்தவுடன் அதனை நீள வாக்கில் இரண்டாக வெட்டிப், பின் குறுக்கு வாக்கில் சிறு சிறு துண்டுகளாக அரைவட்ட வடிவில் நறுக்கவும். மலை வெள்ளரி அல்லது அரைவட்டவடிவம் பெரியதாக இருந்தால் அதனை இரண்டாக முக்கோண வடிவில் நறுக்கவும். முக்கியமாக ஒவ்வெறு வெள்ளரிக்காய் நறுக்கும்போதும் அதில் சிறு துண்டை கசக்கிறதா எனப் பரிசேதிக்கவும். ஒரு வெள்ளரிக்காய் கசந்தாலும் மொத்தமும் வீணாகிவிடும். நறுக்கிய வெள்ளரிக் காய்களை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் போடவும். இனி பொட்டுக்கடலை, மிளகு தேவையான அளவு,புளி, உப்புப் போட்டு மிக்ஸியில் தூளக அரைக்கவும். மைய பவுடராக அரைக்காமல் ஒரு தொன்னூறு சதவிதம் உதிரியாக அரைக்கவும். உப்பு சப்பிட்டுப் பார்த்து கலக்கும்போது கூட போட்டுக்கலாம். ஆதலால் கொஞ்சமாக போடவும். அரைத்த பொடியை வைத்துக் கொண்டு, பொடியில் புளி தனியாக இருந்தால் வெளியில் எடுத்து போட்டுவிடுங்கள். இனி தாளிக்க ஆரம்பிக்கவும்.

மூன்று ஸ்பூன் எண்ணெயில் கடுகு, கொஞ்சம் வெள்ளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் மற்றும் கறுவேப்பிலை போட்டு தாளித்து வெள்ளரியில் கொட்டிக் கலக்கவும். பின் அரைத்த பொடியைப் போட்டு கலக்கவும். பொடியை சிறிது சிறிதாக போட்டு நல்லா சமனிலையாக கலக்கவும். கலந்தவுடன், ஒரு கப்பில் போட்டு ஸ்புனுடன் சாப்பிடக் கொடுக்கவும். கலந்த சில நிமிடங்களில் வெள்ளரிக்காய் தண்ணீர் விட்டு விடும். ஆதலால் ரொம்ப நேரம் கலக்காமல் உடன் கொடுக்கவும். அப்படியும் சாப்பிட்டு முடிக்கும் போது தண்ணீர் விடும். ஆனால் அதுவும் சுவையாக இருக்கும். நான் அந்த தண்ணிரைக் கூட வழித்து சாப்பிடுவேன். கலந்தவுடன் சப்பிட்டால் அதன் சுவை அருமை.

கவனிக்கவும்: உப்பு அளவு பார்த்துப் போடவும். அதுபோல மிளகு காரமும் பார்த்துப் போடவும். ஒருமுறை செய்தால், இரண்டாம் முறை உங்களுக்கு அளவு பழகிவிடும். புளி போடவில்லை என்றால் கொஞ்சம் எழுமிச்சை சாற்றை நேரடியாக வெள்ளரித் துண்டுகளில் கலக்கவும். இது சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும், ஒருமுறை நீங்கள் செய்து கொடுத்தால் மறுமுறை காய்கறி அங்காடியில் இந்த நாட்டு வெள்ளரியைப் பார்த்தால் அவரே வாங்கி வந்துவிடுவார். செய்து பார்த்து மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள்.நன்றி.

Monday, October 19, 2009

மகிழ்வும் நன்றிகளும்

இன்று நான் சந்தோசமாக உணருகின்றேன். வலையுலகில் திரு குடுகுடுப்பையாரின் கல்லூரி அனுபவங்களைப் படித்த நான், பிடுங்க ஆணி இல்லாததால் நானும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து, எத்தனை அடிச்சாலும் வலிக்காத மாதிரி வடிவேலு சொன்ன மாதிரி நடக்கலாம் என்று ஆரம்பித்தேன். பின்னால் வலையுலகில் பல நண்பர்கள் ஆதரவு கிடைக்க ஊக்கமும் பெற்றேன். முகம் தெரியா சகோதரிகளின் ஆதரவு இன்னமும் ஒரு கூடுதல் ஊக்கமாக அமைய எழுத ஆரம்பித்தேன். எதிலும் வித்தியாசமாக செய்யவேண்டும் என்ற நினைப்பில் உள்ள நான் அதுபோல எழுதவும் ஆரம்பித்தேன்.

முதலில் சுசி என்னை அண்ணா என்று அழைத்து ஆனந்தப் படுத்தினார். மேனகா சத்தியா என் சமையல் பதிவுகளை ஊக்கப் படுத்தினார். பின் சந்தன முல்லை சகோதரி எனக்கு விருது அளித்து எனது மகிழ்வை ஆரம்பித்து வைத்தார். அடுத்த சில தினங்களில் குடுகுடுப்பை என்னை எதோ எழுதுகின்றேன் என்று ஒத்துக் கொண்டு அறிமுகம் செய்தார். நானும் யாரைப் பார்த்து எழுத ஆரம்பித்தனோ அவரின் அறிமுகம் கிடைத்ததில், வசிட்டன் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் கிடைத்தாற் போன்று மகிழ்வு அடைந்தேன். கடந்த 16.10.09 அன்று எனது கவிதையான இவளும் ஒரு கற்புக்கரசியை தமிழிஷ் வலையுலகம் தன் முதன்மைப் பக்கத்தில் வெளியிட்டு என்னை சிறப்பித்தது. மிக்க மகிழ்வடைந்தேன்.

இந்த தருனத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மிக்க நன்றிகளை தெரியப் படுத்திக் கொள்கின்றேன்(கொல்கிறேன்). நன்றி................நன்றி.

பின் குறிப்பு: எனது எல்லா பதிவுகளையும்(கொடுமைகளையும்) பெறுமையாக படித்து பின்னூட்டமும் இட்ட வால்பையனுக்கு நான் மிகவும் கடமைப் பட்டுள்ளேன். அவரின் வலி நீங்க ஒரு ஸ்பெசல் நன்றி. வலை அமைத்த முருகுவிற்கு ஒரு வடை பிளஸ் நன்றி.

Friday, October 16, 2009

இந்த வருச தீபா வலி

எங்க வீட்டு தீபாவளின்னா ரொம்ப விஸேசமா இருக்கும். அதுக்கு ஒரு மாசம் முன்னாடியே தீபாளி கதை எல்லாம் அவுத்து விடுவேம். எங்க நண்பர்களும் வாய்க்குள்ள ஆரோப்பிளான் போறது தெரியாம கேப்பாங்க. அப்ப எனக்கு விவரம் பத்தலை. இல்லைனா எங்க வூட்டு தீபாளிக்கு காமராசர், நேரு எல்லாம் வந்தாங்க அப்பிடினு கதை விட்டுருப்பன். எல்லாம் பழைய தீபாளிக் கதையும் வரும் தீபாளி பத்தி பிளானும்தான் இருக்கும், எங்க வூட்ல தீபாவளி ஒரு ஊர்த்திருவிழா மாதிரி இருக்கும். நான் அப்பா அம்மா, இரண்டு அக்கா,இரண்டு மாப்பிள்ளைகள், நாலு அண்ணன்மார் என்று ஒரு கும்பலா இருப்போம். எங்க அம்மா சீனியாரிட்டிபடி எல்லாருக்கும் அவங்க கையால் எண்ணெய் தேய்ப்பார்கள். எங்க பெரிய அண்ணன் அப்பவே வருடா வருடம் ஜனுறு ரூவாய்க்கு டப்பாசு வாங்குவாறு. முத நாள் சாயங்க்காலம் ஆரம்பித்து மக்கா நாள் சாயங்காலம் வரை ஒரே வெடியா வெடிப்போம். அப்படி ஒரு தீபாவளி 1986 ஆம் வருடம் சேகமா ஆரம்பித்து ரொம்ப கொண்டாட்டமா முடிஞ்சது. அத உங்ககிட்ட பீலா விடுறதுதான் இந்த பதிவு.

அப்ப எங்க பெரிய அண்ணன் எங்கள் ஊரிலும், இரண்டாது அண்ணன் கல்பாக்கத்திலும், மூன்றாது அண்ணன் எங்கள் ஊரில் தையலகம் வைத்து இருந்தார். வழக்கமா எங்க பெரிய அண்ணன் எங்க எல்லாருக்கும் துணியும் பட்டாசும் வாங்கிக் கொடுப்பார். அவரே துணிக்கடைக்குப் போய் துணி எடுத்து வருவார். நாங்க எல்லாம் இருவது வயசு வரைக்கும் துணிக்கடைக்கு போனது இல்லை. அவர் என்ன வாங்கிக் கொடுத்தாலும் அதான் எங்களுக்கு புடிச்ச கலரு, டிசைன் எல்லாம். அவரும் பார்த்து உசத்தியாத்தான் வாங்குவாரு. அந்த வருச தீபாவளிக்கு எங்க இரண்டாது அண்ணன் வேலையில சேர்ந்து ஒரு வருசம் ஆகுது. அவரு பெரிய அண்ணாவிடம் நீங்க துணி வாங்கிடுங்க பட்டாசு நான் வாங்கியாரன்னு சொன்னார். பெரிய அண்ணனும் சரி என்று துணி வாங்கிட்டார். அதுக்கு முந்தின வருசம் இந்த அண்ணன் இருனூறு ரூபாய்க்கும், பெரிய அண்ணன் ஜனூறு ரூபாய்க்கும் வாங்கினாங்க. பெரிய அண்ணன் எதுக்கு இரண்டு பேரும் வாங்கனும். நீ சொல்லியிருந்தா நான் வாங்கி இருக்க மாட்டேன் என்று சொன்னதால இந்த வருசம் அட்வான்சா சொல்லிட்டார். நாங்களும் அண்ணன் சென்னையில இருந்து நிறைய பட்டாசு வாங்கி வருவார் என பக்கத்து வீட்டு பசங்களிடம் பீலா விட அவர்களும் வெடிக்கும் போது என்னை கூப்பிடனும் என்று கூட்டனி போட்டுட்டாங்க. தீவாளிக்கு ரெண்டு நாள் முன்னாடி எங்க பக்கத்து வக்கில் வூட்டுக்கு போன் வந்தது, எங்க இரண்டாது அண்ணன் டிரயின்ல ரிசர்வேசன் கிடைக்கல, பஸ் எல்லாம் புல்லாயிருச்சு அதுனால என்னால வரமுடியாதுன்னு. போன் வந்தவுடன எங்களுக்கு எல்லாம் ரொம்ப கஸ்டமாப் போச்சு. முத வருசம் அண்ணாவை விட்டுட்டு கொண்டாடுற வருத்தம். எங்க அம்மா நாலு பிள்ளைக இருந்தாலும், ஜந்துல அவன் ஒருத்தன் வருலலியேன்னு ரொம்ப கவலைப் பட்டார்கள். அன்றுமாலை எங்க பெரிய அண்ணன் எங்க சின்ன அண்ணாவிடம், இவன் பட்டாசு வாங்கி வருவதாக கூறியதால் நான் இருந்த காசுக்கு துணி எடுத்துவிட்டேன்(எல்லாருக்கும் இரண்டு செட் வாங்கியிருந்தார்) இப்ப என்ன பண்ணுவது என்று. நாங்க பட்டாசு இல்லாட்டி பரவாயில்லை, அதான் அண்ணன் இல்லையே அடுத்த வருசம் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூற, அவரும் வெளியில் சென்று விட்டார். ஒரு ஏழு மணிக்கு என் மூன்றாவது அண்ணன் ஒரு பெரிய அட்டைப் பொட்டியுடன் வந்தார். அவர் கடன் வாங்கி முன்னூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கி வந்தார். நாங்களும் அதை பிரித்துப் பார்த்துகொண்டு இருந்த பொழுது பெரிய அண்ணன் இன்னேரு அட்டைப்பொட்டியை தூக்க முடியாமல் தூக்கி வந்தார். அவரும் வழக்கம் போல ஜனூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கி வந்தார். பெரிய அண்ணன் ஏன் என்னைக் கேக்காமல் வாங்கி வந்தாய் என சின்ன அண்ணனை கேட்டு, கடன் வாங்கியதற்க்காக திட்டிவிட்டு, கடன் வாங்கி பட்டாசு வெடிக்கலைனா குறைஞ்சா போய்டும் என்றார். அவரும் கடன் வாங்கித்தான் வாங்கி இருப்பார். இப்படி எல்லாப் பட்டாசையும் மூட்டை கட்டிவிட்டு தூங்கப் போனேம். ஆனாலும் இரண்டாவது அண்ணன் இல்லாத வருத்தம் இருந்தது.

மறுனாள் காலை ஜந்தரை மணிக்கு எங்க வீட்டில் சத்தம் கேட்டு முழித்துப் பார்த்தேன். எங்க இரண்டாவது அண்ணன் ஒரு பெரிய சூட்கேஸ் மற்றும் இரண்டு லெதர் பேக்குடன் வந்துருந்தார். அவர் பஸ் மாறி மாறி மிகுந்த சிரமப்பட்டு வந்ததாக கூறினார். அவரின் லக்கேஜ் முழுக்க துணிகளுக்கு இடையில் பூராவும் பட்டாசுகள். ரெட்போட் பட்டாசுகள் பண்டல் பண்டலாய் வாங்கி வந்தார். லஷ்மிவெடிகள் ஜந்து பண்டல். பாம் பாக்ஸ் ஜந்து டஜன் என்று ஒரே வெடி மயம். அவரிடம் பெரிய அண்ணன் ஏண்டா இவ்வளவு பட்டாசு வாங்கியிருக்க எவ்வளவு எனக்கேக்க அவரும் ஆயிரத்து இருனூறு ரூபாய்க்கு வாங்கியதாக கூறினார். பெரியண்ணன் ஏன் வீண் செலவு என்று கூற அவரும் நம்ம மூனு அக்காமாருக்கும் கல்யாணம் பண்ணிட்டம், கடனும் எல்லாம் அடைச்சாச்சு, இன்னி பசங்கதான் இன்னும் இரண்டு வருசத்துல எல்லாரும் வேலைக்கு போய்டுவாங்க. எனக்கும் மத்தியரசில் கைனிறைய சம்பளத்துடன் வேலை. நம்ம பெரிய குடும்பம் இனி தலை நிமிர்ந்தாயிற்று. ஆதலால் நிறைய வெடித்து சந்தோசமா இருப்பம் என்றார். நீங்க ஏன் பட்டாசு வாங்கினிங்க என்று அவர் கேக்க, உன் போன் தான் எனக் கூற அவரும் நீங்க எல்லாம் இல்லாம நான் தனியா இருக்கனும் அது இல்லாம நான் ஒரு வாரத்துக்கு முன்னால பட்டாசு வாங்கிட்டேன், ஆதலால் கஸ்டப் பட்டாவது போயிறலாம் என்று கிளம்பி வந்தேன் என்றார். நாங்க வீட்டின் வாசலில் பட்டாசு காயப் போட்டிருந்தது பார்த்து பக்கத்து வீட்டார் அனைவரும் ஆச்சரியப் பட்டனர். தெருவில் செல்லும் சிலர் கடை என நினைத்து விலை கேக்க, நான் இது நாங்க காயப் போட்டுருக்கேம் என்று கூற. இவ்வளவு பட்டாசா! என வியந்தனர். அன்னைக்கு பூரா எங்க பெரியண்ணன் எங்க அம்மா அக்காவுடன் மிக்ஸர், பலகாரம் என அமர்க்களப் படுத்த நாங்க பட்டாசை மறுபடி மறுபடி பார்த்துக் கொண்டு இருந்தேம். மாலை சரியாக எட்டுமணிக்கு வெடிக்க ஆரம்பித்த நாங்கள் அடுத்த நாள் இரவு பத்து மணிவரை வெடி வெடி என்று வெடித்தேம். எங்க தெருவில் அனைவரும் என்ன பட்டாசு குடேனையே வெடிக்க வச்சுட்டிங்க என கிண்டல் பண்ணினார்கள். அப்படியும் வெடித்து முடியாமல் கார்த்திகை பண்டிகைக்கு கால்வாசியை ரிசர்வ் செய்தேம்.

ஊரு கண்ணு மொத்தமும் பட்டுதே என்னமே தெரியலை, அடுத்த வருடம் எங்க பெரியண்ணன் கல்யாணமாகி புது மாப்பிள்ளையாய் மாமனார் வீடு போனார். அதற்கு அடுத்த வருடம் இரண்டாவது அண்ணன் என்று இதுவரை மொத்தக் குடும்பமும் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடவில்லை. போன வருடம் தீபாவளியை கொண்டாடலாம் என நினைத்தபோது எங்க அப்பா மறைந்தார். இந்த வருடம் நான் இங்கே சிங்கையில் தனியாக இருக்கின்றேன். வழக்கம்போல் அன்னைக்கும் ஓட்டல் சாப்பாடுதான். அடுத்த வருட தீபாவளியையாவது மொத்த குடும்பமும் இணைந்து கொண்டாடவேண்டும். மொத்தத்தில் தனிமையில் எனக்கு இந்த வருடம் எனக்கு தீபா வலிதான்.

உங்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். நன்றி.

Thursday, October 15, 2009

இவளும் ஓர் கற்புக்கரசி

கால் கடுக்க நின்றேன்
கயவன் ஒருவனுக்காக
பலரும் நடக்கின்ற சாலையில்
மனிதர்கள் யாருமில்லை
மனிதம் ஏதும்மில்லை.

கயவனும் வந்தான்
என்னை சுற்றி மேனிஎழில்
பார்க்க பரிதாபமாய் நின்றேன்
என் சதைப் பேரத்துக்காக
வல்லூறாய் வட்டமிட்டான்.

எனது அழகைப் புகழ
கூசினாலும் சிரித்தேன்
மனதுக்கும் வெகுன்டேன்
மானாய் வளைந்தேன்
அவன் இச்சைக்கு இணைந்தேன்.

ஆட்கொண்டான் என்னை
ஆட்கொல்லியாய் அவன்
பற்றிப் படர்ந்தான் விருப்பத்துடன்
விருப்பம் இல்லாமல் சுற்றிக்கிடந்தேன்
மனமில்லா உடல் கூடினான்,பிணத்துடன்.

சதையப் பற்றி சதிராடினான்
மனதைப் பற்றிப் புரியாமல்
ஆடி ஓய்ந்தான் அலுத்து எழுந்தான்
வெற்றுப் சிரிப்புடன் வழியனுப்பினேன்
பாவத்தின் சம்பளம் வாங்கி.

பாவம் என்றாலும் பணம் தானே
வாழ்வின் சுபாவம். குளித்தால் போயிற்று
தண்ணிர் வழிந்தோடியது என்மீது
என் கண்ணிருடன் சேர்த்து
தண்ணிரும் கசந்தது என் மனம்போல.

ஆறா மனதுடன் கை நிறைய
பணமுடன் பாச குணமுடன்
சென்றேன் மருத்துவமனை
என் பாசமிகு கனவனை காண
முப்பதிலும் குழந்தையாய் போனவன்.

நெஞ்சுமிகு காதலுடன் வாழ்ந்த அவன்
பஞ்சனையில் படுத்து இருக்க
அவன் காலுரண்டு செத்துவீழ
விபத்து ஒன்று மாற்றியது
அவனை முடமாய், என்னை விபச்சாரியாய்.

Wednesday, October 14, 2009

மாசாலாப் பொரியும் 5000 பீரும்

இந்த கோடை நீண்ட பள்ளிவிடுமுறை வந்துவிட்டால் எங்களுக்கு ரொம்ப கொண்டாட்டம். எங்களை ஏன்னு கேக்க ஆள் இல்லாம, வெய்யில் பாக்காம, கருவழிஞ்சு ரோடு ரோடா, காடு மேடு எல்லாம் சுத்துவேம். காலை உணவில் இருந்து மதிய உணவு வரை, வயலில் தட்டக்கா(காராமணி) பறித்து உண்பது, கரும்புத் தோட்டத்தில் கரும்பு திருடி தின்பது, கொய்யாக்காய் திருடுவது. நாகப் பழம் பறித்து உண்பது என்று அமாராவதி ஆத்துமேடே கதி என சுற்றுவேம். வீட்டுக்கு வந்து மதியம் சாப்பிட்ட உடன் அம்மா பக்கத்தில் படுத்து மாலை நாலு மணிவரை தூங்க வேண்டும். இல்லை என்றால் அம்மா திட்டுவாங்க. மாலை அம்மா டீ மற்றும் திங்க எதாது கொடுத்தால் சாப்பிட்டு இரவு ஏழு மணிவரை தெருத் தெருவாப் போய் சுற்றி பல நண்பர்களுடன் விளையாடி விட்டு ஏழு முதல் ஒன்பது மணி வரை வீட்டின் முன் விளையாடி, கதைபேசி பொழுது போக்குவேம். இதில் சுவாரஸ்யமான இன்னேரு விசயம் என்ன என்றால், இந்த லீவில் சென்னையில் இருந்து எங்க சித்தி சித்தப்பா இருவர்(இரண்டு சித்திகள்),அவர்களின் மூன்று மகன் கள் இரண்டு பெண்கள், எங்க அக்காவின் மூன்று பெண்கள் என்று எங்க வீடு ஒரு பதினைந்து நாளைக்கி களை கட்டும். எங்களை மேய்க்க முடியாமல் அவங்களுக்கு திண்டாட்டம். எங்க பெரிய அண்ணா திங்க அப்ப எல்லாம் ஒரு பெரிய பலாப்பழம், நிறைய வெள்ளரிப் பிஞ்சுகள், தர்ப்பூசனிப் பழங்கள் என வாங்கி வரவார். புளியம்பூ தொக்கு, புளியங்காய் சட்டினி என இந்த வகைகளால் களை கட்டும். ஆனா நமக்குத்தான் ஆத்துமேடும்,எல்லா மரங்களும் இருக்கே. நாங்க எல்லாரும் சமத்துப் பசங்க அது வேனும் இது வேனும் எல்லாம் கேக்க மாட்டேம். என்ன தராங்களே, என்ன கிடைக்குதே அதை பூந்து விளையாடுவேம். கூட்டாங் சேறும், நிலாச் சேறும் சாப்பிடுவேம். இதுல ஒரு நாள் எங்க பெரிய அண்ணன் எங்க மூன்றாது அண்ணாவிடம் நிறைய பணம் கொடுத்து எங்க அனைவரையும் போய் மசாலா பொரி, மசாலா முறுக்கும் சாப்பிட சொன்னார். நாங்களும் கும்பலாய் போய் கடையைக் கலக்கிட்டு வந்தேம். இதுதான் என் முதல் அனுபவம். இதன் பின் இந்த பொரி என் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகி விட்டது. இதன் பின் என் சித்தி மக்களும் எங்கள் ஊருக்கு வந்தால் முதலில் சொல்வது இந்த கடைக்குப் போகலாம்.

பின் கல்லூரி முடியும் வரை பலமுறை இந்த பொரியை வாரத்தில் ஒரு முறை அல்லது இரு முறை சாப்பிடுவது வழக்கம். அப்புறம் பட்டம் பெற்று நான் இரண்டு மாதத்தில் சென்னை வந்து பிரபலமான வர்த்தக நிறுவனத்தில் விற்பனை பிரதினிதியாக சேர்ந்ததும், நாங்களும் ரொளவுடி தாண்டா வடிவேலு பாணியில் குடிக்க ஆரம்பித்ததும் தனிக்கதை. வியாபாரக் கூட்டங்கள், முகவர் கூட்டங்கள், வருடாந்திர கணக்கு கூட்டங்கள், சந்தை கண்காட்சிகள் என்று பல நிகழ்வுகளில் பல ஜந்து மற்றும் மூன்று நட்சத்திர ஓட்டலில்லும், ஒயின் சாப்புகளிலும் பல விதமான சைடு டிஸ் வச்சுக் குடிச்சாலும், எனக்கு இந்த மசாலா பொரி மற்றும் மசாலா முறுக்குடன் வைத்து குடிக்க ஆசை வந்துவிட்டது. இது பல வருடங்கள் ஆகிப் பின் நான் எங்க ஊர் அருகில் உள்ள கோவை மா நகரில் உள்ள மபத்லால் நிறுவனத்தில் துணி விற்கும் மாவட்ட ஏரியா சந்தை கண்காணிப்பாளராக வந்து சேர்ந்தேன். அப்போது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தாரபுரம் வந்துவிட்டு திங்கள் கோவை செல்வது வழக்கம். அப்போது நான், என் உயிர் நண்பன் (இந்த உயிரு,தயிரு நண்பனுக ஒரு நாலு பேரு இருக்காங்க) பூவேந்திரன் மற்றும் ஜெடிசி என்னும் ஜீவா ரவி மூவரும் பீர் குடிப்பது வழக்கம். நான் எங்க வீட்டில் இரவு படத்துக்கு போவதாக கூறிவிட்டு இரவு டிபனை மிகவும் கம்மியா சாப்பிட்டு கிளம்புவேன். பாவம் அம்மா கொஞ்சமா சாப்பிடுறான் என்று திட்டுவாங்க, ஆனா நான் மாலை நண்பர்களுடன் பஜ்ஜி, போண்டா சாப்பிட்டன் பசியில்லை என்று பொய் சொல்லிவிடுவேன்(நான் வளருகின்றேனே மம்மி). அப்பவும் எங்க அம்மா வெள்ளந்தியா மறுவாரம் மாலை வெளியில் கிளப்பினால் குட்டிப்பா வெளியில் எதும் சாப்பிடாத நான் உனக்காக இந்த டிபன் பண்றேன் என்பார். எனக்கு சங்கடமாக இருந்தாலும் மண்டை ஆட்டிக் கிளம்பி விடுவேன். சரி கதைக்கு வருவேம். நாங்கள் மூவரும் கடைக்குப் போய் குடிப்போம். குடித்து விட்டு இந்த பொரிக்கடையில் வந்து சாப்பிடுவேம். நான் ரொம்ப பெரிய மனுசன் ஆகிட்டதால எங்க பெரிய அண்ணன் இப்ப எந்த கண்டிசன் போடுவதே திட்டுவதே இல்லை(இதை தனிப் பதிவாக போடுகின்றேன்). அப்புறமும் ஊரும் பெரிது ஆகிவிட்டதால் இப்ப பாதிப்பேருக்கு என்னை தெரியாது. ஆனாலும் குடித்துவிட்டு போய் கடையில் பொரி சாப்பிடுவது என்பது இரசிச்சு சாப்பிட முடியவில்லை. நம்ம சாப்பிட போகும் போதுதான் யாரது தெரிஞ்சவங்க குடும்பத்தேட பொரி சாப்பிட வந்து நம்ம என்னப்பா நல்லா இருக்கியானு அக்கரையா விசாரித்து ஏறுன மப்பை இறக்குவாங்க. ஒயின் சாப்பில் வைத்து சாப்பிடலாம் என்றால் எல்லாம் வந்து ஹாய் சொல்லிக் கை வச்சானுங்கனா நமக்கு ஒரு வாய்தான் மிஞ்சும். இப்படி இருக்கும்போது நாங்க மூன்றுபேரும் இயற்கை ஆர்வலர்கள் ஆதலால் நாங்க வித்தியாச இருக்க ஜந்து பீர் மற்றும் சைடு டிஸ் வாங்கி இரவு பத்து மணிக்கு மேல் அமராவதி ஆத்துக்கு, பார்க், பைபாஸ் ரோடு, வயல், தோட்டம் என அள் நடமாட்டம் இல்லாத இடங்களில் அப்படியே ஜாலியா சும்மா காத்தாட உக்காந்து குடிப்போம். அப்ப ஒரு நாள்ள்ள்ள்ள் இண்டெர்வெல்.

ஒரு நாள் நல்ல முழு நிலவு நாள் நாங்க முனுபேரும் ஜந்து பீர் (நாங்க காம்ப்ளான் பாய் மாதிரி, நாங்க 5000பீர் ஆளுக), ஆளுக்கு ஒரு மசாலா பொரி, மசாலா முறுக்கு, அவனுகளுக்கு சில்லி சிக்கன் என வாங்கிக் கொண்டு ஆத்துமேட்டுக்கு இரவு பத்து மணிக்கிப் போனேம். அங்க முழு நிலவு நல்லா பிரகாசமாக இருந்தது. தண்ணிரில் தெரிந்த அதன் பிம்பம் மிக அழகு, ரம்மியமான சூழ்னிலை, குளுமையான குளிர் காற்று(கொஞ்சம் காத்து அதிகம்) என சூழ்னிலையை நான் ரொம்ப ரசித்து ஆத்துமணலில் அமர்ந்து குடித்தேன். மிகவும் அருமை, நாங்களும் இந்த ரம்மியத்தை இரசிக்கும் வண்ணம் ரொம்பவும் பேசாமல் அமைதியான குரலில் பேசி இரசித்து ருசித்து மிகவும் பொறுமையாக சாப்பிட்டேன். ஆனந்தமாக உணர்ந்தேன். (பேர் அடிக்குதா நில்லுங்க பின்னால என்ன ஆகுது பாருங்க.) எனக்கு இயல்பாக முழு நிலவு நாளில் தனிமையில் அமைதியாக ஆனந்தமாக இருக்கப் பிடிக்கும். மெரினா கடற்கரையில், கல்பாக்கம் கடற்கரையில், வீட்டின் மொட்டை மாடியில், திறந்த வெளியில் உலாத்துவேன். இப்ப பொரி, முறுக்கு, பீர் என இரசித்து ஆத்துமேட்டில் இருந்தேன். பின் நாங்க ஒரு பன்னிடரை வரை பொழுது போக்கி வீடு திரும்பினேன். வழக்கம் போல வாசலில் படுக்கை விரித்து கதவுக்கு வெளியில் நின்று அம்மா நான் வந்துட்டேன் என குரல் கொடுத்துட்டேன். அவர்களும் வழக்கம் போல கதவு திறக்காமல் சரிப்பா, சாமி கும்பிட்டு படுத்து தூங்கு என்றார். நான் வானத்தில் நிலவு பார்த்து தூங்கிவிட்டேன்.

அதிகாலை ஒரு நாலரை மணி இருக்கும் திடிர் என்று விழிப்பு வந்தது, தாங்க முடியாத வயிற்று வலி, குத்தி குத்தி வலித்தது. பின் வாந்தியும் வயிற்றுப் போக்கும் மாறி மாறி வந்தது. நான் நெந்து நூடுல்ஸ் ஆகிட்டன். எங்க அம்மா எனக்கு டீ டிகாசன், லெமன் சாறு என்று நிறைய வைத்தியம் செய்தார்கள். மதியம் வரை ஒரு பத்துமுறை பாத்ரூமுக்கும், பெட்டுக்கும் மாறி மாறி நடைப் பயணம் போகவேண்டியிருந்தது.(என்னது நல்லா வேணும்னு திட்டறிங்களா). மறுனாள் மாலையில் பூவெந்திரன் வீட்டுக்குப் போனால் அவன் பீஸ் போன பல்ப்பு மாறி படுத்து இருந்தான். சரி எழுந்து வா என அவனை கூட்டிக் கொண்டு ஜெடிசி வீட்டுக்கு போனால், வயித்துப் போக்கு அவனை துவைத்துக் காயப் போட்டு இருந்தது. நாங்கள் மூவரும் அவன் வீட்டில் முன்னால் அமர்ந்து என்ன நடந்தது என்று யோசிக்க ஆரம்பித்தேம். அப்பதான் புரிந்தது நாங்க மணலில் உக்காந்து சாப்பிட்ட போது அடித்த காற்றில் மணலும் பொரியுடன் கலந்துவிட்டது. நாங்களும் இரசித்து சாப்பிட மணலும், பொரியும் வேலையைக் காட்டிவிட்டது. இரவி சொன்னான் டேய் உன்னாலதாண்டா இப்படி, நீதான் பொரி சாப்பிட ஆசைப்பட்டாய், வேற எதாதுன்னா அப்படியே பாலித்தின் பாக்கொட்டுடன் சாப்பிடுவேம். இது பொரியை பேப்பரில் வைத்து சாப்பிட்டதால்தான் இந்த நிலைமை என்றான். பூவேந்திரனும் மக்கா நீ ஜடியா கொடுக்கும் போதே நினைச்சன் எதே வில்லங்கம் வரப்போகுதுன்ன்னு. இனி நான் எப்பவும் தண்ணியடிச்சா பொரி சாப்பிட மாட்டேன் என்று அடிக்காத குறையாக சொன்னார்கள். நானும் சரி விடுங்கடா நல்லா இரசித்து சாப்பிட்டம் இல்ல அதுக்குப் பரிசு இது என்று எஸ் ஆக, இரவி சொன்னான் நாங்க விடுறம் ஆனா வயிறு இப்ப விடமாட்டங்கது என்று. நாங்கள் மூவரும் சிரித்துப் பிரிந்தேம்.

பின் குறிப்பு : என்னடா பித்தன் குடிகாரனான்னு நீங்க முறைப்பதும், சங்கடப் படுவதும் எனக்கு புரிகின்றது. அது ஒரு காலம். நான் குடிகாரனாக இருந்தது. பின் இது போல ஒரு முழுனிலவு நாளில் கடற்கரையில் அமர்ந்துகொண்டு யோசிக்கையில், நாம் ஏன் குடிக்கின்றேன்.எதுக்கு குடிக்கின்றேன் என நினைக்கையில் குடியின் மீது ஒரு வெறுப்பு வந்து நிறுத்திவிட்டேன். இப்ப ஒரு மூனு மாசத்துக்கு ஒரு தரம் அல்லது எப்போதவது நண்பர்கள் சந்திப்பின் போது மட்டும் பீர் குடிப்பேன். குடிக்க பிடிக்கவிலை என்பதும் ஒரு காரணம். இதுல ஒரு காமெடி என்னா தெரியுமா ரோட்டில் குடிகாரர்களைப் பார்த்தா " இம்ம் வேலை வெட்டி இல்லாதவனுக" என நினைப்பேன். நன்றி.

மசாலாப் பொரியும், மசாலா முறுக்கும்.

மசாலா பொரியும் மசாலா முறுக்கும். இது எங்கள் ஊர் தாராபுரத்தில் மட்டும் விற்க்கும் ஒரு திண்பண்டம். இது 18 மனை கோமுட்டி செட்டியார்கள் எனப்படும் வணிக மக்களால் செய்து சாப்பிடும், விற்க்கும் பொருள். இதை விற்கும் பல கடைகள் இருந்தாலும் மூன்று கடைகள் மிகவும் பிரபலம். அதில் அய்யப்பன், சிவராமன் என்பவர்களிடம் எங்க மூன்றாவது அண்ணன் கேட்டு எங்கள் வீட்டில் செய்து சாப்பிடும் ரெசிப்பி. ஞாயிறு மாலைகளை சுவையுள்ளதாக்க உங்களுக்காக நான் பதிவு இடுகின்றேன். தவறாமல் முயற்ச்சிக்கவும்.

தேவையான பொருள்கள் :
1. பொரி (உப்பு கம்மியாக இருந்தால் நலம். )
2. காரா பூந்தி 100 கிராம்.
3.சின்ன வெங்காயம் அல்லது சாம்பார் வெங்காயம் 10,
4.வரமிளகாய் 6,
5.தனியா அல்லது கொத்தமல்லி ஒரு பிடி,
6.எலுமிச்சை 1,
7. தேங்காய் கால் மூடி.
8.தட்டுவடை (சன்னமானது)
9. அச்சு முறுக்கு
10.தேங்காய் எண்ணெய் 50மில்லி,
11.ஓமப்பொடி,
12.சீரகம் ஒரு ஸ்பூன்.
13.பாசிப்பருப்பு சுண்டல்50கிராம், (தேவைப்பட்டால்) கொஞ்சம்.
14.பெருங்காயம் அரை ஸ்பூன்.

செய்முறை : மசாலா காரப்பெரி:
முதலில் எழுமிச்சம் பழத்தை வெட்டி ஒரு டபராவில் அரைடம்பளர் தண்ணிரில் பிழியவும், சின்னவெங்காயத்தை தோலுரித்து நாலாக நறுக்கி, அதனை சிறு சிறு துண்டுகளாக்கி அதனை எழுமிச்சைத் தண்ணிரில் ஊறப் போடவும். இந்த வெங்காயமும், தண்ணிரும் தான் நமது பொரிக்கு சுவை சேர்க்கும். பின் வரமிளகாய், தனியா, பெருங்காயத்தூள்,சீரகம், குறைவான உப்பு (பொரியில் இருக்கும்) அனைத்தையும் மிக்ஸியில் இட்டு மைய அரைக்கவும். கொட்டியாக விழுதுபோல் இருக்கவேண்டும். தேங்காயை பத்தைகளாக நறுக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு தட்டில் தேங்காய்த் துண்டுகளைத் தனியாக வைத்துக் கொள்ளவும். முடிந்தால் 50கிராம் பாசிப்பருப்பு சுண்டல் பண்ணவும். அவ்வளவுதான் செய்யவேண்டிய வேலை, இனி பொரி கலக்கும் முறையைப் பார்ப்போம். பொரியை மொத்தமாக கலந்தால் விரைவில் ஊறிவிடும். ஆதலால் ஒவ்வெருத்தருக்கும் தனித்தனியாக கலக்கவும். வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்றார்போல காரம் கலக்க வசதியாக இருக்கும். கலந்து முடித்தவுடன் ஒரு கப்பில் ஸ்பூன் போட்டு சாப்பிட கொடுக்கவும். ஊறிவிட்டால் நல்லா இருக்கும், ஆனாலும் சுவை மாறிவிடும். சரி கலக்க போலாம்மா?.

முதலில் ஒரு வாய் அகலமான பாத்திரத்தில் பொரி இரண்டு பிடி (முக்கியமாக பொரியில் கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்) போட்டு அதனுடன் இரண்டு அச்சு முறுக்கு, இரண்டு தட்டு வடையை கையால் சிறியதாக உடைத்துப் போடவும். பின் ஒரு ஸ்பூன் தேங்காய் துண்டுகள், ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு சுண்டல், அரைப்பிடி பூந்தி போட்டு இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கலக்கவும், நல்ல கலந்தவுடன் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் கார விழுதும் கொஞ்சம் எழுமிச்சைவெங்காயத் தண்ணிரும்(ஒருஸ்பூன்) விட்டு நல்லா கலக்கி ஒரு சிறிய தட்டு அல்லது கப்பில் போட்டு அதன் மீது சிறு வெங்காயத்துண்டுகளைப் தூவிப் பின் ஓமப்பொடியும் தூவி சாப்பிடக் கொடுங்கள். சிறு குழந்தைகளுக்கு காரம் போடாமல் அல்லது அரைஸ்பூன் காரம் போட்டுக் கொடுக்கலாம். தட்டுவடையும் அச்சு முறுக்கும் கிடைக்காவிட்டால் மிக்ஸர் சேர்த்துக் கொள்ளவும்.

மசாலா காரமுறுக்கு:
பாத்திரத்தில் பூந்தியும், மூன்று அச்சு முறுக்கு மூன்று தட்டு வடை பொடித்துப் போட்டு கார விழுது,வெங்காயத் தண்ணீர், பாசிப்பருப்பு தேங்காய் எண்ணெய், தேங்காய் துண்டு போட்டு நல்லாக் கலந்து, அதன் மேல் வெங்காயத்துண்டுகளையும் ஓமப்பொடியும் தூவினால் மசால கார முறுக்கு ரெடி. பொரி கலக்கும் முறையும் இதுவும் ஒன்னுதான் ஆனால் பொரிக்கு பதிலாக முறுக்கும் தட்டுவடையும் அதிகமாக போடவேண்டும்.

வேண்டுகோள்:
சாப்பிட சுவையாக இருக்கும், சாப்பிடும் போது இன்னமும் சாப்பிடவேண்டும் போல ஆசையாக இருக்கும், அதுக்காக டிபன் மாதிரி சாப்பிட்டால் மறு நாள் பின் விளைவுகள் இருக்கும். ஆதலால் ஒரு கப் பெரியும் ஒரு கப் மசாலா முறுக்குடன் நிறுத்திக் கொள்ளவும். நான் இந்த பொரி சாப்பிட்ட சுவையான ஒரு அனுபவத்தை (அவஸ்த்தை) நான் இன்று பதிவாக (நகைச்சுவை) போடுகின்றேன். படிக்கவும். நாளை மிகவும் சுவையான அருமையான எளிதான வெள்ளரிப் பிஞ்சு மசாலவைப் படிக்கவும், செய்யவும் மறந்துவிடாதீர்கள். நன்றி.

விருதும் பாராட்டும்.

இதுதான் நான் வாங்கும் முதல் விருது. எனது வித்தியாசமான புளியம்பூ தொக்குக்காக திருமதி. சந்தனமுல்லை பிளாக் எழுத்தாளரால் கொடுக்கப் பட்டது. சகோதரிக்கு எனது மகிழ்ச்சியும். மிகுந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இது எனக்கு மேலும் எழுதும் ஆர்வத்தை தூண்டுவதாக அமையும். நீங்கள் அனைவரும் இடும் பின்னூட்டங்கள் அனைத்தும் எனக்கு விருதுதான்.

சுவையான ரெசிப்பிகளுக்காக எனக்கு இந்த விருதினை தந்துள்ளார். இன்னமும் பல சுவையான ரெசிப்பிகளை தரவுள்ளேன். அனைவரும் படித்து, செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழவும். எனக்கும் சேர்த்து நீங்களே சாப்பிடவும். மிக்க நன்றி.
என் மனமாந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Tuesday, October 13, 2009

கடலை மசாலா மற்றும் தயிர் மிக்ஸர்

ஞாயிற்றுக் கிழமை மாலைவேளைகளில் வீட்டில் இருந்து டீ வீ பார்த்து, திண்பண்டங்கள் கொறித்து வெளிய சுத்துற பணத்தை மிச்சப் படுத்தலாம். குடும்பத்தினருடன் சந்தோசமா இருக்கலாம். விருந்தினர்கள் வந்தாலும் இந்த கடலை மசாலாவை செய்து கொடுத்து மகிழ்விக்கலாம். ஈரோட்டில் இரண்டு கடைகளில் மட்டும் இந்த கடலை மசாலா மற்றும் தயிர் மிக்ஸர் விற்க்கும். அதில் ஒரு கடை என் பெரிய அக்கா வீட்டின் அருகில் இருந்தது. என் அக்கா பெண் மற்றும் என் நாலாவது அண்ணிதான் இந்த ஜட்டத்தை அவர்களிடம் கேட்டு வீட்டில் செய்ய ஆரம்பித்தார். அந்த சுவையான ஜட்டத்தின் விளக்கம் இது.

தேவையான பெருட்கள் :
1. பொட்டுக் கடலை 100கிராம்.
2.தேங்காய் அரைமூடி.
3.காராபூந்தி 1/4 கிலோ,
4.காரக்கடலை 100கிராம்,
5. ஓமப்பொடி 100கிராம்,
6.பெரிய வெங்காயம் 6,
7.பச்சை மிளகாய் 3,
8.தட்டுவடை 10.(கொட்டியாக இல்லாமல் சன்னமாக இருக்கவேண்டும்)
9. அச்சுமுறுக்கு 10.(காரமுறுக்கு கிடைத்தால் நன்று)
10. கெட்டித்தயிர் 4 கப்.(தயிர் மிக்ஸருக்கு).(தயிர் புதுசாகவும், ரொம்ப புளிப்பு இல்லாமல்)
11.கொத்தமல்லி கொஞ்சம்.

பலகார வகைகளை கடையில் சிறு பாக்கொட்டுகள் வாங்கலாம்.

செய்முறை:
முதலில் கடலை மசாலாவைப் பார்ப்போம். முதலில் பெரிய வெங்காயத்தை தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக (பைன் சோப்பிங்க்)நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் தேங்காயை கீறி அதனை துறுவல்கள் ஆக்கி அதனுடன் பச்சைமிளகாய், பொட்டுக்கடலை சிறிது தேவையான அளவு உப்பு,
பெருங்காயம், சிறிது(குறைவாக புளி) ஆகியவற்றை சேர்த்து விழுதுபோல(பேட்டர்) அரைக்க வேண்டும். இந்த விழுது இட்லிக்கு பண்ணும் சட்டினி போல் அல்லாமல் தேங்காய் அதிகமாகவும் கடலை கம்மியாகவும் இருக்கவேண்டும். பின் அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் கொட்டவும். கொத்தமல்லியை நல்லா சிறிதாக நறுக்கவும். இப்ப கடலை மசாலா பண்ண ஆரம்பிக்கலாம்.

ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் முதலில் ஒரு பிடி நறுக்கிய சிறு வெங்காயத்தை இட்டு, அதில் ஒரு பிடி பூந்தி, பத்து காரக்கடலையும் போட்டு, இரண்டு தட்டுவடை இரண்டு அச்சு முறுக்கு ஆகியவற்றை கையால் சிறு துண்டுளாக பொடித்துப் போடவும். நல்லா ஒரு கலக்கு கலக்கிவிட்டு பின் அரைத்த விழுது இரண்டு ஸ்பூன் போட்டு நல்லா கலக்கி ஒரு சிறு தட்டில் கொட்டி அதன் மீது ஓமப்பொடி மற்றும் கொத்தமல்லியை தூவிக்கொடுக்கவும். பச்சை மிளகாயைக் கம்மியாக போட்டு பெப்பர் சால்ட் போட்டும் சாப்பிடலாம். மொத்தமாக கலக்குவதை வீட ஒவ்வெறுத்தருக்கும் தனியாக கலக்கினால் சுவையாக இருக்கும். மொத்தமாக கலக்கினால் சரியா ஒட்டாது. அதுவும் இல்லாமல் ரொம்ப ஊறி விடும். இதை கலந்த ஒரு சில நிமிடங்களில் சாப்பிடுவது நல்லது. அல்லது விழுதையும் வெங்காயத்தையும் கலக்கி ஜந்து நிமிடம் கழித்தும் மற்ற ஜட்டங்களை கலக்கி சாப்பிடலாம்.

தயிர் மிக்ஸர் : பண்டிகையின் போது நிறைய மிக்ஸர் மீதி இருந்தால் அதனுடன் ஒரு பிடி பூந்தியும் சேர்த்து, மேலே சொன்ன மாதிரி வெங்காயத்தூள், (அச்சு முறுக்கு,தட்டுவடை,தேவைப் பட்டால்) கொஞ்சம் விழுது சேர்த்து கலக்கி அதனுடன் ஒரு கரண்டி தயிரும் சேர்த்து கலக்கவும். தயிர் ரொம்ப கொட்டியாக இல்லாமலும், ரொம்ப தண்ணியாக இல்லாமலும், தயிர் வடை தயிர் போல இருந்தால் நன்று. ஓமப்பொடி,கொத்தமல்லி, கொஞ்சம் உறைக்கும் அளவிற்கு பெப்பர் சால்ட் போட்டு சாப்பிடவும்.
இதுதான் சுவையான கடலை மசாலா மற்றும் தயிர் மிக்ஸர் ஆகும். நாளை வித்தியாசமான மசாலா பொரி பண்ணுவதைப் பார்ப்போம். அப்படியே நான் இன்று கொடுத்திருக்கும் கல்யாண நகைச்சுவை பதிவையும் படிக்கவும். நன்றி.

கல்யாணமாம் கல்யாணம்

பலரும் பல திருமணங்களுக்கு சென்று இருப்பார்கள், அதில் பல அனுபவங்கள் இருக்கும். அதுபோல எனக்கும் ஒரு திருமணத்திற்கு சென்ற நகைச்சுவையான பதிவு இது. நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் சமயம் எங்கள் நண்பன் ஒருவன் அண்ணாவின் திருமணத்திற்கு அழைத்திருந்தான். அவன் சொந்த ஊர் மூலனூர். நங்கள் இருப்பது தாராபுரம். ஆதலால் அவன் குடும்பத்தில் யாரையும் தெரியாது. அவன் பேருந்து நிலையத்தில் எங்களுக்காக எங்க சக நண்பனை நிற்க வைப்பதாக கூறினான். மேலும் எங்களை தாராபுரத்திற்கு வந்து அழைத்துச் செல்ல வெள்ளகோவில் செந்திலையும் அனுப்புவதாக கூறினான். நாங்களும் செந்தில் உடன் வருவதால் மேலும் பத்திரிக்கை குறைவாக இருப்பதால் மெத்த வகுப்புக்கும் ஒரு பத்திரிக்கைதான் தந்தான்.
திருமண முதல் நாள் மாலை சென்று இரவு தங்கி மறுனாள் காலை திரும்புவதாக முடிவு செய்யப் பட்டது. அதன்படி மாலை ஆறு மணிக்கு செல்லவதாக திட்டம், ஆனால் நம்ம மக்கள் சீவி சிங்காரித்து வர ஆறரை ஆகிவிட்டது.அதன்பின் கிப்ட் வாங்கி கிளம்ப ஏழு மணி ஆகிவிட்டது. எங்கள் பக்கம் அவர்கள் இன திருமணத்தில் மாப்பிள்ளை அழைப்பு என்ற ஒன்று இல்லாவிட்டாலும் அங்கு விழா இரவு பத்து மணிக்கு ஆரம்பம் ஆகும். மஞ்சத்தண்ணிர் விடுவது, தாய் மாமன் சீர், பொட்டி மாற்றுவது((வரதட்சனை) என நிகழ்வுகள் முடிய மணி ஒன்று ஆகும். இந்த இரவு விருந்து அவர்களின் செல்வாக்கை காட்டுவதாக 32 வகையான ஜட்டங்களுடன் தடபுடலாக இருக்கும். அகவேதான் அவன் முந்திய நாள் இரவே எங்களை அழைத்தான். நாங்கள் மூலனூர் செல்ல இரவு எட்டு ஆகிவிட்டது. எங்களுடன் படிக்கும் ஜந்து நண்பர்களில் ஒருவரையும் பேருந்து நிலையத்தில் காணவில்லை. நாங்களும் செந்தில் இருக்கும் தைரியத்தில் கல்யாண மண்டபத்திற்கு செல்லத் தொடங்கினேம்.

அங்கு நிலையத்தின் முன் உள்ள கல்யான மண்டபத்தை அடைந்ததும் முன்னால் நின்றவர்களிடம் ஸ்ந்தனமும் பன்னீரும் தெளித்தார்கள் நாங்களும் பொட்டு வைத்துகொண்டு கனகராஜ் என கேக்க அவர்கள் உள்ள இருக்கார் போங்கள் என்றார். நாங்களும் பலியாடுகள் மாதிரி உள்ள போய் உக்காந்தோம். அங்க வேற நிறைய பெண்கள் செட்டாக இருக்கும் எங்களை திரும்பி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அதில் என்னை ஒரு பெண் பார்க்க ஜாயாவும் சும்மா லுக் விட்டுகொண்டு இருந்தேன். சிறிது நேரத்தில் அந்த பெண் அருகில் வந்து நீங்க மஞ்சு மிஸ் தம்பியா? மிஸ் எப்பிடி இருக்காங்கா என்றாள். நான் அசடு வழிய நல்லா இருக்காங்க என்று கூறிப் போச்சுடா இவங்களால நாம ஊரு விட்டு ஊரு போய் கூட சைட் அடிக்க முடியலை என்று மனதுக்குள் நினைத்து தலைகுனிந்து அமர்ந்தேன். பின் ஒருவர் வந்து சாப்பிட வாங்க வாங்க என்று கையப் புடிச்சு இழுக்காத குறையா கூப்பிட்டார். நாங்களும் சாப்பிட போகும் போது எங்க நண்பர்களின் ஒருவன் கேட்டான் டேய் நம்ம வந்து பத்து நிமிசம் ஆகுது. எங்கடா நம்ம ஜந்து நண்பர்களில் ஒருவரைக் கூட காணம் என்றான். அதுக்கு இன்னேருவன் மாப்பிள்ளை வீட்டார் எல்லாம் கோயிலுக்கு போயிருக்காங்க, நம் நண்பர்களும் அங்கதான் இருப்பாங்க என்று பேசிக் கொண்டே சாப்பாட்டு அறையில் வந்தேம். அங்கு நாங்கள் வரிசையாக அமர்ந்தேம். இலை போட ஆரம்பித்தார்கள். அப்போது செந்தில் ஒருமாதிரியா கோழித் திருடன் போல விழித்துக் கொண்டு இருந்தான். நான் அவனிடம் என்ன என்று கேக்க அவன் எனக்கு கனகுவின் இருவீட்டாரும் பழக்கம், ஆனா இங்க யாருமே தெரிந்த முகமாக இல்லை என்றான். எனக்கு பகீர் என்றது. நான் மெதுவாக என் பக்கத்தில் அமர்ந்து இருந்தவரிடம் கனகு அண்ணன் கல்யாணத்தை பற்றி விசாரிக்க அவர் சிரித்துக் கொண்டே அது பேருந்து நிலையத்திற்கு பின்னால் உள்ள மண்டபம்பா!! இது பக்கத்தில இருக்க மண்டபம் என்றார். இதற்க்கு இடையில் இலையில் இரண்டு இனிப்பு, மிக்ஸர், மூன்று பெரியல்,அவியல்,கூட்டு என்று பரிமாற ஆரம்பித்து விட்டார்கள். நான் என் நண்பர்களிடம் மண்டபம் மாறி வந்ததைக் கூற, அவர்கள் யாராது கண்டு பிடித்துக் கேட்டால் அசிங்கம் அதுக்கு முன்னாடி எந்திரிச்சுப் போயிறாலாம் என முடிவு செய்து அனைவரும் ஒன்றாக எழுந்தோம். அங்கு பந்தி கவனித்துக் கொண்டு இருந்த பெண்ணின் தந்தை சாப்பிட உக்காந்தவர்கள் எழுவதைப் பார்த்து பதறி ஓடிவந்தார். அவர் என்னப்பா எந்திரிச்சுட்டிங்க உக்காந்து சாப்பிடுங்க என்றார். நாங்க ஆளுக்கு ஒரு காரணம் சொல்ல ஆரம்பித்தோம். அவர் எங்களை சாப்பிட வைப்பதில் குறியா இருந்தார். நான் உடனே கொஞ்சம் கூச்சத்துடன் மெதுவாக மண்டபம் மாறிய விசயத்தை சொல்ல ஒரு கணம் திகைத்த அவர் உடனே அதுனால என்ன உக்காந்துட்டு எந்திரிச்சா அது எங்களை அவமானப் படுத்துவது போல அதனால சாப்பிட்டு விட்டுப் போங்க என்றார். நாங்க தர்ம சங்கடத்தில் நெளிய அவர் எங்களின் தோளைப் பிடித்து அமுக்கி உக்காந்து சாப்பிடச் சொன்னார். அவரின் அன்புக்கும் அவியலின் ஆசைக்கும் உட்பட்டு கூச்சத்துடன் செந்திலை முறைத்து சாப்பிட உக்காந்தேம்.நாங்கள் பெண்ணின் தந்தை பெருந்தன்மையுடன் நடந்ததால் இந்த் கிப்ட்டை பெண்ணுக்கு கொடுத்து விட்டுப் போவேம், நாளைக் காலை வேறு கிப்ட் வாங்கி அங்க கொடுப்போம் என்ற முடிவுடன் சாப்பிட ஆரம்பித்தோம். நாங்கள் குனிந்த தலை நிமிராமல் வெக்கத்துடன் சாப்பிடும் போது ஒரு குரல் கேட்டது.

" என்ன குட்டி நீ மட்டும் வந்திருக்க ரங்கராஜ் வருலையா? " என்று, நான் நிமிர்ந்து பார்க்க அங்க எங்க பெரிய அண்ணன் நண்பர் மணியண்ணா நின்று கொண்டியிருந்தார். நான் மிரண்டு அவரிடம் மண்டபம் மாறுன விசயத்தை கூற அவர் சிரித்து பரவாயில்லைப்பா என் தங்கச்சிக்குத் தான் கல்யாணம், உங்க அண்ணன் வர்றதா சொல்லியிருந்தார். தயக்கப் படாமல் சாப்பிடுங்க என்றார். எங்க அண்ணன் வருவார் என்றவுடன் எனக்கு திக் என்றது. அவியல் ஆசை விட்டுப் போய்விட்டது. (இதுக்கு முன்னாலயே மூனு தடவை கேட்டு வாங்கி சாப்பிட்டேன்.). நாங்கள் அவசரமாக சாப்பிட ஆரம்பிக்க மணியண்ணன் என்னுடன் பேசுவதைப் பார்த்த பெண்ணின் தந்தை அருகில் வந்து என்ன மணி இவங்களை தெரியுமா என விசாரிக்க, அவர் என்னைக் காட்டி இது நம்ம ஆர் ஜ இரங்க ராஜ் கடைசித் தம்பி என்றார். பெண்ணின் தந்தை சிரித்து அப்புறம் என்னப்பா இது நம்ம வீட்டு கல்யாணம் கூச்சப் படாமல் சாப்பிடுங்க என்று கூறி இலையில் சாப்பாட்டை கொட்ட ஆரம்பித்து விட்டார்கள். நானும் இதுதான் சாக்குனு அவியலை நாலாது முறை வாங்கி சாப்பிட்டேன். ஆனாலும் எங்க அண்ணன் வருவதுக்குள்ள எஸ் ஆகவேண்டும் என அவசர அவசரமாக வயிற்றில் இடம் இல்லாத அளவுக்கு கட்டி விட்டுப் பின் கை அலம்பி வந்தோம். முதல் வேளையாக பெண்ணிடம் போய் கிப்ட் கொடுத்துவிட்டு, போட்டாப் படிச்சு, பெண்ணின் தந்தையிடமும், மணியண்ணாவிடமும் கூறி வெளியே வந்தோம். சரியாக வாசலை அடையும் போது எங்க அண்ணா உள்ள வந்தார். என்னிடம் இங்க எங்கடா நீங்க? என்று கேக்க நான் மென்னு முழுங்கி மண்டபம் மாறிய விசயத்தை கூறினேன். அவர் சிரித்து பின் " நீயும் உன் நண்பர்களும் உருப்படியா ஒரு காரியமும் பண்ண மாட்டிங்களா " எனக் கேட்டுவிட்டு உள்ளே போனார். எனக்கு நிம்மதியா மூச்சு வந்தது. என் நண்பன் ஒருவன் என் அருகில் வந்து மெதுவான குரலில் என்னிடம் கேட்டான். என்னடா உங்க அண்ணன் நம்மளை உருப்படியா ஒன்னும் பண்ண மாட்டிங்களானு கேக்கறார், உள்ள மூக்கு முட்ட சாப்பிட்டமே அது என்ன? என்றான், அந்த பரபரப்பிலும் நாங்கள் சிரிக்க ஆரம்பித்தோம்.

Monday, October 12, 2009

திருக்கோவில் தரிசன முறை - 3

திருக்கோவில் தரிசன முறையில் நாம் இன்று பெருமாள் கோவில் தரிசன முறையப் பார்ப்போம். பெருமாள் கோவில் தரிசன முறை அப்படியே சிவன் கோவிலின் தரிசன முறைக்கு உல்டாதான். இங்கு முதலில் மூலவரையும் பின் தனிச்சன்னதிகளையும் தரிசிக்க வேண்டும்.

சில பெருமாள் கோவில்களில் தும்பிக்கை ஆழ்வார் என்ற பெயரில் நம்ம தலை பிள்ளையார் இருப்பார். அவரை வணங்கி கோவிலுக்குள் சென்றால் முதலில் வருவது கொடிமரம் அங்கு வணங்கி விட்டு உள் சென்றால் கோவில் பெருமாள் இருப்பார். அதாது ஒர் பெருமாள் சன்னதியில் இன்னேரு பெருமாளுக்கு விட்டு ஒதுங்கி இருப்பார். அந்த பெருமாளை சேவித்து (உதாரணமாக திருப்பதி சீனிவாசப் பெருமாள் அவரின் சன்னதி அல்ல அது வராகர் சன்னதி, வராகர் நம்ம சீனுவுக்கு இடம் கொடுத்துவிட்டு குளக்கரையில் சக்கர தீர்த்ததில் இருப்பார். ஆதலால் தான் திருப்பதி செல்பவர்கள் சக்கர தீர்த்ததில் நீராடிப் பின் வராகரை வணங்கி அதற்கு அப்புறம்தான் சீனுவை வழிபடவேண்டும் என்பது ஜதீகம்.).பின் கண்டிப்பாக பெருமாளை முன்னால் உள்ள ஜய விஜயர்களை வணங்கி உத்தரவு பெற்று மூலஸ்தானத்திற்குள் செல்லவேண்டும். (இவர்கள்தான், இரண்யன், இரண்யாஷ்கன், இராவணன், கும்பகர்ணன், சிசுபாலன், தந்த விக்கிரமன் ஆக அவதரித்தவர்கள்.). உள்ளே சென்று மூலவரை வணங்கிப் பின் வெளியே வரும்போது உள்ளே இருக்கும் உற்சவ மூர்த்திகளை வணங்க வேண்டும். பின் வெளியே வரும் போது கருடாழ்வாரை வணங்கலாம்.

பின் பிரகாரம் சுற்றி தாயார் சன்னதியடைந்து தாயாரை வணங்கிவிட்டு, ஆண்டாள் சன்னிதியில் வணங்கி சுற்றி வரலாம். பிரகாரத்தில் உள்ள ஆழ்வார்கள். உடையவரை வணங்கி ஆஞ்சணேயர் தனி சன்னதி இருந்தால் வணங்கலாம். கோவில் விருச்சமும், விஷ்னுதுர்க்கையும் சன்னதி இருந்தால் வணங்கி, கொடிமரம் அல்லது கருடகம்பம் அடையலாம். அங்கு நமஸ்கரித்து சேவிக்க வேண்டும். ஆண்களாக இருந்தால் ஒன்பது அவயங்கள் பூமியில் படுமாறு தலைக்கு மேல் கைகளை குவித்து விழுந்து சேவிக்க வேண்டும். பெண்களாக இருந்தால் அவர்கள் மண்டியிட்டு பத்து விரல்களும் தரையத் தொடுமாறும், குதிகால் இரண்டு ஒன்றுடன் ஒன்று இணைந்து பின்பக்கம் பெருந்துமாறு குனிந்து கைகள்(உள்ளங்கை) இரண்டும் தரையில் பதித்து சேவிக்க வேண்டும். இது ஒரு ஆசன முறை ஆகும். இப்படி சேவித்து வெளிவந்த பின் தானம் செய்வது நல்லது.

பச்சைமா மலைபோல் மேனி,
பவழவாய் கமலச் செங்கண்,
அச்சுதா அமரஏறே,ஆயர்தம் குலந்தே!
என்னும் இச்சுவைதவிர யான்போய்,
இந்திரலேகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்,
அரங்கமா நகருள்ளானே.

நன்றி அப்படியே சமையல் பதிவில் சீரக மிளகு இரசம் படிக்கவும்.

சீரக மிளகு (பூண்டு இரசம்)

இன்று நாம் சீரக மிளகு இரசம் பற்றிப் பார்ப்போம். இந்த இரசம் உடல் நலத்திற்கு நல்லது. மழைக்காலத்திலும்,குளிர்காலத்துக்கும் ஏற்றது.
தேவையான பெருட்கள்:
1.தனியா அல்லது கொத்தமல்லி ஒரு பிடி(கையளவு)
2.சீரகம் அரைப்பிடி.
3.மிளகு அரைப்பிடி.
4.புளி சிறிதளவு.
5.மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன்.
6.பச்சைக்கொத்தமல்லி.
7.பூண்டு 5 பல்.

தாளிக்க
1.கடுகு
2.எண்ணெய்.
3.கறிவேப்பிலை.
4.வரமிளகாய் மூன்று.

முதலில் புளியைக் கரைத்து கொட்டியாக உள்ள புளிக்கரைசலில் ஒன்றுக்கு மூன்று பங்கு நீர் சேர்க்கவும்.இந்த இரசத்தில் புளிப்பு அதிகம் தேவையில்லை. பின் அகலாமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்கவும். இந்த கரைசலில் மஞ்சத்தூள், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிவிடவும்.
இது கொதிக்கும் போது தனியா,சீரகம் மற்றும் மிளகு சேர்த்து மிக்ஸியில் இட்டு அரைக்கவும். தண்ணிர் விடாமல் இரசப் பொடி போல மைய அரைக்காமல் உதிரியாக அரைக்கவும்.ஒரு நிமிடம் அரைத்தால் போதும். முதலில் புளித்தண்ணிர் பச்சை வாசம் போகக் கொதித்தவுடன் தோலுரித்த பூண்டை சிறு சிறு துண்டுகள் ஆக்கி இதில் சேர்த்து ஒரு கொதிவிடவும். பின் கொதிக்கும் தண்ணிர்க் கரைசலில் அரைத்த இரசப் பொடியை சேர்த்து ஒரு கொதிவிட்டு நுரை கட்டியவுடன் இறக்கி வைத்து தாளித்துக் கொட்டவும்.
இரசம் மீது பச்சைக் கொத்தமல்லியை அலம்பி கையால் பிய்த்து போட்டு மூடி வைத்தால் வாசனையான அருமையான இரசம் ரெடி. இந்த இரசத்தை தெளிவாக இறுத்து டம்ளரில் இட்டு குடிக்கலாம். வாயு மற்றும் ஜலதேசத்திற்கு சாப்பிட அருமையாக இருக்கும்.இந்த இரசப் பொடியை அரைத்து வாசம் போகமல் ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானலும் நிமிடத்தில் இரசம் ரெடி செய்யலாம். நன்றி.

அடுத்த சமையல் பதிவில் ஞாயிற்றுக் கிழமை மாலைகளில் கொறிக்கும் வகைகளை பார்ப்போம். அதில் முதலில் கடலைமசாலா என்னும் வித்தியாசமான வகையப் பார்ப்போம்.

Friday, October 9, 2009

பருப்புத் தொகையலும் புளிக்குழம்பும்

எங்க அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க, குழந்தைகள் சாப்பிடுவதால் உப்பு,காரம், புளி எல்லாம் பார்த்துப் போட்டு சமையல் பண்ணுவாங்க. எனக்கு தெரிந்து அவர்கள் உப்பு காரம் அதிகம் போட்டு சமைத்ததாக நினைவு இல்லை. அவ்வளவு பாந்தமாக சமைப்பார்கள்,என்னடா (அம்மா கோண்டு) அம்மா புராணமா பாடறானுன்னு நினைக்கிறிங்களா. சரி எங்க அம்மா சமையலில் எனக்கு மிகவும் பிடித்த ரொம்ப சுலபமான சமையல் ஜட்டங்கள் தான் இந்த பதிவு. எங்க அம்மா சில ஞாயிற்றுக் கிழமைகளில் பருப்புத் தொகையல்,புளிக்குழம்பு,சீரக மிளகு ரசம் பண்ணுவாங்க. இதுக்கு தொட்டுக்க வடகம் அல்லது இலைவடாம்ன்னு சொல்லற அரிசி அப்பளம் பொறிச்சா அன்னிக்கு சமையல் சூப்பரா இருக்கும். இது எனக்கு மிகவும் பிடித்த சாப்பாடு. இப்ப எனது மூன்று அண்ணிகளும் நான் ஊருக்குப் போனா சமைத்து அசத்துவார்கள். சரி இப்ப எப்படி பண்ணறதுன்னு பார்க்கலாமா. முதலில் பருப்புத் தொகையலும், புளிக்குழம்பும் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
பருப்புத் தொகையல்:
1. துவரம் பருப்பு ஒரு பிடி(கையளவு)
2. கடலைப் பருப்பு ஒரு பிடி
3. வெள்ளுத்தாம் பருப்பு அரைப் பிடி
4. தேங்காய் அரை மூடி
5. புளி எழுமிச்சை அளவு.
6. உப்பு இரண்டு ஸ்பூன்.
7.வரமிளகாய் இரண்டு அல்லது மூன்று.
புளிக்குழம்பு:
1.புளி 100கிராம்
2.சின்ன வெங்காயம் அல்லது சாம்பார் வெங்காயம் கால் கிலோ,
3.கடலைப் பருப்பு ஒரு பிடி.
4.மஞ்சத்தூள், பெருங்காயத்தூள் இரண்டு ஸ்பூன்.
5. நல்லண்ணெய் மூன்று அல்லது நாலு ஸ்பூன்.
6. மூன்று ஸ்பூன் மிளகாய்ப் பொடி.
7.வெல்லம் எழுமிச்சை அளவு.

முதலில் பேசனில் சின்ன வெங்காயத்தை தண்ணிரில் போட்டு சில நிமிடங்கள் ஊற வைக்கவும். வெங்காயத்தை தண்ணிரில் ஊற வைத்து தோலுரித்தால் கண் எரியாது.

அடுப்பில் ஒரு வாய் அகலமான பாத்திரத்தில் மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நீர் கொதினிலையை அடைந்த பின் புளியை தண்ணிரில் போட்டு ஒரு நிமிடம் கொதிக்க விடவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி ஊறவிடவும். வெந்நீரில் ஊற வைத்தால் புளி முற்றிலுமாக கரையும், கரைப்பதும் சுலபம்.

புளி ஊறுவதற்குள் நாம் பருப்புத் தொகையல் செய்துவிடலாம். கடாயில் அல்லது வாணலியில் அடுப்பில் வைத்து மூன்று ஸ்பூன் எண்ணெய் விட்டு (நல்லண்ணெய் அல்ல) எண்ணெய் காய்ந்ததும் மூன்று வகைப் பருப்பும், வரமிளகாயும், பெருங்காயமும்,புளியும் சேர்த்து வறுக்கவும். வறுத்த பின் ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். அது ஆறும் போது தேங்காயை வில்லைகளாக நறுக்கி மிக்ஸியில் இட்டு துருவிக் கொள்ளவும். பின் மிக்ஸியில் இருந்து தட்டில் தேங்காய் துருவலை கொட்டிவிட்டு ஆறிய பருப்புக்களை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பருப்பு ஒரு முக்கால் பதத்திற்கு அரைத்ததும் தேங்காய்த் துருவலை விட்டு தண்ணிர் முக்கால் டம்ளர் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து, இரண்டு சுற்றுக்கள் அரைக்கவும். தண்ணிர் அளவாக இடவும். மைய அரைக்காமல் விழுது போல அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் கொட்டவும். தொகைய்யலை தாளிக்க அவசியம் இல்லை,தாளித்தாலும் பரவாயில்லை. தொகையல் ரொம்ப கொட்டியாக இல்லாமலும் தண்ணியாக இல்லாமலும் ஒரு பேட்டர் போல தண்ணிர் விடவும்.இப்ப பருப்புத் தொகையல் ரெடி. இந்த பருப்புத் தொகையலை சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். அடுத்து புளிக்குழம்பு பார்ப்போம்.

முதலில் வெங்காயத்தை தோலுரித்து (தோலுரிக்கும் போது சருகுகளை அதை ஊற வைத்த தண்ணிரில் போட்டால் வீடு பூர பறக்காது. பேன் காற்றில் உக்காந்து சீரியல் பார்த்துக் கூட உரிக்கலாம், இந்த தோல் தண்ணியை ரோஜா செடியில் ஊற்றலாம்). வெங்காயத்தை இரண்டு அல்லது நாலு துண்டுகளாக நறுக்கவும். நிலக்கடலை ஸ்சைசில் இருந்தால் போதும். பின் புளியை வெது வெதுப்பாக இருக்கும் போது கரைத்து கசடு வடித்து வைக்கவும். மூன்று டம்ளர் புளிக் கரைசலில் இரண்டு டம்ளர் புளிக்குழம்பிற்கும், ஒரு டம்ளர் அல்லது முக்கால் டம்ளர் ரசத்திற்கும் வைக்கவும். இப்ப அடுப்பில் வாணலி அல்லது கடாயில் மூன்று அல்லது நாலு ஸ்பூன் தாளிக்கும் எண்ணெய் விட்டு அதில் கடுகு, வெள்ளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு இட்டு தாளிக்கவும் கடுகு வெடித்தவுடன் அதில் நறுக்கிய வெங்காயத்தை இட்டு வதக்கவும். கடலைப் பருப்பு வறுபட வேண்டிய அவசியம் இல்லை. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் இரண்டு டம்ளர் புளித்தண்ணிரும், ஒன்னரை டம்ளர் தண்ணிரும் சேர்க்கவும், பின் அதில் இரண்டு ஸ்பூன் பெருங்காயத்தூள், இரண்டு ஸ்பூன் மஞ்சத்தூள், மூன்று(4) ஸ்பூன் மிளகாய்ப் பொடி சேர்த்து கொதிக்க விடவும். உப்பு அளவாய் போடவும்(உப்பு கொஞ்சமாக போட்டு சாப்பிடும் போது சேர்த்துக் கொண்டால், மூன்று நாளைக்கு வைத்துக் கொள்ளலாம்).நல்ல கொட்டியாக பேட்டர் நிலைக்கு வரும் போது, வெல்லம் பொடித்துப் போட்டு கரைத்து விடவும்(வெல்லம் இல்லாவிட்டால் அஸ்கா சக்கரை இரண்டு ஸ்பூனும் போடலாம்). பின் கொஞ்சம் கொட்டியானவுடன் நல்லெண்ணெய் மூன்று அல்லது நாலு ஸ்பூன் விட்டு கொதிக்க விட்டு இறக்கவும். புளிக்காய்ச்சலை விட கொஞ்சம் இளக்கமாக இருந்தால் போதும். இப்ப சுவையான புளிக்குழம்பு ரெடி.

இந்த புளிக்குழம்பு, சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். அனைத்து பருப்புத் தொகையலுக்கும் தொட்டுக் கொள்ளலாம், அல்லது உடன் சேர்த்தும் சாப்பிடலாம். மீதி இருப்பின் தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். ஞாயிற்றுக் கிழமை கொஞ்சம் சேர்த்துப் பண்ணி விட்டால் புதன் கிழமை வரைக்கு சாதத்திற்கும்,கலந்த சாதத்திற்கும், டிபனுக்கும் தொட்டுக் கொள்ளலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் இது அருமையான டிஷ்.பதிவு நீளமாக வந்து விட்டதால் நாளை சளி, மூக்கடைப்பு, வாயுத் தொல்லைகளில் இருந்து காக்கும் சீரக மிளகு இரசம்(பூண்டு) பார்க்கலாம். நன்றி

Thursday, October 8, 2009

புளியங்காய் சட்டினி - டிரை பண்ணுங்க

சென்ற சமையல் பதிவில் நான் புளியம்பூ தொக்கு பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இந்த பதிவில் பூவுக்கு அப்புறம் காய் பற்றிப் பார்ப்போம். ஆமாங்க வித்தியாசமான புளியங்காய் சட்டினி எப்படி பண்ணறதுன்னு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
1. பத்து அல்லது இருபது முற்றிய புளியங்காய்கள்.
2. இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய்.
3. உப்பு

தாளிக்க :
1.கடுகு, வெள்ளுத்தம் பருப்பு,பெருங்காயம் தேவைப் பட்டால் கறிவேப்பிலை.

செய்முறை:
முதலில் புளியங்காய்களை அலம்பி, பின் காய்களை இரண்டாக ஒடித்து அல்லது நறுக்கி அதன் மேல் தோல் அல்லது கடினமான பக்குகளை நீக்கி பின் கொட்டையின் மேல் உள்ள சதைப்பற்றான பாகத்தை மட்டும் கத்தியின் உதவியால் எடுக்க வேண்டும். இந்த சதைப் பற்றான பாகத்தை(கொட்டை நீக்கிய) இரண்டு அல்லது மூன்று(காரம் தேவைக்கு ஏற்ப) பச்சை மிளகாய் போட்டு மிக்ஸியில் அரைக்கலாம். கொஞ்சம் மைய அரைக்காமல் விழுதாய் அரைத்தல் நலம். இந்த விழுதில் நாம் திருப்புமாறி (தாளித்து) கொட்டவேண்டும். பெருங்காயத்தூள் வாசனைக்காக தாளிக்கும் போது சேர்க்கவும். ஒரு சிலர் கடாயில் தாளித்து காடாயை அடுப்பில் இருந்து இறக்கி அதில் விழுதை போட்டு இளம் சூடு செய்வதும் உண்டு. பச்சையாகவும் சாப்பிடலாம்.

இது கலந்த சாதம் மற்றும் தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சாதத்தில் இட்டு பிசைத்து உண்ணலாம்.

பின் குறிப்பு : இது கடுமையான சூடு என்பதால் குளிர் காலத்தில் செய்யவும். சூடு என்பதால் ஒன்று இரண்டு தடவை வயிற்றுப் போக்கு ஏற்ப் பட வாய்ப்புள்ளது. பிபி உள்ளவர்கள் தவறாமல் மாத்திரை போட்டுக் கொள்ளவும்.
பூ, காய் முடிந்தது அடுத்த பதிவில் வித்தியாசமான புளிக்குழம்பு பற்றிப் பார்க்கலாம். நன்றி.

திருக்கோவில் தரிசன முறை - 2

சென்ற பதிவில் திருக்கோவில் தரிசன முறையில் பொதுவாக கோவிலுக்கு சென்று தரிசிக்கும் முறை பற்றி குறிபிட்டிருந்தேன். இந்த பதிவில் சிவன் கோவிலுக்கும், விஷ்னு கோவிலுக்கும் சென்று தரிசிக்கும் முறை பற்றி குறிப்பிட உள்ளேன். கோவில் என்றால் தரிசிக்கவும், கடவுளிடம் நம் குறைகளை கூறவும் அதானால் ஏற்ப்படும் மன நிறைவும்தான் முக்கியம். இதில் வழிபட ஒரு கட்டமைப்பும், ஒழுங்கு முறையும் நம் முன்னேர்களால் உருவாக்கப் பட்டுள்ளது. அதன்படிதான் ஆகம விதிப்படி கோவில்கள் பழங்காலத்தில் கட்டப் பட்டுள்ளது. அந்தக் கோவில்களை தரிசனம் செய்யும் முறையும் விளக்கப் பட்டுள்ளது. நாம் முதலில் சிவன் கோவில் தரிசனம் செய்யும் முறையை விரிவாக காண்போம்.

சிவன் கோவில் மட்டும் இல்லை எல்லாக் கோவில்களிலும் முதலில் வினாயகரைத்தான் வணங்க வேண்டும்(நம்ம தல இல்லையா). எந்த ஒரு காரியத்திற்கும் மூலமும், நாயகனும் அவரே. அவரின் அனுக்கிரகமும்,அருளும் இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. எனவே அவரின் ஆசியும் அருளும் பெற்று பின் திருக்கோவிலில் நுழையவேண்டும். நமது விக்கினங்களை போக்கும் அந்த விக்கினேஸ்வரனை வழிபட்டுப் பின் அவர் அருகில் இருக்கும் முருகரை வழிபட வேண்டும். வள்ளி தெய்வானை சமோதர முருகரை வழிபட்டு பின் அடைவது துர்கா தேவின் சன்னதி, தேவி துர்க்கை வெற்றிகளையும் நல்ல வாழ்க்கையும் அருளுவார். அவரை மனமார வேண்டிக் கொண்டு பின் அடைவது அம்மா லோகஸ்வரி, ஜகதாம்பா.ஜகன்மாதா பார்வதியின் சன்னதி(இடத்தின் காரணமாக பெயர் மாற்றப்ட்டிருந்தாலும்), அம்பாளை,சிவசக்தியை வணங்கி பின் மூலவரின் சன்னதி சேர வேண்டும் அங்கு கோவிலில் இடமிருந்து வலமாக பூமியின் சுழற்சி நியதியின் படி சுற்ற வேண்டும். முதலில் வருவது குரு பகவான் சன்னதி அல்லது சுவர் பக்கமாக இருக்கும் சிலையாக இருப்பார். அங்கு கல் ஆலமரத்தின் அடியில் சனகாதி முனிவர்களிக்கு தரிசனம் அளித்து மூலப் பொருளை உபதேசித்த கோலத்தில் கையில் சின் முத்திரை காட்டி தஷ்சனாமூர்த்தியாக குருபகவான் அமர்ந்து இருப்பார். நல்ல கல்வி,மனையாள், மணவாளன், நல்ல குடும்பம் அளித்த அவருக்கு மஞ்சள் ஆடை, கொண்டக்கடலை மாலை அளித்தும் வணங்கலாம், அல்லது மானசீகமாக வணங்கி பின் பின்னால் வந்தால் லிங்கோத்பவர் சன்னதியை காணலாம். அடி முடி காண பிரம்மாவிற்கும், விஷ்னுவிற்கும் ஈசன் விண்ணுக்கும் மண்ணுக்கும் நின்ற கோலம் இது. சற்று கூர்ந்து கவனித்தால் லிங்கோத்பரின் மேல் பகுதியில் இடப் பக்கத்தில் அன்னப் பறவையாய் பிரம்மாவையும், வலப்பகுதி கீழ் பகுதியில் வராகமாய் விஷ்னுவையும் காணலாம். இவ்வாறு மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்து பின் நாம் சண்டிகேஸ்வரை வந்துடைவேம். இங்கு ஒரு முக்கியமான விசயம் சொல்ல விரும்புகின்றேன்.

நம் மக்கள் சண்டிகேஸ்வரரின் முன்னால் கைதட்டியும் அல்லது விரலில் சொடக்கு போட்டும் கும்பிடுவார்கள். அதுக்கு அவர்கள் சொல்லும் காரணம் அவருக்கு காது கேக்காது என்ற வதந்தி.
உண்மை அது இல்லை. சாதரனமாக நம்மை ஒருவர் கை தட்டியோ அல்லது சொடக்கு போட்டுக் கூப்பிட்டால் நாம் மரியாதைக் குறைவாக செயலாக கருதுவேம் அல்லவா, ஆனால் இங்கு கடவுளை அவ்வாறு செய்வது உசிதம் இல்லை அல்லவா. இது மாதிரி செய்வது தவறு. பின் என்ன செய்யவேண்டும் என்றால், சண்டிகேஸ்வரர் சிவனின் கருவூல அதிகாரி,கணக்காளர். சிவன் செத்து குல நாசம் என்பார்கள், ஆதலால் அவரிடம் சென்று நம் இரு கைகளையும் விரித்து கண்பித்து நான் இங்கிருந்து சிவபெருமான் அருள் அன்றி வேறு எதையும் எடுத்து செல்லவில்லை என்று மனதில் கூறி வணங்கி ஆலயத்தின் முன் பக்கம் வந்தால் ஆலயம் நுழையும் முன் சனிஸ்வரன் என்னும் சனிபகவான் வலப்பக்கத்தில் அமர்ந்து இருப்பார். அவரை பணிவுடன் பக்கவாட்டில் இருந்து வணங்க வேண்டும். சனிபகவானை மட்டும் நேருக்கு நேர் நின்று வணங்க கூடாது. சனியின் அருளைப் பெறாமல்,அல்லது அவரை வணங்காமல் ஈசனை வணங்கினால் பலன் இல்லை. இதற்கு ஒரு கதை உள்ளது(தனிப் பதிவு இடுகின்றேன்). அவரையும் வணங்கி விட்டு பார்த்தால் நந்திகேஸ்வரன் இருப்பார் நந்தியை நாம் வணங்கி ஈசனை தரிக்கும் உத்தரவை வாங்கி விட்டு பின் துவாரக பாலர்களை வணங்கி உள் சென்று நாம் ஈசனை தரிசனம் செய்யவேண்டும். பரமனை, முதற்பெருளை, அருளாளனை வணங்கி பின் அமைதியாய் ஆத்மார்த்தமாய் வணங்கி வெளியில் வந்தால் உற்சவ மூர்த்தி சிலையும், ஆடல் வல்லான் நடராஜர் சிலைகளும், அவருடன் அறுபத்தி மூன்று நாயன்மார்களின் சிலைகளும் இருக்கும் அவர்கள் அனைவரையும் வணங்கி பின் நவகிரங்களை சுற்றி வரவேண்டும். சுற்றுக்களை 1.2.3 என்று எண்ணாமல் ஒவ்வெறு கிரகத்திற்கும் ஒரு சுற்று வீதம் அவரின் திரு நாமத்தை கூறி சுற்றவேண்டும். உதாரனமாக சனிபகவானில் இருந்து ஆரம்பிக்க வேண்டும், சனி பகவானே போற்றி என்று கூறி ஆரம்பித்து பின் கேது,குரு,புதன்,சுக்கிரன்,சந்திரன்,செவ்வாய், இராகு என சுற்றிப் இறுதியாக சூரியனில் முடிக்கலாம்.

நவக்கிரகங்களை சுற்றிப் பின் தலவிருஷ்சத்தை வணங்கிப், ஆலமரத்தின் அடியில் இருக்கும் நாகர்கள், கன்னிமார்கள்களை வணங்கிப் பின் வெளியில் வரும்முன் சூரியன் மற்றும் பைரவர் சிலைகளை வணங்கி வெளியே வரவும். ஆகம விதிமுறைகளின் படி கட்டப் பட்டுள்ள கோவில்கள் அனைத்தும் இந்த முறையில் தான் இருக்கும். சரி அடுத்த பதிவில் விஷ்னு கோவில் வழிமுறைகளைப் பார்ப்போம்.

தென்னாடுடைய சிவனே போற்றி,
எந்னாட்டாருக்கும் இறைவா போற்றி,
ஆரூர் உறையும் அரசே போற்றி,
இமைப்பொழுதும் என்னெஞ்சில் அகலாதான் தாள் போற்றி, போற்றி.

நன்றி.

Wednesday, October 7, 2009

திருக்கோவில் தரிசன முறை

இது என்னுடைய ஜம்பதாவது பதிவு, எனக்கு பலவகையிலும் ஆதரவு அளித்த பதிவர்கள் அனைவருக்கும் நன்றி. என் பதிவுகளை படிக்கும் அனைவருக்கும் நன்றி. ஆன்மீகப் பதிவுகளை பின்னாளில் எழுதலாம் என்று நினைத்த பொழுதும் இந்த ஜம்பதாது பதிவை ஆன்மீகப் பதிவாக எழுதுகின்றேன். நம் கோவில்கள் மற்ற இடங்களைப் போல் இல்லாமல் அங்கு அனைத்து விசயங்களையும் மக்களுக்கு போதிக்கும் இடமாக நம் முன்னேர்கள் கட்டியுள்ளனர். அந்த காலத்தில் மக்கள் பேர்க் காலங்களில் புகலிடம் அடைய பெரிய மதில்களுடன் பெரிய கோவில்களை கட்டியுள்ளனர். நமது பாரம்பரியக் கோவில்கள் பக்திக்கான இடமாக மட்டும் இல்லாமல் அவை வாழ்க்கையின் முறைகளுக்கான இடங்கள் ஆகவும் உள்ளன.

நாம் கோவில்களுக்கு செல்லும் போது அந்த கோவிலின் பூஜை முறைகள், தூண்களின் சிற்பங்கள், கோவிலின் தலவரலாறு,கோவிலின் அமைப்பு ஆகியனவற்றை தெளிவாக அறிந்து பக்தி செலுத்துதல் முறை. அப்போதுதான் நாம் முழுமையாக கோவிலுக்கு சென்றுவந்த மன அமைதி கிட்டும். இந்த வகையில் துளசி டீச்சரின் பயணங்களும், கட்டுரைகளும் மிகவும் அருமை. அந்த கட்டுரைகளைக் கையேடாக கொண்டு போவது நலம்,இது இல்லாமல் கோவிலுக்கு அவசர கதியில் சென்று சாமியின் முன்னால் கையேடுத்து கும்பிட்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு தட்டில் ஜம்பது ரூபாய் போட்டு வருவது நானும் போய்ட்டு வந்தேன் என்ற திருப்தி மட்டும் மிஞ்சும்.மெதுவாக அமைதியாக கோவிலுக்கு சென்று முறையாக வழிபட்டு வந்து அங்கு கிடைக்கும் பிரசாதத்தை குடும்பத்தினருடன் குளக்கரையில் அல்லது அர்த்த மண்டபத்தில் அமர்ந்து பகவானின் நினைப்புடன் உண்டு, வெளியில் வரும்போது நம்மால் முடிந்த அளவு இயலாதவர்களுக்கு தர்மம் செய்வது சாலச் சிறந்தது. இப்படிச் செய்தால் நல்ல மன நிம்மதியும், ஆத்ம திருப்தியும் கிடைக்கும். இப்ப கோவில்லுக்கு எப்படி போவது என்று பார்ப்போம்.கூடுமான வரையில் குளித்தவுடன் அல்லது வெறும் வயிறுடன் செல்லுதல் நலம்.

பொதுவாக நம் பாரம்பரிய பழைய கோவில்கள் ஜந்து நிலைகளை கொண்டு இருக்கும் அவை 1.அர்த்த மண்டபம் அல்லது வாசல் அல்லது அத்தானி மண்டபம். 2.கருட மண்டபம் அல்லது கொடிமர மண்டபம், சில இடங்களில் அத்தானி மண்டபமும் கொடிமர மண்டபமும் ஒன்றாக இருக்கும்,3.வசந்த மண்டபம், 4, பிரம்ம மண்டபம், 5, கருவறை.

அர்த்த மண்டபம் அல்லது அத்தானி மண்டபம் முக்கால்வாசி இடங்களில் முதல் சுற்றுப் பிரகாரமாக இருக்கும், இதில் பொரும்பாலும் கோவில்கள் இருக்காது என்றாலும் இந்த பிரகாரத்தில் கொடிமரம், தலவிருஷ்சம் என்னும் கோவில் மரம்,பிள்ளையார், நாகராஜா, கன்னிமார் மற்றும் காவல் தெய்வங்கள் இருக்கும். ஒரு கோவிலுக்கு செல்லும் போது இவர்களை வணங்குதல் அவசியம். இந்த சுற்றில்தான் திருக்குளமும் இருக்கும். குளத்தில் குளிக்க முடியாது என்றாலும் சிறிது தண்ணிரை தலையில் விட்டுக் கொள்ளுதல் நலம். இங்கும் அமர்ந்து பிரசாதம், உணவு உண்ணலாம், ஆனால் தூய்மை அவசியம்.கோவில்களுக்கு சென்று கடவுளைத் தவிர மனிதர்கள் யாவருக்கும் வணக்கம் செலுத்தல் கூடாது. நம் வீட்டு பெரியோர்கள் ஆயினும் அவர்களை வீட்டில் வணங்க வேண்டுமே தவிர கோவிலில் காலில் விழுதல் கூடாது.

கருட மண்டபம் என்னும் கொடிமர மண்டபத்தை அமைதியாய் சுற்றிவருதல் அவசியம் இந்த சுற்றில் மண்டங்கள் தூண்கள் சிற்பங்கள் அனைத்தும் பொறுமையாக பார்ப்பது அவசியம். இதில் சித்தர்கள்,மகான் கள், கோவிலின் கதை, அந்த கோவிலுக்கு தொண்டு செய்த தேவதாசிகளின் சிற்ப்பங்கள் மற்றும் அந்த கோவிலைக் கட்டிய ராஜா. ராணி,அவர்களின் முன்னேர்கள் சிலைகளும் இருக்கும். சுவாமியின் வாகனங்களும் இந்த மண்டபத்தில் இருக்கும். (வொவ்வாலும் இருக்கும் ஒரு சில இடங்களில் அவைகளின் நாத்தம் அடிக்கும் என்பதால் கைக்குட்டை அவசியம். இங்கு கொடிமரத்தின் அருகில் சிறிது நேரம் ஒன்றும் பேசமல் அமரவேண்டும். ஏனென்றால் இங்கு வான மண்டலத்தில் இருக்கும் மின் காந்த கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் போன்ற பிரபஞ்ச சக்திகளை இழுத்து அங்கு பரவி இருக்கும். பழைய கோவில்களில் சக்தி யந்திரங்களும், நவரத்திங்களும் பொன்னும் இந்த கொடிமரத்தின் அடியில் புதைத்து இருப்பார்கள். இடிதாங்கி தத்துவம் போல் அவை வானில் உள்ள கதிர்களை பூமிக்கு இழுத்து மண்டபத்தில் பரவச் செய்யும், ஆதலால் இங்கு அமைதியாய் தியானிப்பது நன்று. கொடிமரத்தின் அருகில் விழுந்து வணங்குதல் நலம். (வணங்கும் முறைய அடுத்த பதிவில் கூறுகின்றேன்)

அடுத்த இடம் நம்ம வாழ்க்கையில் முக்கியமான ஒன்று. வசந்த மண்டபம். இது நம் வாழ்க்கையை பிரதிபலிக்கும்,அந்த காலத்தில் முறையான காமமும் இறைவழிபாடும் வாழ்க்கை அத்தியாவசியமாக புனிதமாக கருதப்பட்டது. இங்குதான் ஆடல் பாடல் அனைத்து விழாக்களும் நடக்கும். அந்த காலத்தில் செக்ஸ்(தமிழ்ல என்ன?) பாடமும், இந்த அளவுக்கு மீடியா அசிங்கமும் கிடையாது. ஆதலால் அப்போது புதுமண தம்பதிகள் மணமுடிந்தவுடன் இப்ப ஹனிமூன் போவது போல தீர்த்த யாத்திரை என மகப்பேறு வேண்டிக் கோவில்கள் செல்வது வழக்கம். அவர்களுக்கு பல்வேறு கோணங்கள், உறவு முறைகளைப் போதிக்கும் வகையில் ஏற்ப்படுத்தப் பட்டது வசந்த மண்டபம். இதில் மன்மதன், ரதியின் சிலைகள் எல்லாத் தூண்களிலும், மண்டப மேற்க் கூரைகளிலும் வடிக்கப்பட்டு இருக்கும். தங்கமணியுடன் செல்லும் ரங்கமணிகள் இவற்றைக் காட்டி பாத்தியா இது அந்த காலத்தில் கூட சகஜம், இதில் தப்பில்லை என்று அவர்களின் கூச்சத்தை விலக்கலாம் அல்லது அறிவைக் கூட்டலாம். நான் ஒருமுறை திருப்பதி சென்று இருந்த போது இந்த வசந்த மண்டபத்தில் ஒரு தூணில் ஒரு செயல்முறை பார்த்தேன், மிகவும் வியந்தேன், அப்படி ஒரு முறை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது, நம்ம தங்கமணி கிட்ட சொன்னாலே உதை பின்னி எடுப்பாங்க.(எங்க இருக்குனு கேக்கறிங்களா, வசந்த மண்டபம் முடிந்து பிரம்ம மண்டபத்தில் நுழையும் போது இருக்கும் ஒரு தூணில் உள்ளது. நாம் கியுவில் செல்லும் வழியில் வரும். வசந்த மண்டபம் எது என்றால் நாம் பெருமாளை ஸேவித்துவிட்டு வெளியே வந்தால் கொஞ்சுண்டு லட்டும், புளியோதரை அல்லது பொங்கல் கொடுப்பாங்க இல்ல அதுதான். இந்த லட்டு வாங்க கியுவில் நிற்கும் போது அப்படியே திரும்பி மேற்கூரையில் பார்த்தால் அங்கு பல சிற்பங்கள் இருக்கும்.கொஞ்சம் அசிங்கமாக நினைக்காமல் கலைனுக்கத்துடன் பாருங்கள். அதுக்காக அந்த சிலைகளை உற்றுப் பார்த்து நிற்க வேண்டாம், பார்க்கின்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள். இன்னமும் நம் சமுகம் பண்படவில்லை. சரி இதுபோதும் என்று பதிவர்கள் உதைப்பதற்குள் நிறுத்திவிடுகின்றேன்.

அடுத்து பிரம்ம மண்டபம் இது முக்கியமான இடம் இங்கு அமைதியும் ஒழுங்கும் கடைப் பிடிக்கவேண்டிய இடம். இந்த இடத்தில் நல்ல அதிர்வுகள் இருக்கும். இங்கும் கொஞ்ச நேரம் உக்காருவது நலம்.இந்த மண்டபத்தில் பிரம்ம ரிஸிகள், பிரம்மா, முனிவர்கள்,சித்தர்கள் மற்றும் பஞ்ச பூதங்களின் சிலைகள் செதுக்கப் பட்டு இருக்கும். இந்த மண்டபம் நம் அந்தர் ஆத்மாவை சரி செய்வது இங்கு அனையா விளக்கு, பாவை விளக்கு, பகவானின் பாதங்கள் செதுக்கப் பட்டிருக்கும். பல இடங்களில் பிரம்ம மண்டபத்தில் இருந்துதான் கருவறைக்குள் தரிசனம் செய்ய முடியும், சில இடங்களில் கருவறைக்கும் பிரம்ம மண்டபத்திற்கும் ஒரு இடைவெளி விட்டு அங்கும் நின்று ஸேவிக்க வசதி இருக்கும். இங்கு அமைதியாய் அமர்ந்து பகவானின் சுலேகங்களை சொல்லுதல் நலம். வாய் விட்டு செல்லுவதை விட ஆத்மார்த்தமாக மனதுக்குள் சொல்வது கோடி நன்மையளிக்கும். இந்த பிரம்ம மண்டபத்தில் தான் உற்ச்சவங்கள் நடக்கும். இனி நாம் கருவறைக்குள் நுழையும்முன் இங்கு நம் மனதை ஒருனிலைப் படுத்தி பகவானுடன் ஜக்கியமாக வேண்டும்.

ரொம்ப முக்கியமான இதயப் பகுதி கருவறை. எல்லாக் கருவறையும் முக்கோண பிரமீட் அமைப்புடனும் ரொம்ப சக்திவாய்ந்த மின் காந்த அதிர்வுகளுடன் இருக்கும். இங்கு நம் மனம் தியனிக்க, கண்கள் பகவானின் அழகைப் பருக மட்டும்தான் வேலை. அங்கு நாம் மற்றும் கடவுள் மட்டும் உள்ளதாக எண்ணவேண்டும். மிக அமைதியாக கடவுளை உற்றுப் பார்த்துப் பின் கண் மூடி அந்த பிம்பத்தை நம் மனதுள் வாங்கி நிலை நிறுத்திக் கொண்டால், நாம் அமெரிக்காவில் இருந்தும் திருப்பதியில்(எந்த உங்களின் ஆதர்சன தெய்வமும்) தரிசனம் செய்யமுடியும். நம் மனக்கண்ணில் அந்த உருவத்தைப் பதித்துக் கொண்டால் நாம் எப்ப வேண்டுமானலும் ரிவைண்ட் பண்ணி தரிசனம் செய்ய முடியும்.அதுக்கு நாம் முறையாக அமைதியாக தரிசனம் செய்து மனதில் வேறு சிந்தனை இல்லாமல் கடவுளைப் பார்த்து அவரின் திவ்ய செருபத்தை அனுபவித்து, நாம் ஒரு நிமிடம் அல்லது நம் கண்ணில் நீர் வரும் வரை உற்றுப் பார்த்து கண் வலிக்கும் போது கண்மூடி அந்த பிரதிபிம்பத்தை மனதில் கொண்டால் போதும், இப்ப கடவுள் நம்ம பாக்கொட்ல. எப்பவேனா கண்மூடி கூப்பிட வருவார். வந்து நாம் கேட்டதை செய்வார். இது சத்தியம் சத்தியம் சத்தியம். நான் ஏன் இப்படி கூறுகின்றேன் என்றால் இது என் அனுபவ உண்மை. இந்த மாதிரி கடவுளை மனதில் நிறுத்திவிட்டால் நாம் கோவிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை.அவன் நம் குருவாய்,நண்பனாய், காவலனாய்,கடவுளாய்,உற்றதுணையாய் நம்மிடம் இருப்பான். நம் துன்பமான சமயத்தில் மனம் உருகி உள்ளே இருக்கும் கடவுளிடம் அவரை நினைத்துச் பிரச்சனையை சொல்லுங்கள் அது தீரும்(இதுபோல பல சம்பவங்களை விரைவில் பதிவிடுகின்றேன்). இதில் முக்கியம் நீங்கள் ஒரு தெய்வத்தை(ஏக தெய்வம் ஸ்மரனம்) தேர்ந்து எடுத்து கண்ணன்,ராமன், பிள்ளையார், முருகர், சங்கிலி கருப்பன்,அய்யனார் அல்லது அய்யப்பன் யேசு, மேரிமாதா,துர்க்கா,அம்மன் யார் வேண்டுமானாலும், ஆனால் கோவிலும், உருவமும். இரண்டையும் வீட அயராத நம் நம்பிக்கைதான் ரொம்ப முக்கியம். நம்பிக்கையுடன் அவனிடம் நம்மை ஒப்புக்கொடுத்து, சரணாகதி அடைந்து என்ன நடந்தாலும் அவன் தான் அவன் விருப்பம் தான் என தெளிய வேண்டும். இந்த மாதிரி ஒரு தெளிந்த மனதுடன் கோவிலுக்கு சென்றால் மன அமைதியும் ஆத்ம திருப்தியும் கிட்டும். இதைப் படிக்கும் போது உங்கள் மனம் ஒரு நிலையில் இருந்தால் கண்டிப்பாக உங்களால் கடவுளை வசப்படுத்தி அவரை அடைய முடியும் என்று அர்த்தம். அர்த்தம் புரியாத அல்லது புரிந்த வெற்றுக் கூச்சலும் போலிப் பக்தி வெளிப்பாடுகளும் வேண்டாம், அவை நம்மை பரவசப் படுத்தும் அன்றி ஆத்ம திருப்திப் படுத்தாது.

இந்த முறையில் கடவுள் தரிசனம் முடித்து பின் அமைதியாக வெளிவந்து இயலாதவர்களுக்கு அன்னம் அல்லது பிச்சையிட்டு முழு நிறைவுடன் திருக்கோவில் பயணத்தை முடிப்போம். அடுத்த பதிவில் சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் வணங்கும் முறைகளை குறிப்பிடுகின்றேன். நன்றி. ஸ்ரீராமஜெயம்.

Tuesday, October 6, 2009

காதலின் மயக்கம்

கண்களில் சிரிக்கும் நீ
நிஜமாய் சிரித்த போது
அந்த அழகின் மயக்கத்தில்
நான் மயங்கி நின்றேன்.

அழகாய் பாடும் நீ
உன் வார்த்தைகள் யாவும்
பாடலாய் நினைத்துக் கேட்டு
நான் தயங்கி நின்றேன்.

மானாய் ஆடும் நீ
உன் ஆட்டத்தைக் கண்டு
மயிலா இல்லை மானா
என்று வியந்து நின்றேன்.

கோலம் போடும் நீ
உன் விரல் அழகு கண்டு
இது விரலா இல்லை தூரிகையா
எனக் குழம்பி நின்றேன்.

நடந்து செல்லும் நீ
நடக்கையில் உனைப்
பார்த்து இது தேரா இல்லை அன்னமா
என்று மருங்கி நின்றேன்.

காலமும் கோலமும் மாற
இது நானா இல்லை பித்தனா
ஏன் இப்படி எனக் கேட்டுக் கேட்டுக்
டாஸ்மார்க்கில் கவிழ்ந்து விழுந்தேன்.

புளியம்பூ தொக்கு

புளியந்தொக்கு இது ஒரு வித்தியாசமான,சிக்கனமான தொக்கு வகை ஆகும். நல்ல துவர்ப்பு, உப்பு, காரம் நிறைந்தது. புளியம்பூ பூக்கும் சீசனில் கொஞ்சம் வித்தியாசமாக செய்து பார்க்கலாம். சென்னை போன்ற நகரங்களில் இருப்பேர் கூட குறித்துக் கொள்ளுங்கள்,எப்பேதாவது கிராமப் பக்கம் போனால் செய்யலாம். இதை செய்வதைப் பார்ப்போம்.
தேவையான பெருட்கள்:
1.துணிப்பை நிறைய புளியம்பூக்கள்,
2. நாலு அல்லது ஜந்து வரமிளகாய்,
3. ஒரு உருண்டை புளி(எலுமிச்சை அளவு)
4. அரை நெல்லிக்காய் அளவு பெருங்காயம்,
5. மூன்று அல்லது நாலு ஸ்பூன் உப்பு.
6.ஒரு உதவியாளர் அல்லது கணவர்.

முதலில் பூவைப் பறிக்க இருவர் அல்லது மூவர் வேண்டும், பூவைப் பறித்து அலம்பி உணர்த்திக் கொள்ளவும் அல்லது நியுஸ் பேப்பரில் போட்டு ஈரம் எடுக்கவும். பின் பூக்களை காம்பு இல்லாமல் உருவி பூக்களும், பூ மெட்டுக்களும் தனியாக எடுக்கவும். கல்லுரலில் போட்டு இடிப்பது என்றால் எல்லாத்தையும் ஒன்றாக போட்டு இடிக்கலாம். மிக்ஸி என்றால் முதலில் வரமிளகாய்யை பொடிசெய்து பின் அதை எடுத்துவிட்டு புளி,பெருங்காயம், உப்பு,பூ போன்றவை இட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும். இது மைய துகையல் போல் அரைக்காமல் கொஞ்சம் விழுது போல அதே சமயம் கொஞ்சம் உதிரியாகவும் அரைக்கவும். பூவில் இருக்கும் தண்ணீர் மற்றும் ஈரம் போதும். ஒரு முக்கால் பதம் அரைத்து பின் மிளகாய்ப் பொடி சேர்த்து அரைத்தால் தொக்கு ரெடி. உப்பும் மிளகாயும் தேவைக்கு ஏற்றார் போல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது கொஞ்சம் நல்லனனெய் அல்லது நெய்யுடன் சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் சுவையாகவும் நன்றாகவும் இருக்கும். செய்தவுடன் சாப்பிடவும் இல்லாவிட்டால் தண்ணிர் விட்டுவிடும். ஒரு துணிப்பை அளவு பூ இருந்தால் மூவர் அல்லது நால்வர் சாப்பிடலாம்.

பின் குறிப்பு: இதை சாப்பிட நல்ல கூசாத பற்கள் அவசியம். வயதானவர்கள் சாப்பிட்ட பின் பிபி மாத்திரை சாப்பிடவும்.

வெண்ணையும் சுண்ணாம்பும்

எங்க வீட்டின் முன்புறம் சாலையில் வரிசையாக மூன்று புளியமரங்கள் இருக்கும், என் நினவு தெரிந்து இந்த மரங்களும் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்துள்ளது. முதல் புளிய மரம் ஏறுவதற்கு சிரமம் மற்றும் பழமும் புளிப்பா புளிக்கும்,
நடுப் புளியமரம் ஏறுவதற்கு சுலபம். இதன் பூ,காய் மற்றும் பழமும் சிறிது இனிப்பாக இருக்கும். காயும் இல்லாமல் பழமும் இல்லாமல் இருக்கும் நிலை தெவுறு என்று சொல்வார்கள். இதுதான் எங்களுக்கு புடித்த ஒன்று. நாங்கள் நண்பர்கள் ஜவர் நான், சக்திவேல், கிறிஸ்டேபர், பூவேந்திரன் மற்றும் என் நாலாவது அண்ணா அனைவருக்கும் இந்த புளியமரம்தான் கூட்ட அரங்கு. அதுக்காக எங்க மரத்தடி பையங்கள் என்று நினைத்துவிடாதிகள். நாங்கள் அனைவரும் மரத்தின் மீது ஏறி அங்கு ஒரு இடத்தில் நாலு கிளைகள் பிரியும், அந்த இடத்தில் ஆளுக்கு ஒரு கிளையில் குரங்கு குட்டிகள் போல் உக்காந்து கொள்வேம். மரத்தில் இருக்கும் பூ மற்றும் தெவுறு பறித்து தின்றுகொண்டே ஊர்க்கதை பேசுவேம். நாங்கள் மரத்தின் மீது இருந்தால், அடர்த்தியான மரம் என்பதால் கீழே இருந்து பார்த்தால் தெரியாது. மூன்றாவது புளியமரம் உயரம் அதிகம்,பழங்கள் மிகவும் புளிக்கும், இது இல்லாம அந்த காலத்தில் பேய் ஓட்ட இந்த புளியமரத்தில்தான் ஆணியடிப்பார்கள். பாவம் அவர்களுக்கு நடு புளியமரத்தில் நாங்க ஜந்து பேய் இருப்பது தெரியாது. நாங்களும் அந்த மரம் பக்கம் போகமாட்டேம். ஏன் அதுகளை தெந்திரவு செய்யனும் இல்லை. அப்புறம் ஏரியாத் தகறாறு வரும். எங்களுக்கும் பேய்னா பயம். இந்த புளிய மரங்கள் அனைத்துக் காலத்திலும் உதவியா இருக்கும். பூக்கள் காலத்தில் பூக்களும், பிஞ்சுகளும் பின் காய்களும், பழங்களும் எங்களுக்கு போரடிச்சா சப்பிடற ஒன்னு.புளிய மரம், வேப்ப மரம்,வாதுமை மரம், கொய்யா மரம், நெல்லிக்காய் மரம் மற்றும் புன்னை மரம் எல்லாம் எங்க வீரத்தையும், திறமைகளையும் பறை சாற்றுபவை

அப்ப எல்லாம் பைஸடார், டைரிமில்க் கிட்காட் எல்லாம் எங்களுக்கு தெரியாது. நியுட்ரமுல் கம்பொனில வரும் பச்சக்கவர் போட்ட ஜந்து காசு சாக்கி(இது காஸ்ட்லி), எப்பாது ஒருதரம் சாப்பிடுகின்ற ஜெம்ஸ்தான் சாக்கி(அதான் சாக்லெட்). ஜவ்வு மிட்டாய், கம்மர் கட், கடுக்கு மிட்டாய், சாய(சாக்கிரின்)மிட்டாய்(இது ரோஸ் கலருல லிப்ஸ்டிக் ஆக உதவும்), சூட மிட்டாய்(பெப்பர் மிண்ட்), ஒரு பைசா ஆரஞ்சு மிட்டாய்,எலந்த வடை, எலந்த பழம். ஒரு பைசா சக்கரை கலர் மிட்டாய்(ஜெம்ஸ் டுப்ளிகட்) எல்லாந்தான் நாங்க வாங்கி சாப்பிடுகின்ற மிட்டாய் வகைகள் தினமும் எங்க வீட்டுல நாங்க அமைதியாய் இருக்க பத்துப் பைசா லஞ்சம் தருவாங்க. அதுலதான் வாங்கிச் சாப்பிடனும். ஆனா எங்க குழுவுக்கு இது எல்லாம் கவலை இல்லை. இந்த மரத்தின் புளியங் காய்கள், கோடி வீட்டில் உள்ள கொய்யாக் காய்கள்(பழுக்க விட்டாதான), என் நண்பன் வீட்டில் உள்ள நெல்லிக்காய், டாக்டர் வீட்டில் உள்ள பாதாம் பழம் மற்றும் ஆத்துமேட்டில் உள்ள நாவல் பழம்,கடையில் விற்கும் மாங்காய், நொங்கு,பலாச் சுழை.எங்க அப்பா அலுவலகதில் உள்ள எலந்த பழம், பப்பாளி பழம் எல்லாம்தான் நாங்க சாப்பிடற பழவகைகள். கவலையே இல்லாம பறிச்சு சாப்பிடுவேம். எல்லாரும் தெரிந்தவர்கள் என்பதால் ஒன்றும் சொல்லமாட்டார்கள். எங்கள் உயர் நிலை மற்றும் ஆரம்ப பள்ளி என் வீட்டில் இருந்து முக்கால் கிலோ மீட்டர் என்பதால் நாங்கள் தினமும் நாலு முறை கலை, மதியம்,மாலை நடப்போம். தினமும் மூனு கிலோமீட்டர் நடந்தாலும் எங்களுக்கு நண்பர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டும், வழினெடுக இருக்க புளிய மரத்தில் கல் எறிந்து காய் பறித்து தின்றுகொண்டு நடப்போம். வீட்டில் மதிய உணவு கட்டித் தந்தாலும் மறுத்துவிடுவேம், வந்து சப்பிட்டுத் திரும்பி போவேம்.

ஒரு முறை ஆத்துமேட்டில் எங்க அண்ணன் நாவல் பழம் பறிப்பதற்காக மரத்தில் கட கடவென ஏறினான். அவன் கிளைய்யை உலுக்க நாங்கள் பழம் பொறுக்க வேண்டும். அவன் ஏறி முடித்ததும் நான் அன்னாந்து பார்த்தால் எனக்கு அதிர்ச்சி. அவன் இருக்கும் கிளை கிழே படம் எடுத்து தொங்கியது ஒரு நாகப்பாம்பு. நான் மற்றும் நண்பர்கள் அண்ணா பாம்பு என்று கத்த அவன் எங்க என்று கேட்டு பாம்பு இருக்கும் கிளைக்கு அருகில் நெருங்கினான். கிழே இறங்கவும் முடியாமல் மாட்டிக்கொண்டான். ஏன் என்றால் அவன் இருக்கும் கிளைக்கு அடியில் பாம்பு இருந்ததால் இறங்க முடியாது. நாங்க விழித்து நிற்க எங்க அண்ணன் மட்டும் ஒரு நிமிடமும் யோசிக்காமல் அங்கிருந்து (பதினைந்து அடி உயரம் இருக்கும்) ஆற்றுத் தண்ணிரில் குதித்தான். எனக்கு பயத்தில் பேச்சு வரவில்லை நடுக்கத்தில் தண்ணிரில் ஓடினேன். ஆனால் நல்லவேளையாக அந்த இடத்தில் இடுப்பளவு தண்ணிர் இருந்ததால் ஒன்றும் ஆகவில்லை. நான் அவனிடம் இப்படி குதிக்கறியே, கால் உடைந்தால் அல்லது தண்ணிர் அடியில் பாறை இருந்தால் என்ன ஆகும்? என்றேன். அவன் சிரித்துக் கொண்டு என்ன ஆகும் ஒன்னு மண்டை உடையும் இல்லை கால் உடையும், ஆனால் மரத்தில் இருந்தால் உயிர் போய்விடும் பரவாயில்லையா என்றான்.

இப்படி எங்கள் சிறுவயதில் எந்த கவலையும் இல்லாமல் நாங்க வாழ்ந்தோம். எங்களுடய விளையாட்டுகள் யாவும் சுலபமான காசு செலவு வைக்காத விளையாட்டுக்கள். டயர் வண்டி, நொங்கு வண்டி, கில்லித் தாண்டல்,தடி கல்லின் மீது தடி வைத்து விளையாடுதல்,எறிபந்து, குழிபந்து,பம்பரம், தாயக் கட்டை,பரமபதம். சில்லுத்தாண்டுதல், ஜான் கல் மற்றும் சைக்கிள் டுயூப்ல பண்ண பந்து வைத்து மரப்பலகையில் பேட் செய்து, கருவேல முள்ளுக்கு குச்சியை ஸடம்ப் ஆக்கி விளையாடுவேம். மாலை பள்ளி விட்டு வந்தால் ஆறு அல்லது ஆறறை மணி வரைக்கும் விளையாடி விட்டு இடைவேளை சாதம்னு இரண்டு மூனு உருண்டை சாதம் சாப்பிட்டு படிக்க உக்காருவேம். அங்க அங்க கைல கால்ல அடிபடும் அவ்வளவுதான். ஆனா நல்ல ஆரோக்கியமா இருப்போம். ஆனா இப்ப பாருங்க பசங்க சரியா விளையாடம கார்ட்டுன்ஸ் மற்றும் வீடியோ கேம்ஸ் ஆடி நிறைய சிறு பசங்க கண் கன்னாடி மற்றும் ஆரோக்கிய குறைவா இருக்காங்க. அடிக்கடி மருத்துவ செலவு வைப்பாங்க. நான் என்ன சொல்லறனா தினமும் பசங்களை ஒரு மணிநேரம் ஒடி ஆட விட்டிங்கனா நல்லா சாப்பிட்டு நல்லா இருப்பாங்க, இங்க சிங்கையிலும், சென்னையிலும் நிறையப் பசங்க கன்னாடியும் பார்க்க ஆரோக்கியம் இல்லாம இருக்கிறதைப் பார்க்கும்போது எனக்கு நான் சிறுவயதில் நல்லா அனுபவிச்சு வாழ்ந்திருக்கன்னு சொல்லத் தோனுது. இந்த பசங்களாவது பரவாயில்லை எப்போதும் வேடிச் சத்தங்களுக்கு இடையிலும், முள்வேலி முகாமிலும் அடைந்து இருக்கும் நம் தமிழ்ச் சிறுவர்கள் வாழ்க்கையின் எல்லா இன்பங்களும் தொலைத்து இருப்பார்கள். பஞ்சத்தால் வாடும் எத்தியோப்பாவில் வாழும் உடல் மெலிந்த சிறுவர்களைப் பார்க்கும் பொழுது மனது சங்கடத்துடன் வயிறு பிசையும். கடவுள் ஏன் ஒரு கையில் வெண்ணையும் மறு கையில் சுண்ணாம்பும் தருகின்றார்.

பி.கு: இந்த புளிய மரத்தில் இருந்து புளியம்பூ எடுத்து எங்க வீட்டில் இரண்டு அல்லது மூன்று முறை புளியம் பூ தொக்கு செய்வார்கள் அது எப்படி என்று என் சமையல் பதிவில் பாருங்கள். இப்படி எந்த கவலையும் இல்லாம வாழ்ந்தாலும் ஒரு கவலை மட்டும், ஒரு நாள் மட்டும் இருக்கும். அதன் மார்க்ஸிட்ல கையேழுத்து வாங்குறப்ப வரும், அதுகூட நான் சுமாரா படிக்கறதுனால, இப்படி திங்கு, திங்குனு ஆடறியே, இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சு அதிக மார்க் வாங்குனா?, துரை கெட்டா போய்விடுவா? என்று திட்டு மட்டும் எங்க பெரியண்ணன் நற்சான்றிதழா கொடுப்பாருங்க. நன்றி

Monday, October 5, 2009

தர்ம அடி வாங்கியது

நான் ஏழாம் வகுப்பு படித்த சமயம் நடந்த சம்பவம், இது நான் செய்யாத தவறுக்கு உதை வாங்கியது. அப்போது எங்கள் வீட்டில் எங்க இரண்டாவது அக்கா திருமண நிச்சயதார்த்தம் நடந்த சமயம் எங்க வீட்டிற்கு உறவினர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். நான் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டு இருந்தேன். அப்போது எங்க பெரியப்பா ஒருவர் தனக்கு பொடிமட்டை வாங்கி வருமாறு என்னிடம் இரண்டு ரூபாய் கொடுத்தார். அப்போது டி.ஏ.ஸ். கோபால் பட்டணம் பொடி பாக்கு மட்டையில் சுற்றி வரும்.

நானும் என்னுடைய புல்லட்டை காலில் ஒரு உதை உதைத்து கையை முறுக்கி வாயில் சவுண்ட் கொடுத்து ஓடத்தொடங்கினேன். அப்ப எல்லாம் எதாது கடைக்கு அனுப்பினால் ஒரு கையில் காசு வைத்துக் கொண்டு, இன்னேரு கையால் வண்டியோட்டுவது போல் பண்ணிக் கொண்டு ஓடுவது பழக்கம்,இல்லாவிட்டால் வாயில் டெக், டெக் என சவுண்ட் கொடுத்து குதிரையில் போவது பழக்கம். நானும் நாலனாவிற்கு பொடி மட்டை வாங்கிக் கொண்டு மீதி ஒன்னேமுக்கால் ரூபாயை கையில் பொடிமட்டையுடன் வைத்துக் கொண்டு ஓடி வந்துவிட்டேன். வந்து என் பெரியப்பாவிடம் பொடி மட்டையும் மீதி சில்லறையும் தந்தேன். தரும்பொழுது பார்த்தால் என் கையில் ஒரு ரூபாய் காயின் ஒன்றும், எட்டனா காயின் ஒன்றும் தான் இருந்தது. நாலானாவைக் கானவில்லை. நான் திரு திரு என முழித்து மீதி சில்லறையக் என் பெரியப்பாவிடம் கொடுத்தேன். அவர் பொடி போடும் பரவசத்தில் என் சில்லறைய எண்ணாமல் பையில் போட்டுக் கொண்டார் நானும் அங்கிருந்து விளையாட ஓடிப்போய் விட்டேன். ஆனால் இதை சற்றுத் தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த எங்க பெரிய அண்ணன் என்னை வீட்டின் பின்பக்கம் அழைத்தார். நானும் சந்தோசமாகப் போனேன்.

அவர் அங்க வந்தவுடன் எங்கடா அந்த நாலனா என்றார், நான் எனக்கு தெரியவில்லை என்றேன்,அடுத்த நொடி அவர் கை என் கன்னத்தை பதம் பார்த்தது. அந்த அடியில் நிலை குழைந்த நான், அதிர்ந்து போய் நிற்க, நீ வாங்கி சாப்பிட்டால் ஒத்துக்கோ, பொய் சொல்லாதே என்றார்.நான் புரியாமல் நிற்க அவர் மீண்டும் அடித்தார். நான் தெரியவில்லை என்றும் காணாமல் போய்விட்டது என்றும் கூற எனக்கு பல அடிகள் அடித்தார். நான் மீண்டும் மீண்டும் பொய் கூறுவதாக அவர் நினைத்து கடுமையாக அடித்தார். நான் தெரியவில்லை என்பதை மீண்டும் கூறின்னேன். அவர் மற்ற பைசா எல்லாம் இருக்கும்போது அதுமட்டும் எப்படி காணாமல் போகும் என்று கேட்டு நான் பொய் கூறுவதாக கூறி மீண்டும் அடித்தார். நான் தெரியவில்லை என்பதைச் சத்தியம் செய்தேன். அப்போதும் அடிவிழுந்தது. அப்போது அங்கு வந்த என் அம்மாவிற்கு என்னைஅண்ணன் அடிப்பதைப் பார்த்தவுடன் கோபம் வந்துவிட்டது. என் அண்ணாவை சபையில் அழைக்கின்றார்கள் நீ போ என்று அனுப்பி என்னை அருகில் வைத்து என்ன நடந்தது என்று கேட்டார்கள் நானும் சொன்னேன். அதற்கு சரி நீ அழாதே நான் அப்புறம் அவனை விசாரிக்கறன். நி போய் விளையாடு என்று கூறி என் கண்களை துடைத்துவிட்டுப் போய் விட்டார்கள்.

என்னை இதுவரை யாரும் இப்படி அடித்தது இல்லை, என் ஆசிரியர்கள்,அப்பா அம்மா என என்னை கொஞ்சியவர்கள் தான் அதிகம், ஆதலால் நான் ஒன்றும் புரியாமல் உக்காந்து இருந்தேன். அதை வீட அந்த காசு எப்படிப் போனது என்பது எனக்கு குழப்பத்தை தந்தது. விழா முடிந்தவுடன் அனைவரும் போய்விட்டார்கள். மீண்டும் என் அண்ணன் என்னை விசாரிக்கத் துவங்க மெல்ல விசயம் எங்க இரண்டாம் அக்காவிற்கு தெரிந்தது. என் சிவந்து வீங்கிய கன்னத்தை பார்த்த அக்கா மிகுந்த கோபம் கொண்டு எங்க அண்ணாவை சத்தம் போட ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியே எடுத்து இருந்தாலும் நாம் பொறுமையாகச் சொன்னால் புரிந்துகொள்வான் என்று அவரை சத்தம் போட்டார்கள். நான் தெரியவில்லை என்று கூறி நின்றேன். அம்மாவும் அக்காவும் அண்ணாவை மாத்தி மாத்தி திட்ட அவர் கோபத்தில் சட்டையை மாட்டிகொண்டு வெளியே சென்றுவிட்டார். பின் அக்கா எனக்கு ஆறுதல் கூறி அவர் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டார். நான் தலையணையை நனைத்து தூங்கிப் போனேன். நான் தூக்கத்தில் கூட பினாத்தியதாக மறுனாள் எங்க அம்மா எங்க அண்ணாவைத் திட்டினார். எங்க அண்ணா எப்படிப் பட்டவர் என்றால்,

எங்க அண்ணா மிகவும் நல்லவர், பாசமிக்கவர், அன்பு செலுத்துவதில் அவருக்கு நிகர் கிடையாது ஆனால் அவருக்கு படிப்பும், ஒழுக்கமும் ரொம்ப முக்கியம். இதில் தவறு செய்தால் அவருக்கு வரும் கோபத்தை அளவிட முடியாது, கையில் என்ன கிடைத்தாலும் அடிப்பார்.எங்களை அடித்துவிட்டு அவர் வருத்தப் படுவார். கொஞ்ச நேரம் கழித்து உங்களை என்ன வேலைக்குப் போ, சம்பாரி என்றா சொல்லுறம், படி, ஒழுங்கா இருக்கதான் சொல்லறம், அதை ஏன் செய்ய மாட்டிங்க என்று புலம்புவார். கொஞ்ச நேரம் வீடு அமைதியாக இருக்கும், பின் எங்க அண்ணா எழுந்து சட்டையை மாட்டிக் கொண்டுபோய் வடை,பஜ்ஜி, போண்டா வாங்கி வருவார். அப்போதும் கவலையுடன் ஏண்டா படிக்க மாட்டிங்க? படிங்கடா என்று கூறுவார்.நான் இந்த அடி வாங்க மாட்டேன்.நான் கொஞ்சம் சுமாரா படிச்சு அறுபது எழுபது மார்க் வாங்கிவிடுவேன். எங்க மூன்றாவது அண்ணா படிப்புக்காவும், நாலாவது அண்ணா அவர் பெயருக்கு ஏத்த மாதிரி(கண்ணன்) செய்யும் குறும்புக்காகவும் அடி வாங்குவார்கள். நான் இந்த மொதல் அடிக்கு அப்புறம் மொத்தம் நாலு முறைதான் அடி வாங்கியுள்ளேன். அவையும் பதிவில் வரும். சரி இப்ப நம்ம கதைக்கு வருவம். இப்படி நாலு நாளைக்கு அப்புறம் நான் கடைக்குப் போய் திரும்பி வரும் சமயம் ஓடி வரும்போது தான் கவனித்தேன். என் கையில் சுண்டுவிரலுக்கும் மோதிர விரலுக்கும் நடுவில் இடைவெளியில் நாலானா மாட்டிக் கொண்டு இருந்தது. எனக்கு புரிந்தது, என் கை ஓட்டக் கை ஆதலால் நாலானா சிறியது என்பதால் விழுந்துவிட்டது என்று.

உடனே வீட்டிற்கு வந்தவுடன் எங்க அண்ணாவிடம் பரபரப்பாக நான் அண்ணா இன்று என் கையில் நாலானா விழப் பார்த்து புடித்துக் கொண்டேன், என எப்படி விழுந்து இருக்கும் என்று செய்து காட்டினேன். அவரும் சரி ஏன் கையில வச்சுகிட்டுப் போற சட்டை அல்லது டிராயர் பாக்கெட்டில் வை, இரண்டாவது ஓடிப் போகதே நடந்துபோ என்று கூறி என் முதுகில் தடவிக் கொடுத்தார். அதன் பின் நான் பைசாவை டிராயரில் வைத்துக் கொண்டு போனாலும், ஓடிப் போவதை அதாது என் பைக் அல்லது குதிரையில் ஓடிப்போவது தொடர்ந்தது. இந்த நிகழ்விற்கு பிறகு நான் பொய் சொல்லமாட்டேன் என்ற நம்பிக்கை அவருக்கு பிறந்தது.

புரட்டாசி சனிக்கிழமையும் பச்சைமாவும்

சசிகா அவர்கள் இன்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை என்று ஒரு பதிவிட்டு இருந்தார். அதைப் படித்தவுடன் எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்துவிட்டது. எங்க அம்மாவையும் அவர்களின் பாசம்,பக்தியை நிறைய பதிவுகள் இடலாம். அதில் ஒன்று இது.

எங்க அம்மா தன் எட்டாம் வயதில் எங்க அப்பா கூட திருமணம் ஆகி பதிமூன்று வயதில் பருவம் அடைந்த ஒரு மாதத்தில் தனிக்குடித்தனம் வைக்கப் பட்டார். அவர்களுக்கு முதல் மூன்றும் பெண் குழந்தைகள். ஆண் மகவு வேண்டி அவர்கள் நேர்ந்துகொண்ட விரதம்தான் புரட்டாசி ஒவ்வாதானம் எங்கின்ற பிச்சைமுறை. இது ஜந்து அல்லது ஒன்பது வீட்டில் அரிசி பிச்சையாக வாங்கி அதில் மாவு இடித்து பச்சை மாவு செய்து திருப்பதி பெருமாளுக்கு பூஜை செய்வார்கள். எங்க அம்மாவும் ஜந்து வீட்டில் பிச்சை எடுத்து பூஜை செய்வார்கள். அதன் பலனாக அதிகப் பட்சமான அன்பளிப்பாக அவரும் நாலு ஆண் வாரிசையும் ஒரு அசுர வாரிசையும் கொடுத்தார். அசுர வாரிசு யார்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை. குழந்தைகள் பிறந்த பின்னும் அவர் எங்களின் நலனுக்காக இந்த விரதத்தை தொடர்ந்து செய்து வந்தார். நிறையப் பேர் குடும்ப நலனுக்காக இன்றும் செய்கிறார்கள்.

புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முந்திய நாளில் மாலை இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி விடும். அம்மா எங்க தெருவில் ஜந்து வீடுகளை தேர்ந்து எடுத்து என்னிடம் கூறுவார்கள். நான் அந்த வீடுகளில் சென்று அம்மா நாளை ஒவ்வாதானம் வாங்க வரும் தகவலை சொல்லிவிடுவேன். அவர்களுக்கு இது ஒவ்வெரு வருடமும் நிகழும் நிகழ்வு ஆதலால் அவர்களுக்கும் தெரியும். இப்படிதான் நான் தகவல் தொடர்பு (ஊழல் செய்யாத) மந்திரியானேன். முதல் நாள் மாலை அம்மாவின் ஒரு நூல் புடவை நனைத்துக் காயப்போட்டு எங்களைத் தொடக் கூடாது என்று கட்டளையும் போடுவார்கள். பின் மறுனாள் காலை ஏழு மணியளவில் என் தாய் குளித்துவிட்டு அந்த மடிப்புடவை கட்டி, கும்பகோணச் சொம்பு என்ற கழுத்துடைய சொம்பில் இருபுறம்மும் திருமண் இட்டு(நாமம்), அதை பயபக்தியுடன் எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார். ஒவ்வேறு வீட்டின் வாசலிலும் நின்று நாராயணா! நாராயணா! என்று கூவி அழைப்பார். அந்த வீட்டில் இருக்கும் பெண்களும் குளித்து தலை முழுகி எங்க அம்மாவிற்காக காத்து இருப்பார்கள். இதுல ஒரு விசயம் என்னன்னா நான் முந்திய நாள் போய் சொல்லும்போது அவர்கள் தனிவிடுப்பில் இருந்தால் (அதாங்க இயற்கை) நான் போடுவதற்க்கில்லை என்று சொல்லுவார்கள். நானும் புரியாமல் எங்க அம்மாவிடம் அம்மா அவங்க போடமாட்டார்களாம் என்று கூறிவிடுவேன்.எனக்கு புரியாவிட்டால் கூட அம்மா புரிந்துகொள்வார். ஒருமுறை ஒருவர் மொட்டையாக நான் நாளை வீட்டில் இல்லை என்று கூறிவிடு என்று சொல்ல நானும் சொல்லிவிட்டேன். மறுனாள் அவர்கள் வீட்டில் இருந்ததைப் பார்த்து நான் அம்மாவிடம் அம்மா அவங்க வீட்டுல இருந்துக்கிட்டே இல்லைனு சொல்லிட்டாங்க என்று கூற அம்மா சிரித்துக் கொண்டு மறுமொழி கூறவில்லை. ஆனாலும் நான் அவர்களிடம் சென்று "அக்கா நீங்க ஏன் வீட்டுல இருந்துக்கிட்டு இல்லைனு பொய் சொன்னிங்க"என்று படுக் என கேக்க, ஒரு நிமிடம் திகைத்துப் பின் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அதை அவர்கள் எங்க அம்மாவிடமும் அக்காக்களிடமும் கூறி என்னை ஒருவாரம் கலாய்த்துவிட்டார்கள்.

இப்படி அனைவரின் வீட்டில் இருந்து பெறப்பட்ட அரிசி எங்க வீட்டில் இருக்கும் ஒருபடி அரிசியுடன் சேர்த்து ஒருமணி நேரம் ஊறவைத்து அரிசி மாவாக இடிப்பார்கள். பின் அதனுடன் வெல்லம்,ஏலக்காய் தூள், தேங்காய் துருவல்,பச்சை கற்பூரம் மற்றும் நெய் விட்டு பிசைந்து மாவு ஆகப் பிடிக்கப்படும். அதன் மேல்பகுதியில் குழியிட்டு அதில் நெய் சேர்த்து நெய்த்திரியுடன் பற்ற வைக்கப்பட்டு பூஜை செய்வார்கள், பாசுரங்கள், திருப்பாவை, பல்லாண்டு மற்றும் சிறிய இராமர் பாட்டு எல்லாம் எங்க அம்மா மனப்பாடமாக சொல்லுவார். பின் பூஜை முடிந்தவுடன் அந்த மாவுவிளக்கு மலைஏறுவதற்காக(அனைவதற்காக) நான் அதன் அருகில் உக்காந்து இருப்பேன். பின் அந்த மாவைப் உதிரியாக்கி இன்னமும் கொஞ்சம் நெய் மற்றும் தேங்காய் துருவல் விட்டு அதனை சிறு சிறு வாழை இலைகளில் இட்டு பக்கத்து வீடுகளில் கொடுக்கச் சொல்லுவார். நான் கொடுத்துவிட்டு வந்த (வீட்டுல இல்லைனு பொய் சொன்ன அக்கா வீட்டில் குடுக்க மாட்டேன் என்று மறுத்தது) பின்னர்தான் எங்களுக்கு மாவு கிடைக்கும். பின்னர் அன்று பொங்கல் இட்டு மதியம் பூஜையும் சாப்பாடும் கிடைக்கும். பொதுவாக எங்க வீட்டில் எல்லா சனிக்கிழமையும் காலை யாரும் சாப்பிட மாட்டார்கள். இது என் பசுமை மாறா நினைவுகளில் ஒன்று. இன்னமும் எங்க அம்மா எடுத்த ஒன்று இப்போது எங்க அண்ணிமார்கள் எடுக்கின்றார்கள்.நாராயணா, நாராயணா என்று கூறி பதிவை முடிக்கின்றேன். நன்றி.

பி கு: நான் அந்த அக்காவிடமும் புரியாமல் அடுத்த வருடம் நீங்க கண்டிப்பா வீட்டில் இருந்து அரிசி போடவேண்டும் எனக் கூற அவர்களும் உன் வாய் மூகூர்த்தம் நான் இருந்து போடுறன் என்று சொல்லி எனக்கு சிறிது கண்ணிருடன் முத்தமிட்டார்கள். எனக்கு பிள்ளையிலாத அவர்களின் வார்த்தைகள் புரியாவிட்டாலும் அடுத்த வருடம் போடுவார்கள் என சந்தோசமாக ஓடி வந்துவிட்டேன். அடுத்த வருடம் எங்க அம்மா அவர்கள் வீட்டில் போய், நாளைக்கு அம்மா அவர்கள் வீட்டிற்கு வரமாட்டார்கள், அடுத்த வருடம் வருவதாக சொல்லச் சொன்னார்கள். நானும் புரியாமல் கவலையாய்ப் போய்ச் சொன்னபோது அவர்கள் ரொம்ப சந்தோசத்துடன் சிரித்துக் கொண்டு சரி என்றார்கள். எனக்கும் புரியாமல் எங்க அம்மாவிடம் கேக்க அவர் நிறைமாத கர்ப்பினியும் தீட்டுதான் என்று கூறிவிட்டார்கள். எனக்கு புரியாததால் மண்டை ஆட்டிக்கொண்டு மாவு திங்க ரெடி ஆகிட்டடேன்.